Thursday, April 02, 2015

கொம்பன் - சினிமா விமர்சனம்



ஹீரோ  கிட்டத்தட்ட  ஒரு சண்டியர்  மாதிரி. கிராமத்திலேயே  பெரிய  ரவுடி .கோபம்  அவருக்கு  மூக்குக்கு  மேல  வரும்.நல்ல  வேளை  நாக்குக்கு  மேல வர்லை . கெட்ட  வார்த்தையா  பேசி  இருப்பாரு.  

இந்த  ரவுடி  எதேச்சையா   ஜிகிடியைப்பார்க்கறாரு. அதாங்க நம்ம  ஹீரோயின் . .உடனே   பெண்  கேட்டு  கல்யாணமும்  பண்ணிக்கறாரு.ஹீரோயின்   மேரேஜ்க்கு  ஒரு  கண்டிஷன்  போடுது  (  பொதுவாவே  பொண்ணுங்க  ஏதாவது  கண்டிஷன்  போட்டுக்கிட்டுதான்  இருப்பாங்க . வெய்யில் காலம்னா  ஏர்கண்டிஷன்  வேணும்பாங்க )


அதாவது  பாபபாவோட  அப்பா   வீட்டோட  மாமனாரா  இருப்பாரு.  அப்டியே  இருக்காரு.  ஒரு டைம்  புருசன் பொண்டாட்டியை  அடிக்கப்போக  அப்பா  குறுக்கால  புகுந்து  தடுக்க   அடி  மாமனாருக்கு விழுது. பிரிவு . இடைவேளை .


பொண்டாட்டியைப்பிரிஞ்சு  இருக்க  முடியாத   ஹீரோ  மாமனாரை  மதிச்சு  நடக்காரு .   வில்லன்க  கூட்டம்   மாமனாரைப்போட   அலையும்போது  மாப்ளை  எப்டி  மாமனார்  மெச்சிய  மருமகன்  ஆனார்  என்பதே  கதை


  ஹீரோவா  கார்த்தி  .  பருத்தி  வீரன்  கெட்டப்பை  நினைவு படுத்தும்  தெனாவெட்டான  தோற்றம் . அசால்ட்டா நடிச்சிருக்காரு.ஆக்‌ஷன்  காட்சிகளில்  புகுந்து  விளையாடி  இருக்காரு . காதல்  காட்சிகளில்  கேட்கவே  வேண்டாம் . பொதுவாவே  ஹீரோக்கள்  நடிப்பு  வர்லைன்னாக்கூட  ஹீரோயின்  கூட  கெமிஸ்ட்ரி  மட்டும்  ஒர்க்  அவுட்  ஆகிடற  மாதிரி  பார்த்துக்குவாங்க  . இதிலும்   டிட்டோ 



 ஹீரோயினா   கும்கி  இடை  அழகி மாசற்ற  தழும்பழகி ,மாநிலம்  போற்றும்  மாநிற  அழகி  லட்சுமிமேனன்’ இவர்  ஹீரோ  கூட  நெருக்கமா  டூயட்  சீன்ல  நடிக்கறதைப்பார்த்தா   அதிர்ச்சியா  இருக்கு .ஆரம்பத்துல  பானுமதி , ரேவதி , சுஹாசினி  மாதிரி  இருந்தவர்  நய ன்  தாரா  ரெஞ்சுக்கு  இறங்கி  லோ  ஹிப்பில்  கலக்கறார்


மாமனாரா  ராஜ்கிரண்.  நல்ல  குணச்சித்திர  நடிப்பு . பெண்களைக்கவரும்  வகையில்  வசனம்  நடிப்பு  எல்லாம்  கன  கச்சிதம்  , மஞ்சப்பைக்குப்பின்  இவருக்கு  ஒரு  நல்ல   படம்  (  நமக்கல்ல)


 தம்பி  ராமையா  வழக்கம்  போல்  மொக்கை  . கருணாஸ்  ஆங்காங்கே  



 வில்லனா  வருபவர்  ( ஸ்டண்ட்  மாஸ்டர்  சூப்பர்  சுப்பராயன்) சாண்டோ  சின்னப்ப  தேவர்  போல்  தோற்றம் ., மிரட்டலான  நடிப்பு .பின்னிட்டார்


 இசை    ஜி வி  பிரகாஷ்  குமார் .  அங்கங்கே  உல்டா  இருந்தாலும்  ஓக்கே  ரகம்  





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  நீங்க பதுங்கி அடிச்சா அவன் பாய்ஞ்சு அடிப்பான்.பாய்ஞ்சு அடிச்சா பயங்கரமா அடிப்பான் #,கொ பஞ்ச்

2 தன்மானம் பார்க்கறவனுக்கு வருமானம் இருக்காது # கொ


3 கோயிலுக்கு சனம் மட்டும் வந்தா தேவல.ஜாதியும் இல்ல சேர்ந்து வருது #,கொ


4 கோவக்காரன்னு சொல்லறீங்ளே.பேசிட்டு இருக்கும்போதே அடிப்பானோ?

அடிச்ட்டுதான் பேசுவான் #,கொ


5 பொண்ணுங்களுக்கு அப்பா நெத்தி போல்.புருசம் நெத்தில இருக்கும் குங்குமம் போல் #,கொ


6 அப்பா முகத்தில் விழிப்பதை விட புருசன் முகத்தில் விழிச்சா பொண்ணோட.அப்பாக்கு நல்லது #,கொ


7 ஆளுக்கு ஆள் அடிக்கறதாலதான் இதுக்கு ஆல்ஹஹால்னு பேரு #,கொ


8 மருமகன் வீட்ல மாமனார் பல நாள் தங்கி இருக்கலாம்.ஆனா மாமனார் வீட்ல ஒரு நாள் கூட மாப்ளை தங்கக்கூடாது.மரியாதை இருக்காது# கொ


9 ஜெயிச்சவனை விட தோத்தவனுக்குத்தான் வெறியும் வேகமும் அதிகம்.அவன் கிட்டே தான் ஜாக்கிரதையா இருக்கனும் # கொ

10 ஒரு மனுசன் எதை வேணா.விட்டுக்கொடுப்பான்.ஆனா தான் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு மன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்்டான் # கொ




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  டைரக்டர் ஓப்பனிங் சீன்ல ஒரு ஆம்ப்ள குளிக்கறதைக்காட்றார்.விளங்கிடும்.#,கொ



2 கிராமத்து யதார்த்தம் எனும் போர்வையில் கட்டற்ற வன்முறை #,கொ


3 100,விஜய் 50 விஷால் =,1 கார்த்தி #,கொ



4 ஓப்பனிங் சீன் ல லட்சு ராஜ்கிரண்க்கு சரக்கு ஊத்தித்தருது.விஷால் கோவிச்சுக்கமாட்டாரா?



5 ஜி வி பி மச்சக்காரன் ஓப்பனிங் சாங்கை உல்டா அடிச்ட்டார் .சபாஷ்


6 10,நிமிசத்துக்கு ஒரு பைட்.ஆனா ஆக்சன் காட்சிகள் அதகளம் #,ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கிங் @ கொம்பன்

7 வீட்டோட மாப்ளையா இருக்கறவனைத்தான் கட்டுவேன்னு லட்சு சொல்லுது.சூசகமா யார்க்கோ #,கொ


8 அடி கறுப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி பாட்டில் அரங்கம் அதிரும் கை தட்டல் #,ஜிவிபி ராக்ஸ் @,கொ


9 கார்த்தி -ல்ட்சு நெருக்கமான காட்சி பார்த்தா எனக்கே மனசு கஷ்டமா இருக்கு.புரட்சித்தளபதி பாத்த்தா ;,,,

10 ஆரஞ்சுக்கலர் ஜாக்கெட் போட்டுட்டு பச்சைக்கலர்ல பொட்டு வெச்சிருக்கு லட்சு.மிஸ்மேட்ச்.யாரும்மா மேக்கப்விமன்.?


11 இப்பத்தான் கண்டுபிடிச்சேன்.ஹீரோ படம் பூரா பச்சைக்கலர் அன்டர்டிராயர் போட்டிருக்காரு.ஹீரோயின் அதுக்கு மேட்சா பச்சைப்பொட்டு.அய்யோ ஊர்மிளா!


12 FOUR PLUS FOUR னு (1989) மலையாளப்படத்துல கோவை சரளாவை கில்மாவாப்பாத்த கண்ணால ஹீரோக்கு அம்மாவா.


13 முன் பாதி 6 பைட் சீன் 3 பாட்டு சீன்.வன்முறை.தேறுவது கஷ்டம் @,கொம்பன் இடைவேளை


14 கிருஷ்ண்சாமி நெத்தில நாமம்.ஜாதி ரீதியான காட்சியோ வசனமோ கொம்பன் படத்தில் 1,சீன் கூட இல்லை





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   பருத்திவீரன்  பாகம்  2  என்பது  போல்  பில்டப்  கொடுத்த்து 


2  கிருஷ்ணசாமி  மாதிரி  ஒரு  அல்லக்கை  தானாக  வந்து  மாட்டி  படத்துக்கு  விளம்பரம்  தந்தது  


 3  போஸ்டர்  டிசைன் 


4   வசனங்கள்  பெண்களைக்கவரும்  வகையில் எழுதப்பட்டது
  


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  பெண்களைக்கவரும்  வகையில்  செண்ட்டிமெண்ட்  படத்தில்  எதுக்கு  இத்தனை  வன்முறை  >/?


2 ஹீரோயினோட  அப்பா  அவர்  கூட  தங்குவதாத்தான்  ஆரம்பத்தில்  பேச்சு . ஆனா  அவர்  அப்பப்போ  வந்துட்டு தான்  போறார். அவருக்கு  ஏது  வீடு  ?எங்கே  தங்கறார்?

 3  பின் பாதியில்  திடீர்  என  ஹீரோ  மாமனாருக்கு  மரியாதை  தருவது  எப்படி?  அதுக்கு  அழுத்தமான  காரணம் இருக்க  வேணாமா? 


4  வீடு தேடி  வந்த  மாப்ளையை  மாமா  வாங்க  என  ஒரு  வார்த்தை  கூட  கேட்க மாட்டாரா? 


5  க்ளைமாக்ஸ்  மரண சொதப்பல் .  ராஜ்கிரண்  சாமியாட்ட  நடிப்பு   
படு செயற்கை





சி  பி  கமெண்ட்   = கொம்பன் = மாமனார் மாப்ளை பாசக்கதை.முன் பாதி சண்டை பின் பாதி சென்ட்டிமென்ட்ஸ்.மொக்கைப்படம்.விகடன் =40.ரேட்டிங்= 2.5 / 5 , பி சி செண்ட்டர்களில் சுமாரா ஓடிடும் . போட்ட காசை எடுத்துடுவாங்க



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  சுமார்



 ரேட்டிங் = 2.5 / 5


டிஸ்கி - நண்பேண்டா -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2015/04/blog-post_2.html


Puthukkottai vest theatre
 Embedded image permalink

0 comments: