Wednesday, November 25, 2015

உலக மசாலா: பாடம் சொல்லித் தந்த பறவை!

அடர்ந்த பனி நிறைந்த பகுதிகளில் விமானங்கள் பறக்கும்போது பனியால் மூடப் பட்டு விபத்துக்கு உள்ளாகின் றன. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள் கின்றன. இந்தப் பிரச்சினைக் குத் பெங் குயின்களிடமிருந்து ஒரு தீர்வை கண்டுபிடித்திருக் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெங்குயின்களின் இறகில் ஒருவித எண்ணெய் சுரப்பதால் அவை நீந்தும்போது உடலில் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை போனாலும் பெங்குயின்களின் உடலில் மட்டும் பனி படர்வதில்லை. இதற்கும் காரணம் அந்த எண்ணெய்ச் சுரப்புதான். பெங்குயின் வால் பகுதியில் இருந்து சுரக்கும் எண்ணெய், அப்படியே இறக்கைகளுக்குப் பரவி விடுகிறது.
இந்த நுட்பத்தை விமானங்களின் இறக்கைகளில் செயல்படுத்தினால், பனிப் பிரதேசங்களில் விமானங்கள் பறந்து செல்லும்போது பனியால் மூடப்படாது. விபத்துகளையும் தடுக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெங்குயின் இறகுகளைச் சேகரித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். விமானங்களின் இறக்கைகளிலும் நீர்விலக்கியாக பெங்குயின் எண்ணெயைப் போல ஒரு பொருளைப் பயன்படுத்த இருக்கிறார்கள்.
பறக்க இயலாத பறவை, பறக்கும் விமானத்துக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறது!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மெக்கார்தி புதிய உடற்பயிற்சி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் பயன்படுத்தி விலங்குகளைப் போல நடந்து செல்ல வேண்டும். ‘‘நான்கு கால் பிராணிகளைப் போல நடந்து செல்வது உடலுக்கு மிகச் சிறந்த பயிற்சி. மற்ற உடற்பயிற்சிகளைப் போல இது ஒன்றும் எளிதான செயல் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வேறு எந்த உடற்பயிற்சியை விடவும் இந்தப் பயிற்சி உடலுக்கு மிகச் சிறந்த முறையில் நன்மை விளைவிக்கிறது. கைகளையும் கால்களையும் கொண்டு நடந்து செல்லும்போது அனைத்துப் பகுதிகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது. தலை, கழுத்து, கைகள், உடல், கால்கள், விரல்கள் என்று ஒட்டு மொத்த உடலும் வேலை செய்கின்றன. அதனால் ஓடுவது, நடப்பது போன்ற பயிற்சிகளை விட இது சிறந்தது. கலோரிகள் வேகமாகக் கரைந்துவிடுகின்றன.
தொடைகளில் இருக்கும் அதிகப்படியான சதைகளைக் கரைக்க வேண்டும் என்றால் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்வது நல்லது’’ என்கிறார் மெக்கார்தி. இதை மற்ற உடற்பயிற்சி நிபுணர்கள் மறுக்கிறார்கள். ‘‘உடல் முழுவதுக்கும் பயிற்சி தரக்கூடிய உடற்பயிற்சிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மெக்கார்தியின் பயிற்சியில் அபாயம் அதிகம். கழுத்து சுளுக்கிக்கொள்ளும். வேகமாகச் செல்லும்போது மூக்கு உடைந்துவிடலாம். கைகளால் நடக்கும்போது காயம் ஏற்படலாம். தோள்களுக்குக் கடுமையான வலி உண்டாகும். மனிதன் ஏன் விலங்குகளைப் போல நடக்க வேண்டும்? மனிதனுக்கு உரிய உடற்பயிற்சிகளைச் செய்தாலே ஆரோக்கியமாக வாழலாம்’’ என்கிறார்கள். பாதுகாப்பான கையுறை, மெதுவாகச் செல்வது போன்றவற்றைக் கடைபிடித்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்கிறார் மெக்கார்தி.
எங்கிருந்துதான் இப்படியெல்லாம் யோசனை உதிக்குதோ…
சீனாவின் குன்மிங் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார் வாங். கடந்த மாதம் இரவில் காரை விடுதிக்கு வெளியே நிறுத்திவிட்டு, சென்றுவிட்டார். அதிகாலை அவர் வெளியே வந்தபோது காரின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியடைந்த வாங், அருகில் இருக்கும் காவலாளிகளை விசாரித்தார். ஒருவருக்கும் யார் இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளித்தார் வாங். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் பார்த்தனர். வெள்ளை காரில் இறங்கிய ஒருவர், நீண்ட குடையால் கார் கண்ணாடிகளை உடைப்பது தெரிந்தது.
ஆனால் அந்த ஆளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் பல வழிகளில் முயன்றும் குற்றவாளி மட்டும் அகப்படவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாததால் வாங் மிகவும் மனம் உடைந்து போனார். எப்படியும் அந்தக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார். பாதாளக் கடவுளிடம் முறையிட முடிவு எடுத்தார். ஒரு பெரிய தாளில் 4 மோசமான விதங்களில் குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் என்று எழுதி, கார் மீது ஒட்டினார். மெழுகுவர்த்திகளை ஏற்றினார். கோழி படையல் இட்டார். இன்றுவரை குற்றவாளி யார் என்பதும், அவனை பாதாளக் கடவுள் தண்டித்தாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் வாங் மனத்தைத் தேற்றிக்கொண்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்.
அடப் பாவமே…

-thehidu

0 comments: