Wednesday, September 24, 2014

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு -மக்கள் கருத்து

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: ம.பிரபு
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: ம.பிரபு 
 
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தமிழகம், கர்நாடகா என இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சந்தித்து, தீர்ப்பு நாளின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசித்துள்ளனர். 


தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதி வழங்கப்படுகிறது. 


பாதுகாப்புக் காரணங்களுக்காக, பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ர்ப்பு வழங்கப்படுகிறது. 


இந்நிலையில், தமிழகம், கர்நாடகா என இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சென்னையில் சந்தித்து தீர்ப்பு நாளின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசித்துள்ளனர்.
தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் ஏற்படும் சூழலை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


தமிழக தரப்பில் இருந்து உளவுப் பிரிவு ஐ.ஜி., பாதுகாப்பு எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பு வளையத்தில் வருவதால், அவரது பாதுகாப்பு, அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 


பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை, கடந்த மாதம் 28-ம் தேதி நிறைவடைந்தது. செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தி ருந்தார். 


இந்நிலையில் ஜெயலலிதாவின் சார்பில், அவரது வழக்கறிஞர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், “விடுதலைப் புலிகள், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஜெயலலிதா உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார். 


பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தின் அருகே உள்ள காந்தி பவன் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு வழங்கப்படும் இடத்திற்குள் அனுமதி மிகவும் கெடுபடியை கடைபிடிக்கவும், பத்திரிகையாளர்களுக்குக் கூட குறிப்பிட இடம் வரையிலேயே அனுமதி அளிக்கப்படவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


மேலும், வழக்கு முடிவு எந்த மாதிரியாக இருந்தாலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


thanx - the hindu


  • iyya நல்ல therpu kudunga tamilnadu பொலிடிசியன்ஸ் theruthattm
    37 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
  • பாலா  
    யார் தவறு செய்தாலும் உரிய தண்டனை பாரபட்சம் இன்றி வழங்கப்பட வேண்டும்! அதுவும் உயர்ந்த பொறுப்பில் அதிகாரங்களுடன் இருப்பவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதுவே தமிழ்நாட்டின், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.
    Points
    16165
    about 3 hours ago ·   (8) ·   (3) ·  reply (0) · 
    Balaji · raaja · raaja  Up Voted
  • Shan Shan  
    ஒரு முதல்வரின் தனிப்பட்ட வழக்குக்கு இவ்வளவு விமர்சனம் !2G வழக்கு இந்தியாவின் வளங்களை அழித்த 176000 கோடி ரூ நஷ்ட வழக்கு!அதை பற்றி கருத்தே சொல்லமாட்டேன் முதல்வருக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று கூருர மதி கொண்டோர் நேர்மையைபெற்றி பேச வெட்க பட வேண்டும் !!
    Points
    29385
    about 3 hours ago ·   (4) ·   (53) ·  reply (0) · 
    raaja  Down Voted
  • albin jenner  
    உண்மை எல்லோருக்கும் தெரியும் , அனால் இங்கு இதெல்லாம் மக்களுக்கு சாதரணமாக ஆகிவிட்டது. ஏன் என்றால், அதனால் எனக்கு நன்மை (இலவசம் எண்ட பெயரிலோ அல்லது ஒட்டு போடும் எதாவது பிச்சை காசு கிடைதலோ ) பயக்குமானால் நான் எதுக்கு சமுதாயத்தை பத்தி கவலைபடவேண்டும்.
    about 4 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
    Kumar · Balaji · Balaji · raaja · raaja  Up Voted
  • Rajesh Arumugam Software Product Consultant I at Siemens PLM Software 
    அசம்பாவிதம் அம்மையாருக்கு நேர கூடாதாம்... என்ன கொடுமை இது.. ??? பாதுகாப்ப மக்களுக்கு பலப்படுத்துங்க.....
    about 5 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
    Balaji · raaja · raaja  Up Voted
  • T. siva  
    ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு இருமாநில போலீஸ் குவிப்பா ? தேவை தான் !!!
    Points
    14530
    about 6 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
    Balaji · Balaji · Micheal-Johnson  Up Voted
  • T. siva  
    ஆனானப்பட்ட டான்சி வழக்கையே ஊதி தள்ளிவிட்டோம் . அது போல் இதிலும் தப்பித்துவிடலாம் என சிலர் நினைத்தால் அவர்கள் ஏமாற உரிமையுண்டு என்று மட்டும் தான் இபோதைக்கு கூற முடியும் !!
    Points
    14530
    about 6 hours ago ·   (15) ·   (0) ·  reply (0) · 
    Balaji · Balaji  Up Voted
  • செ.  
    இங்கே நண்பர் shaan shaan நெகடிவ் கமெண்ட்டுக்கு பட்டனைத் தட்டித் தட்டி ஆதரவை ஊதிப் பெருக்குகிறார். என்ன பலனைக் கண்டவரோ, இவர்?
    Points
    6040
    about 7 hours ago ·   (13) ·   (0) ·  reply (1) · 
    T-siva · Balaji · Balaji  Up Voted
  • settu  
    A VETRIMMA
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • vetriveeran  
    தலைமை நீதியாய் இயங்கும் போதுதான் ஒருநாட்டில் நிம்மதியும் வளப்பமும் ஏற்படும் . தலைமை நீதிக்கு தடையாகவோ அல்லது தவறுசெய்து ஒரு பார்ட்டியாகவோ ஆனால் சாதாரண மக்களின் கதி என்ன?
    Points
    2030
    about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • T. siva  
    அம்மையார் இதற்கெல்லாம் அசர மாட்டார் ! இருக்கவே இருக்கிறது உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம். அங்கு போய் தடை உத்தரவு வாங்குவார் (அ) மேல்முறையீடு செய்வார் !! அவருக்கு இதெல்லாம் சகஜம் !!!
    Points
    14530
    about 16 hours ago ·   (17) ·   (95) ·  reply (1) · 
    raaja · raaja · Micheal-Johnson  Up Voted
    Shan-Shan  Down Voted
  • pugazhendhi s  
    In a recent speech Cm Jayalalitha spoke as far as i see there is no ENEMIES (no one to win her ) in front of me, everywhere victory, victory. She forget to remember there is one super and superior power (GOD), he knows when to give and when to take the power (victory). In this case if she get victory we (public ) are looser and she is the gainer, reason in future each and everyone ( leaders, & people ) will follow the same method which JJ follwed for the past 17 years.
    Points
    170
    about 17 hours ago ·   (11) ·   (110) ·  reply (0) · 
    Balaji · Balaji  Up Voted
  • naagai jagathratchagan  
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ...இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ...ஒரு தலைவன் (இறைவன்)இருக்கிறான் மயங்காதே ...முன்னாலே தெரிவது கெடு பிடி ..பின்னாலே வருவது அடிதடி ...அதற்கு எத்தனை ஏற்பாடு ...மக்களின் வரிப்பணமே அம்போ தான்
    Points
    570
    about 17 hours ago ·   (13) ·   (136) ·  reply (0) · 
    madhan · Balaji · Balaji  Up Voted
  • krishnan  
    பிரித்து தண்டிக்கப்படலாம்.
    about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Shan Shan  
    கல்யாணம் அய்யர் வந்து தாலி எடுத்து கொடுத்தால் தான் நடக்கும் என்பது போல முதல்வரை திட்டினால் தான் சிலருக்கு தூக்கம் வரும் போல !
    Points
    29385
    about 18 hours ago ·   (310) ·   (16) ·  reply (1) · 
    madhan · rajini-murugan  Down Voted
    • ஸ்ரீபாலாஜி  
      ஏன் 2 g வழக்கில் சிக்கியுள்ள கருணாவையும் அவரின் குடும்பத்தினரையும் திட்டி தீர்த்து கருத்து எழுதுனப்ப மட்டும் உங்களுக்கு இனித்ததோ ? கருத்து சட்டம்னா எல்லோருக்கும் ஒண்ணுதான் பாஸ் !
      about 3 hours ago ·   (31) ·   (0) ·  reply (0) · 
      Balaji · Balaji  Up Voted
  • செ.  
    180 வாய்தா, 17 ஆண்டுகள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் சாட்சியம், இரண்டு மாநிலங்களில் விசாரணை, நீதி மன்ற இட மாற்றம், எத்தனையோ கோடி ரூபாய் விரயம். வழக்கு ஒரு சாமானிய மனிதன் மீதென்றால் அவன் இந்நேரம் சிறையில். ஆனால் அதுவோ அசாதாரண அரசியல்வாதியின் மீது. எதிராக தீர்ப்பு வந்தது இதற்கு முன். என்ன நடந்தது தர்மபுரியில்? கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா மூவரும் கொல்லப்பட்டனர். உலகம் அஞ்சுகிறது அரசியல்வாதிகளின் மீது நீதி மன்றங்கள் தரும் தீர்ப்புக்கு. அதனால், இது போன்ற பீதியைக் கிளப்பும் அரசியல் வாதிகளின் வழக்கை முடிந்தால் அந்தமான் தீவில் வைத்து விசாரித்து தண்டனை கொடுங்கள். சஹாரா சைபீரிய ஸ்டெப்பி என்று தூந்திரப் பிரதேசத்துக்குக் கொண்டு செல்லுங்கள். நாகரீக உலகம் வாழும் நாட்டினுள் வேண்டாம். முதலில் தருமபுரி வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களை தூக்கிலிட்டுவிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பு வரட்டும். அதுவரை வாய்தா வேண்டும். தீர்ப்பை ஒத்திப்போடுங்கள். அப்படியானால்தான் இத்தனை போலீஸ் தடபுடல் தேவையிராது. களேபரம், பேருந்து எரிப்பு, கலவரம் இராது. என்ன, சொல்வது புரிகிறதா நீதி மன்றங்களே, காவல் துறையின் மேதகு அதிகாரிகளே?
    Points
    6040
    about 18 hours ago ·   (44) ·   (249) ·  reply (0) · 
    rajini-murugan · Balaji · Balaji · Micheal-Johnson  Up Voted
  • Krishnaraj.G  
    காந்தி பவனில் தீர்ப்பு krishnaraj.g
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • raajaa  
    ஏற்கனவே ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்து, ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது வேளாண் கல்லூரி மாணவிகள் அதிமுகவினரால் தீயில் பொசுக்கப்பட்டதை மறக்க முடியுமா என்ன? அதனால் தீவிரப் பாதுகாப்பு தேவைதான். ஆனால், இந்த வழக்குக்கு இத்தனை பில்ட் அப்-ஐ மீடியாக்கள் தரத் தேவையில்லை என்றே நினைக்க வேண்டியுள்ளது. வரப்போகும் தீர்ப்பு கடுமையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
    Points
    11195
    about 19 hours ago ·   (56) ·   (1) ·  reply (0) · 
  • முருகன் தில்லைநாயகம்  
    தீர்ப்பு எப்படி வரும் என்று தமிழகமே ஆவலோடு பெருத்த எத்ர்பார்ப்போடு காத்து கொண்டிருகிறது.அதிமுகவினரிடமும் பரபரப்பு தொற்றி கொண்டிருக்கிறது.சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டியது மிக அவசியம். எது எப்படியோ சாதாரண குடிமகன்களின் உயிருக்கும் உடமைக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.மக்கள் வேண்டுவது அமைதி ஒன்றை மட்டுமே.
    Points
    3245
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
    Balaji · Balaji  Up Voted
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் செப்.27 தீர்ப்பு வழங்கப்படும் நாள். தீர்ப்பு அவருக்கு சாதகமாக இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருவேளை சாதகமாக இல்லாவிட்டால் அவருடைய ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் குதிப்பார்கள். குதிக்கட்டும். ஆனால் அந்த போராட்டம் பொதுமக்களையும் மற்ற பொது உடமைகளையும் எந்த விதத்திலும் பாதிக்ககூடாது. அப்படி போராட்டம் பெரிய அளவில் ஆகும் பட்ச்சத்தில் அதனை எதிர்கொள்ள போலீஸ் இரு மாநிலங்களிலும் குவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அம்மாவின் 'ரத்தகொதிப்பும்' அதிகம் என்று கேள்வி பட்டேன்! The verdict on Sept. 27th is going to change the political history of Tamil Nadu in a bigger way. No doubt about it. Let us wait for the verdict. (Note: Hope there is no 'postponement' of the verdict as usual.)
    Points
    8560
    about 19 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • அருணா  
    தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் ..
    Points
    295
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    ஒரு பக்கம் சொத்து 'குவிப்பு' தீர்ப்பு. மறு பக்கம் போலீஸ் 'குவிப்பு', எவ்வித அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள. இந்த 'வரலாறு காணாத தீர்ப்பு' ஜெயலலிதாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கபோகும் ஒரு தீர்ப்பு. கருணாநிதிக்கு எங்கோ ஒரு ஓரத்தில் சிறிது வெளிச்சம் 'இப்பொழுதே' தெரிய ஆரம்பித்து விட்டது.
    Points
    8560
    about 20 hours ago ·   (6) ·   (90) ·  reply (0) · 
    Balaji  Up Voted
  • stanislas Perianayagam at Government 
    மக்களைக் காப்பாற்றுங்கள்...குறிப்பாக அ.தி.மு.க.தொண்டர்களைக் காப்பாற்றுங்கள்...அவர்களிடமிருந்து பயணிகளைக் காப்பாற்றுங்கள்...இசட் பிளஸ் பற்றியே யோசிக்காதீர்கள்...!
    Points
    3285
    about 20 hours ago ·   (10) ·   (0) ·  reply (0) · 
    raaja · raaja · raaja · Balaji  Up Voted
  • Abu  
    தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை மதிக்க தெரியாத மக்கள் இந்தியர்கள். நீதி எல்லோருக்கும் சமம் என்ற கலாச்சாரமும் இல்லாத தேசம் இது. தீர்ப்பு வந்த வுடனேயே பேருந்துக்குள் 4 மானவிகளை வைத்து உயிருடன் கொளுத்தியவர்கள் தானே . நீதிமன்ற தீர்ப்பை ஏற்க்கமாட்டோம். இது நம்பிக்கை சம்மந்தப்பட்டது என்று சூளுறைப்பவர்கள் தானே . சட்டத்தை மதிக்கத் தெரியாத மக்களின் கொட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்.
    Points
    700
    about 20 hours ago ·   (9) ·   (94) ·  reply (0) · 
    Balaji · Balaji · raaja · raaja · raaja  Up Voted
  • Dorairaj Anandaraj  
    பாதுகாப்பினை உச்ச நீதி மன்றம் கண்காணிக்க வேண்டும். தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் மாணவிகளை உயிரோடு எரித்தது போன்று நிகழ்ந்து விட கூடாது. நடந்தால் உள்ளூர் நிவாகிகளை உடனடியாக தண்டிக்க பட வேண்டும்.
    Points
    4035
    about 20 hours ago ·   (4) ·   (107) ·  reply (0) · 
  • elaya  
    தர்மம் வெல்லுமா இல்லையானு செப் 27 தெரியும்.
    about 20 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
    raaja · raaja · raaja · Balaji  Up Voted
  • MANI  
    அம்மா கண்டிப்பாக வெற்றி பெறுவார்
    Points
    100
    about 21 hours ago ·   (352) ·   (8) ·  reply (0) · 
    madhan · Kumar · Kumar · rajini-murugan  Down Voted
  • Issac  
    மீண்டும் ஒரு தர்மபுரி சம்பவம் நடக்க கூடாது என இறைவனிடம் பிரார்த்திப்போம்.
    about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
    rajini-murugan · Balaji  Up Voted
  •  
    ஏன் அவரச படுறீங்க இன்னும் 5 நாள் இருக்கு அதுக்குள்ளே எப்படி மனு போடலாம் எத்தனை மனு போடலாம் னு ஆலோசனை எப்படி தீர்ப்ப வெளி வரவிடாமா தடுக்குறாங்கன்னு பாருங்க ...! ஜெய்.ரமணா
    Points
    5035
    about 21 hours ago ·   (5) ·   (159) ·  reply (0) · 
    rajini-murugan · Balaji  Up Voted
  • j.b.ravi  
    இத்தனை ஆண்டுகள் கழித்து இறுதி நிலை அடைந்த இந்த வழக்கு ஒரு முன்மாதிரியான மகத்துவத்தை பெறும் என்கின்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாகவே உள்ளது இன்னும் ஐந்து நாட்கள் உள்ளனவே பொறுத்திருப்போம் பொங்கிஎலாமல்............ ஜெயபாஸ்கரன் ரவி

2 comments:

Unknown said...

நல்ல தீர்ப்பு

Unknown said...

நல்ல தீர்ப்பு