Friday, July 17, 2015

வாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி

‘வாலு’ படத்தில் ஹன்சிகாவுடன் சிம்பு
‘வாலு’ படத்தில் ஹன்சிகாவுடன் சிம்பு
நாளை வெளியாவதாக இருந்த ‘வாலு’ படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் கடந்து இப்படம் வெளிவரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் அதன் இயக்குநர் விஜய் சந்தர்.
“இதுவரை பல தடைகளைத் தாண்டிதான் இந்த இடத்துக்கு வந்திருக் கிறோம். படம் வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. ஜூலை 17-ம் தேதி படம் வெளியாகும் என்ற உற்சாகத்தில் சிம்புவின் ரசிகர்கள் திரையரங்கில் ப்ளக்ஸ்கள், பேனர்களை வைப்பது என்று உற்சாகமாக அதை வரவேற்க தயாராக இருந்தனர்.
ஆனால் எல்லோருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. தடைகளைத் தாண்டினால் தான் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். அந்த வெற்றி எங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்கினார் இயக்குநர் விஜய் சந்தர்.
விஜய் சந்தர்.
உங்கள் முதல் படம் வெளியாக இத் தனை தாமதமாகிறதே. உங்களுடைய தற்போதைய மனநிலை என்ன?
என்னுடைய முதல் படத்துக்கு சிம்புவைப் போன்ற ஒரு நாயகன் கிடைத்தது ஒரு வரம். எனக்கு எப்போதுமே நம்பிக்கை அளிப்பவ ரும் அவர்தான். படம் வெளியாக தாமதமாகிறது என்று தெரிந்தவுடன், “படம் நிச்சயம் வரும் விஜய். கவலைப்படாதே. நாம் இருவரும் இணைந்து இன்னொரு படம் கூட பண்ணுவோம்” என்று நம்பிக்கை யளிக்கும் வார்த்தைகளைக் கூறினார்.
‘வாலு’ படம் தாமதமாக வெளியானாலும் அதன் வெற்றி ரசிகர்கள் கையில் இருக்கிறது. அது ஒரு தப்பான படம் கிடையாது என்று அனைவருமே சொல்லுவார்கள்.
இடைப்பட்ட காலத்தில் நீங்கள் வேறு ஒரு படம் இயக்கி இருக்கலாமே?
நான் பண்ணி வைத்திருக்கும் கதைகள் எல்லாமே மாஸ் நாயகர் களுக்கான கதைதான். மாஸ் ஹீரோ படம் பண்ண வேண்டும் என்றால் என்னுடைய முதல் படம் வெளிவர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே என்னுடைய திறமை என்ன என்பது வெளியே தெரியவரும்.
‘வாலு’ வெளி யான பிறகுதான் கொடுத்த பட்ஜெட் டில் நான் என்ன பண்ணியிருக்கிறேன் என்பது மற்ற தயாரிப்பாளர்களுக்கு தெரியும். நிச்சயமாக ‘வாலு’ எனக்கு ஒரு மிகப்பெரிய பாதையை அமைத்து கொடுக்கும்.
இப்படத்தில் வரும் ‘தாறுமாறு’ பாட லில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜீத் என பலவித கெட்டப்களில் சிம்பு ஆடி இருக்கிறாராமே?
உண்மை தான். முதல் முறை இந்த படம் வெளியாகாததே இந்த பாடல் அதில் இடம்பெற வேண்டும் என்பதற் காகத்தானோ என்னவோ. இந்தப் பாடலுக்காக எம்.ஜி.ஆர், ரஜினி, அஜீத் ஆகியோரின் கெட்டப்களில் சிம்புவும், ஜெயலலிதா, நக்மா, சிம்ரன் ஆகியோரின் கெட்டப்களில் ஹன்சிகாவும் ஆடியுள்ளனர்.
‘வாலு’ படத்தின் படப்பிடிப்பில்தான் சிம்பு - ஹன்சிகா இடையே காதல், பிரிவு என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் ‘தாறுமாறு’ பாடலுக்காக மறுபடியும் அவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்களே?
சிம்பு - ஹன்சிகா இருவருமே சிறுவயதில் இருந்து நடிகர்கள். இருவருமே நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ‘தாறுமாறு’ பாடல் படப்பிடிப்பின் போது இருவருமே நல்ல நண்பர் களாக இருந்தார்கள். காதல் என்பது அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம். அதை படத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு.
‘வாலு’ படத்துக்காக கால்ஷீட் விஷயத்தில் ஒத்துழைப்பு எப்படி?
எப்படியாவது இந்த படம் வர வேண்டும் என்று சிம்பு, ஹன்சிகா, சந்தானம் என அனைவருமே ஆசைப்படுகிறார்கள். இப்படத்துக்காக ஏற்கெனவே வாங்கிய தேதிகளைத் தாண்டி ஹன்சிகாவிடம் கால்ஷீட் வாங்கு வேன். அவர் நடிக்க வரும்போது படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக் கும். அந்த நேரத்தில் ஹன்சிகா பயங்கரமாக கோபப்படுவார், ஆனால் அடுத்த முறை தேதிகள் கேட்கும் போது தாராளமாகக் கொடுப்பார்.
அதேபோல் இப்படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவரே சந்தானம் தான். படம் தாமதமாகிறது என்றவுடன் “கவலைப்படாதே விஜய். கண்டிப்பாக படம் வரும். ஜெயிக் கிறோம்” என்றார்.
அதே மாதிரி தான் இசையமைப் பாளர் தமனும். அவர்களின் ஆதரவு தான் எனக்கு புதிய பலத்தைக் கொடுக்கிறது.


நன்றி - த இந்து

0 comments: