Friday, December 19, 2014

பிசாசு- சினிமா விமர்சனம்

a

தமிழ்  சினிமா கொண்டாட வேண்டிய முக்கியமான  இயக்குநர்களில்  ஒருவரான மிஷ்கின்  ஓநாயும்  ஆட்டுக்குட்டியும் படத்தின்  வெற்றிக்குப்பின் மீண்டும்  களம்  இறங்கி  இருக்கும்  படம்  பிசாசு. 


ஓப்பனிங்  சீன்லயே   ஹீரோயின்  சாலை  விபத்தில்  இறந்துடுது. ஹீரோ  வீட்டில்  அவர் நினைவா  இருக்கும்போது ஹீரோயின்  ஆவி நடமாட்டம்  வீட்டில்  இருப்பதை உணர்கிறார்.  ஆவி அமுதா  மாதிரி  ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வந்து  எஸ்டிமேட்  போட்டு  பேய்  ஓட்டப்பார்க்கும்போது  அந்த  அமுதாவையே மிரட்டி  பேய்  ஓட வைக்குது .


ஹீரோ குடி  இருக்கும்  அப்பார்ட்மெண்ட்டில்   ஒரு  குடிகாரப்புருசன் தன்  சொந்த சம்சாரத்தை  அடிச்சதைப்பொறுக்கமாட்டாம  அந்தப்பேய் அவனை  உண்டு  இல்லைன்னு ஆக்கிடுது.


ஒரு கட்டத்தில்  ஹீரோவின் அம்மாவையே  குற்றுயிரும்  கொலை உயிருமா ஆக்கிடுது அந்தப்பேய்.எதனால்?  இதுதான்  படத்தின்  பின் பாதி திரைக்கதை .


ஹீரோ  புதுமுகம் . நம்ம  பிரபல  வலைப்பதிவர்  ஃபிலாசபி பிரபாகரன் சாயலில் தனுஷ்  உடல் வாகில் இருக்கார். அவர் தலைமுடி  முற்றிலும் முன் நெற்றியை  மறைப்பது  என்ன  மாதிரியான  குறியீடோ?  மணிரத்னம்  படம் போல்  வசனம்  குறைவு என்பதால்   ஹீரோவுக்கு  சவுகர்யம் . படத்தின்   பாரத்தை கேமராமேனும் , இசை அமைப்பாளரும்  தாங்கிச்செல்வதால் பாத்திரங்கள்  பெரிதாக  மெனகெட  வேண்டிய அவசியம்  நிகழவில்லை .ரயில்வே  சுரங்கப்பாதையில் அவர்  போடும் ஃபைட்  சீன்  அப்படியே  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட  ஃபைட்  சீனை  நினைவுபடுத்தினாலும் ஹீரோவின்  பங்களிப்பு  பக்கா .


நாயகி  புதுமுகம்  பிரயாகா மாசு மருவில்லாத முக அழகுடன் மாசிலாமணியாய்  கண்ணியமான  தோற்றத்தில்  இருக்கிறார்.  அவருக்கு  காட்சிகள்  மிகக்குறைவு . இன்னும்   பயன்  படுத்தி  இருக்கலாம்


 இளையராஜா   செய்ய  வேண்டிய பணியை  மிகச்சிறப்பா  பண்ணி  இருக்கார் அறிமுக  இசை அமைப்பாளர் . இவர்  பேசிக்கலா  ஒரு  வயலினிஸ்ட்  என்பதால்   படம்  பூரா   வயலின்  இசை தான்





a



Actress Prayaga in Pisasu
மனதைக் கவர்ந்த  வசனங்கள்



1  சார்,உங்க  பாட்டு  சூப்பர்.அதைப்பத்திதான்  இங்கே டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு.

ம்,


சார்.சில்லறை இருந்தா ஒரு நூறு  ரூபா  கிடைக்குமா?# பிசாசு


2   யாருடி அவன் ?

 அவர் யாருன்னே எனக்குத்தெரியாதுங்க .



என்னடி?என்னையும் அவர்ங்கறே ? பக்கத்து வீட்டுக்காரனையும் அவர்ங்கறே? #பிசாசு



3  அடுத்த  வீட்டு ஜன்னலைத்திறந்து எட்டிப்பார்ப்பதில்  ஒரு அலாதி சுகம் # பிசாசு


4  சார் , திருடறது  தப்பில்லையா?

 பூட்டுன வீட்டில்  திருடுனாத்தாண்டா  தப்பு # பிசாசு


5 எல்லாரும் சாப்ட்டீங்களாடா?

ம்

 ஆனா நான்  இன்னும்  சாப்பிடலைடா. ஒரு 500 ரூபா கிடைக்குமா?

 அடிங். ஓடிடு # பிசாசு









 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஹீரோயினுக்கு  குளிக்கற சீன்  வைங்கய்யான்னா  இப்பவெல்லாம்  ஹீரோக்கு தான்  குளியல்  சீன் வைக்கறாங்க


2  மவுனம் ,நிசப்தம்  கூட சில  சமயங்களில் சிறந்த  பின்னணி இசை என்ற  பெயரைப்பெற்றுத்தரும்


3 ரயில் சுரங்கப்பாதையில்  ஃபைட்  சீன்  வைப்பது  மிஷ்கினின் ராசி  செண்ட்டிமெண்ட்டில் ஒன்று,பிரமாதமான பின்னணி  இசை , கேமரா  கோணங்களில்


4  பேய்  ஓட்ட வந்த  பெண்  பேய்க்கே  பலி ஆகும் காட்சியில் பி  இசை  மிரள வைக்குது.தியேட்டர்ல அவனவன் ஆடிட்டான் #பிசாசு

5  பேய்ப்படத்துக்கான  ஆரம்பக்கட்ட  முஸ்தீபுகள் , பயம் காட்டல்கள்  அனைத்தும் ஓக்கே. வெற்றியைத்தீர்மானிக்கப்போகும்  பின்பாதி எப்படி இருக்கும்?












இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 பின்னணி இசை  , ஒளிப்பதிவில்  டெக்னிஷியன்கள்  மாறினாலும் தன் அக்மார்க்  பிராண்ட் பாணியை  மாற்றாமல்  தன் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்தது 
2  ரயில்   சுரங்கப்பாதை  ஃபைட்  சீனை வடிவமைத்த  ஸ்டண்ட்  மாஸ்டரின் உழைப்பு , அதற்கு  உயிர்  கொடுத்த   பின்னணி இசை , கேமரா  கோணங்கள்


பேய்  ஓட்ட  வரும்  அந்த ஆவி அமுதா திடீர்  என  பெருங்குரல் எடுத்து  மிரட்டும்  காட்சியும்  , அதைத்தொடர்ந்து  வரும்  திகில்  காட்சியும்  கலக்கல்

4  இடைவேளைக்குப்பின்  வரும் கிச்சன்  ரூம்   திகில்  காட்சியில்  ஹீரோவின் நண்பரைப்பேய்   பயமுறுத்தும்  காட்சி யில்   பின்னணி இசை  மிரட்டல்


5   விழிஒளி இழந்தவர்களின்  பங்களிப்புடன்  நிகழும்  பாதாள  சுரங்கத்தில்  வரும்  பாடல்  காட்சியில்  ஃபிரெஞ்ச் படமான  ஜிப்சி  யம்மா   பட  பாதிப்பு  இருந்தாலும்  நுணுக்கமான  பதிவு



6  ராதா  ரவியின்   குணச்சித்திர  நடிப்பு   அருமை 




இயக்குநரிடம்  சில கேள்விகள்



1  ஓப்பனிங்     ஷாட்டில்  ஹீரோயின்  சாலையில்  அடிபட்டு  படுத்திருக்கும்  காட்சியில் நம்பகத்தன்மை குறைவு .பொதுவா  வண்டியில்  அடிபட்டதும்  குப்புற விழுவாங்க .அல்லது  ஒருக்களிச்சு படுத்த வாக்கில்  தான்  கிடப்பாங்க . கேமரா  கோணத்துக்காக அப்படி  சாதாரணமா  மல்லாக்க  படுத்த வாக்கில்  கிட்சக்க மாட்டாங்க . ஸ்கூட்டி  பெப்  விழுந்திருக்கும்  கோணத்துக்கும்  நாயகி  கிடக்கும்  கோலத்துக்கும்   மேட்ச் ஆகலை பொலீஸ் ஏன் அது பத்தி  சந்தெகப்படலை?





2  பேய்ப்படம்  போல் கொண்டு போய்  க்ரைம் த்ரில்லராய்  முடிக்கும் விதத்தில்  சமீபத்தில்  வந்த ர  படத்தின்  சாயல்


3  இன்வெஸ்டிகேஷன்    எல்லாம் கடைசி  30 நிமிடங்களில்  நடப்பதால்  முன்பாதி  முழுக்க   பேய் வரும்  பில்டப்களை  நம்ப வேண்டிய  சூழல்.


4  பேயின்  அப்பா  சிகரெட்  குடிக்கக்கூடாதுன்னு  பேய்  வந்து  தடுக்குது . அவ்வளவு  செய்யும்  பேய்  எதுக்கு  சுத்தி  அடிக்கனும். என்ன நடந்ததுன்னு   ஓப்பனிங்க்லயே  சொல்லி  இருக்கலாமே? அல்லது  குறிப்பால்  உணர்த்தி  இருக்கலாமே?


7  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  குட் . ஆனா  எத்தனை  பேருக்குப்புரிஞ்சிருக்குமோ?





சி  பி  கமெண்ட் -- ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  படத்தை  விட  தரத்தில்  ஒரு படி  கம்மிதான் , ஆனால்  கம்ர்ஷியலா  அதை  விட நல்லாவே  போகும்  இப்போ  பேய்ப்பட  சீசன்  வேற



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -ஓக்கே



 ரேட்டிங்  =  2.75 / 5



1 comments:

chinnapiyan said...

ஒரே தடவ படம் பார்க்கும்போதே எப்படி இவ்வளவு டீடைல்ஸ் சேகரித்து அக்குவேரா ஆணிவேரா பிரித்து மேயுறீங்க. பல தடவை மூக்கின் மேல் விரலை வைத்து வியந்துள்ளேன். நன்றி வாழ்த்துக்கள்