Friday, July 03, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 3/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1 பாபநாசம்
2 பாலக்காட்டு மாதவன்
3 ஒரு தோழன் ஒரு தோழி
4 பரஞ்சோதி’
5  பேபி
6 THE TERMINATOR  # 3/7/15


1 பாபநாசம்

தமிழ் திரையுலகில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆகும். இப்படத்தின் நடிகர் நடிகையாக கமல் ஹாசன் மற்றும் கௌதமி தடிமல்லா நடித்துள்ளனர். இப்படம் 2013-ம் ஆண்டு வெளியான மோகன் லாலின் திரிஷ்யம் என்ற மலையாள படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசெப்.
A family entertainer
Embedded image permalink
கமல் நடிப்பில் தயாராகியுள்ள பாபநாசம் படம் வருகிற 3ம் தேதி வெளியீடு என்று நேற்று முன்தினம் அறிவித்தனர். இன்றைய நாளிதழில் கூட இன்று முதல் Reservation என்று இருந்தது, ஆனால் திடிரென்று திரையரங்கு உரிமையாளர்கள் Reservationனை நிறுத்தி விட்டனர்.
ஏனெனில் "உத்தமவில்லன் ரிலீஸ் நேரத்தில் லிங்குசாமியின் கடன் பிரச்சனை குறுக்கே வந்தது. வெளிநாட்டில் இருந்த கமல், அவசரமாக சென்னை வந்தார். வந்த வேகத்தில் தனது சம்பளம் இல்லாமல் தானே ஹீரோவாக நடித்து 30 கோடி ரூபாயில் லிங்குசாமிக்கு ஒரு படத்தை உருவாக்கி தரவும் சம்மதித்தார்.
ஆனால் இன்று வரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை கமல். இதனால் தான் பாபநாசம் படத்தை தடை போட்டு உள்ளனர் விநியோகஸ்தர்கள்.
படம் வெளிவருமா, வராதா என்று இன்றுதெரியும் என்கிறாகள் கோடம்பாக்கம் புள்ளிகள்.
A comedy film by vivek for b &c centre audience
2  
 பாலக்காட்டு மாதவன்
நான் தான் பாலா படத்தை தொடர்ந்து விவேக் நாயகனாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன்.
அறிமுக இயக்குனர் சந்திரமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருக்க, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
காமெடி படம் என்றாலும் இப்படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறாராம் சந்திரமோகன். தற்போது பாலக்காட்டு மாதவன் படம் வருகிற 26ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Melo drama movie for c centre audience
3 ஒரு தோழன் ஒரு தோழி


அறிமுக நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களோடு அவ்வபோது தமிழ் சினிமாவில்  வெளியாகும் சில எளிமையான திரைப்படங்கள், ரசிகர்களின் புருவத்தை உயர்த்தச் செய்யும். அப்படி ஒரு படம் தான் 'ஒரு தோழன் ஒரு தோழி'.
தொழிற்சாலை ஒன்றில் வாரக் கூலி வேலை செய்கிறார்கள் நாயகர்கள் மீனேஷ் கிருஷ்ணா மற்றும் மனோ தீபன். இதில், மனோ தீபன் நாயகி அஸ்த்ராவை காதலிக்கிறார். மனோ தீபனின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டாலும், தனது ஏழ்மையான நிலைமையை நினைத்து காதலை தவிர்க்கும் அஸ்த்ரா, ஒரு கட்டத்தில் தனது கல்லூரி படிப்பு முடிந்து, தான் ஒரு வேளையில் சேர்ந்த பிறகே கல்யாணம், என்ற நிபந்தனையுடன் ஹீரோவின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.
இவர்களுடைய காதலுக்கு தூது செல்லும் மற்றொரு ஹீரோவான முரட்டு குணம் படைத்த  மீனேஷ் கிருஷ்ணாவும் தனது மாமன் பெண்ணான அபிநிதாவை காதலிக்கிறார்.
இந்த நிலையில், அஸ்த்ரா படிப்புக்காக வட்டிக்கு வாங்கிய பணத்திற்கு ஈடாக அவரையே  அடைய நினைக்கும் வில்லன், நாயகன் - நாயகி காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இவரால் தான் பிரச்சினை வரும் என்று எதிர்ப்பார்க்க, யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில்,செல்போன் மூலமாக நாயகிக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அது என்ன பிரச்சினை, அதன் மூலம் இவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பது தான் க்ளைமாக்ஸ்.
தென் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பலமே அதன் எளிமை தான். அதேபோல, படத்தில் நடித்த நடிகர்களும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைவரும் மேக்கப் இன்றி நடித்துள்ளார்கள்.
குறிப்பாக, ஏழை வீட்டு பெண் என்று கூறிவிட்டு, நல்லா பளபளக்குற பெண்ணை நாயகியாக நடிக்க வைக்காமல், எளிமையான ஒரு அழகோடு உள்ள ஒரு பெண்ணை நாயகியாக்கிய  இயக்குனருக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சிவன்குமார் மற்றும் இசையமைப்பாளர் கே.ஜெயக்ரிஷ் ஆகியோரது பணி பிரம்மாண்டமான முறையில் தனித்துவத்தோடு இல்லை என்றாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு தடை ஏதும் ஏற்படுத்தாமல் பயணித்துள்ளது.
காதல், நட்பு என்று நாம் பலமுறை பார்த்த பாணியில் பயணிக்கும் படம் இரண்டாம் பாதியில் வேறு ஒரு களத்தில் நகர்ந்து, படத்துடன் நம்மை ஒன்றிவிடச் செய்கிறது.
மக்களின் தேவைக்காக கண்டுபிடிக்கப்படும் சில தொழில்நுட்பங்கள் எப்படி தவறாக பயன்படுத்தபப்டுகிறது என்றும், அதனால் சில அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், ஒரு திரைப்படமாக பொழுபோக்கு அம்சத்துடன் படமாக்கியிருக்கும் இயக்குனர் பி.மோகன், அதே சமயம், எதார்த்ததன்மையை மீறாமலும் செயல்பட்டுள்ளார்.
இறுதியில் பாதிக்கப்பட்ட நாயகிக்காக ஹீரோக்கள் பழிவாங்கும் முறை, "பழைய குருடி கதவை திறடி" என்றாகிவிடுகிறது. இப்படி ஒரு படத்திற்கு சற்று மாறுபட்ட முடிவை வைத்திருந்தால், தமிழ் சினிமாவில் தாக்கத்தை எற்படுத்திய சில படங்களின் வரிசையில் இப்படமும் முக்கிய இடத்தில் இடம்பெற்றிருக்கும்.
இருப்பினும், 'ஒரு தோழன் ஒரு தோழி' யதார்த்தத்தை விரும்பும் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
ஜெ.சுகுமார்.

http://tamil.chennaionline.com/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=52ad3b94-7101-413f-8cb1-d60436086f08&CATEGORYNAME=Rview

Violence movie for c centre audience
Embedded image permalink

4 பரஞ்சோதி’

தமிழ் சினிமாவில் ஷங்கர் மட்டும் பிரமாண்ட இயக்குநராக இருந்த நிலையில், தற்போது வரும் புதுமுக இயக்குநர்கள் கதைக்கு தேவைப்பட்டால், ஷங்கரை விடவும் பிரமாண்டத்தை காட்டிவிடுகிறார்கள். அந்த வகையில், 'பரஞ்சோதி' என்ற படத்திற்காக இயக்குநர் கோபு பாலாஜி, 100 ஏக்கரில் கிராமம் ஒன்றையே உருவாக்கி, அதில் நிஜமாகவே விவசாயத்தையும் செய்திருக்கிறார்.

ஐ.பி.எல் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 'பரஞ்சோதி' படம், கதலிக்கிறது தப்பா? மனித சமுதாயம் காதலை கெளரவப்படுத்தாமல் கலவரப்படுத்துகிறதே ஏன்? என்ற கேள்விகளை முன்வைத்து உருவாகும் படமாகும்.

'பரஞ்சோதி' என்கிற ஒரு கிராமத்து இளைஞனின் சுயசரிதை தான் இப்படத்திக் கதை. "கிராமத்து காதல் படமாக உருவாகும் இப்படம் காதலை எதிர்ப்பவர்களுக்கு பாடம்" என்கிறார் இப்படத்தின் இயக்குநர் கோபு பாலாஜி.

1990ஆம் ஆண்டு நடக்கும் கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், சிதம்பரம் அருகே 100 ஏக்கர் நிலத்தில், ஒரு பழைய கிராமத்தையே உருவாக்கியுள்ளார்கள். மேலும் களத்துமேடு, இஞ்ஜின் கொட்டகை, மெகா சைஸ் வைக்கோல் போர், செம்மண் ரோடு என்று அதனுல் விவசாய இடத்தையும் செட் அமைத்து, அதில் 3 மாத காலம் படப்பிடிப்பிற்காக நிஜமாகவே விவசாயமும் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஹீரோவாக சாரதி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 'கிழக்குச் சீமையிலே' விஜயகுமார் மாதிரி பாசமுள்ள தாய்மாமனாக கஞ்சா கருப்பு நடிக்கிறார். 'பிதாமகன்' விகரம் கெட்டப்பில் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் நடிக்கிறார். ஹீரோயினாக அன்சிபா நடிக்கிறார். இவர்களுடன் நாட்டு நாய் ஒன்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. 10 நாட்கள், 1 மாதம், 2 மாதம் இறுதியில் 14 வருடம் வளர்ச்சி என்று அந்த நாயை காண்பிடித்துள்ளார்கள். அதற்காக ஒரே சாயலில் உள்ள 4 நாய்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்குகிறார். சபேஷ்-முரளி இசையமைக்க, எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். சுதாகர் படத்தொகுப்பு செய்ய, ஸ்பீடு சையத் சண்டைப் பயிற்சியளிக்கிறார். வினோத் கலை துறையை கவனிக்க, ஏ.ஆர்.சந்திரமோகன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

என்.கோபலகிருஷ்ணன், என்.தமிழ்ச்செல்வன், என்.மணிகண்டன் ஆகியோரின் இணைத் தயாரிப்பில், என்.லட்சுமணன் 'பரஞ்சோதி' படத்தை தயாரிக்கிறார்.
Ghost thriller for b &c centre audience

5  பேபி


6 THE TERMINATOR 

Action chasing thriller by Arnold Schwarzenegger

0 comments: