Friday, November 27, 2015

144 - சினிமா விமர்சனம்



செல் ஃபோன்களில் இது டூயல் சிம் காலம். சினிமாவில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் தான் வசதி . 2 ஹீரோ போட்டா அப்டியே 2 ஹீரோயின் போட்டுக்கலாம். 2 ஹீரோயின் போட்டா அவங்க 2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு நடிப்புத்திறமையையோ அல்லது என்ன வருமோ அந்தத்திறமையை காட்டுவாங்க . ஜனங்களுக்கும் சந்தோசம், புரொடியூசருக்கும்  லாபம்.


சிவா டூப்ளிகேட் சாவி போட்டு திருடுவதில் மன்னன். அசோக்  கார் ரேஸ் வீரர் ஆகனும்னு ஆசை உள்ளவர் . சிவாவுக்கு  ஓவியா  மேல ஒரு கண்ணு . ஓவியா மேல  ஏகப்பட்ட பேருக்கு கண்ணு .  எப்டின்னா  ஓவியா ஒரு டிக்கெட்டு ( கதைப்படி )ஊர் ல ஏகப்பட்ட பார்ட்டிங்க இருக்கும்போது  ஹீரோவுக்கு ஒரு பார்ட்டி மேல  ஏன் லவ் வந்தது?ன்னு  நானும் கேட்டுக்கலை , நீங்களும்  கேட்டுக்காதீங்க . 


அசோக் லவ் பண்றது  வில்லனோட பொண்ணை . வில்லன் கெட்டவன். வில்லனோட பொண்ணு நல்லவ. இன்னொரு வில்லன் இருக்கான் . இவன்  கோல்டு பிஸ்கெட்டை  (150 கோடி  மதிப்புள்ளது) சின்ன சின்ன  விநாயகர்  பொம்மைகளுக்குள் வெச்சு  ஒரு அலிபாபா  குகைக்குள்ளே  ஒளிச்சு வெச்சுடறான். 


 அந்த  பிஸ்கெட்டை  சிவாவும் , அசோக்கும்  லப்க்கிடறாங்க . வில்லன் க்ரூப் 2ம்  எப்படி  அதை  மீட்கறாங்க? என்பதே  காமெடி  கலந்த  திரைக்கதை 


ஹீரோவா  சிவா . அவருக்குன்னு  ஒரு ரசிகர்  கூட்டம்  இருக்கு . அவர்  மொக்கை காமெடி  பண்ணும்போது கை தட்டுது . 

 அசோக் செல்வன்   அய்யோ பாவம் . வாய்பில்லை . நாயகி  கூட ஓப்பனிங்கில்  ஒரு கவிதை  டூயட் பாடறாரு . அம்புட்டுதான்

ஓவியா  குரல்  ஸ்ருதி  கமல்  குரலை விட  கர்ண கொடூரமா  இருக்கு , முடியல . அவரோட  லிப்ஸ்டிக்  தீற்றல்  ஓவர்  டார்க் . முடியல 


திரைக்கதை  எதைபத்தியும்  கவலைப்படாம  மொக்கை  காமெடி சம்பவங்கள் , வசனத்தை  நம்பியே  இருக்கு 


ஒளிப்பதிவு , இசை  எல்லாம்   சராசரி  தரத்தில் , பின்னணி  இசை  அருமை 

கண்டிப்பா  கண்டிப்பா  என அந்த  போலீஸ்  ஆஃபீசர்  செய்யும் காமெடி  கலக்கல்  ரகம் 







மனதைக் கவர்ந்த  வசனங்கள்


சார்.உங்களுக்கு என்ன வேணும்?

2 கிராம் ல செம வெயிட்டா ஒரு மூக்குத்தி வேணும் # 144



2 பகுமானக்கோழி பறந்து பறந்து முட்டை போடுமாம் #144


3 ஓவியா = எனக்கு அவிட்ட நட்சத்திரம்
இயக்குநர் =,ரைட்டு.இந்தப்படத்துல அயிட்டமா நடிக்கறீங்க.#144

4 பல்லுப்போன காலத்துல பட்டாணி சாப்பிட ஆசைப்படலாமா?#144

5 இங்கே யாரும் 100% நல்லவங்களும் இல்லை.100% கெட்டவங்களும் இல்லை #144








சி  பி  கமெண்ட்=144 = ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான மொக்கை காமெடிப்படம். விகடன் மார்க் =41 ,ரேட்டிங் =2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= ஓக்கே



 ரேட்டிங்=2.75 / 5

0 comments: