Tuesday, July 07, 2015

டெல்லி சம்பவத்தை மிஞ்சிய கேங்க் ரேப்- பட்டுக்கோட்டை பிரபாகர்

ஹீரோ என்றால் திரை நட் சத்திரத்தை நினைப் போம். சாதனைகளை சத்தமில்லாமல் செய்துவிட்டு விளம்பரம் தேடாமல் வாழும் நிஜமான ஹீரோக்கள் சிலர் இருக்கிறார்கள். யார் அவர்கள்?
அடிக்கடி பாலியல் வன்முறை செய்தி கள் வெளிவந்து நம்மைப் பதற வைக் கின்றன. டெல்லியில் நடைபெற்ற மருத் துவக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்முறை நாடு முழுவதும் உச்சமான பரபரப்பை ஏற்படுத்தியது. மீடியாக் களில் கிழித்தார்கள். பெண்கள் அமைப்பு கள் கொடி பிடித்தன. தொலைக்காட்சி களில் இந்தப் பக்கம் இரண்டு பேர் அந்தப் பக்கம் இரண்டு பேரை வைத்துக் கொண்டு விளம்பர இடைவேளை களுக்கு நடுவில் வறுத்தெடுத்தார்கள்.
23 வருடங்களுக்கு முன்பு ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்களை ஒரே நேரத்தில் அதுவும் சீருடை அணிந்த அரசு அதிகாரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியபோது இத்தனை பரபரப்பு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
1992. தருமபுரி மாவட்டத்தில் அரூர் வனப் பகுதியில் சித்தேரி மலையடி வாரத்தில் உள்ள சிறிய கிராமம் வாச் சாத்தி. அங்கே மொத்த மக்கள் தொகையே 600தான். மலையாளம் பேசும் பழங்குடி இனத்து மக்கள் அவர்கள். பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை மடக்கிப் பிடிப்பதில் அரசு முனைப்பாக இருந்த நேரம் அது. வீரப்பன் போர்வை யில் சிலர் வனத்துறை அதிகாரி களை கைக்குள் போட்டுக் கொண்டு சில தொழிலாளி களின் துணையோடு சந்தன மரங்களை வெட்டி ரகசிய மாகக் கடத்திக் கொண்டிருந் தார்கள்.
இந்தக் கிராமத்தில் பல வீடுகளில் ஏராளமான மரங் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பிய வனத்துறை, மாவட்ட கலெக்டர் அனுமதி யோடு காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டுச் சோதனை நடத்த மொத்தம் 300 பேர் அந்த கிராமத்துக்குள் நுழைந்தனர். அதில் 80 பேர் பெண்கள்.
சோதனை என்கிற பேரில் அங்கு நடந்ததோ அநாகரிகமான, பதற வைக் கும் கொடுமையான செயல்கள். ஆண் கள், பெண்கள் என்று அத்தனை பேரும் அடித்து உதைக்கப்பட்டார்கள். அவர் களின் வீடுகள் சின்னாபின்னமாக்கப் பட்டன. தானியங்கள் தெருக்களில் கொட்டப்பட்டன. மின்சாரம் நிறுத்தப் பட்டது. ஊரில் இருந்த ஒரே மளிகைக் கடை உடைத்து நொறுக்கப்பட்டது. ஊருக்கு தண்ணீர் கொடுத்த கிணற்றில் சைக்கிள்களும், உடைக்கப்பட்ட பம்ப் செட்டுகளும் போடப்பட்டன.
அத்தனை பேரையும் ஒரு ஆல மரத்துக்குக் கீழே அமர வைத்தார் கள். 18 இளம் பெண்களை மட்டும் ‘ஆற்றங்கரையில் தோண்டியெடுக்கப் பட்ட மரங்களை லாரியில் ஏற்ற வேண்டும்’ என்று சொல்லி சில அதிகாரிகள் அழைத்துச் சென்றார்கள். உடன்புறப்பட்ட பெண் காவலர்களை அங்கேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
ஆற்றங்கறையில் வெட்ட வெளியில் அந்தப் பெண்களை தனித்தனியாகவும், கூட்டாகவும் சில அதிகாரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள். அதில் 10 பெண்கள் திருமணமாகாத கன்னிப் பெண்கள். அதில் ஒரு பெண்ணுக்கு வயது 13.
இதன் பிறகு அழுதுத் துடித்த அந்தப் பெண்களையும், மரத்தடியில் இருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 217 பேரையும் அரூரில் இருந்த வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றார்கள். அங்கேயும் கொடுமை தொடர்ந்தது. பெண்களை மிரட்டி ஒருவர் உடையை மற்றவர் உருவ வைத்தார்கள். ஊர் பெரியவரை அந்த மக்களைவிட்டே விளக்குமாற்றால் அடிக்க வைத்தார்கள்.
இரண்டு தினங்கள் சித்திரவதைத் தொடர்ந்தது. மெதுவாக விஷயம் வெளியே கசிந்ததும் அவர்களில் 105 பேர் மீது சோதனை போடச் சென்ற அதிகாரிகளைத் தாக்கியதாகச் சொல்லி, போலீஸில் புகார் கொடுத்து, கைது செய்து சேலம் சிறையில் அடைத்தார்கள்.
தமிழ்நாடு பழங்குடியினர் அமைப்பின் பிரமுகர்களான பி.சண்முகம், பி.பாமாதி, பாஷா ஜான் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை, ராஜ்ய சபா உறுப்பினர் ஏ.நல்லசிவம் ஆகியோர் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத் தார்கள். நீதிமன்றத்தை நாடினார்கள்.
ஒப்புக்கு ஒரு ஆர்.டி.ஓ சென்று விசா ரணை நடத்திவிட்டு பாலியல் வன்முறை சம்பவம் நடந்ததாகச் சொல்வதை நம்ப முடியவில்லை என்றும், வீடுகளை அவர்களே சேதப்படுத்திவிட்டு அதிகாரி கள் மீது பழி போடுவதாகவும் அறிக்கை தந்தார். உச்ச நீதி மன்றத்தின் உத்தரவால் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்தது. பாலியல் வன்முறை நடந்ததும், மக்கள் பாதிக்கப்பட்டதும் உண்மை என்று அதன் அறிக்கை சொன்னது. அதன் பிறகுதான் தருமபுரியில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
அரசு அதிகாரிகளின் மீதான வழக்கு என்பதால் இந்த வழக்கை எல்லா வழிகளிலும் இழுத்தடித்தது அரசுத் தரப்பு. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகம் என்பதால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏகப்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அதில் பலர் மிரட்டலுக்கு பயந்து முரண்பட்டு வாக்குமூலம் அளித்தார்கள்.
தங்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களை, பாதிக்கப்பட்ட வர்கள் அடையாளம் காட்ட வேண்டியது சட்டப்படி முக்கியமான ஒரு விஷயம். அந்த அடையாள அணிவகுப்பை அரசுத் தரப்பு வேண்டுமென்றே நான்கு முறை தள்ளி வைத்தது. சாட்சி சொல்ல வந்த பெண்கள் மிரட்டப்பட்டார்கள்.
அடையாள அணிவகுப்புக்கு அந்தப் பெண்களை வேட்டி-சட்டை அணிவித்து, தலைப் பாகை கட்டி, ஆண்களைப் போல வேடமிட்டு அழைத்து வந்தார்கள். பெண்களைக் குழப்புவதற்காகவே 1,500 பேருக்கு நடுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கலந்து நிறுத்தினார்கள். ஆனாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைக் அசிங்கப்படுத்தியவர்களை சரியாக அடையாளம் காட்டினார்கள்.
2011-ம் வருடம். அதாவது குற்றம் நடந்து 19 வருடங்கள் கழித்து இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி எஸ்.குமரகுரு. அவர் தன் தீர்ப்பில், ‘‘இது மிகவும் வெறுக்கவும் வெட்கப் படவும் வேண்டிய சம்பவம். இந்த நாகரிக காலத்தில் அநாகரிகமான கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுபடுத்தும் சம்பவம் இது’’ என்று குறிப்பிட்டார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டனை பெற்றவர்களில் 54 பேர் இறந்துபோயிருந்தார்கள். பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்கள். சிலர் உடனே உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து விடுதலையானார்கள்.
தீர்ப்பு வந்த மறுநாள் வாச்சாத்தியில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கோயில்களுக்கு சென்று நேர்த்திக் கடன் செய்தார்கள். அன்று ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தீர்ப்பு வந்த நாளில், ‘‘அன்று நான் விடுப்பில் இருந்தேன். பள்ளிக்குச் சென்று இருந் தால், அந்தப் பாலியல் கொடுமையில் இருந்து தப்பியிருப்பேன். என் கல்வி, இளமை எல்லாம் போயிற்று’’ என்று அழுதார்.
பாதிக்கப்பட்ட பெண்களை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டு, இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சம்ப வத்தை அடிப்படையாக வைத்து சில குறும்படங்கள் எடுக்கப்பட்டிருக் கின்றன. ‘வாச்சாத்தி’ என்னும் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது.
பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தின் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக 19 நீண்ட வருடங்கள் பொறுமையாகவும், மன உறுதியோடும் போராடிய கம்யூனிஸ்ட் பிரமுகர்களும், பழங்குடி அமைப்பின் பிரமுகர்களும், நியாயத்துக் காக வாதாடிய வழக்கறிஞர்களும், நல்ல தீர்ப்பு தந்த நீதிபதிகளும், இவர் களையெல்லாம்விட பாதிக்கப்பட்ட பெண்களை மணந்து, வாழ்வு தந்த பெயர் தெரியாத அந்த வாச்சாத்தி இளைஞர்களும்தான் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள்!
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில் ஒருவன் மனைவியை தன் படுக்கையறையில் கொலை செய்வான். பிணத்தை காரில் எடுத்துச்சென்று தொலைதூரத்தில் ஒரு சாக்கடையில் போட்டுவிட்டு வந்து, காரை சுத்தம் செய்துவிட்டு அறையையும் தண்ணீர் விட்டு கழுவிய பிறகு, போலீஸுக்கு போன் செய்து, ”வெளியே சென்ற என் மனைவியைக் காணவில்லை’’ என்பான். போலீஸ் அதிகாரி வீட்டுக்கு வருவார். பிரமாதமாக நடிப்பான். ஆனால், அதிகாரிக்கு அவன்மேல் சந்தேகம் வரும். சில தினங்களில் ஆதாரங்களுடன் அவனைக் கைது செய்வார். முதல் சந்தேகத்தை ஏற்படுத்திய விஷயம்: படுக்கை அறையில் உள்ள ஒரு மர டீப்பாயின் கால்களில் காயாமல் இருந்த ஈரத்தின் தடயம்!
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து


  • Raghubalan  
    செம்மை ! வாசத்தி போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமால் இருக்க மீண்டும் மீண்டும் அதனை நினைவூட்ட பரபாகரைபோல் நமக்கு யாரவது தேவைபடுகிறார். நமக்கு, மறதி தான் குருதியில் கலந்து ஓடிக்கொண்டிருக்கிறதே !
    Points
    7645
    3 days ago
     (0) ·  (0)
     
    • Thiyagarajan Srimbhs  
      ஜாலியன்வாலாபாக் படுகோலேய் விட கேவலம்.தமிழ்நாடு முன்னேறுகிறது என பேசி திரிய வேண்டியது தான்.முடிவு என்ன.? ..
      Points
      420
      4 days ago
       (0) ·  (0)
       
      • Balamurugan  
        உண்மாயில் அவர்கள் ஹீரோ கல் தான். அவர்களுக்கு எமது வணக்கம் & நன்றி
        4 days ago
         (0) ·  (0)
         
        • Dr.Meher Ali  
          பாதிக்கப்பட்ட பெண்களை மணந்து, வாழ்வு தந்த பெயர் தெரியாத அந்த வாச்சாத்தி இளைஞர்களும்தான் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள்! எவ்வளவு அப்பட்டமான,உண்மையான வார்த்தைகள்! அந்த இளைஞர்களின் உள்ளம் யாருக்கு வரும்? பாதிக்கப்பட்ட பெண்களை தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்ட மற்ற குடும்ப அங்கத்தினர்களும் ஹீரோ அந்தஸ்திலிருந்து கொஞ்சமும் குறைந்தவர்களல்ல!-------மரு.ஆர். மேஹர் அலி

        0 comments: