Tuesday, December 30, 2014

கங்காரு - உயிர் சாமியின் அடுத்த கில்மாப்படமா?

வெற்றி என்றால் அனைவரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், தோல்வி என்றால் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள் என்று இயக்குநர் சாமி கூறினார். 



இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்காரு' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்படத்தின் ட்ரெய்லரை கலைப்புலி தாணு வெளியிட்டார். 


அவ்விழாவில் பேசிய இயக்குநர் சாமி, "நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்த மாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 


இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசியவிருது கிடைக்கும். படத்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை. 2015ல். 'கங்காரு'வை வெளியிடுகிறார். "என்றார். 


இப்படத்தை வெளியிடும் தாணு பேசும் போது, "பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் 'பாசமலர்' ,'முள்ளும்மலரும்' வரிசையில் நான் தயாரித்த 'கிழக்குச் சீமையிலே' படமும் அமைந்ததில் பெருமைப்படுகிறேன். அது 275 நாள் ஓடியது. 'கங்காரு' படத்தை முழுவதும் பார்த்துதான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர்பார்க்க முடியாத 'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும.் படமும் வெற்றி பெறும் "என்றார். 

நன்றி - த இந்து

Monday, December 29, 2014

'மருதநாயகம்' - கமல்ஹாசன் - 2015 -ஒரு துரோகியின் கதையா?

மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்

 

 

1997ம் ஆண்டு நிதிப் பிரச்சினை காரணமாக கைவிடப்பட்ட 'மருதநாயகம்' படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்' 


நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார். 


இந்நிலையில் 'மருதநாயகம்' குறித்த கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ள கமல்ஹாசன், லண்டனில் உள்ள தனது நண்பர் தொழிலதிபர் ஒருவர் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். ”பட்ஜெட் அதிகமாச்சே என்று கேட்டேன். அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும் தான்" என்று கூறியிருக்கிறார். 


கமல்ஹாசனின் இந்த பதிலால், 'மருதநாயகம்' எந்த நேரத்திலும் தொடங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கமல்ஹாசன், அப்படத்தின் முதல் 30 நிமிட காட்சிகளை காட்சிப்படுத்திவிட்டார். மீதமுள்ள காட்சிகளைத் தான் காட்சிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி - த இந்து

 கான் சாஹிப் என்ற மருதநாயகம் ஒன்றும் தியாகி அல்ல .வீரன் அழகுமுத்துக்கோன் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாளையகாரர்களை பீரங்கிக்குள் திணித்து வெடிக்கசெய்த மாபாதகன் . முதலில் மருதனாயகமாக பிரெஞ்ச்காரர்களிடம் வித்தை கற்று கட்சி மாறியவன் .ஆனால் எந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வால் பிடித்தான்னோ அவர்களே அவனை சாய்த்து தலை , கால் , கை ,உடல் போன்றவற்றை மதுரை ,திருச்சி , தேனீ என்று பல மாவட்டங்களில் புதைத்ததாக வரலாறு சொல்லுகிறது . கமல் ஏன் நம் இன துரோகியை பாராட்டுகிறார் என்று புரியவில்லை . படிக்கவும் காவல் கோட்டம் அல்லது விக்கிபிடிய

பொங்கல் ரேஸ் - ஜெயிக்கப்போகும் குதிரை எது?

  • 'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
    'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
சமீப காலமாக பண்டிகை தினங்களில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தன. ஆனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் இந்த நிலை மீண்டும் மாறியிருக்கிறது. ‘கயல்’, ‘மீகாமன்’, ‘கப்பல்’, வெள்ளக்கார துரை’ என்று நான்கு படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக, அடுத்ததாக வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு ஐந்து படங்கள் இப்போதே வரிசைகட்டி நிற்கின்றன. 


பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்படும் படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்கள். இதனால் எந்தப் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் குழம்பிப் போய் உள்ளனர். இந்நிலையில் நிஜமாகவே இப்படங்கள் பொங்கல் ரேஸுக்கு தயாராக இருக்கிறதா என்று கோலிவுட்டில் விசாரித்தோம். 



‘ஐ’
விரைவில் வெளியீடு என்று பலமுறை விளம்பரப்படுத்தப்பட்ட ‘ஐ’ திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டே தீருவது என்ற தீர்மானத்துடன் உள்ளார்கள் இப்படக் குழுவினர். ‘ஐ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், தற்போது ‘யு’ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு கிடைக்காவிட்டாலும் யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. “பொங்கலுக்கு முன்பு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடுவோம். இதிலிருந்து எந்த காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை” என்கிறார்கள் இப்படக் குழுவினர். மிக விரைவில் ‘ஐ’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 



‘என்னை அறிந்தால்’
படத்தின் முதல் பாதியின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இரண்டாம் பாதிக்கான இறுதிகட்டப் பணிகள் நடந்துவருகின்றன. அதையும் விரைவில் முடித்து ஹாரிஸ் ஜெயராஜிடம் பின்னணி இசைக் கோப்பு பணிக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். “ஜனவரி 15-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும். படத்தின் பணிகள் அனைத்தும் அதற்குள்ளாகவே முடிந்துவிடும்” என்கிறார்கள் ‘என்னை அறிந்தால்’ படக் குழுவினர். 



‘ஆம்பள’
படப்பிடிப்பு தொடங்கும்போதே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரு கின்றன. இத்தாலியில் பாடல் காட்சிகளை படமாக்கி திரும்பியுள்ள நிலையில் டிசம்பர் 27-ம் தேதி இசை வெளி யீட்டு விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்கிறார்கள் படக் குழுவினர். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது இப்படக்குழு. 



‘கொம்பன்’
‘கொம்பன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு 26-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங் உள்ளிட்டவற்றையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிந்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் ‘கொம்பன்’ குழுவினர் உறுதியாக இருக்கிறார்கள். 



‘காக்கி சட்டை’
டிசம்பர் வெளியீட்டில் இருந்து பொங்கல் ரேஸில் புதிதாக இணைந்துள்ள படம் ‘காக்கி சட்டை’. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் மட்டுமே பாக்கி இருக்கிறது. விரைவில் அப்பணியும் முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறுகிறது ‘காக்கி சட்டை’ படக் குழு. 


மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் ‘ஐ’, ‘ஆம்பள’, ‘காக்கி சட்டை’ ஆகியவை பொங்கல் வெளியீட்டில் இருந்து எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை அதன் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருக்கும் அட்மஸ் நிறுவனம் ஜனவரி 14-ம் தேதி படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது. ஜனவரி 14-ம் தேதி என்றால் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. 


நன்றி- த இந்து

‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி -ன் ’ பாகுபலி’ கதை என்ன?

ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் என்று நம்பப்படும் ரிஷப மாமுனிவரின் முதல் மகன் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பாகுபலி வெகுண்டெழுந்து சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற அண்ணனின் முகம் வாடியதைக் கண்டு, பாகுபலி துறவறம் மேற்கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தப் போரையும் பாகுபலியின் காதலையும் பின்னணியாக வைத்து ‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி ’ பாகுபலி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம். 


ஹாலிவுட் வரலாற்றுப் படங்களுக்குச் செய்யப்படுவதுபோலவே புரொடெக்‌ஷன் டிசைன் செய்து பிரம்மாண்ட நகரம் ஒன்றை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதில் 9-ம் நூற்றாண்டின் ஆடைகள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகளுக்கான போர்க் கவசங்கள், அந்தக் காலகட்டத்தின் ஆயுதங்கள் என்று படத்தின் முன் தயாரிப்புக்கு மட்டுமே ஓராண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறதாம் ராஜமௌலியின் டீம். 


அந்த உழைப்புக்குப் பலன் கிடைத்திருப்பதாக ஆந்திராவைத் தாண்டியும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 2015 மே மாதம் வெளியாக இருக்கிறது. 



இப்படத்தில் பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும், அவந்திகாவாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். அவந்திகா கதாபாத்திரமாக 9-ம் நூற்றாண்டின் ஆடை அணிந்து பாகுபலி படத்துக்காகத் தமன்னா அருவியில் குளிப்பதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். 


இப்படத்திற்கு இசையமைத்துவரும் எம்.எம்.கீரவாணி, இதன்பிறகு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ‘டென் காமாண்ட்மென்ஸ்’ படத்தை விஞ்சும் விதமாகப் பாகுபலிக்குப் பின்னணி இசை அமைக்கப் பாடுபட்டுவருகிறாராம் இவர். இந்தப் படத்தின் வழியாக ஆஸ்கரை ராஜாமௌலி குறிவைத்திருப்பதாகப் பேச்சு. 


நன்றி - த இந்து 

‘எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்' - படத்துக்கு எகிப்து நாட்டில் தடை ஏன்?

எக்ஸோடஸ் படத்தில் கிறிஸ்டியன் பேல் | கோப்புப் படம்: ஏபி
எக்ஸோடஸ் படத்தில் கிறிஸ்டியன் பேல் | கோப்புப் படம்: ஏபி 
 
 
உலகின் பல நாடுகளிலும் சமீபத்தில் ‘எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்' எனும் ஹாலிவுட் திரைப் படம் வெளியானது. இந்தியா உட்பட பல நாடுகளில் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு எகிப்து தடை விதித்துள்ளது. 



கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு ‘எக்சோடஸ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எகிப்தில் இருக்கும் இஸ்ரேல் நாட்டு அடிமைகளை மோசஸ் என்பவர் செங்கடல் வழியாக அழைத்துச் சென்று அவர்களைக் காப்பாற்றினார் எனும் விவிலியத் தகவல்தான் இந்தப் படத்தின் மையக் கருத்து ஆகும். 



ரிட்லி ஸ்காட் இயக்கத்தில், கிறிஸ்டியன் பேல் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வரலாற்றுத் தகவல்களுக்கு முரணாகப் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. 


உதாரணத்துக்கு, அடிமைகளை மோசஸ் செங்கடல் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியில் கடல் இரண்டாகப் பிரிந்து அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்பு வந்த ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்' உட்பட வேறு சில திரைப்படங்களில் இந்தச் சம்பவம் ஒரு தெய்வீக அதிசயத் தால் கடல் இரண்டாகப் பிரிந்தது போல் காட்சிகள் அமைக்கப்பட்டி ருந்தன. அதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை அத்திரைப் படங்கள் பெற்றிருந்தன. 


ஆனால் இத்திரைப்படத்தில் கடல் இரண்டாகப் பிரிந்தது ஓர் இயற்கை நிகழ்வுபோல் காட்டப் பட்டுள்ளது. கடல் இயற்கை யாகவே உள்வாங்கிக் கொண்ட தால் அவர்களுக்கு வழி ஏற்பட்டது என்பதுபோல் காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இதனால் பல கிறிஸ்தவ அமைப்புகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 


மேலும், மோசஸ் தன் கையில் குச்சிக்கு பதிலாக வாள் போன்ற ஓர் ஆயுதத்தை ஏந்தி யிருப்பது போலவும், எகிப்தில் உள்ள பிரமிடுகளை எல்லாம் மோசஸ் மற்றும் யூதர்கள்தான் எழுப்பினார்கள் என்பது போல வும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக் கின்றன. 


இதனால் எகிப்தில் பலரும் இத்திரைப்படத்தை எதிர்த்து வந்தனர். இந்நிலையில், இது குறித்து விசாரிக்க எகிப்திய கலாச் சாரக் குழு தலைவர், திரைப்படத் தணிக்கைக் குழு தலைவர் மற்றும் இரண்டு வரலாற்றுத்துறை பேராசிரி யர்கள் ஆகியோர் நியமிக்கப் பட்டனர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எகிப்தில் இந்தப் படம் தடை செய் யப்பட்டுள்ளது. இதுகுறித்து, எகிப்திய கலாச்சார அமைச்சர் கபர் அஸ்போர் கூறும்போது, "இது சியோனிஸ பார்வையைக் கொண்ட திரைப்படம். மேலும், இதில் வரலாற்றுத் தகவல்களுக்கு முரணாக நிறைய காட்சிகள் இருக் கின்றன. எனவே இத்திரைப் படத்தைத் தடை செய்கிறோம்" என்றார். 



முன்னதாக இதே காரணங் களைக் கூறி மொராக்கோ இப்படத் திற்குத் தடை விதித்துள்ளது. எகிப்தில் ஏற்கெனவே ‘தி டா வின்சி கோட்' திரைப்படத்தின் பல காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. 


நன்றி - த இந்து

ஆனந்த விகடன் ஆசிரியர் - கிரேசி மோகன்!!!

அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
வி பார்த்தசாரதி, சென்னை - 49
உங்கள் பத்திரிகைத் துறை அனுபவம் பற்றி எழுதுங்களேன்? 

 
அது 85-ம் வருடம் என்று நினைக்கிறேன். காலையில் ஓட்டம் (சுந்தரம் கிளேட்டனுக்கு இன்ஜினீயராக), மாலையில் ஆட்டம் (நாடக நடிகனாக), நள்ளிரவு வரை நாட்டம் (‘ஜூனியர் விகடன்’ ஆபீஸில் எழுத்தாளனாக) என்று என் வாழ்க்கை கைனடிக் ஹோண்டாவில் ஓடிக் கொண்டிருந்தது. என்னை ஆளாக்கியது எனது அப்பா வழித் தாத்தா என்றால், என்னை எழுத்தாளனாக்கியது ’ஆனந்த விகடன்’ தாத்தா. 


இந்த ர.மோகனுக்கு ‘கிரேசி’ என்கிற அடைமொழியைக் கொடுத்து, உரையாடல் மட்டுமே அறிந்திருந்த எனக்கு உரைநடையை உபதேசித்தவர் எங்கள் எல்லோராலும் எம்.டி என்று மரியாதையாக அழைக்கப்படும் ஆனந்த விகடன் நிர்வாகி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். 


கல்கி, தேவன், சாவி, பரணீதரன் போன்ற ஜாம்பவான்கள் முத்தெடுக்கக் குளித்த விகட மகா சமுத்திரத்தின் அலையில் என்னையும் நின்று விளையாட அனுமதித்தவர். ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கே.பி.டி. சிரிப்பு ராஜன்’என்ற நகைச்சுவை சரித்திரத் தொடர்கதை என்னும் அகழியைத் தாண்ட வைத்து, விகடன் கோட்டைக்குள் நான் நுழைய முத்திரை மோதிரம் அளித்தவர். 


சூரியனுக்கு முன் போய் சூரியனுக்குப் பின்னே திரும்பும் இந்த சுந்தரம் கிளேட்டன் இன்ஜினீயரைக் கொஞ்சினவர் எம்.டி. எனது பத்திரிகை மசக்கையை அவரிடம் வெளியிட்டபோது ‘ஏன் கஷ்டப்படறே...பேசாம நீ இங்கே சப்-எடிட்டரா சேந்துடேன். இன்ஜினீயர் சம்பளம் தர்றேன்’’ என்று தனக்கே உரிய கணீர் குரலில் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஊழியனோடு சேர்ந்து VSP (வெற்றிலை, சீவல், புகையிலை) போடுவார் அந்த முதலாளி. நான் விகடனில் வேலை பார்த்தேன் என்பதைவிட டிராமா, சினிமா போக அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் என்பதுதான் நிஜம். அந்த அளவுக்கு எனக்கு அனுக்கிரகம் அளித்தவர் எம்.டி. 



ஒரு தடவை ‘‘அப்பாவுக்குக் காரியம் செய்ற நாளை ஏன் ‘அமாவாசை’ என்கிறோம் சார்? ‘அப்பாவாசை’ என்றுதானே சொல்ல வேண்டும்’’ என்ற ஏறுமாறான எனது கேள்விக்கு, ‘‘அது இல்ல மோகன்... பையன் அப்பாவுக்குக் காரியம் செய்யணும்கிறது அம்மாவோட ஆசை என்பதால்தான்… அது அமாவாசை ஆச்சு’’ என்று பளிச்சென்று பதில் சொல்லி எனது வார்த்தை விளையாட்டுக்கு வித்திட்டார்.



 அப்போதெல்லாம் அவர் வருஷா வருஷம் மயிலம் முருகனைத் தரிசிக்க என்னையும் அழைத்துச் செல்வார். அவரது வீட்டு நவராத்திரி கொலுப் படிகள் பார்க்கச் செல்லும் என்னை, தன் ஜெமினி பங்களா படியிறங்கி வந்து கையைப் பிடித்து அழைத்துச் செல்வார் அந்த பாஸ். 



‘‘மோகன் வறுவல் சீவல் இருக்கா…’’ என்று கேட்டு என் டேபிளுக்கே வருவார். அடியேன் எழுதும் கதை, கட்டுரைகளுக்கு ‘Good, not bad…’ என்றெல்லாம் மார்க் போடுவார். அந்த மார்க் என்றுமே அக்மார்க்தான். 



சாதாரணமாக விகடனில் வந்த எழுத்தை வேறு பத்திரிகையில் எடுத்து பிரசுரித்தால் ‘நன்றி - விகடன்’என்று போடுவது வழக்கம். என் எழுத்து எங்கு பிரசுரமானாலும் ‘நன்றி - விகடன் எம்டி’! 


சோனா ராஜ், புதுடெல்லி.
அர்த்தம் இல்லாமல் வரும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? 


 
அர்த்தம் இல்லாமல் வருவதே கோபம். அதே கோபம் அர்த்தத்துடன் வந்தால் அதன் பெயர்… பாரதி பழகச் சொன்ன ‘ரெளத்திரம்’. கடிக்காமல் இருந்த பாம்பை ஊர் மக்கள் அடித்தபோது பாம்பு கடவுளிடம் முறையிட, பதிலுக்குக் கடவுள் “உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். சீறாதே என்றா சொன்னேன்” என்றாராம். கடிப்பது கோபம்... சீறுவது... ரெளத்திரம்! 



குஹன், நன்னிலம்
‘நாற்பது வயதில் நாய் குணம்’ என்று ஏன் சொல்லப்பட்டது? 

 
40 வயதாகிவிட்டது... ஜாக்கிரதை! இனிமேல் நீங்கள் உப்பைக் குறைக்கணும், சர்க்கரையைக் குறைக்கணும், சோற்றைக் குறைக்கணும், சுக போகங்களைக் குறைக்கணும்… என்று டாக்டர் நம்மை நோய் வராமல் தடுக்க எல்லாவற்றையும் ‘குறை’க்கச் சொல்வார். அந்த ‘குறை’த்தலில் உள்ள பெரிய ‘ற’வை சின்ன ‘ர’வாக்கி, ‘நோய்’ என்பதை ‘நாய்’ ஆக்கிவிட்டோம். உண்மையிலேயே வைத்தியர் சொல்படி உப்பு, சர்க்கரை இத்யாதிகளைக் குறைத்தால் 40 வயதில் நோய் ‘குணம்’ ஆகும். 


மத்தளராயன், மாம்பலம்
பரமசிவத்தையும் எலுமிச்சைப் பழத்தையும் ஒப்பிட்டு, பாம்பையும் நல்லெண்ணெய்யையும் ஒப்பிட்டு கவி காளமேகம் போல, ஏதாவது இரண்டை ஒப்பிட்டு வெண்பா எழுதுங்கள் பார்க்கலாம்? 



காதலையும் துறவையும் ஒப்பிட்டு ஒரு வெண்பா:
‘ஊரைவிட்(டு) ஓடலால் ஒன்றிக் கலத்தலால்
யாரிடமும் கூறாமல் ஏற்பதால் - பாரினில்
சாதலை வென்று சமாதியில் (காதல் சமாதி) நிற்பதால்
தீதிலாக் காதல் துறவு’.
- இன்னும் கேட்கலாம்... 


thanx - the hindu 

அரசு பேருந்துகள் வேலைநிறுத்தம் - தமிழகத்தில் பரவலாக பொதுமக்கள் பாதிப்பு

  • அரசு பேருந்துகள் இயங்காததால் தமிழகம் முழுவதும் பயணிகள் தவிப்பு. | இடம்: நெல்லை - படம்: ஏ.ஷேக்மொய்தீன்
    அரசு பேருந்துகள் இயங்காததால் தமிழகம் முழுவதும் பயணிகள் தவிப்பு. | இடம்: நெல்லை - படம்: ஏ.ஷேக்மொய்தீன்
  • சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: க.ஸ்ரீபரத்
    சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: க.ஸ்ரீபரத்
  • திருவான்மியூரில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: எம்.கருணாகரன்
    திருவான்மியூரில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: எம்.கருணாகரன்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமையே வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியதால், தமிழகம் முழுவதும் பரவலாக பஸ் சேவை முடங்கியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 



அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள், 29-ம் தேதி (நாளை) முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. 



இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர் நலத்துறை ஆணையரகம் திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சென்று கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மதியம் 1.30 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடந்தது. 



தொழிலாளர் நல வாரிய சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை நிர்வாகம் தரப்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், தொழிற்சங்கங்கள் தரப்பில் மு.சண்முகம், நடராஜன் (தொமுச), சவுந்தரராஜன் எம்எல்ஏ (சிஐடியு), ஆறுமுகநயினார் (சிஐடியு), லட்சுமணன் (ஏஐடியுசி), கஜேந்திரன் (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகி களாக 25 பேர் கலந்துகொண்டனர். 


போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளாக மாற்றுவது, ஓய்வூதிய பலன்களை வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ், டிஏ வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடுவது, பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்கப்பட்டன. ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள தனி கமிட்டி உடனே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இழுபறி நீடித்தது. இதனால், பேச்சுவார்த்தையில் இருந்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.



முன்கூட்டியே தொடங்கியது வேலைநிறுத்தம்
திங்கள்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், திடீரென ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலையே தொடங்கியதால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவை முடங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். 



கடந்த 15 மாதங்களாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில், விடுப்பில் சென்றவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 5 முதல் 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொழிலாளர்கள் மத்தியில் பரவியதும், நேற்று அதிகாலையிலேயே பஸ்களை எடுக்காமல் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 


அதிகாலையில் பணிமனைகளில் இருந்து கணிசமான அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு மற்ற தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. 



மொத்தமுள்ள 23 ஆயிரம் அரசு பஸ்களில் சுமார் 80 சதவீதம், பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள 3,565 மாநகர பஸ்களில் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கினர். 



இதனால் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிப்பட்டனர். நீண்டநேரமாக பஸ்கள் வராததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி மற்றும் மின்சார ரயில்களில் வீடு, அலுவலகங்களுக்கு சென்றனர். வெளியூருக்கு செல்ல வந்தோரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 


மற்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டாலும், கணிசமான அளவுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் ஓரளவு சிரமமின்றி பயணம் செய்தனர். சென்னையில் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டனர். 


பஸ்கள் இயக்கப்படாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். ரூ.100 முதல் ரூ.400 வரை கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் சென்றனர். ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்பட்டு வந்த டாடாமேஜிக், அபே போன்ற ஆட்டோக்கள் ரூ.500 என வாடகைக்கு பேரம் பேசி ஓட்டிச் சென்றனர். இதனால், ஒட்டுமொத்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
இதனிடையே, ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 



போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர். 



முன்னதாக, ''போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், சட்டச் சிக்கல் இருக்கிறது. 


மற்ற தொழிற்சங்கங்களுடன் தொமுசவும் இணைந்து பேசுவதால், எந்த பிரச்சினையும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். அதன்பின்னர், நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் முறையாக பேச்சுவார்த்தை நடத்த முடியும். எனவே, இது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 30-ம் தேதி நடத்தப்பட உள்ளது'' என்றனர். 

 thanx -the hindu


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியதற்கு, தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "2011-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்துகளை தனியார் மயமாக்க முயற்சித்தார். மூன்று ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகளாக மாற்றவும் முயற்சித்தார். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணத்தினால் அவைகளை நிறைவேற்ற முடியவில்லை. 




போக்குவரத்துகளில் தொழிற் சங்கங்களை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பணியாளர் சம்மேளனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கின் தீர்ப்பாக உடனடியாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 57 சதவிகிதம் (75,432) வாக்குகளைப் பெற்று தொ.மு.ச. தனியொரு சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் 2015 அக்டோபர் வரை 5 ஆண்டுகளுக்கென நீதிமன்றத் தீர்ப்பின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்து. 



ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான தொ.மு.சங்கத்தை அழைத்துப் பேச மறுத்து வந்தது. ஊதிய ஒப்பந்தம் 31.8.2013 உடன் முடிவடைந்து புதிய ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதல் ஏற்படுவதற்கான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்து பேச்சுவார்த்தை நடத்த கோரியும் கடந்த 15 மாதங்களாக நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அ.தி.மு.க. சங்கம் உச்ச நீதிமன்றத்தில், அங்கீகாரத்துக்கான தேர்தலில் தங்கள் சங்கம் 12 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருப்பதால் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தது. 


அந்த வழக்குக்கு, நீதிமன்றத்தில், எந்தவிதமான இடைக்காலத் தடையும் விதிக்கப்படவில்லை. தனியொரு சங்கமாக பேச்சுவார்த்தை நடத்த தொ.மு.ச.வை அழைக்க அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட அ.தி.மு.க. அரசு மறுத்து வருவதோடு, தொ.மு.ச. ஏதோ ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக பொய்யான செய்திகளை பரப்பி வந்தது. இதனை பேரவை பொதுச்செயலாளர் சண்முகத்திடம் கேட்டு, உண்மைகளை அறிந்துகொண்ட பின் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி எல்லோரும் கூட்டாகக் கோரிக்கைகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள், அப்போதாவது இந்த அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா என்பதை பார்க்கலாம் என்று நான் ஆலோசனை கூறினேன். 



அதன் அடிப்படையில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து அ.தி.மு.க. தொழிற்சங்கத்தையும் பொதுக்கோரிக்கை தயாரிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால், ஆளும் கட்சி சங்கம் அதனை நிராகரித்தது. அ.தி.மு.க. சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கங்களும் கோரிக்கை அளித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரசிடம் கோரினர். 



ஆனால், அரசு மீண்டும் மீண்டும் வழக்கு இருப்பதாக பொய் சொல்லி காலம் கடத்தி வந்தது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து திருச்சியில் டிசம்பர் 2ஆம் தேதி 30,000 தொழிலாளர்கள் கூடிய மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலை நிறுத்த அறிவிப்பு டிசம்பர் 5 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் கையொப்பமிட்டு நிர்வாகத்திடம் அளித்தது. ஆனால், நிர்வாகம் அலட்சியம் செய்து அ.தி.மு.க. சங்கத்தில் 95,000 பேர் உறுப்பினர்கள் இருப்பதாகவும், அதனால் வேலை நிறுத்தத்தை முறியடிப்போம் என்றும் வீராப்பு பேசினார்கள். 



தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர்களுடைய பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல், தமிழக முதல்வர் கடந்த 8.12.2014 அன்று நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ரூ.1000 இடைக்கால நிவாரணமாக 1.1.2015 முதல் வழங்குவதாக மீண்டும் ஒரு பொய்யை சட்டமன்றத்தில் கூறினார். 



இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல நிர்வாகங்களை முற்றுகையிட்டு 9.12.2014 அன்று போராட்டங்கள் நடத்தினர். வேலை நிறுத்தம் முறையாக சட்டப்படி 19.12.2014 முதல் தொடங்கியிருக்க வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் துறையும் போக்குவரத்துத் துறையும் மெத்தனம் காட்டி கோரிக்கைகளை நிராகரித்துள்ளன. தொழிற்சங்கங்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் 19.12.2014 முதல் 22.12.2014 வரை பொதுமக்களிடம் வேலை நிறுத்தத்திற்காக ஆதரவு திரட்டியதாகவும், இறுதிவரை அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொழிற்சங்கங்கள் 29.12.2014 முதல் வேலை நிறுத்தம் செய்வதென அறிவித்தன என்றும், இதற்கான விளக்கக் கூட்டம் 26.12.2014 அன்று சென்னை பல்லவன் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பொழுது தொழிலாளர் நலத் துறையின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்றும், ஆனால், அங்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்புள்ள பெரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் விவரங்கள் தரப்பட்டன.
27.12.2014 காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அனைத்து சங்கங்களும் அங்கு சென்றிருக்கிறார்கள். அங்கு அ.தி.மு.க. சங்கமும் வருகை தந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச. இருப்பதால் தொழிலாளர் துறை முன்னதாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்து அதன் மூலம் அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தையை 30.12.2014 அன்று துவங்குவது என்ற ஆலோசனையை தொ.மு.ச. பேரவை அரசு முன் வைத்தபோது, முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்து தொ.மு.ச. கடிதம் கொடுத்தால்தான் பேச்சுவார்த்தை துவங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். 




உடனடியாக தொ.மு.ச. எந்த கௌரவமும் பார்க்காமல் நாங்கள் கடிதம் கொடுக்கிறோம். உடனே இன்றே பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், அப்படி நீங்கள் துவங்கினால் வேலை நிறுத்தத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம் நீங்கள் கடிதம் கொடுங்கள் நாங்கள் அதை சட்டப்படி ஆலோசனை செய்து ஜனவரி 30 ஆம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதன் அடிப்படையில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஆத்திரமடைந்து நிர்வாகத்தின் ஏமாற்று தந்திர வேலைகளென உடனடியாக பேச்சுவார்த்தை அமைச்சர் முன்னிலையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடருமென அறிவித்து விட்டு வெளியே வந்துள்ளார்கள். 



நாள்தோறும் 2 கோடி ஏழையெளிய மக்கள், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், மருத்துவமனைக்குச் செல்லும் உடல்நலமற்றோர் போன்ற வாக்களித்த மக்கள் அரசுப் போக்குவரத்தின்றி அவதிப்படுவார்களே என்பதை உணர்ந்து, போக்குவரத்துத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சரும், முதலவரும் உரிய காலத்தில் இதற்கொரு தீர்வு காண தவறிவிட்டனர். 


போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை (29-12-2014) முதல் வேலை நிறுத்தம் செய்ய முன் வருகின்ற அளவுக்கு நிலைமையை முற்றவைத்து வளர்த்து விட்டதற்காக செயலற்ற இந்த அ.தி.மு.க. அரசையும், போக்குவரத்துத் துறை அமைச்சரையும் வன்மையாகக் கண்டிப்பதோடு; காலம் கடந்துவிட்ட இன்றைய நிலையிலாவது பிரச்சினையிலே தலையிட்டு, போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஒரு சுமூக முடிவு காண்பதற்கு வழிவகை காண முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Sunday, December 28, 2014

ஐ - லிங்கா வை முந்தி விடும் - ராம் கோபால் வர்மா பேச்சால் சர்ச்சை



ஜெ., ரஜினியைவிட ஷங்கர்தான் பெரிய ஆள்: ராம் கோபால் வர்மா ரகளைப் பதிவு

அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவனம் ஈர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, இயக்குநர் ஷங்கரையும் நடிகர் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. 



ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் ''ஐ'' படத்தின் தெலுங்கு ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் அவர் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவையும் ரஜினிகாந்தையும்விட இயக்குநர் ஷங்கர்தான் பெரிய ஆள் என்கிற ரீதியில் அவர் பதிவிட்டுள்ளார். 


இயக்குநர் ஷங்கர் குறித்து ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது: 


"இப்போதுதான் ''ஐ'' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தேன். இந்த சங்கராந்தி கண்டிப்பாக சங்கரின் ராத்திரியாக மாறும். 'ஐ' படத்துக்கு போட்டியாக எந்தப் படத்தை வெளியிட்டாலும் மடத்தனமே. 


இந்திய இயக்குநர்கள் ஒவ்வொரும் ஏன் நம் எல்லைகளை நாம் இன்னும் விரிவுபடுத்தவில்லை என யோசிக்க வைக்கும் திரைப்படமாக 'ஐ' இருக்கும். 


இந்தியப் படங்களை ஹாலிவுட் கவனிக்க 'ஐ' ஒரு காரணமாக இருக்கும். நம் கவனத்தைக் கவரும், மின்சாரம் பாய்ந்ததைப் போல உற்சாகமூட்டும் வகையில், ரஜினிகாந்தைவிட ஷங்கர் உயர்ந்து நிற்கிறார். ஷங்கர் அடுத்து ஆமிர் கானுடன் இணையும் திரைப்படம், இந்தியாவின் 'அவதார்' ஆக இருக்கும். 


'ஐ' படத்தின் முதல் நாள் வசூல், லிங்காவின் வசூலை முந்தும் என்பது என் கணிப்பு. அதனால் தான் ரஜினியை விட ஷங்கர் பெரிய ஆளாகத் தகிழ்கிறார் என்று சொல்கிறேன். 


பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் ஷாரூக், சல்மா, ஆமிர் போன்ற நட்சத்திரங்களை நம்பி இருக்கையில், ஷங்கர் அந்த நட்சத்திர அந்தஸ்தை உடைத்தெறிந்துள்ளார். அதுதான் அவரது சக்தி. 


ஷங்கர், எனக்கு உங்கள் ட்விட்டர் முகவரி தெரியாது, ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன். தற்போது ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் இருக்கும் ஒரே ஒரு முன்னோடி நீங்கள்தான். ஆகச் சிறந்த கற்பனை, அடர்த்தி, அசலான பார்வை என்ற வகையில் 'ஐ' ஒரு முன்மாதிரியாக இருக்கும். 


'ஐ' ட்ரெய்லரை பார்த்த பின் பொதுமக்களில் ஒருவனாக எனக்கு தோன்றுவது, தமிழகத்தில் ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் என்பதே" என்று ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார். 

நன்றி - த இந்து


Thursday, December 25, 2014

கப்பல் - சினிமா விமர்சனம்

 

5  ஃபிரண்ட்ஸ். சின்ன  வயசுல  இருந்தே  அவங்க  தீர்மானம்  என்னான்னா  மேரேஜே  பண்ணிக்கக்கூடாது. அப்டி  பண்ணிக்கிட்டா  அவங்க  நட்பு  பிரிஞ்சிடும்.அதனால  பெண்  வாசனையே  படாம  வளர்றாங்க .

பலரும் பல  கேர்ள்  ஃபிரண்ட்சோட  இருக்கும்போது  நாம மட்டும்  இப்டி ஆகிட்டமேன்னு  ஹீரோக்கு  ஏக்கம். அதனால  நம்ம  ஹீரோ    மீதி  இருக்கும்  4  பேரை  நைசா  கழட்டி  விட்டுட்டு  எப்டியாவது  ஒரு  ஃபிகரை  கரெக்ட்  பண்ணிடலாம்னு  கிளம்பறாரு.

ஹீரோயின்  ஹை கிளாஸ்  ஃபிகரு. தன்  பாய்  ஃபிரண்ட்  கூட  பார்ட்டிக்கு வந்த இடத்துல   அவன்  மட்டை ஆகிடறான்.அதனால   ஆல்டர்நேட்டிவ்வா  ஆக்டிங்  பாய் ஃபிரண்ட்டா ஹீரோவை  வெச்சுக்கறார். இதெல்லாம் ஹீரோயின்  மப்பில்  இருக்கும்போது.  விடிஞ்சதும்   ஹீரோவை  யார்னே  தெரியலைண்ட்டுடுது,

 ஆனா  ஹீரோ  விடலையே? மாங்கு மாங்குன்னு  துரத்தி  கரெக்ட்  பண்ணிடறாரு,

இவங்க   2  பேர்  லவ்  ஸ்டோரியும்  இப்டி  போய்க்கிட்டு  இருக்கும்போது   மீதி  இருக்கும்  4  ஃபிரண்ட்ஸ் ல  ஒருவருக்கு  மேரேஜ் ஆகிடுது. அவங்களைப்பிரிக்க  3 பேரும்  ஹீரோவைக்கூப்பிட  வர்றாங்க . வந்த  இடத்துல  ஹீரோ ஆல்ரெடி  ஒரு  ஃபிகர்ட்ட  மாட்டி இருக்கும்  விஷயம்  தெரியுது. பின் என்ன  நடக்குது ? என்பதே  காமெடி  கலக்கல்  திரைக்கதை .



ஹீரோவா  வைபவ் . நிச்சயம்  அவருக்கு  இது  ரொம்ப  முக்கியமான படம், இயக்குநர்  மேற்பார்வையில் அவரது  பங்களிப்பு  கன கச்சிதம்.  ஃபிகர்  கிடைக்காமல்  தவிக்கும்போது  அக்மார்க்  அப்பாவி  நடிப்பு .ஹீரோயின் அவரிடம்  மாட்டியதும் செய்யும் சேட்டைகள்  கல கல , அங்கங்கே  கிளு கிளு. 


விடிவி  கணேஷ்   2  ஃபிகரை  அட்டர் டைமில்  கரெக்ட் பண்ணும் ஆளாக  ஹீரோவுக்கு  கில்மா  குருவாக  வருகிறார் . செம  காமெடி  நடிப்பு, அவரது  குரல் அவருக்கு பெரிய  பிளஸ் 


ஹீரோவை   ரூமில்   வெச்சுக்கிட்டே  பக்கத்து  ரூமில்  இவர்   ஃபிகருடன்  லவ்வுவது  செம   காமெடி 

கருணாகரன்   இன்னொரு  காமெடியன்.  இதில்  நல்லா  ஸ்கோர்  பண்றார். ஹீரோ   ஹீரோயினைப்பிடிக்க இவர்   போடும்  மொக்கை  திட்டங்கள் செம .


காதலில் சொதப்புவது  எப்படி?  யில்  பளார்  வாங்குவாரே   ( அர்ஜுன்)  அவர்  இதில்  செய்யும்  காமெடிகள்  அதகளம். 


ஹீரோயினாக  மும்பை  பஞ்சு  மிட்டாய்   சோனம்  பஜ்வா.  பக்கா  ஃபிகர்  என சொலல  முடியா  விட்டாலும்   ஓக்கே  ரகம் .  கிளாமர்  காட்டுவதில்  ,  நெருக்கம்  காட்டுவதில்  தாராஆஆஆஆஆள  மனப்பான்மையுடன்  நடக்கிறார், மடியில்  உட்காருகிறார்,, படுக்கிறார். இதுக்கு மேல  என்ன   வேணும் ?


படத்தில்  வில்லன்  என யாரும்  இல்லை . முழுக்க  முழுக்க  சிரிப்பு தான். 





 



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  என்னப்பா? லவ் பெய்லியரா? 


நோ .பிரண்ட்ஷிப் பெய்லியர் 


 நட்பு நீடிக்கனும்னா கல்யாணமே பண்ணிக்கக்கூடாது # கப்பல் 


2  நாம 5 பேரும் 5 பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா பிரிஞ்சிடுவோம்.அதனால 5 பேரும் ஒரே பொண்ணை.ஹிஹி # கப்பல்



3
ஒரு நல்ல பிரண்ட்ஷிப் க்கு காரணமே இருக்க முடியாது.அப்டி காரணம் இருந்தா அது நல்ல பிரண்ட்சிப்பா இருக்க முடியாது#கப்பல்


4   நீ தண்ணி அடிப்பியா?


 அய்யோ நோ நோ.பீர் மட்டும்


 அது மட்டும் கோயில் பிரசாதமா? #கப்பல்


5 நல்லதா ஒரு பொண்ணு காதலியா கிடைக்கும்னா 4 பேர்ட்ட செருப்படி வாங்குனாலும் தப்பில்லை # கப்பல்

6 அன்னைக்கு ஏதோ அசந்திருந்ததால என்னை அடிச்ட்டீங்க.தில் இருந்தா இப்போ அடிங்க பார்க்கலாம்.


 பளார். 


ஆ! குளுக்கோஸ் கொண்டு வந்திருக்கேன். சாப்பிட்டிட்டு  தெம்பா  அடி வாங்கலாம்#கப்பல் 


7  இங்க்லீஷ்ல பேசி சீன் போடும் பிகர்கள் ல பாதிப்பேருக்கு கிராமர் தெரியாது # கப்பல்

8 பொண்ணோட தங்கச்சியைத்தான் பிடிச்சிருக்குனு பொய் சொல்.மேரேஜ் நின்னுடும். 


ஆனா தங்கச்சி இல்லியே?


 அப்போ பொண்ணோட அம்மா பிடிச்சிருக்குனு சொல்#K


 9
டேய்.நீங்க எல்லாம் கெட்ட வார்த்தை பேசற்வங்க.நான் கெட்ட வார்த்தையை உருவாக்குபவன் # கப்பல்


10  சார்.உங்க கிட்டே தான் 2 பிகரு கை வசம் இருக்கே.1 எனக்கு தந்தால் என்ன ? # கப்பல்


11  பாத்ரும்ல  குளிச்சிட்டு  இருக்கும்போது  பைப்ல  தண்ணி  வர்லை

டேய்  , மேட்டர்  போடுங்கடா

 வாட்

 ஆ. மோட்டார்  போடுங்க #கப்பல்


12   இன்னும்  மேரேஜ்க்கு  நாள்  தான்  இருக்கு. அதுக்குள்ளே உன்  ஃபிரண்ட்ஸ்  மேரேஜை  நிறுத்திடுவாங்களா? 

 அவனுங்க  10 மணி  நேரத்துல   13  கல்யாணம்  நிறுத்துவாங்க 


13  உன்  பேரென்ன?

நெல்சன்

 ஓஹோ! நீ நெல்லுக்குதான் பொறந்தியா?#கப்பல்


 




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 ஆரவாரமான கை தட்டல் அசத்தலான காமெடிக்காட்சிகளுடன் ஓப்பனிங்கே களை கட்டும் கப்பல்


2  கலக்கல் காமெடியுடன் கப்பல் இடை வேளை.கிறிஸ்மஸ் வின்னர் +…நெ 1 = கப்பல் தான்


3   தமிழ் மிஸ் தன்யா = கப்பல் ஓட்டிய தமிழன் யார்?


 மாணவன் = எல்லாப்படத்தையும் செம ஓட்டு ஓட்டும் காமெடிப்படம் கப்பல்.அதை யார் ஓட்ட முடியும்?


4  கலக்கல் காமெடியுடன் கப்பல் இடை வேளை.கிறிஸ்மஸ் வின்னர் +…நெ 1 = கப்பல் தான்


5    ஊரு  விட்டு ஊரு  வந்து (கரகாட்டகாரன்)  ரீமிக்ஸ்  பாட்டு  பிரமாதமாக  இருக்கும்  என  எதிர்பார்த்தேன்,  சுமார் தான்,# கப்பல்





 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஓப்பனிங்  சீனில்  ஹீரோ  பஸ்சில்  இருக்கும்போது   அருகில் அமரும்  ஃபிகரைத்துரத்தும்  நண்பர்கள்   பின்  ஹீரோ இடம்  மாறி அமர்வதைக்கண்டு  திகைப்பது


2 காலேஜ்  வாசலில்  ஃபிகரை  பிக்கப் பண்ண   ஹீரோ  பைக்குடன்  வரும்போது  ஆல்ரெடி  எல்லா  பொண்ணுங்களையும்  எல்லோரும்  கரெக்ட்  பண்ணி  ஏமாற்றுவது 



3   ஹீரோவை  ஆள்  வெச்சு  அடிக்க  முயற்சிக்கும்  ஹீரோயினின்  அடியாட்களிடம்   கெட்ட வார்த்தை  பேசும்  போட்டி  வைச்சு  ஜெயிக்கும்  காட்சி  செம  காமெடி 


4   ஹீரோவின்  நண்பருக்கு  மேரேஜ்க்குப்பெண்  பார்க்கும்  படலத்தில்  பொண்ணு  கிட்டே  தனியாப்பேசனும்னு  சொல்லி    ரூமில்  கசமுசா  பண்ணும்  காட்சி  , பின் மண மேடையில்  அடிக்கும்  லூட்டிகள்






இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஹீரோவின்  நண்பருக்கு  மேரேஜ் ஆகுதே , அதைப்பிரிக்கத்தான்  நண்பர்கள்  ஆரம்பத்தில்  பிளானே  போடறாங்க , ஆனா  ஹீரோவை  கூப்பிட  வந்த  பின் அந்த  சேப்டரையே  மறப்பது  எப்படி ? 


2  பெண்  பார்க்கப்போகும்  இடத்தில்   பெண்ணுடன்  தனியாகப்பேசும்  காட்சியில்  பெற்றோர் எப்படி  அந்த  மாதிரி  ரூம்  தாழ்  போட  விடுவார்கள் ?  ( எல்லாம் ஒரு ஆதங்கம்தான் 


3  ஓப்பனிங்க்  சீனில்  சரக்கு ,  பாய் ஃபிரண்ட்சுடன்  பார்ட்டி  கிளப்  என பொம்பள  ஊதாரியா  சுத்தும்  ஹீரோயின்திடீர்  என  அப்பாவிக்காதலியாக  ஆவது  எப்படி  ?


 





சி  பி  கமெண்ட் - கப்பல் - கல கலப்பான  காமெடிப்படம்.2014ம் ஆண்டின்  முழுநீள நகைச்சுவை  சினிமா - விகடன் மார்க் = 46 , ரேட்டிங் = 3.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - நன்று



 ரேட்டிங் =  3.5 / 5



டிஸ்கி = 1  =  மீகாமன் - சினிமா  விமர்சனம்  -

http://www.adrasaka.com/2014/12/blog-post_54.html


டிஸ்கி 2 =  கயல் - சினிமா  விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/blog-post_58.html

டிஸ்கி 3  - வெள்ளக்காரதுரை - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/meegaman-stills.html
 

கயல் - சினிமா விமர்சனம்



ஹீரோ  ஒரு நாடோடி. அவனுக்குன்னு பெரிய  லட்சியம்  எல்லாம் இல்லை,  ஊர் எல்லாம்  சுத்திப்பார்க்கனும்னு  நினைக்கறான். ஒரு இந்தியபிரதமராவோ , இந்திய ஜனாதிபதியாவோ  இருந்தா  ஓசில யே ஊரான்  வீட்டுக்காசுல   மங்களம்  பாடிடலாம், ஆனா ஹீரோக்கு  அந்தக்கொடுப்பினை இல்லை. அதனால  கொஞ்ச  காலம்  ஒரு பக்கம்  வேலை  செய்யறது . அந்தப்பணத்துல  ஊர்  சுத்தறது , இதுதான்  அவன்   வாழ்க்கை  முறை .அவன்  கூட  ஒரு நண்பன்.


ஒரு  லவ் ஜோடி  ஊரை  விட்டு  ஓடிப்போகும் வழில  இவங்களைப்பார்க்குது. தெரியாத்தனமா  அவங்களுக்கு  உதவப்போக வந்தது  வினை . காடு வெட்டி  குரு , டாக்டர்  ராம்தாஸ்  மாதிரியே  ஜாதி  வெறி  பிடிச்ச கும்பல்  கிட்டே மாட்டிக்கறாங்க . சித்ரவதைப்படுத்தறாங்க .ஓடிப்போன  பொண்ணு  எங்கேன்னு  கேட்டு  டார்ச்சர் பண்றாங்க . இவங்க  கிட்டே  உண்மையை வரவழைக்க  நக்கீரன்  கோபால்  தூது  மாதிரி  அவங்க  வீட்டு வேலைக்காரப்பெண்ணை  தூது அனுப்பறாங்க . 


அந்தப்பொண்ணுதான்  ஹீரோயின் .ஹீரோவுக்கு பார்த்ததுமே  பத்திக்குது . காதல் தீ . எல்லாருக்கும்  முன்னால  தன்  காதலை  பகிரங்கமா  சொல்லறாரு. 


ஊரை  விட்டு ஓடிப்போன  பொண்ணு  திரும்ப வந்துடுது. அதனால  ஹீரோவை  விட்டுடறாங்க  . ஹீரோ  கன்யாகுமரி  போறேண்ட்டு கிளம்பிடறார்.

ஹீரோயின் க்கு  ஹீரோ  நினைவாவே  இருக்கு. ஹீரோவைப்பார்க்க  கன்யாகுமரி  கிளம்புது, ஹீரோயின்  கிட்டே  ஹீரோ அட்ரஸ் இல்லை ,  ஃபோன் நெம்பர்  இல்லை . அவங்க  2 பேரும்  சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே   மிச்ச  மீதிக்கதை


 ஹீரோ ஆரோன்  கேரக்டரில்  புதுமுகம்  சந்திரன்.  அட்டகத்தி தினேஷ்  , விதார்த்தி  போல்  இவருக்கும்  நல்ல  எதிர்காலம்  அமைய  வாழ்த்து .வசன  உச்சரிப்பு   , முக  பாவனைகள்  எல்லாம்  ஓக்கே ரகம் 


 ஹீரோயினாக  புதுமுகம்  ஆனந்தி . மாநிற  அழகிகளில் நந்திதா தாஸ்க்குப்பின் பிரமாதமான அழகி யாரும்  வரவில்லையே  என்ற ஏக்கத்தைப்போக்கும்  வகையில்  கனகாம்பரப்பூப்போல  மிக எளிமையான அழகியாக  கயல்  கேரக்டரில் கன கச்சிதமாகப்பொருந்துகிறார் ஆனந்தி. இவரது  பரிதாபமர்ன  கேரக்டரைசேசனால்  ஸ்லோ மோஷனில்  பாவாடை சட்டையுடன்  முயல்குட்டிகள்  போல்  துள்ளி  ஓடி வரும்  சீனைக்கூட  ரசிக்க  முடியாதபடி கட்டிப்போடும் தரத்தினவள்  ஆனதில் ஆச்சரியம்  இல்லை.


ஹீரோவின்  நண்பனாக   வரும்  புதுமுகம்  நல்ல  முக வெட்டு. டயலாக்  டெலிவரியும் அசால்ட்டா வருது,


வில்லனாக வரும்   யோகி  தேவராஜ்  கச்சிதம் .  சண்டைப்போடும்  பாட்டி , லாரி டிரைவர்  ,  போலீஸ்காரர்கள்  எல்லோருக்கும்  மனதில்  நிற்கும்  கேரக்டர் தந்தது  கே பாலச்சந்தர்  பாணி.சபாஷ்








மனதைக் கவர்ந்த  வசனங்கள்



1   அட்ரஸ் சொல்லாம உதவி பண்றீங்க,இந்த பணத்தை எப்படி திருப்பித்தர? 


கஷ்டம் னு யாராவது உங்ககிட்டே வந்தா அவங்களுக்கு உதவி பண்ணுங்க போதும் # கயல்


2  தாஜ்மகால் 7 அதிசயத்தில் 1 னு சொல்லிட முடியாது.ஏன்னா காதல் தான் முதல் அதிசயம் # கயல் 


3 வாழ்க்கைல பணம் சம்பாதிப்பதை விட முக்கியம் கடைசி காலத்துல நினைச்சு நினைச்சு அசை போட நல்ல நினைவுகளை சேர்த்து வைப்பது # கயல்்


4 ஆண்டவன் எல்லாருக்கும் ஒரு கொஸ்டின் பேப்பர் தந்திருக்கான்.அதுக்கு பதில் சொன்னாப்போதும்.அடுத்தவங்க போல் வாழ அவசியம் இல்ல# கயல்


5  கேஸ் சிலிண்டர் தீர்ந்தாலே என் சம்சாரம் எனக்குத்தான் போன் பண்ணுவா.என் கேசே தீர்ந்துட்டா (நானே செத்துட்டா) என்ன பண்ணுவாளோ?# கயல்


6  வாழும்போது வாழற அளவு சம்பாதிச்சா போதும்.அளவுக்கு அதிகமா சேர்த்து வெச்சு பிரயோஜனம் இல்லை# கயல்


7  அய்யா.இந்த சுடிதார் உங்களுக்கு சூப்பரா இருக்குங்க. 



டேய்.இது பைஜாமாடா # கயல் 


8 1955 ல பிறந்த ஒரு பேட்ச் இன்னும் இருக்கு.இவங்க காலத்துக்குப்பின் ஜாதி ஒழியும்னு எதிர்பார்க்கலாம் # கயல்


9  
அவ கண்ணைப்பாத்துப்பேசும்போது எனக்குள்ளே இடியும் ,மின்னலும் அப்டியே பிச்சிக்கிட்டு இறங்குது # கயல்



10   காதல் வர்ற வரை தான் கண் ணும் கண்ணும் பேசிட்டு இருக்கும்.காதல் வந்துட்டா மனம் விட்டு பேசனும்னு நினைக்கும் # கயல்


11
ரேசன் கார்டு எடுக்கனும் (ரெடி பண்ணனும்)னா கல்யாணம் பண்ணனும் னு ஒரு டயலாக் 3 டைம் வருது.இந்த சட்டம் எப்போ வந்தது?


12   வாழ்க்கைல , வியாபரத்துல  தோத்தவன்  எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு  முன்னுக்கு  வந்துடுவாங்க , ஆனா  காதல்ல  தோத்தவன் ம்ஹூம், உருக்கிடும்#கயல்






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஹீரோயின் பேரு ஆனந்தி. ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே

2  பிரமாதமான ஒளிப்பதிவு ,கருத்தியல் வசனங்கள் ,நாயகி ஆனந்தியின் எளிமையான மாநிற அழகு இவற்றின் ஆதிக்கத்தில் கயல்










இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   ஹீரோவும் , அவர் நண்பரும்  பரஸ்பரம் தங்கள்  இனிஷியலாக  நண்ப
ரின்  பெயரின்  முதல்  எழுத்தை வைப்பது  புதுசு


2  ஓப்பன்ங்கில்  முதல் 40 நிமிடங்களில் படத்தில்  வரும்  வசனங்கள்  மிக பிரமாதம்,  பாசிட்டிவான  விக்ரமன் , ராதா டைப்  வசனங்கள் , சபாஷ்  டைரக்டர்


3  ஹீரோ  யார் என்பதை  அவரது அப்பா  எழுதிய  கடிதம்  மூலம்   விழி ஒளி  இழந்தவரின்  பிரெய்ல்  முறைப்படிப்பில்  போலீஸ்  தெரிந்து  கொள்ளும்  காட்சி  செம  செண்ட்டிமெண்ட்  சீன் 


4   க்ளைமாக்ஸ்  சுனாமி  காட்சி  பிரமாதம் .  சுனாமி  காட்சியை தத்ரூபமாகப்படம் ஆக்கிய  முதல்  தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது , ஹேர் இழையில்  அந்த வாய்ப்பை  நழுவ விட்டது தசாவதாரம். அந்த  சுனாமி காட்சியில்    உபயோகித்த  டால்பி அட்மாஸ்   அடடே  செம  மாஸ்  


5 பாடல்  காட்சிகள்   பிரபு சாலமன்  படத்தில்  எப்போதும்  முக்கியத்துவம்  பெற்றுவிடுகிறது . இதுவும்  விதி விலக்கல்ல .  எல்லாப்பாட்டுமே நல்லாதான் இருக்கு,






இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஹீரோயினிடம்  அந்த  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  அவ்வளவு  கோபமாக  மிரட்டுவது  ஏனோ? அவரும்  ஒரு பெண்  தானே?   ரொம்ப  செயற்கையான  காட்சி 


2  பின் பாதி  திரைக்கதையில் பெரிய  ரசனையான  சம்பவங்கள்   இல்லாமல்  படம்  தடுமாறுகிறது. பொதுவாகவே  ஒரு திரைக்கதையில்   தேடிட்டுப்போகும்  கதை   என்றாலே  சலிப்பு  வந்துடும் . இவரைத்தேடி  அவரும் அவரைத்தேடி இவரும்  கிளம்புவது  போர்  அடிக்குது

3  ஹீரோ யார் என்றே  தெரியாது , அட்ரஸ் எதுவும்  இல்லை. அவரைத்தேடிப்போக   ஹீரோயினை அவரது  பாட்டியே  அனுப்புவது நம்பும்படி இல்லையே? அதுவும்  வயசுக்கு  வந்த  ஒரு பொண்ணை  இப்டித்தான்  வெளியூருக்கு   தனியா அனுப்புவாங்களா?

4  என்னதான்  ஆர்த்தி   பாய் கட்டிங்  அடிச்சாலும்  அந்த  வாட்ச்மேன்   அவரை சார் என அழைப்பது  எல்லாம்  ஓவர் . ஒரு வேளை  காமெடின்னு நினைச்ட்டாரோ?





சி  பி  கமெண்ட் -  கயல் - மென்மையான  காதல்  கதை- மைனாவுக்குக்க்கீழே , கும்கிக்கு அருகே- விகடன்  மார்க் = 43 , ரேட்டிங்  = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங்  -  3 /5

டிஸ்கி  -  மீகாமன் - சினிமா  விமர்சனம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_54.html


டிஸ்கி 2  கப்பல் - சினிமா  விமர்ச்னம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_83.html

டிஸ்கி  3  வெள்ளக்காரதுரை -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/meegaman-stills.html