Friday, March 13, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13/3// 2015 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை


1 தண்ணில கண்டம்
2 ராஜதந்திரம்
4 வானவில் வாழ்க்கை
3 சொன்னா போச்சு 5 மகாபலிபுரம்
7 ஐவராட்டம்
6 கடவுள் பாதி மிருகம் பாதி
8 கதம் கதம்




1 தண்ணில கண்டம் -தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. இதில் இவருக்கு ஜோடியாக நேஹா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆர்.வெங்கடேசன்.


இப்படத்தை சின்னத்திரையில் நெடுந்தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் முதல் முறையாக பெரியதிரையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் திரைப்படத்தின் முதல் கட்டிங் (டீசர்) இன்று அண்ணா பல்கலைக் கழகத்தின் டெக்கோபெஸ் Techofes நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மேலும் “ஒரு எடிட்டர் படத்திற்காக முதலில் கட் செய்வது டீசர்தான். அதை மையமாக வைத்தே டீசருக்கு ‘முதல் கட்டிங்’ என்று பெயர் வைத்தோம். இது அனைவரையும் கவர்ந்துள்ளது” என்று குழுவினர்

2  ராஜதந்திரம்- சன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் எஸ் சேகர் நடிப்பில் AG அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் “ராஜதந்திரம்”.
படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல படகுழுவினரும் ராஜதந்திரமாய் தான் செயல்பட்டு வருகிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் 6 பேர். அந்த ஆறு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் சுபாவம் வெளிபடும் வகையில் படகுழுவினர் 6 டீசர்களை எடுத்து, 6 திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர்.
மேலும் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை விஜய் மூலமாக, அவரது டுவிட்டரில் வெளியிடுகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு முன்னோட்டம் டுவிட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிட்டவர்கள் மற்றும் வெளியிடயிருப்பவர்கள் விவரம் பின்வருமாறு:
1. படத்தின் கதை கருவை உணர்த்தும் டீசரை, டிசம்பர் 14 அன்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
2. படத்தின் கதாநாயகியான ரெஜினா கெசன்ராவின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று நடிகை சமந்தா தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
3. அஜய் பிரசாத் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
4. டர்புக்கா சிவா நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 16 அன்று நடிகர் பிரேம்ஜி அமரன் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்
5. இளவரசு நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 16 அன்று நடிகர்-இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்
6. தன் தந்தை பட்டியல் எஸ். சேகர் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, கிருஷ்ணா வரும் டிசம்பர் 17 அன்று தனது டுவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.
7. இப்படத்தின் கதாநாயகன் வீரா தோன்றும் டீசரை, சிம்பு இன்று(டிசம்பர் 17) தனது டுவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.
8. இறுதியில் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை (டிரைலர்), நடிகர் விஜய் டிசம்பர் 18 அதாவது (நாளை) தனது டுவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.
முன்னோட்டத்தை வெளியிடும் படக்குழுவினரின் வித்தியாசமான மற்றும் விமர்சையான அணுகுமுறை பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ஜனவரியில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.



  4 வானவில் வாழ்க்கை - இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும், அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி பெரும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது ‘வானவில் வாழ்க்கை’.
‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பருவ ராகம்’ என இளைஞர்களை கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம். ‘வானவில் வாழ்கை’ அத்தகைய ஒரு படம்தான்.
மொத்தம் 17 பாடல்கள் அமைந்துள்ள இப்படத்தை, இசையமைத்து இயக்குனராக அறிமுகமாகிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் படத்தில் நடித்தவர்களே பாடுகிறார்கள்.
“இரண்டு கல்லூரியின் இசைக்குழுக்கள் இடையே நடக்கும் போட்டித்தான் கதை. இசைக்குழுக்களில் இருக்கும் நபர்களே படத்தின் பிரதான 11 கதாபாத்திரங்கள். இவர்களே பாடல்களை பாடி நடித்திருக்கிறார்கள், ஆங்கிலத்தில் இவ்வகை படங்களை மியூசிக்கல் ஃபிலிம் என்பார்கள்.
கல்லூரி காலத்திலிருந்தே பாடல்கள் நிறைந்த ஒரு மியூசிக்கல் படத்தை இயக்குவதை பெரும் லட்சியமாகக் கொண்டு இருந்தேன், கல்லூரி மாணவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார் ஜேம்ஸ் வசந்தன்.
“நடிப்பு, பாடல், இசைக்கருவி வாசித்தல் என பன்முகம் கொண்ட இளமை ததும்பும் 11 கலைஞர்களை 2 ஆண்டுகள் தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளோம். சிறு, குறு, பெரியது என கதைக்கொன்றிய 17 பாடல்களை இசையமைத்தும் இருக்கிறேன். நான் அறிமுகம் செய்யும் இந்த இளைய திறமைகள் நிச்சயம் பெரிய அளவில் வளர்ந்து ஜொலிப்பார்கள்.
இப்படம் ஃபிப்ரவரி 13அன்று காதலர் தின கொண்டாட்டமாக வெளிவரும் “ என்றார் ஜேம்ஸ் வசந்தன்.

5 மகாபலிபுரம்-கிளாப் போர்டு மூவிஸ் சார்பில் வினாயக் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘மகாபலிபுரம்‘.
இப்படத்தில் வினாயக், அங்கனா ராய், சூது கவ்வும் புகழ் கருணா, ரமேஷ், வெற்றி, கார்த்திக் ம்ற்றும் பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்குனர் டான் சேண்டி இயக்கியுள்ளார்.
இவர், பூபதிபாண்டியனிடம் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர். மேலும் படத்திற்கு கே இசையமைத்துள்ளார். இவர் ’முகமூடி’, ‘யுத்தம் செய்’, ‘ஒன்பதுல குரு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.
தற்போது இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மகாபலிபுரம் படத்திற்காக ஒரு பாடல் காட்சியைப் படமாக்குவதற்காக பாங்காக் சென்றனர் படக்குழுவினர். பாங்காக்கில் நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சற்று நேரத்தில் திடீரென்று கடலில் அலைகள் பெரிதாகி படகு செல்ல முடியாமல் போனதாக படத்தின் இயக்குநர்  டாண் சாண்டி படப்புடன் கூறினார். பல மணி நேரத்திற்குப் பிறகு, அலைகள் இயல்புநிலைக்கு வந்தவுடன், இருப்பிடம் திரும்பியதாக அவர் கூறினார்.

கிளாப் போர்டு மூவிஸ் தயாரிக்கும் மகாபலிபுரம், சுற்றுலா தளமான மகாபலிபுரத்தில் நடக்கும் கதை. த்ரில்லர் கலந்த காமெடி படமான இதில் சூது கவ்வும் கர்ணா, நேரம் படத்தில் நடித்த ரமேஷ், கனா காணும் காலங்கள்வெற்றி, அறிமுக நடிகர் வினாயக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
6 கடவுள் பாதி மிருகம் பாதி -இருளும் ஒளியும், மேடும் பள்ளமும், உறவும் பகையும், இன்பமும் துன்பமும் இணைந்தே இருப்பவை. அதுபோல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணமும் கெட்ட குணமும் இணைந்தே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்றபடி குணம் வெளியே தெரிகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள இந்த நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம்தான் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. உலகநாயகனால் பேசப்பட்ட இந்த வசனம் மிகப் பிரபலமானது. இந்த தலைப்பை பதிவு செய்து 3 ஆண்டுகள் காத்திருந்து படமாக்கி இருக்கிறார் ராஜ். இவர் மாடலிங், தயாரிப்பு விநியோகம் என்று பலவித அனுபவங்களைப் பெற்றவர், இந்த அனுபவங்கள் மூலம் சினிமாவைக் கற்றவர்.
ராஜ், ஜில்லட், டயோட்டா, அஜ்மல் பெர்ப்யூம்ஸ், சோனி வேகா டிவி போன்ற 50 விளம்பரங்களுக்கு பெங்களுர், துபாய் என்று மாடலிங் செய்தவர்.

KPMP - 5


150 பேஷன் ஷோக்களில் பங்குபெற்றவர். ஏற்கெனவே மலையாளத்தில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸை வைத்து ‘அன்வர்‘ படம் தயாரித்தவர், ‘பைசா பைசா’ இவரது இன்னொரு தயாரிப்பு. சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார். இவர் தனது செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் மூலம் உருவாக்கி வரும் படம்தான் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. படம் பற்றி பேச ஆரம்பித்த இயக்குநர் ராஜ், ”இது ஒரு ரோடு த்ரில்லர் ” என்று தொடங்கினார்.
அப்படியானால் ராம் கோபால் வர்மாவின் ‘ரோடு’ லிங்குசாமியின் ‘பையா‘, வெற்றிமாறனின் ‘உதயம் NH4′ இம்தியாஸ்அலியின்,‘ஹைவே‘ போலவா என்ற போது
“இது ரோடு சைடு த்ரில்லர் தான். ஆனால் அவை போலிருக்காது. வேறு வகையான கதை. இந்தக் கதை நடப்பது சென்னை டு ஹைதராபாத் பழைய ஹைவேயில். முதல்நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவில் முடிகிறது. இது ஒரே நாளில் நடக்கும் கதை. ஹைவேயில் பயணம் செய்யும் சில முக்கிய கேரக்டர்கள் அவை சந்திக்கும் சம்பவங்கள்தான் பரபரப்பான சஸ்பென்ஸ். இந்தப் பயணத்தில் காதல்ஜோடி ஒன்றும் தமிழ்நாடு,ஆந்திராபோலீஸ்காரர்கள் மட்டுமல்ல ஒரு முக்கியமான வினோதமான கேரக்டரும் பயணம் செய்கிறது. அந்த வினோதனுக்கு பெயர் எதுவும் கிடையாது. அவன் ஏன் காதலர்களை தொடர்கிறான்? அவன் நல்லவனா கெட்டவனா.. என்பதுதான் கதை பயணிக்கும் பாதை.. ” என்கிறார்.

KPMP - 1


படத்தில் அந்த வினோத பெயரில்லாத பாத்திரத்தை இயக்குநர் ராஜ் ஏற்று நடித்துள்ளார். காதல் ஜோடியில் காதலனாக அபிஷேக் வருகிறார்.இவர் ஆர்யா தயாரிக்கும் ‘படித்துறை’ யின் நாயகன். மலையாளத்தில் மோகன்லாலின்‘கேஸினோவா’ படத்தில் லட்சுமிராயுடன் ஜோடியாக நடித்தவர். இப்படத்தில் அபிஷேக்கிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா ஸ்வேதா விஜய் நடித்துள்ளார்.
‘மைனா’ சேதுவும் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். ஒளிப்பதிவு கிஷோர் மணி. இவர் இதற்குமுன் மலையாளத்தில் மணியாற்றிய அனுபவம் பெற்றவர். இசை ராகுல்ராஜ். இவர் தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்த‘ஒ மை ப்ரண்ட் ‘ மற்றும் மலையாளத்தில் ப்ருத்விராஜ் நடித்த ‘லண்டன் பிரிட்ஜ்.’ ‘பேச்சுலர் பார்ட்டி‘ வெற்றிப் படங்களுக்கு இசையைத் தந்தவர்.
இப்படத்தில் 3 பாடல்கள். கருணாகரன் எழுதியுள்ளார். இவர் ‘அலெக்ஸ் பாண்டியனில்’ ‘பேட் பாய்ஸ்’ பாடல் மற்றும் ‘டமால் டுமீல்’ படப் பாடல்கள் எழுதியிருப்பவர்.
இதுவரை 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து 90% முடிந்துள்ளது.
நடித்து தயாரித்து இயக்கியுள்ள ராஜ் தன் இணை இயக்குநர் சுரேஷின் பெயரையும் தன் பெயருடன் இணைத்து கதை திரைக்கதை இயக்கம் ராஜ் & சுரேஷ் என்று இணையாகப் போட்டுக் கௌரவித்துள்ளார். மதுரைக்காரரான சுரேஷ்- இயக்குநர்கள் ஹரி, சுந்தர்.சி ஆகியோரிடம் சினிமா கற்றவர். .
சஸ்பென்ஸ், திகில், காதல், ஆக்ஷன் என எல்லா வணிக மசாலாப் பொருட்களும் தூவப்பட்ட கம கம த்ரில்லரான இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் வெளியிடும் திட்டத்தில் மும்முரமாக இருக்கிறது படக்குழு. இப்படத்தின் டீஸர்  வெளியான சில மணிநேரத்தில் பத்தாயிரம் ஹிட்டடித்து இயக்குநரை பரவசப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




7 ஐவராட்டம்-  ‘நான் மகான் அல்ல’, ‘சென்னையில் ஒருநாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஜெயபிரகாஷ். இவருடைய மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் தற்போது ‘ஐவராட்டம்’ என்னும் படத்தில் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். 


இந்த படத்தில் இவர்களுடன் அம்ருத் கலாம் என்பவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஜெயபிரகாஷும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நித்யா ஷெட்டி நடிக்கிறார். பசங்க சிவகுமார், லொள்ளுசபா மனோகர், கிங்காங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மிதுன் மாணிக்கம். இசையமைப்பாளர் செல்வகணேஷ் மகன் சுவாமிநாதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார். சுப செந்தில் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.


இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து பேர் மட்டும் விளையாடும் கால்பந்தாட்டம் பற்றிய கதை இது. வேறு எந்த இடத்திலும் இந்த விளையாட்டை விளையாட அரங்கம் இல்லை. இதற்கான அரங்கு சிவகங்கையில் மட்டும்தான் இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சினை, மற்றும் காதல் மற்றும் குடும்ப சென்டிமென்டை உள்ளடக்கிய கதை இது. 


விளையாட்டை மையப்படுத்தி இப்போது நிறைய படங்கள் வருகிறது. சினிமாவின் மூலம் இளைஞர்களை உற்சாகப்படுத்தி விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சி இப்போது அதிகமாகிவிட்டது. அந்த புதிய முயற்சியில் நாங்களும் இறங்கி இருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது. 


8 கதம் கதம்- லீஸ் கதைகளுக்கு எப்போதும் ஒரு கஞ்சி போட்ட மிடுக்கு இருக்கதான் செய்கிறது. பாபு தூயவன் இயக்கும் கதம் கதம் படமும் இரு போலீஸ்காரர்களை பற்றியது. 
நந்தா ஒரு போலீஸ்காரர், நட்டு இன்னொரு போலீஸ்காரர். முன்னவர் நல்லவர், பின்னவர் கெட்டவர். இந்த இரு போலீஸ்காரர்களுக்குமிடையில் நடக்கும் கதகளிதான் படம். படத்தின் இறுதி ட்விஸ்ட் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை உறுதி செய்வது. அதில் மொத்த கதையும் மாறிவிடும். அப்படியொரு பவர்ஃபுல் கிளைமாக்ஸாம்.
படம் முடிந்து போஸ்ட்புரொடக்ஷனும் முடியும் நிலையில் உள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல்களை வெளியிட்டனர். தாஜ்நூர் இசை. 
கதம் கதம் என்றால் முடிந்தது முடிந்தது என்று அர்த்தம். இதுபோன்ற டைட்டிலை சென்டிமெண்ட் கருதி வைப்பதே இல்லை. வைப்பது என்ன, கதம் கதம் என்று பேசக்கூட மாட்டார்கள். அந்த சென்டிமெண்டை உடைத்ததற்காகவே படம் ஓட வேண்டும்.

  3 சொன்னா போச்சு -பீசியெம் தயாரிக்கும் படம் ‘‘சொன்னா போச்சு’’. இதில் மனோபாலா, ஆர்த்தி காமெடி கேரக்டரில் வருகிறார்கள். அருண், விஜய், சுரேஷ், அழகு, பெருமாள், கோபிகா, சுமி, ரிச்சா, லட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் பீசியெம் முக்கிய கேரக்டரில் வருகிறார். இணை தயாரிப்பாளர் வெங்கடேசன், திருநங்கையாக வருகிறார்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாய்ராம் இயக்குகிறார்.
எந்த ஒரு ரகசியமும் மறைத்து வைக்கப்படும் வரைதான் பலமுள்ளதாக இருக்கும். வெளியே கசிந்து விட்டால் அது வலுவிழுந்து போகும். இதை மையமாக வைத்தும் மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்களிடம் ஏற்படும் பாதிப்பை அவர்களுக்கு உணர்த்தி அதில் இருந்து மீட்டெடுக்கும் விதமாகவும் இப்படம் தயாராகிறது என்றார் இயக்குனர்.
குடிகெடுக்கிற குடியை குடிச்சு பாழாய் போகும் உடம்புடா என்ற பாடல் சென்னையில் பல லட்சம் செலவில் அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், நாகர்கோவில், செஞ்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
ஒளிப்பதிவு மனோஜ்நாராயணன், இசை: பீசியெம், எடிட்டிங்: பாலு.



நன்றி  - மாலை   மலர்  , தினமணி  , பெண்கள் , அனைத்து  சினிமா  வெப்சைட்

0 comments: