Tuesday, March 17, 2015

சின்ன கேப்டன் அதிரடி பேட்டி -மன்னிப்பு என் பரம்பரைக்கு பிடிக்காத வார்த்தை

அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘சகாப்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார் ‘கேப்டன்’ விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். தனது முதல் படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் நடிகன் ஆனது விபத்தா? அல் லது விருப்பப்பட்டு நடிகன் ஆனீர்களா?
லயோலா கல்லூரியில் காட்சித் தொடர் பியல் படிக்கும்போது எனக்கு கேமரா மீது தீராக் காதல் இருந்தது. விடுமுறையின்போது எங்காவது புகைப்படம் எடுக்கப் போய்விடு வேன். ஒரு நாள் அப்பா என்னை அழைத்து, ‘நீ சினிமாவில் நடிக்கிறாயா’ என்று கேட்டார். நான் உடனே சரியென்று தலையாட்டினேன். என் அப்பா ஒரு சிறந்த நடிகர் என்பதால் எனக்குள்ளும் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கலாம்.
ஒரு நடிகராக, அப்பாவிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும்?
அப்பாவின் அர்ப்பணிப்பு உணர்வு, சமூக அக்கறையுள்ள கருத்தைப் பதிவு செய்வது, தொழில் பக்தி ஆகியவை மிகவும் பிடிக்கும். வீட்டில் ஒரு மாதிரி, படப்பிடிப்பில் வேறு மாதிரி என்று அப்பா இருக்க மாட்டார். எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் இருப்பார்.
அதுபோலவே அப்பாவின் ஆளுமை எனக்கு பிடிக்கும். சண்டைக்காட்சிகளில் அவரது வேகமும், கால்களை சுழற்றும் ஸ்டைலும் யாருக்கும் வராது. ஹாலிவுட் படத்தில் கூட நான் அப்படிப் பார்த்த தில்லை. நானும் அப்பா மாதிரி சண்டை போட முயற்சி செய்திருக்கிறேன்.
‘சகாப்தம்’ படத்தின் கதை என்ன?
கிராமத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் நாயகன் படும் அவஸ்தைகள் தான் படத்தின் கதை. அங்கு எனக்கு என்ன சிக்கல் வருகிறது. அதை எப்படி சமாளிக்கிறேன் என்று கதை விரியும்.
இப்படத்தில் எந்தக் காட்சியில் நடிக்க சிரமப்பட்டீர்கள்?
காதல் காட்சிகள்தான். மற்றபடி காமெடிக் காட்சிகளில் எல்லாம் ஓரளவுக்கு இயல்பாக நடித்துவிட்டேன்.
அப்பா நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது?
போலீஸ் வேடத்தில் அப்பா நடித்ததைப் பார்த்தால், போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றும். ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘சத்ரியன்’, ‘மாநகர காவல்’ என்று இதற்கு பல உதா ரணங்களைச் சொல்லலாம். சமீபத்தில் அப்பா நடித்த படத்தை தொலைக்காட்சி யில் பார்த்தோம். எங்களால் சேனலை மாற்றவே முடியவில்லை. மெய்மறந்து பார்த்துக்கொண்டே இருந்தோம்.
அப்பாவின் படங்களைத் தவிர்த்து யாருடைய படங்கள் பிடிக்கும்?
தனுஷ் சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். ‘பீட்சா’ ஒரு வரியில் சொல்கிற கதை. இரண்டு காட்சிகளில் சொல்ல வேண்டியதை ஒரு படம் எடுத்து ஜெயித்திருக்கிறார்கள். ‘ஜிகர்தண்டா’, ‘சூதுகவ்வும்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ போன்ற படங்களைப் பிடிக்கும்.
அப்பாவைப் போல நடிக்க முயற்சி செய்ததுண்டா?
‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு’ என்ற வசனத்தை ‘ரமணா’ படத்தில் அப்பா பேசியிருக்கிறார். அதே வசனத்தை கொஞ்சம் மாற்றி ‘மன்னிப்பு என் பரம்பரைக்கு பிடிக்காத வார்த்தை’ என்று ‘சகாப்தம்’ படத்தில் நான் பேசியிருக்கிறேன். பக்கம் பக்கமா வசனம் இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் பேசுவது அப்பாவின் ஸ்பெஷல். ‘சகாப்தம்’ படத்தில் இறுதிக் காட்சியில் நானும் அதுபோல் நடிக்க முயற்சி செய்திருக்கிறேன்.
வாரிசு ஹீரோ என்பதால் உங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதே. இதை எப்படி சமாளிப்பீர்கள்?
அப்பா ஏற்கெனவே ஒரு பாதையைப் போட்டுக் கொடுத்திருக்கார். அந்த பாதையில் சரியாகப் போனால், அப்பா மாதிரி நானும் நல்ல நடிகனாக வருவேன். அப்பா பேரைக் காப்பாத்தணும் என்பதுதான் என் லட்சியம். நிச்சயம் காப்பாத்துவேன்.
சமீபத்தில் அறிமுகமான சிடூஎச் திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
நல்ல விஷயம்தான். தமிழ் சினிமா படம் வெளியானதும், திருட்டு விசிடியாக வந்து விடுகிறது. இல்லையென்றால், இணையத் தில் வந்துவிடுகிறது. அதற்கு சிடூஎச் நல்ல தீர்வு. சிடூஎச் மூலம் படம் பார்த்தால் அந்தப் பணம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ் தர்களுக்கும் சென்று சேர்வது ஆரோக்கிய மான விஷயம்.
தமிழ் சினிமாவில் இப்போது முந்தைய படங் களை ரீமேக் செய்வது அதிகரித்துள்ளது. எந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள்?
‘கேப்டன் பிரபாகரன்’, ‘சத்ரியன்’, ‘சேது பதி ஐபிஎஸ்’, ‘ரமணா’.


நன்றி  - த  இந்து

  • R.Peri  
    I am wating chinna captain
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Shankar  
      அய்யோ காமெடி காட்சிகளில் இயல்பாகனடிதாராம்.இவரே காமெடி பீஸ் ஆக இருக்கிறார்.இன்னும் என்ன என்ன கஷ்டங்கள் தமிழ் திரை உலகிற்கு வர போகிறதோ.அனுமதி சீட்டு விலையும் ஏறி விட்டது.இதை போன்ற ஆசாமிகளும் திரைக்கு வந்து விட்டார்கள்.இனி படம் பார்பதே விட்டு விடலாம்.
      Points
      15110
      about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Sakthi  
        Mudilla samy....
        about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Dhinakaran  
          உங்கள் தந்தை மிகச்சிறந்தவர் அவரின் வாரிசு நீங்களும் சிறந்தவராக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
          about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Veluchamy  
            Nalla தந்தைக்கு நல்ல மகனாக இருக்க ஆசை படுவது தவறில்லை .குட்.
            Points
            145
            a day ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
            • R.Sarsvanan  
              Nice
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Karthi  
                முடியலட ட samy
                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Raj  
                  Iyo kodumai....
                  Points
                  36170
                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Humanbeing  
                    உங்க அப்பா படம் படுத்தாலும், ஓடினாலும் அந்த காலத்தில் உங்க அப்பாவுக்கு ஒருவர் வலுகட்டாயமாக உதவி செய்து கொண்டிருந்தார் "ராவுத்தர் பிலிம்ஸ்" ஓனர். இது உங்க அப்பவே ஒரு பெட்டியில் சொன்னது. அவர் கூட இப்ப உங்க அப்பா தொடர்பு வைத்திருக்கிறாரா என்று தெரிய வில்லை. அது போல நீங்க ஒருவரை புடித்து கொள்ளுங்கள், முன்னேறி விடலாம். பிஜேபி யோட கூட்டும் வைத்திடலாம்.
                    Points
                    45980
                    a day ago ·   (0) ·   (4) ·  reply (1) · 
                    • parthi  
                      இது அரசியல் பக்கம் அன்று . நீங்கள் பிஜேபி யை எதிப்பது போன்று பாகிஸ்தான் குண்டு வெடிப்பை குறித்து ஆதரித்து கருத்து தெரிவிக்கும் பக்கம் இதுவன்று
                      about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Saravana  
                      வாழ்த்துகள் ...
                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • நாறுன_மூடி  
                        காமெடி/ரவுடி பீசுக்கு கூட உதவது இது ...
                        a day ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
                        • parthi  
                          விஜய் வந்த பொழுதும் ஏளனம் பேசியவர்கள் இன்னும் வெட்டியா பேசிட்டு தான் இருகாங்க ஆனா விஜய் இன்று மிகபெரிய நிலையை அடைந்துவிட்டார் . திறமைய வளத்துகிட்ட போதும் சப்போர்ட் பண்ண அப்பா இருகர்ல

                      0 comments: