Friday, June 05, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 5/6/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை


1 காக்கா முட்டை
2 புத்தனின் சிரிப்பு
3 கிரண்பேடி
5 காத்தம்மா
4 தேகம் சுடுகுது
6 புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் # 5/6/2015



1 காக்கா முட்டை


இரண்டு தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுவிட்ட காக்கா முட்டை, உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. 

இப்படத்திற்கு மேலும், பெருமை சேர்க்கும் விதமாக, இந்த படம் இத்தாலி நாட்டில் மிலன் நகரில் நடைபெற உள்ள 25-வது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவில் சிறந்த உள்நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலித்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

இப்படத்தை மணிகண்டன் என்பவர் இயக்கியிருக்கிறார். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோ மல்லூரி, சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

சென்னை குடிசைப் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள், மேல்தட்டு மக்கள் மட்டுமே உண்ணும் உணவாக கருதக்கூடிய பீட்சாவை வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ள படம்தான் ‘காக்கா முட்டை’. இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

Kaakka Muttai is an Indian Tamil-language film written, directed and filmed by M. Manikandan. This film has won two national awards, at the 62nd National Film Awards and various accolades in numerous International Film Festivals. The film is jointly produced by Dhanush and Vetri Maaran, and presented by Fox Star Studios. The music has been composed by G.V.Prakash Kumar.


 2 புத்தனின் சிரிப்பு


சில சினிமாக்களின் தலைப்பே கவனம் ஈர்க்கும். அப்படித்தான் ‘புத்தனின் சிரிப்பு' என்ற திரைப்படமும். அணுகுண்டு சோதனைக்கே 'சிரிக்கும் புத்தர்' என்று பெயர் வைத்தவர்கள் நம்மவர்கள். அதே அணுகுண்டு போல வீரியம் மிக்க வசனங்களோடு வெளியாக உள்ளது புத்தனின் சிரிப்பு திரைப்படம். "ஏர் உழுது சோறு போட்டவன் எலிக்கறி சாப்பிடறான்" என்பதில் தொடங்கி "தீவிரவாதிகளையும், தீவிரவாத செயலையும் விட கொடூரமானது ஒரு நல்லவனின் அமைதி" என்பது சாட்டையடி வசனங்கள் இடம்பெற்றுள்ள படம் புத்தனின் சிரிப்பு.


ஆசிரியராக, அப்பாவாக, வில்லனாக நடித்த சமுத்திரக்கனி இதில் ஆக்ரோசமாக சாட்டையடி வசனங்களை உமிழ்கிறார்.

அங்காடித்தெரு மகேஷ், மித்ரா குரியன் ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ள இந்தப்படத்தினை விக்டர் டிவேட்சன் இயக்கியுள்ளார். பக்கத்து வீட்டு பையன் போல தோற்றம் கொண்ட மகேசுக்கு இந்தப்படமாவது கை கொடுக்குமா பார்க்கலாம்.

மித்ரா குரியனின் அழகு மிளிர்கிறது. காரணம் கல்யாண களையாம். அம்மணியில் சீக்கிரம் டும் டும் டும் கொட்டப்போகிறார்களாம்.

புத்தனின் சிரிப்பில் புது ஜோடி ஒன்று இணைந்துள்ளது. காதலும் கவர்ச்சியும் அந்த ஜோடிக்கு பஞ்சமில்லை

நகைச்சுவை நடிகர் விவேக் வசனமும் கவனம் ஈர்க்கிறது. ஒருத்தன் ஏழையாக பிறப்பது அவனோட தப்பில்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறப்பதுதான் அவனது தப்பு என்கிறார் விவேக்.

சமூகப் பார்வையுடன் கூடிய அரசியல் படமாக வரவுள்ள இத்திரைப்படத்திற்கு அலி மிர்ஷாக் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்தப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. புத்தர் சிரித்தாரா என்று படம் வெளியான பின்னர்தான் தெரியும




 புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம் பெற்ற ‘மஞ்சள் வெயில்…’ என்னும் பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கிரிஷ்.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு பாட்டு பாடி வந்த கிரிஷ், தற்போது கதாநாயகனாக ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக சிருஸ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹைனா சேகர் இசையமைக்கிறார். செந்தில்மாறன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தம்பி செய்யது இப்ராஹீம் இயக்குகிறார். இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் கூறியாதவது, இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களை சொல்ல தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.
இந்த படத்திற்காக காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டது. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான்.


4  காத்தம்மா

பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா'. இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார்.
மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜில்லன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.சுகுமாரே ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். M.D.சுகுமார் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப் பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான ”காத்தம்மா“ எப்படி பழிவாங்கினால் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.
இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார், அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார். இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார்


5  கிரண்பேடி
இது  ஏதோ டப்பிங்க் ப்டம் போல


6  தேகம் சுடுகுது


இது ஏதோ கில்மாப்பட்டம்

மேலே சொன்ன 2 படங்கள் விபரம் கூகுளில் கிடைக்கலை



நன்றி

தினமணி , மாலைமலர் , ஆல் சினி வெப்சைட்ஸ்

0 comments: