Friday, March 06, 2015

எனக்குள் ஒருவன் -சினிமா விமர்சனம்


ஹாலிவுட்டின்  கலக்கல்  குழப்பல் மன்னன்   கிறிஸ்டோபர்  நோலன் -ன்   மெகாஹிட்  படமான  த இன்செப்சன்  படத்தை  முன்  மாதிரியாய்க்கொண்டு  கன்னடத்தில்  லூசியா  எனும்  ஒரு  படம்  எடுத்தாங்க . அங்கே  அது  அதிரி  புதிரி ஹிட் .கிரவுடு   ஃபண்டிங்  எனும்  முறைப்படி  பலர்   கூட்டுத்தயாரிப்பு  அது .அந்தப்படத்தின்   ரீமேக்  தான்  இது .இது   எந்த  அளவு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்குன்னு  பார்ப்போம் .


மெக்கானிக்கல்  லைஃப் ல  ஹீரோவுக்கு  சலிப்பு . ஒரே மாதிரி  வாழ்க்கைல   என்ன  இருக்கு ? வித்தியாசமா  வாழலாமேன்னு  நினைக்கறார். . அப்போ தான்   லூசியா அப்டின்னு  ஒரு  மாத்திரை  பத்தி   அவருக்கு   தெரிய  வருது  . ( நான்  கூட   டைட்டில்ல  லூசியான்னு  பார்த்ததும்  அது   ஒரு  ஃபிகர் பேருன்னு  நினைச்ட்டேன், அன்பே   லூசியா! நீ  வேற்றுக்கிரக வாசியா?உன்  தங்கச்சி  பேரு   ரோசியா?ன்னு  கவிதை  எல்லாம்  ரெடி  பண்ணேன் )


அந்த  மாத்திரையை  சாப்ட்டா  நித்திரை   வரும் .அதில்  வரும்  கனவில்  நாம்  நினைச்ச  வாழ்க்கை  வரும் . நம்ம  சவுகர்யத்துக்கு   கனவு கண்டுக்கலாம்( இந்த  மாத்திரை  மட்டும்   டாக்டர்  ராம்தாஸ் கைல  சிக்குச்சுன்னா  தமிழ்  நாட்டின்  சி எம்மா   நினைச்சுப்பார்த்துக்குவார்)


ஹீரோ  ஒரு  சினிமா  தியேட்டர்ல  ஒர்க்  பண்றார். லேட்டா  தியேட்டருக்கு   வர்றவன்  இதுதான்  சாக்குன்னு   சீட் ல  இருக்கும்  ஃபிகர்   முகத்தை  தடவிட்டே   போவான். அதை  தடுக்க  ஆளுங்க  டார்ச்  லைட்  அடிச்சு  உக்கார  வைக்கனும். அந்த   வேலை தான்   ஹீரோவுக்கு . இடையில்   ஹீரோவுக்கு   ஹீரோயின்   மேல  காதல் .  இது  ஒரு   டிராக்

srusthi


ஹீரோ   லூசியா  எனும்  அந்த  மாத்திரையை  போட்டுக்கிட்டா  கனவில் இன்னொரு  வாழ்க்கை , அதில் இன்னொரு  கதைல   ஹீரோ  டாப்  சினிமா ஸ்டார் . அவரு  மாடலிங்  கேர்ள்  ஐ  லவ்  பண்றாரு . இது  இன்னொரு   லவ்  ட்ராக்


இந்த  2  கதையும்  ஒரே  புள்ளில  எப்படி  இணையுது? என்பதே  திரைக்கதை



ஹீரோவா  சித்தார்த். பல  காட்சிகள்  கமல்  பாதிப்பு  தெரிவது  அவர்  தப்பில்லை.2  கெட்டப்களிலும்  மாறுபட்ட  பாடி லேங்குவேஜ் , வித்தியாச  நடிப்பு   வெல்டன்

deepa sannithi

நாயகி  தீபா சன்னதி, பேருக்கேற்றாற்படி சிற்பமும்  இல்லை, அற்பமும்  இல்லை . பல  விமர்சகர்கள்  ஸ்ருதி கமலை  கழட்டி  விட்டுட்டு  சித்தார்த்  தன்  ஃநிஜ   வாழ்வில்  இவர்  பின்னால போற அளவு  இவர்  கிட்டே  என்ன இருக்கு?ன்னு   கேட்டிருக்காங்க. அங்கே  தான்  எல்லாரும்  தமிழனின்  சைக்காலஜியை  மிஸ்  பண்றோம். பொதுவாவே  அவன்   ஒரு  ஃபிகரை  கரெக்ட்  பண்ணீட்டா  அடுத்த  ஃபிகர்  ஏதாவது  சிக்குச்சுன்னா  பழசைக்கழட்டி  விட்ருவான்.அதுக்காக  புது    ஃபிகர்  பழைய  ஃபிகரை  விட  பக்கா அழகா  இருக்கத்தேவை  இல்லை .முடிஞ்ச  வரை  ஸ்கொரை  ஏத்து ,  அடிக்கடி ஆளை  மாத்து  என்பதே  சினிமாக்காரரின்  தாரக  மந்திரம் 


மேகா  படத்தின்  நாயகி  சிருஸ்டி  இன்னொரு  நாயகி . அழகு  முகம். கன்னத்தில்   விழும்  பணியாரக்குழி  அழகு .துறு துறு  நடிப்பு


நரேன்  தியேட்டர்  அதிபர்  ,நல்ல  குணச்சித்திர  நடிப்பு அழகு


 பின்னணி  இசை  பல  இடங்களில்   சராசரி  தரத்துக்கும்  மேலே 








மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  வாழ்க்கைல 2 லட்சம் மணி நேரம் மனுசன் தூங்கறான்.அதாவது வாழ்நாள் ல பாதி # எஒ


2 யார் சார்  அவனவன்  வாழ்க்கையை  வாழறான்?அடுத்தவன்  வாழ்க்கைக்குதான்  ஆசைப்படறான்.இந்த  வீட்ல இருக்கறவனுக்கு அந்த  வீட்டுக்காரி மேல ஆசை#எஒ


சம்பளம்?

3000 ரூபா
தினமுமா?
மோசம் # எஒ
மாசம்


4 மிஸ்.சமைக்கத்தெரியலைன்னு பீல் பண்ண வேணாம்.எனக்கு சமைக்கத்தெரியும்



நீங்க என்ன சமையல்காரனா? #எஒ



5  பிரியறவங்க  எல்லோரும்  பிரியறதுக்கான காரணத்தை சொல்லிட்டா  பிரியறாங்க ? # எஒ






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  வித்தியாசமான கெட்டப் ,புதிய பாணி நடிப்பு என ஒருவர் முடிவெடுத்தால் அவரால் கமல் பாதிப்பில்லாமல் மிளிர முடியாது.அது தான் கமல் #,எ ஒ


2 கனவுக்காட்சி ,நிஜக்காட்சி இரண்டும் சாமான்யனைக்குழப்பாமல் இருக்க கறுப்பு வெள்ளை,கலர் என இரண்டையும் பிரித்தது புத்திசாலித்தனமே #,எஒ


3 ஹீரோயினுக்கு தொடு உணர்ச்சி லேட் பிக்கப் போல.தோள் மேல கை போட்ட வில்லன் கிட்டே ",டேய் கையை எட்ரா"னு 10 நிமிசம் கழிச்சு சொல்லுது #,எஒ


4 தீபா சன்னதி தான் ஹீரோயின்.ஏதாவது வர்ணிச்சா தெய்வக்குத்தம் ஆகிடுமோ? # எஒ


5 கிளாமர் ரூல் 1,= தொப்பை இருக்கும் சப்பை பிகர் கிளாமர் காட்டக்கூடாது #,எ ஒ


6 ஏண்டி எனக்கு இப்டி ஒரு கிறுக்கு உன் மேல பாடல் வரி ,இசை ஓக்கே.ஆனால் நடன அசைவுகள் சராசரி # எஒ


7



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   நடிகர்கள்  தேர்வு  பக்கா .நாயகிகள்   இருவருக்கும்   சரி சமமான  காட்சிகள்  அமைப்பது   ஹீரோவுக்கான  திரைக்கதையில்  சிரமம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   பெண்  தன்மை  உள்ளவராக  ஓப்பனிங்கில்   ஷாட்டில்  வரும்  ஜான்  விஜய்  அடுத்த ஷாட்டிலேயே  நார்மல் மனுசனா  வருவது  எப்படி  ? 


2  திரைக்கதையில்   டபுள்  ஆக்ட்  சப்ஜெக்ட்  மாதிரி  காட்டிட்டு கடைசியில் இது  லூசியா  டேப்லெட்  எனும்  மேட்டரை  ஓப்பன்   பண்ணி  இருக்கனும்.  ஓப்பனிங்கிலேயே சஸ்பென்சை  உடைச்சது  தப்பு

3   மாப்ளை எந்த கம்பெனில  வேலை பார்க்கறார்? என்ன சம்பளம்னு  விசாரிக்காமயே யாராவது  பெண் பார்க்க வரச்சொல்வாங்களா?பொண்ணு  பார்த்துட்டுப்போன  பின்  தான்   விசாரிப்பாங்களா?


4  முதல்  முறை  ஹீரோ  பெண்  பார்க்க வரும்போது அழகியான  ஹீரோயின்  அழகற்ற கெட்டப்பில்  இருக்கும்  ஹீரோவைப்பார்த்து  அதிர்ச்சி ஆகவே  இல்லையே?  சிரிக்குது? கண் அவுட்டா?


5  ஹீரோவுக்கு இங்க்லீஷ்  நாலெட்ஜ் வரனும்னு  ஹீரோயின்   ஃபாரீன்  கேர்ள்சோட டூர்  அனுப்புவது சொதப்பல் ஐடியா. ஒரு ஆண்  வாத்தியார்ட்ட அனுப்பினா  போதுமே?  பொதுவா  பொண்ணுங்க   சந்தேகப்பிராணிங்க . அப்டி  காதலனை  பொண்ணுங்களோட அனுப்ப  மாட்டாங்க


6   பின்  பாதியில்   ஹீரோ   நடிப்பில்   ஒவ்வொரு  ஃபிரேமிலும்  இது நடிப்பு  நடிப்பு  என   சொல்லுவது  போல்   செயற்கை  தட்டுவது   ஏனோ?





சி  பி  கமெண்ட்   = எனக்குள்  ஒருவன் = ஏ சென்ட்டர்  ரசிகர்களுக்கான   மாறுபட்ட  லவ் த்ரில்லர்.திரைக்கதை  ஸ்லோ-  விகடன்  மார்க் =42  , ரேட்டிங் = 
3/ 5


இது   பி  சி  யில்  சுத்தமா   போகாது 

  ஏ செண்ட்டரிலும்   சுமாராத்தான்  போகும் 

வசூல்   சுமாராத்தான்  இருக்கும். போட்ட  முதலீடு  தேற  வாழ்த்துகள்


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  ஓக்கே



 ரேட்டிங் =3/ 5



விருதாச்சலம்   பி வி ஜி   பேலசில்  படம்  பார்த்தேன்

0 comments: