Monday, October 12, 2015

ஆன்லைனில் வெளியான புலி

1சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி-சரத்குமார்# சதி லீலாவதி கமலே விஷால் பக்கம்னா தப்பு உங்க மேல தான் இருக்கனும்

===========

2செல்போன் கொடுக்கும் ஜெயலலிதா சார்ஜ் ஏற்ற மின்சாரம் கொடுப்பாரா? மு.க.ஸ்டாலின்கேள்வி
கொடுத்தாலும் பில் கட்டுவாரா?ன்னும் கேட்ருவாரோ?


=============

3கட்சிக்காக ஸ்டாலின் பல தியாகங்களை செய்திருக்கிறார் -கலைஞர் # நீங்க மட்டும் அவருக்காக எந்த தியாகத்தையும் பண்ணிடாதீங்க


==============

4.ஸ்டாலின், ஸ்டாலினாக உருவெடுத்துள்ளார் : கருணாநிதி பாராட்டு # எம் ஜி ஆராக நடிக்க முடிவெடுத்துள்ளார்னு சொல்லுங்க


==============

5.சமூக வலைத்தளத்தில் கிண்டல் கேலி செய்வோரை எதிர்கொள்ள திமுக முடிவு. # இணையத்தில் அதிகம் கலாய்க்கப்படுவது 2 தளபதிகள்.திமுக தளபதி,இளைய தளபதி

============

6.மதிமுக நிர்வாகிகள் பல பேர் திமுகவில் இணைய முனைப்புடன் இருக்கிறார்கள் : மாசிலாமணி # மாசிலா உண்மைத்தொண்டனே மாறுவியோ ரேட் படிந்தபோதிலே

=============

7.உயர்கல்வி படிக்காதவர்களை ஏளனமாக பார்க்கக் கூடாது: நடிகர் கமலஹாசன் பேச்சு . # யாரும் அவங்களை படிப்புல புலி னு சொல்லிட்டாங்களா?


============

8.2000 பேருடன் திமுகவில் இணைந்தார் மதிமுக மாசிலாமணி # இனி இவர் காசிலாமணி ன்னு சொல்ல முடியாது.ஒரு பல்க் அமவுண்ட் தேத்தி இருப்பாரு


===========

9.ஸ்டாலினின் பயணம் ஒரு காமெடி டைம், அதனால் ஒரு பலனும் இல்லை: அழகிரி # தமிழ் நாட்டின் மோடி னு பேர் வாங்க ஆசையாம்.அதான் ரவுண்டிங்


==============

10.ஆன்லைனில் வெளியான புலி அதிர்ச்சியில் படக்குழு # தியேட்டர்ல தான் உக்காந்து பார்க்கமுடியல.நெட்லயாவது பார்ப்போம்னு நினைச்சிருப்பாங்க


==========

11.குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவழித்தால் பான் கார்டு விவரம் தர வேண்டும். பாஜக # பான் கார்டுதொலைஞ்சிடுச்சுன்னு விபரமா சொல்லிட்டா?

================

12.ரஜினி புலி படத்தை பாராட்டினார் - செய்தி # அவரு சபை நாகரீகம் கருதி கலைஞர் வசனம் எழுதுன டப்பா படமான பெண் சிங்கத்தையே பாராட்னாரு

==========

13.பேச்சு வார்த்தையில் உடன்பாடு: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..# நல்ல வேளை.லாரி ஸ்ட்ரைக்காலதான் புலி ஓடலைனு சாக்கு சொல்ல வழி இல்ல


============
.
14.இனிமே பொறுமையாக இருக்கமாட்டேன்-சரத்குமார் # விஷாலமான மனசு சார் உங்களுக்கு.போட்டில இருந்து விலகப்போறீங்க்ளா?


=================

15.வரி ஏய்ப்பு செய்யவில்லை; 'வருமான வரியை முறையாக செலுத்தி இருக்கிறேன்' நடிகர் விஜய் அறிக்கை.# வரி கட்ன ரசீதை வெளியிடுங்க.தேதி பார்ப்போம்


=============


0 comments: