Tuesday, October 20, 2015

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து நிறைந்த பால்கோவா!(Sponsored)

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து நிறைந்த பால்கோவா!(Sponsored)
ஒரு வழியா நவராத்திரி ஆரம்பம் ஆயிடுச்சு..! வீட்டுல கொலு வச்சுட்டீங்களா..? நவரத்திரில அம்மனுக்குதான் சிறப்பு பூஜை நடக்கும். இந்த சிறப்பு பூஜை ஆண்டாளுக்கும் தானே..? ஆண்டாளை வழிபடும்பொழுது நமக்கு திருப்பாவைதான் நம் நினைவுக்கு வரும். அடுத்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அம்பாள தரிசனம் பண்ண வந்தாச்சு பால்கோவா வாங்கலைனா நல்ல இருக்காது. பால்கோவாவ ஸ்ரீவில்லிபுத்தூர்ல வாங்கலைனா வேற எங்க வாங்குறது..?
ஆமாங்க, ஒரு வழிய பால்கோவாவ பத்திதான் பார்க்கப் போறோம்னு தெரிஞ்சு போச்சு. ஸ்ரீவில்லிபுத்துர் எந்த அளவுக்கு ஆண்டாளுக்கும், ஆண்டாள் கோவில் கோபுரத்திற்கும் பிரபலமோ அதே அளவுக்கு பிரபலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.
மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளில் இருக்கின்றவர்கள் எல்லாம் ஒரு சில இடங்களில் பரவியிருப்பார்கள். 

ஆனால், நம்ம தமிழர்கள் மட்டும் உலகில் எல்லா மூலைகளிலும் பரவி காணப்படுகின்றனர். அத்தனை தமிழர்களும் தன் தமிழ் பாரம்பரிய உணவுகளை உண்ண முடியாமலும், அவர்களுக்கு இருக்கும் இயந்திர வாழ்கையில் இதெல்லாம் எங்க போய் வாங்குறது... எப்படி வாங்குறதுன்னு யோசிக்கிறீங்களா..? கவலைய விடுங்க. உங்களுக்காகவே இருக்கு ஸ்வீட்கானா.காம். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவ உங்க வீட்டுக்கு கொண்டு வருகிறது இந்த நவராத்திரி திருநாளில்..!

தமிழகத்தின் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இங்கு மட்டுமில்லை, இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, இச்சுவை உலகளவில் இதெற்கென தனி பெயரினையும், சிறப்பினையும் பெற்றுள்ளது. இப்பொழுது இந்த பால்கோவாவின் செய்முறையை பார்ப்போம்...
தேவையான பொருட்கள் மிகவும் குறைவுதான். ஐந்து லிட்டர் பாலும், முக்கால் கிலோ சர்க்கரையும்தான்.
முதலில் ஐந்து லிட்டர் பாலினை ஒரு வாய் அகன்ற கடாயில் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும்.
ஊற்றிய பால் பாதியாக குறையும் போது சர்க்கரை சேர்க்க வேண்டும்.
பாலில் சர்க்கரை சேர்த்தபின்பு, அடிசேராமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பால் ஒரு வித கெட்டி பதத்திற்கு வந்தபின்பு, அடுப்பிலிருந்து கடாயை இறக்கி, வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
பின்பு அதனை குளிரவிட வேண்டும். அவ்வளவுதான். இப்போது சுவைமிக்க இனிப்பான பால்கோவா தயார்.
பால்கோவா தயாரிப்பது எப்படின்னு பாத்தாச்சு. இன்னுமா இத சாப்பிட முடியலன்னு நெனைச்சுட்டு இருக்கீங்க? ஸ்வீட்கானா.காம்-க்கு வாங்க, உங்களுக்கு பிடித்த, உங்க மண் மனம் மாறாத பாரம்பரிய ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவ, நீங்க எங்க இருந்தாலும் மிஸ் பண்ணாம அந்த ருசிய ருசித்து, உங்க நவராத்திரி அம்பாளுக்கு படைத்து அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுங்கள்...! நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுங்கள்
நன்றி-விகடன்

0 comments: