Friday, July 17, 2015

மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினிமா விமர்சனம்

நடிகர் : சுரேஷ் குமார்
நடிகை :அக்ஷதா
இயக்குனர் :தஞ்சை கே.சரவணன்
இசை :ஜெய்சங்கர்
ஓளிப்பதிவு :அசோக்
நாயகன் சுரேஷும், நாயகி அக்‌ஷதாவும் ஒரே கல்லூரியில் விஸ்காம் படிப்பில் இறுதி ஆண்டில் படித்து வருகிறார்கள். இறுதி ஆண்டு என்பதால் குறும்படம் ஒன்றை மாணவர்கள் எல்லாம் சேர்ந்து தயாரிக்கிறார்கள். இதில் நண்பர்களெல்லாம் படத்தை இயக்க சுரேஷும், அக்‌ஷதாவும் நடிகர், நடிகையாக நடிக்கிறார்கள்.

இந்த குறும்படத்தை வெற்றிகரமாக எடுத்து, கல்லூரியில் பாராட்டும் பெறுகிறார்கள். இந்த படத்தில் நடிக்கும்போது, அக்‌ஷதா மீது சுரேஷுக்கு காதல் ஏற்படுகிறது. இந்த காதலை அக்‌ஷதாவிடம் கூறுகிறார் சுரேஷ். ஆனால் அக்‌ஷதா சுரேஷின் காதலை ஏற்க மறுகிறார். தன்னுடைய காதலை தவிர்த்தாலும் அக்‌ஷதாவை சுற்றி சுற்றி வருகிறார் சுரேஷ்.

சுரேஷின் காதலை அக்‌ஷதா மறுக்க காரணம் என்ன? இறுதியில் சுரேஷ் அக்‌ஷதாவை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் திறமையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பாடல், காதல் காட்சிகளில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷதா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ளசங்கர், டி.பி.கஜேந்திரன், போண்டா மணி, உள்ளிட்ட பலர் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

காதல் கதையை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தஞ்சை கே.சரவணன். அதில் திறமையான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சரியாக கையாளத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார். திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமலேயே நகர்ந்திருக்கிறது. பல காட்சிகளில் இயக்குனர் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஜெய்சங்கர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியும் அவ்வளவாக எடுபடவில்லை. ஒளிப்பதிவில் அசோக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க’ வருத்தபட ஒன்றுமில்லை.

thanx - maalaimalar

0 comments: