Thursday, September 04, 2014

ஜிலேபி கயல் விழி

1  மீன ராசி அன்பர்களே! இன்று ராசியான நிறம் சிவப்பு.அதுக்காக உடம்புல அடிபட்டு ரத்தம் வந்தாக்கூட துடைக்காம இருக்க வேணாம்


===============


2 ஒருத்தர் போன் பண்ணி இட்ஸ் பிரசாந்த் போன் நெம்பர் கேட்டாரு.நெம்பர் குடுத்தா அவருக்கு அடி விழுமாம்.குடுக்கலைன்னா எனக்கு அடி விழுமாம்


=============

3
மாமனார் வீட்டுக்கு அருகில் வீடு குடி போனால் அது கிட்டத்தட்ட வீட்டோட மாப்ளை மாதிரி # ஆபீஸ் நண்பரின் புலம்பல்


===============


4
தினமும் 4 கிமீ நடந்தால் எல்லோரும் WALK"KING"தான்



===============


5  புகழ் பெற்ற நடிகைகள் வழக்கமா வரும் நேரத்துக்கு 1 நிமிடம் தாமதமா வந்தாலும் மேடம்.உங்க டைம் 5 30AM னு அலாரம் அடிப்பான் நெட் தமிழன்



================


6 பிரதமர் ஆனதும் பொருளாதாரச்சீர்திருத்தம் செய்வாருனு பார்த்தா டூர் போன இடத்துல ட்ரம்ஸ் வாசிச்ட்டு இருக்காரு


================


7 கை கட்டி ஆண் இருந்தால் அது அடக்கத்தின் அடையாளம் கை கட்டி பெண் இருந்தால் அழகின் அடையாளம்


===============


8  நேர்முகத்தேர்வில் மட்டும் தாடி வைத்த ஆண் சோம்பேறியாகவே பார்க்கப்படுவான்.உங்க ஸ்டைலை காட்டும் இடம் இண்ட்டர்வ்யூ அல்ல


===============


9 மீன் போல் விழி கொண்ட பெண் மஞ்சள் நிறத்தில் ஜொலித்தால் அவர் ஜிலேபி கயல் விழி



==============


10 அழகிய பெண் ஒருவனிடம் சிரித்துப்பேசுவதைக்கண்டால் அந்தப்பையனை வெறுக்க காரணம் வேறு தேவைப்படுவதில்லை


=============


11 நீ அறிவாளியாக இருந்தாலும் உன் சாமார்த்தியத்தை உன் உயர் அதிகாரியுடனான வாக்குவாதத்தில் காட்டாமல் இருப்பதே சாணக்யத்தனம். #,S sir .ok sir


======



12 4 பேர் முன்னிலையில் பெண்களிடம் மிடுக்காகப்பேசும் ஆண் யாரும் இல்லாதபோது பெண்ணிடம் குழைந்து பேசினால் தன் கம்பீரத்தை இழப்பான்


=================


13 திருமண மேடைகளில் மணப்பெண் தலை குனிந்து வெட்க பூரிப்புடன் இருந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு.அசால்ட்டா இருக்காங்க


================


14 ஒரு வெள்ளை வேட்டி ,சட்டை போதும் ஆணுக்கு.ஆனால் பட்டுப்புடவை ,நகைகள் புடை சூழ ஒரு பெண் திருமண விழாவுக்கு ரெடி ஆக வேண்டி இருக்கிறது.


==============


15 பெண்ணின் நகைகளில் என்னைக்கவர் வது கல் வெச்ச நெக்லஸ்,நெற்றிச்சுட்டி ,ஒட்டியானம் ,ஜிமிக்கி


===============


16  பெண் பார்க்கும் வைபவம் ,முறைப்பெண்களை மணக்கோலத்தில் பார்ப்பது எல்லாவற்றிற்குமான சுபநிகழ்ச்சிக்கருவூலம் திருமணம் நிகழும் மண்டபங்கள்


==================

0 comments: