Monday, September 08, 2014

டீச்சரை கரெக்ட் பண்ண நினைக்கும் காளைகளே!

1  மார்க்கெட் ல ஒரு லேடி பீர்க்கங்காயை கிள்ளி டேஸ்ட் பாத்து வாங்குது.ஏன்?னேன்.பாம்பு ஏறிய காய்னா கசக்குமாம்.அடேங்கப்பா


==============


2
அழகுணர்ச்சியும் ,பொறுமையும் உள்ள பெண்கள் பூமொக்குகளை நெருக்கமாக கோர்த்து கூந்தலில் சூடுகிறார்கள்.நூலில் கட்டிய பூச்சரத்தை விட அழகு


====================



3 இந்தப்பொண்ணுங்க எல்லாம் தினம் கூந்தலில் பூ வெச்சு வெச்சு வெச்சு வாசம் ஏத்திக்கறாங்க .நாம தான் இயற்கையா இருக்கோம்



===============


4 ஐஸ்வர்யராய் ஹாட் னு கூகுள் ல தேடி அடுப்புல தோசை சுடும் சமையல் அறை ஸ்டில் வந்தா அதுதான் சூடான பல்பு


==================


5 பொண்ணுங்க உடுத்தும் சேலைக்கு மேட்சா கல்ர் சவுரி இருக்காம்.1500 ரூபாயாம்.'சவுரி'யம் தான்


==================


6  அய்யோ பாவம் னு ஆம்பளை நினைச்சா கடன் காரன் ஆகிடுவான் பொண்ணு பாவம் பாத்தா புள்ளத்தாய்ச்சி ஆகிடுவா # கிராமத்து சொலவடை(


==============


7  பிறந்த குழந்தைக்கு பேர் வைக்கும்போது சக்கரைத்தண்ணி ஊத்தி காதில் யார் முதலில் பேர் சொல்லி அழைக்கிறார்களோ அவர் குரல் போல் மழலைக்கு அமையும்



=================


8 பரபரப்பாக பேசப்பட குறுக்கு வழி பிரபல சினிமா விஐபி களை வம்புக்கு இழுப்பது


=================


9 டீச்சரை கரெக்ட் பண்ண நினைக்கும் காளைகளே! நாளை ரோஜா குடுங்க.பார்ட்டி சிரிச்சா 143,முறைச்சா ஹேப்பி டீச்சர்ஸ்டே விஷ் மிஸ்


================


10 டீச்சரை கரெக்ட் பண்ண நினைக்கும் காளைகளே! நாளை ரோஜா குடுங்க.பார்ட்டி சிரிச்சா 143,முறைச்சா ஹேப்பி டீச்சர்ஸ்டே விஷ் மிஸ்



===============


11
பெண் பார்க்கும் வைபவம் ,முறைப்பெண்களை மணக்கோலத்தில் பார்ப்பது எல்லாவற்றிற்குமான சுபநிகழ்ச்சிக்கருவூலம் திருமணம் நிகழும் மண்டபங்கள்

==============


12


= வாத்தியாருங்களைக்கண்டுக்காம டீச்சர்ஸ் டே ன்னா டீச்சரை மட்டும் தானே வாழ்த்தனும்னு வியாக்கியானம் பேசுவான் தமிழன்


=============



13 ஆசிரியர்கள் தான் நம்மை செதுக்கியவர்கள்.சந்தில் உள்ள அனைத்து ஆசிரிய்ர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் -செந்தில்


=============


14 
postpaidல இருந்து prepaidக்கு மாத்தவே முடியாது னு அடம் பிடிச்ச ஏர்செல் BSNL க்கு PORT பண்ணிக்கறேன்னு சொன்னதும் மாத்திக்குடுத்துட்டாங்க



==============



15 ஆள் பாதி ஆடை பாதி ஆண்களுக்கு. ஆள் பாதி நகை பாதி (திருமணம் மற்றும் விசேசங்களுக்குப்போகும்)பெண்களுக்கு



============



16 சராசரி மனிதன் தன் மூளைல 10% தான் யூசிங்காம்.நானெல்லாம் அது தேஞ்சுடக்கூடாதுனு யூஸ் பண்றதே இல்ல



==========



17  பாடம் நடத்துபவர் ஆசிரியர் பாடத்தை மனதில் பதிய வைப்பவர் நல்லாசிரியர் வழிகாட்டுபவர் ஆசான் பாடமாகவே வாழ்பவர் குரு



=============



18 பொருளாதார ரீதியில் நம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பின் தங்கி இருந்தாலும் நம் மனதில் தங்கி விட்ட அவர்களுக்கு என்றும் மரியாதை தருவோமாக!



============



19 ஒரு படத்தைஇயக்குபவர் பிரம்மா எனில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கூட ஓராயிரம் பிரம்மாக்களை உருவாக்கும் பர பிரம்மாவே!



============



20 ஓணம் பண்டிகையைக்கொண்டாட சந்தன நிற சேலை அணிந்து வரும் கேரளப்பெண்கள் யாரைப்பார்த்தாலும் முறைப்பெண் போலவே என் கண்ணுக்குத்தெரிகிறது




====================

0 comments: