Sunday, July 26, 2015

பேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்ன?-இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிறப்பு பேட்டி

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
'புறம்போக்கு’ வெற்றி படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கான முதல்கட்ட பணிகளைத் தொடங்கியுள் ளார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். புதிய பட வேலைகள், சிறையில் பேரறிவாளனுடனான சந்திப்பு, புறம்போக்கு படம் தொடர்பான சில சர்ச்சைகள் ஆகியவற்றைப் பற்றி அவரிடம் கேட்டோம்.
“இன்றைக்கு பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பது உலக ரிலீஸ், உலக மார்க்கெட், உலக கலெக் ஷன் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டது. திரையரங்கு களைத் தாண்டி சில படங்கள் சிறப்பு கவனத்தை ஈர்க்கவும் செய்கிறது. அந்த நோக்கத்தில் உலகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் தூக்குத்தண்டனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘புறம்போக்கு’ படத்தை இன்னும் பல இடங்களுக்கு கொண்டு போக வேண்டியுள்ளது. அடுத்து புதிய பட வேலைகளை தொடங்கியுள்ள நிலையில் இந்த வேலைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது” என பேசத் தொடங்கினார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
பேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்ன?
இதற்கு முன்பே சிறையில் அவரை சந்தித்திருக்கிறேன். இந்த முறை சந்திக்கும்போது மட்டும் தெளிவாக திட்டமிட வேண்டியிருந்தது. தூக்குத்தண்டனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘புறம்போக்கு’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் பார்த்தால் அது கமர்ஷியல் ஆகிவிடும் என்பதால்தான் படம் ரிலீஸாகி 50 நாட்களுக்கு பிறகு சந்தித்தேன்.
பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் இந்தப் படத்தைப் பார்க்க வந்த போது, ‘படத்தின் முடிவு வேறு மாதிரி இருக்கும். நீங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டுதான் பார்க்க வேண்டும்’ என்றேன். அவரும் நெகிழ்ச்சியோடு பார்த்தார். பேரறிவாளனை சிறையில் சந்தித்தபோது ‘புறம்போக்கு’ படத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அதேபோல புதிய ரிமாண்ட் கைதிகள், பரோலில் வெளியே வருபவர்கள் என்று பலரும் இப்படத்தைப் பற்றி பேரறிவாளனிடம் பகிர்ந்துள்ளனர்.
சிறையிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 8 நிமிடம் போன் பேசுவதற்கு அவருக்கு அனுமதி உண்டு. அப்படி கிடைத்த அனுமதியை சமீபத்தில் எனக்காக செலவிட்டார். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அவரைச் சந்தித்தேன். சிறைச்சாலையில் திரைப் படங்கள் திரையிடும் துறையில் அவர் இருக்கிறார். ஏற்கெனவே ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களை திரையிட்டு காட்டியவர்.
‘‘இந்தப் படம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்’’ என்றார். புழல் மற்றும் வேலூரில் உள்ள கைதிகளும் ‘புறம்போக்கு’ படத்தை பார்க்க வேண்டும் என்று விருப்பத்தோடு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்தால் நானே அனைத்து சிறைகளிலும் திரையிட்டு காட்டத் தயார் என்றேன்.
சிறையிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 8 நிமிடம் போன் பேசுவதற்கு அவருக்கு அனுமதி உண்டு. அப்படி கிடைத்த அனுமதியை சமீபத்தில் எனக்காக செலவிட்டார். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அவரைச் சந்தித்தேன். சிறைச்சாலையில் திரைப் படங்கள் திரையிடும் துறையில் அவர் இருக்கிறார். ஏற்கெனவே ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களை திரையிட்டு காட்டியவர். ‘‘இந்தப் படம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்’’ என்றார். புழல் மற்றும் வேலூரில் உள்ள கைதிகளும் ‘புறம்போக்கு’ படத்தை பார்க்க வேண்டும் என்று விருப்பத்தோடு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்தால் நானே அனைத்து சிறைகளிலும் திரையிட்டு காட்டத் தயார் என்றேன்.
‘புறம்போக்கு’ படம் ரிலீஸான நேரத்தில் தயாரிப்பு தரப்பில் உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறதே?
ஆரம்பத்தில் என்னை புரிந்துகொண்டு முடிவெடுத்தது, பட்ஜெட் ஒதுக்கியது, படத்தின் படப்பிடிப்புக்கான பணத்தை ஒதுக்கியது என்று தயாரிப்பு தரப்பில் தனஞ்செயன் ஒத்துழைத்தார். படம் முடிந்த பிறகு சரியான ஒத்துழைப்பு இல்லை. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகாவை வைத்து திட்டமிட்டிருந்தபடி எந்த நிகழ்ச்சியையும் செய்ய முடியவில்லை.
படம் ரிலீஸாகவிருந்த முதல் நாள்வரைகூட மதுரையில் எந்தந்த திரையரங்கில் படம் ரிலீஸாகிறது என்பதை அறிவிக்கவில்லை. பொதுவாக மதுரை, ராமநாதபுரம் ஏரியாவில் பெரிய படங்கள் 40 திரையரங்குகளில் ரிலீஸாகும். விநியோகஸ்தர்களுக்குள் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் அதில் பிரச்சினை இருந்திருக்கிறது.
மதுரையில் இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்ததும் விநியோகஸ்தர் நேரில் வந்து, ‘‘பெரிய நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் என்று சேர்ந்துள்ள இந்தப் படத்துக்கு முதல் மூன்று நாள் வசூல் ஒன்றரை கோடி எடுக்க முடியும்’ என்றார். இப்படி இருக்கும் சூழலில் மார்க்கெட்டிங் வேலைகள் எதுவும் நடக்காமல் இருந்தால் எப்படி?
இன்று விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி படம் எடுத்தாலும் டிவிடி, கேபிள் வழியே தான் ஒரு படம் போய் சேர்கிறது. திரையரங்கில் அதிக தொகை கொடுத்து அவர்களால் படம் பார்க்க முடிவதில்லை. விளிம்புநிலை மனிதர் கள் அதிகம் பார்க்கும் சென்னை அகஸ்தியா திரையரங்கில் ‘ஈ’ படம் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆன திரையரங்கம் அது.
அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் நானும். இன்றைக்கும் அங்கே ரூ.7 தொடங்கி, அதிகபட்சம் ரூ30 வரைக்கும்தான் கட்டணம். அதனால்தான் ‘புறம்போக்கு’ படத்தை சென்னையில் அகஸ்தியா, அண்ணா, னிவாசா உள்ளிட்ட சில திரையரங்கில் நானே ரிலீஸ் செய்தேன். விளிம்பு நிலை மக்களும் திரையரங்கம் வந்து படம் பார்க்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் வெற்றியடையும் என்பதால் நான் எடுத்த முடிவு அது.
உங்கள் அடுத்த படம் என்ன?
அடுத்ததாக ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு படத்தை இயக்கவுள்ளேன். இது என் பாணி படமாகத்தான் இருக்கும். நாயகனை மையமாக வைத்து கதை தயார் செய்து வருகிறேன். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக வரலாற்று படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் பெரியகோயில் இருந்த காலகட்ட பின்னணிதான் களம். இந்த வேலை யில் இறங்கியபோதுதான் ‘பாகுபலி’ பட வேலைகள் தொடங்கியது.
அந்தப் படத்தின் ரிசல்ட்க்காக காத்திருந்தேன். ‘பாகுபலி’க்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது ஃபேன்டஸி படம். இங்கே கற்பனையைவிட வரலாறு இன்னும் பிரம்பிப்பாக இருக்கிறது. உண்மை கதாபாத்திரங்கள் இன்னும் பிரமிப்பூட்டு கிறது. நான் முழுக்க கற்பனை களத்திலிருந்து வேறுபட்டு உண்மையான வரலாற்று படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.
தமிழர்களை அடிப்படையாக கொண்டு உலக மனித நாகரீகத்தை பிரதிபலிக்கும் படமாக அது அமையும். காதல் பின்னணியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டிடக் கலை, சிற்பக் கலை, கடல் வாணிபம், ஓவியம், இலக்கியம், போர்க் கலை, விஞ்ஞான குறிப்புகள் இவற்றையெல்லாம் எடுத்துவைக்கும் படமாக அது இருக்கும்.
இந்த வேலைகளுக்கு இடையே மீண்டும் ‘புறம்போக்கு’ குழுவினருடன் ஒரு சந்திப்பு உண்டானது. ‘ரம்ஜான்’ பண்டிகைக்காக ஷாம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். ஆர்யா, விஜய்சேதுபதி, நான், ஷாம் உள்ளிட்ட நண்பர்கள் மீண்டும் சந்திந்தது அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


நன்றி - த இந்து


  • Mansfield Robertguna at NLC EMPLOYEE 
    ஒரு சினிமாவிற்கு ஒருகுடும்பம் சென்றுவர எவ்வளவு செலவாகுமென்று உங்களுக்கு தெரியுமா? முதலில் திரையரங்குகளிலில் கட்டணங்களை குறைக்க என்ன வழி என்பதை யோசியுங்கள்
    Points
    2835
    a day ago
     (0) ·  (0)
     
    • VVaduvooraan  
      முதலில் இவரது படங்கள் இவர் இவ்வளவு கரிசனம் காட்டும் அந்த விளிம்பு நிலை மனிதர்களுக்கு புரியுமா என்பதே சந்தேகம். வறட்சி, புரட்சி, பெண்ணியம், சுரண்டல், முதலாளித்துவம், பாசிசம், எதேச்சாதிகாரம், ஆதிக்கம் , வர்க்க போராட்டம் என்று ஒரு அரை டஜன் வார்த்தைகளை வைத்துக் கொண்டு இடது சாரி பிரச்சார நெடி வீசும் இவரது படங்களை அந்த மக்கள் ஒரு நாளும் பார்க்க விரும்ப மாட்டார்கள். 'இது சரி இல்லை அது சரி இல்லை' என்று எதை எடுத்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டு தீவிரவாதத்துக்கும் பிரிவினை சக்திகளுக்கும் துணை போகிற இன்னொரு அறிவுஜீவி! ஹ்ம்ம் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் அங்கு விலை போகாத சித்தாந்தங்களை சந்தை படுத்திக் கொண்டு இன்னும் இது போல சிலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
      Points
      13090
      a day ago
       (0) ·  (1)
       
      Raja Down Voted
      • VVela  
        அவங்க காசையும் ஆட்டய போடறதுக்கா.!!!!!!! அட போயா...
        Points
        220
        2 days ago
         (0) ·  (0)
         
        • Sathish Kumar  
          இப்பொழுதே அந்த தஞ்சை வரலாற்று படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளது. குறிப்பாக ஜனநாதன் அவர்களின் படைப்பில்.
          2 days ago
           (0) ·  (0)
           
          • Agilan Vijay  
            உங்களின் வரலாற்று படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
            2 days ago
             (0) ·  (0)
             
            • MMortin  
              ஏங்க ... நீங்க வேற இப்பிடி சொல்றீங்க வரலாறு எப்பவுமே பின்னோக்கி செல்லாது,சினிமா எப்பவோ தியேட்டரை விட்டு வெளியேறி போயிருச்சி...சீக்கிரமா வீடுகளையும் விட்டு வெளிய்றினால் நல்லது... புரியலீங்களா?? 8 ரூபாயிக்கு காபி விக்கிற காலத்துல 7 ரூபாயிக்கு சினிமா காட்ட அவங்களால முடியாது நூறு ரூபாயிக்கு நிறைய எண்ணிக்கையில் படங்கள் வீட்டுக்குள்ளேயே வருது கேபிளுக்கு குடுக்குற தண்டக்காசை உண்மையான கலைஞர்கள் கைப்பற்றுவது எப்படி ன்னு யோசிங்க..அது தான் இனி சினிமா கலைஞர்களையும் சினிமாவையும் வாழ வைக்கும்,தியேட்டர் தொழில் இனி மீள்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து

            0 comments: