Monday, March 16, 2015

ராஜதந்திரம் - சினிமா விமர்சனம்

இப்படித்தான் திருடப்போகிறோம் என்று நகைக் கடை உரிமையாளரிடம் வரைபடம் வரைந்து காட்டிவிட்டுத் தங்களின் வேலையைத் தொடங்கும் மூன்று தந்திரக்கார இளைஞர்கள் ஆடும் களவாட்டம்தான் இந்த ‘ராஜதந்திரம்’.
தர்மராஜாவின் (ஆடுகளம் நரேன்) சுக்ரா ஃபைனான்ஸ் திவாலாகி மக்கள் கொதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியோடு தொடங்குகிறது படம். சிறை செல்லும் தர்மராஜா என்ன ஆகிறார் என்ற கேள்வியை அப்படியே விட்டுவிட்டு மூன்று இளைஞர்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறார் இயக்குநர் ஏ.ஜி. அமித்.
அர்ஜூன் (வீரா) தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சாமர்த்தியமான மோசடிகளில் ஈடுபடுகிறான். ஆனால் பெரிய மோசடிகளில் ஈடுபடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.
மிஷல் டிமெல்லோ (ரெஜினி) என்னும் பெண் எம்.எல்.எம். நிறுவனத்தில் இவர்களைச் சேர்த்துவிடு கிறாள். அவளுக்காகவே அந்தத் திட்டத்தில் சேரும் அர்ஜுனுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது.
சிறையிலிருந்து வெளியே வரும் தர்மராஜாவும் போலிச் சான்றிதழ்கள் தயாரித்துத் தருவதில் கில்லாடி யான மாதவ அய்யரும் (இளவரசு) சேர்ந்து ஒரு பெரிய நகைக்கடையைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டு கிறார்கள். தன்னிடம் தொடர்பில் இருக்கும் அர்ஜுன் தான் இதற்குச் சரியான ஆள் என்று மாதவ அய்யர் தீர்மானிக்கிறார். தந்திரங்களின் போர்க்களத்தில் இறுதி யில் வென்ற ராஜதந்திரம் எது என்பதுதான் கதை.
ஆரம்பத்திலிருந்தே திரைக்கதையில் ஒட்டிக்கொள் ளும் திரில்லரும் கலகலப்பும் படம் முழுக்க தொடர் கிறது. சின்னச் சின்னத் திருட்டுகளிலிருந்து நகைக் கடை கொள்ளை வரை எல்லாமே விறுவிறுப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஹோட்டலில் நடக்கும் தங்க பிஸ்கட் திருட்டு கலகலப்பும் விறுவிறுப்புமாய் சித்தரிக்கப்படுறது. படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுவது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.எம். உறுப்பினராக ரெஜினா செய்யும் பிசினஸ் முயற்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பணத்துக்காக அவர் ஏன் அப்படித் தவிக்கிறார் என்பதை விளக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. விஷயம் புரியாமல் தன்னைத் திட்டும் வீராவிடம் அவர் சண்டைபோடும் காட்சியில் வசனம், ரெஜினாவின் நடிப்பு இரண்டும் அருமை.
ஹோட்டலில் தங்க பிஸ்கட் பையைப் பறிகொடுத்த கோஷ்டி அதைப் பறித்த இளைஞர்களைத் தேடி அலையும் காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. காதல் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.
நகைக்கடையைத் திருடத் திட்டமிட்டிருக்கும் சம்பவம் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிய வரும் சூழலில் காவல் துறை அதைக் கையா ளும் விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. திட்டத்தைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் அதைக் கையாளும் விதமும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.
ஆனால் இதையெல்லாம் யோசிக்கவிடாத அளவுக்குத் திரைக்கதை றெக்கை கட்டிப் பறப்பது படத்தின் பலம்.
நடுநிசி நாய்களில் மனப் பிறழ்வு கொண்டவராக வந்த வீரா இதில் படம் நெடுகத் தந்திரக்காரத் திருடனாக வருகிறார். திட்டம் போடுதல், களத்தில் இறங்கித் திருடுதல், வாய் வீச்சு ஆகியவற்றில் அவர் நடிப்பு கச்சிதம். கலகலப்புடன் கூடிய கதையில் அவர் கொஞ்சம் இலகுவாக நடித்திருக்கலாம்.
மூவரில் ஒருவரான தர்புகா சிவா பொழியும் காமெடித் தூறல் ஈர்ப்பை விதைத்துச் செல்கிறது.
நரேன், ‘பட்டியல்’ சேகர் ஆகிய இருவரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். பட்டியல் சேகரின் முக பாவங்கள் மனதில் நிற்கின்றன. இளவரசு கொடுத்த வேலையை வழக்கம்போல ஒழுங்காகச் செய்கிறார்.
திரைக்கதையின் வேகத்தையும், போக்கையும் புரிந்துகொண்ட பிரவீண்குமாரின் எடிட்டிங், சந்தீப் சவுதாவின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன. பாடல் இசை ஜி.வி.பிரகாஷ் குமார். பரவாயில்லை என்று சொல்ல லாம்.
விறுவிறுவென நகரும் திரைக்கதையில் நகைக் கடைத் திருட்டை இரண்டாம் பாதியில் இருந்து தொடங்கியிருக்கிறார், இயக்கு நர். அதை இன்னும் சற்று முன்னதாகவே தொடங்கியிருக்கலாம்.
காவல்துறை இந்த விஷயத்தைக் கையாளும் விதத்தில் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.






மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  வாழ்க்கைல பணம் தரும் தைரியத்தை யாராலும் தர முடியாது # ரா த


2 அடுத்தவங்க பேராசையை நாம யூஸ் பண்ணிக்கிட்டா நம்ம ஆசை நிறைவேறும் # ரா த



3 சின்ன சின்ன தப்பா செஞ்சுட்டு இருப்பதால் தான் தப்பிச்ட்டு வரோம்.பெரிய தப்பா செய்ய நினைச்சா மாட்டிக்குவோம்.# ரா த



4 வேலைக்குப்போற எல்லாப்பொண்ணுங்களுக்கும் உள்ள பிராப்ளம் ஆண்.தான்.ஆனா எங்கே எப்போ அவனை கட் பண்ணனும்னு அவளுக்குத்தெரியும்#,ரா த


5 நாம கடன் வாங்கிட்டு அவஙளைக்கடன் காரஙக னு சொல்றோம் #,ரா த


6 எல்லா உண்மையையும் உன் கிட்டே சொல்லனும்னு அவசியம் இல்லை.ஆனா சொன்னதெல்லாம் உண்மை தான் #,ரா த


7 நல்லது செய்யனும்னு நினைக்கறவங்களுக்கு உதவியா இருப்பதும் ஒரு நல்லதுதான் #,ரா த


8 எதிரி நம்மை விட்டு தூரத்தில் இருந்தா அவன் என்ன பண்றான் ஏது பண்றான்னு தெரியாது.எதிரி நம் அருகில் இருப்பது நல்லது #,ரா த


9 பொய்யான தகவல் தரும்போது எதிரி நம்மை கிராஸ் செக் செய்வான் கற எண்ணம் எப்பவும் மனசில் இருக்கனும் #,ரா த



10 நாங்க என்ன செய்யனும்?னு நீங்க சொல்லாதீங்க.நீங்க என்ன செய்யனும்னு் சார் சொல்வார்.அதன்படி நடங்க #,ரா த



11 சதித்திட்டம் தீட்டனும்னா பதட்டத்துக்கும் பயத்துக்கும் இடம் தரக்கூடாது # ரா த



12 பெரிய அளவில் சாதிக்கனும்னு நினைச்சா ரிஸ்க்கும் ஜாஸ்தியா எடுக்கனும் # ரா த



13 இழந்தவங்களோட அழுகையை நான் பார்த்த்தில்லை.ஆனா இழந்தவையை திருப்பிப்பெற்ற சந்தோஷத்தை பார்த்துட்டேன் #,ரா த






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 எந்த ஊர்ல எப்போ தியேட்டருக்குப்போனாலும் மொத போணி நாமாத்தான் இருக்கோம்.பூரா பயலுக்கும் பொழப்பு இருக்கும் போல்


2 சதுரங்க வேட்டை பாகம் 2 போல் காட்சி அமைப்புகள் வசனங்கள் #,ராஜதந்திரம்


3 ஏன் இந்தப்பார்வைகள் ?ஏன் இந்த மவுனங்கள் அருமையான மெலோடி .படமாக்கப்பட்ட விதம் கவிநயம் # ரா த











சி  பி  கமெண்ட்   ராஜதந்திரம் = முன் பாதி சராசரி ராவடி ஜில்லர் பின் பாதி ராபரி த்ரில்லர் பிஜிஎம் வசனம் பட்டாசு -விகடன் =43 ரேட்டிங் = 3/5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)=  ஓக்கே



 ரேட்டிங் =  3 / 5


டிஸ்கி -  மகாபலிபுரம் - சினிமா  விமர்சனம்

http://www.adrasaka.com/2015/03/blog-post_80.html



கதம்  கதம்  - சினிமா  விமர்சனம்


http://www.adrasaka.com/2015/03/blog-post_66.html

Perundurai nallappaas (rajathanthiram -survival of the smartest) 2 30 pm
 Embedded image permalinka

0 comments: