Friday, March 20, 2015

வலியவன் - எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி வரிசையில் ஹிட் ஆகுமா?- இயக்குநர் சரவணன் பேட்டி


எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’க்குப் பிறகு ‘வலியவன்’ படத்தை இயக்குகிறார் சரவணன். டாக்கி போர்ஷன் முடிந்து, பாடல்களின் ஷூட்டிங் மட்டும் பாக்கி. 
‘‘டி.இமான் இசையில பாடல்கள் சிறப்பா வந்திருக்கு. ஒரு பாடலுக்காக வித்தியாசமான குரல் தேடி மும்பை போனோம். குரல் நல்லா இருந்தது. தமிழ், அவருக்கு வரவே இல்லை. உச்சரிப்பு தெளிவா இல்லைன்னா பாட்டு நல்லா வராதுன்னு சொல்லிட்டு அந்தக் குரலை வேண்டாம்னுட்டார் இமான். அதுலதான், ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எடுத்துக்கற மெனக்கெடல் தெரிஞ்சது. அடுத்து கேரளாவுல இருந்து அதே பாட்டுக்கு இன்னொரு குரல். அதுவும் இமானுக்குத் திருப்தி தரலை. இப்போ அந்தப் பாட்டு, குரலுக்காகக் காத்திருக்குது...’’ என்கிறார் சரவணன்.

மீண்டும் ஜெய்..?

ஏற்கனவே, ‘எங்கேயும் எப்போதும்’ படத்துல ஜெய்யை இயக்கி இருந்தாலும் இந்தக் கதைக்கும் ஜெய்தான் ரொம்ப கரெக்டான ஆளா தெரிஞ்சார். அவர் கேரக்டர் பெயர் வினோத். ஒரு மால்ல மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவா வேலை பார்க்கிறார். அப்போ அவர் சந்திக்கிற 
விஷயம்தான் படம். நடிப்புல இன்னும் ஒருபடி மேலே உயர்ந்திருக்கார் ஜெய்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்துல ஜெய் & அஞ்சலி காதல் காட்சிகள் பேசப்பட்டது. இதுல..?

கண்டிப்பா, இதுவும் பேசப்படும் விதமா இருக்கும். ஜெய் & ஆண்ட்ரியா காம்பினேஷனே புதுசா தெரியும். ஆண்ட்ரியா மாடர்னா தெரிஞ்சாலும் அவங்க அளவுக்கு ஜெய்யை ஸ்டைலா மாத்தியிருக்கோம். ஆண்ட்ரியா பேங்க்ல வேலை பார்க்கிறவங்களா வர்றாங்க. ரெண்டு பேருக்குமான காதல் காட்சிகள் புதுமையா இருக்கும்.

காதல், ஆக்ஷன் படம்னு சொன்னீங்களே?

ஆக்ஷன்னா இதுல வித்தியாசமா எதுவும் பண்ணலை. ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ற மாதிரியான ஆக்ஷன் இதுல இல்லை. தேவையே இல்லாம திணிச்சிருக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் தெரியாது. ஆக்ஷனுக்கான காரணம் கரெக்டா இருக்கும். கதையை நியாயப்படுத்தற மாதிரி வச்சிருக்கோம். 

ஏன் உங்க படத்துல காமெடிக்குன்னு 
தனி டிராக் வைக்கிறதில்லை?

தேவையில்லைன்னு நினைக்கிறேன். ஹீரோ, ஹீரோயினே போகிற போக்கில் காமெடி பண்ணிடறதால அதுக்குன்னு தனியா டிராக் வைக்கலை. என் படத்துல 
அந்தளவு காமெடி போதும்னு நினைக்கிறேன். தனி டிராக் இல்லைனாலும் என் முந்தைய படங்கள்ல இருந்த காமெடியை எல்லாருமே ரசிச்சிருக்காங்க.

இவன் வேற மாதிரி’ சரியா போகாததுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

ஒரு இயக்குனராக என்னோட நூறு சதவிகித உழைப்பை அதுல கொடுத்திருக்கேன். அதைத்தாண்டி அந்தப் படத்தை திரும்பவும் பார்த்து அதுல என்ன குறைன்னு தேடினா எனக்கு தெரியலை. ஒரு வேளை ‘எங்கேயும் எப்போதும்’ படம் மாதிரி இருக்கும்னு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தாங்களோ என்னமோ? எனக்கு அதுக்கான காரணம் தெரியலை. இருந்தாலும் இப்ப டி.வியில படம் பார்த்துட்டு நிறைய பேர் பேசினாங்க. எல்லாருமே நல்லா இருக்
குன்னுதான் சொன்னாங்க. ஒவ்வொரு படத்தையும் வேற வேற மாதிரி தரணும்னு நினைக்கிறேன். அந்த வகையில ‘வலியவன்’ 
வித்தியாசமானவனா இருப்பான்.

அடுத்து கன்னட படம் பண்றீங்களாமே?

ஆமா. புனித் ராஜ்குமார் ஹீரோவா பண்றார். ஜனவரியில ஷூட்டிங். மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகலை.




நன்றி - தினகரன்

0 comments: