Friday, August 01, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (1.8 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1ஜிகிர்தண்டா.-.பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமிமேனன் ஹீரோயின். இதன் முதல்கட்ட ஷூட்டிங் மதுரையில் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதுகுறித்து டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பீட்சா வெளியான பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் ஜிகிர்தாண்டாவை இயக்கி வருகிறேன். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யும் வகையில் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம். பீட்சாவை போன்று இதுவும் மக்களை கவரும். பீட்சா தயாரிப்பாளர் சி.வி.குமரன் தயாரிப்பில் தற்போது ரிலீசாக இருக்கும் பீட்சா&2 தி வில்லா வெற்றி பெறவும், இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி வெற்றி பெறவும் எனது வாழ்த்துக்கள்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த சிறப்பு பேட்டி…


ஜிகிர்தண்டா மதுரையை களமாகக் கொண்ட மற்றொரு படமா?


“நிச்சயம், இது அந்தவகையில் வரும் படம் அல்ல. இது கேங்க்ஸ்டர் கதைதான், எந்த ஊரை மையமாகக் கொண்டு எடுத்திருக்கலாம். ஆனால், மதுரை இளைஞர்கள் எளிதாக வன்முறை பாதைக்கு திரும்பிவிடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அதனாலேயே மதுரையைத் தேர்ந்தெடுத்தேன்.


பீட்சா வுக்கு முன்பே நான் எழுதிய கதை ஜிகிர்தண்டா கதையை எழுதிவிட்டேன். பட்ஜெட் அதிகம் என்பதால் முதல் படமாக அதை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் இருந்தது. பீட்சா பட்ஜெட்டை விட ஜிகிர்தண்டாவின் பட்ஜெட் 10 மடங்கு அதிகம்.’’


பாபி சிம்ஹாவின் கேரக்டர் பற்றி இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்களே?


“இது முக்கோண காதல் கதை. ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இது அவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை நிச்சயம் தரும். இந்தக் கேரக்டருக்கு விஜய் சேதுபதியை யோசித்தோன். நேரம் படம் பார்த்துவிட்டு பாபி சிம்ஹாவை முடிவெடுத்தோம்.’’


இவ்வளவு சீக்கிரம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறீர்களே?


“நல்ல கதைகளை, திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன். தயாரிப்பு நிறுவனத்தில் வேறு வகையான பணிகளையும் செய்ய இருக்கிறோம். குறும்படங்களை வாங்கி வெளியிடுவதற்கும் காஸ்டிங் எனப்படும் நடிகர்களை தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனமாகவும் இது செயல்படும். தமிழ் சினிமாவில் இவை புதிய முயற்சிகளாக இருக்கும்.
 
ஈரோடு  அபிராமி , ஆனூர் , சக்கீதா  வில்  ரிலீஸ் 
 
 
 
 
2  சரபம் -

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சரபம். கெளதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நவீன்சந்திரா-சலோனி ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் நரேன் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்க, கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை 4.30 மணி அளவில் சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், இந்த படம் க்ரைம் கதையில் உருவாகியிருக்கிறது. எனது பேனரில் உருவாகும் கதைகளைப்போன்று வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த கதைக்கு பொருத்தமான டைட்டீல் யாழி என்று இயக்குனர் வைத்திருந்தார். ஆனால், அதை பதிவு செய்யச்சென்றபோது ஏற்கனவே இன்னொருவர் அதை பதிவு செய்து வைத்திருந்தார்.

அதனால், நாங்கள் சரபம் என்று மாற்றினோம். சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் அதற்கு சிங்கப்பறவை என்று பொருள்படும். மேலும், இந்த படத்துக்கு யு சான்றிதழ் கண்டிப்பாக கிடைக்காது என்பதால் பட்ஜெட்டை குறைத்து, 29 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்தோம். படத்தில் நடித்த நவீன்சந்திரா, சலோனி, நரேன் ஆகியோர் பல நாட்கள் இரவு 2 மணி நேரம் மட்டுமே தூங்கியபடி ஓய்வில்லாமல் நடித்துக்கொடுத்தனர்.

மேலும், இந்த படத்தின் கதைக்கு ஏற்ற நடிகை பல மாதங்களாக தேடினோம். அந்தவகையில், 120 நடிகைகளுக்கு பிறகு 121வதாக கிடைத்த மும்பை சலோனிதான் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்தார். அந்த வகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு கொடுத்த சம்பளத்தை விட நடிகை தேடுவதற்காக நாங்கள் செலவு செய்த தொகைதான் அதிகம் என்கிறார் சி.வி.குமார்.
 
 
ஈரோடு  சண்டிகா வில்  ரிலீஸ் 
 
 

3 “சண்டியர்”

எம்.கே.எஸ் பிலிம்ஸ் வழங்கும் உயிர்மெய் புரொடக்ஷன்ஸ் எஸ்.சங்கர்பிரசாத், கே.எஸ்.செந்தில்குமாருடன் இனணந்து தயாரிக்கும் படம் “சண்டியர்”.

இந்த படத்தில் ஜெகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கதாநாயகியாக புதுமுகம் கயல் அறிமுகமாகிறார். மற்றும் வில்லனாக நாயகம், டி.ரவி, சிங்கம்புலி, சிந்து, முருகதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் சோழதேவன். இவர் இயக்குனர் ரமணா, விஜி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.


ஹரிபாஸ்கர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யத்தீஷ் மகாதேவ் இசையமைக்கிறார். படம் குறித்து குறிய இயக்குனர் சோழதேவன், "சண்டியர் என்றால் அடிதடி செய்பவன்  கெட்டவன் என்ற நினைப்பு நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் என் சண்டியர் அப்படியல்ல இவன் வேற மாதிரி.


இது தனி மனித ஒழுக்கம் பற்றிய கதை! தலைமை பெறுப்புக்கு வருபவன் ரொம்பவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற அறிய கருத்தை இதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம்.


நாயகம் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு தஞ்சை மாவட்டத்தின் கிராமப்  பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. ஜனரஞ்சகமான படமாக சண்டியர் உருவாகியுள்ளது."என்றார். 

 ஈரோடு  கிருஷ்ணா வில்  ரிலீஸ்
 
 
4 முதல் மாணவன்
 
நாமக்கல்லைச் சேர்ந்த குறும்பட நடிகர் கோபிகாந்தி நடித்துள்ள "முதல் மாணவன்' திரைப்படம் தைப் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்எஸ்ஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 மாதங்களாக நாமக்கல், சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.


படப்பிடிப்பு பணிகள் முடிவுற்று, தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


அந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கைப் பாடமாக இந்தத் திரைப்படம் அமையும். ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உலகம் எப்படி நம்மை ரசிக்கும் என்ற ஆழமான கருத்தும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.


குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மனதைக் கவரும் வகையில் 5 பாடல்களும் இடம் பெற்றுள்ளன.


இந்தத் திரைப்படத்தின் மூலம் நலிந்த பல கலைஞர்களுக்கும் வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றி பெறும்பட்சத்தில், அந்த கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் என்றார் கோபிகாந்தி.
 
5  ஹெர்குலிஸ்


பிரெட் ராட்னர் இயக்கி ட்வெய்ன் ஜான்சன் நடித்த ஹெர்குலிஸ் திரைப்படம் போன வாரம் வெளிவந்தது. பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் போன வார இறுதியில் மட்டும் 44 மில்.டாலர் வசூல் செய்தது. இப்படம் 29மில்.டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது.


ஹெர்குலிஸாக நடிப்பதற்கு ட்வெய்ன் இரண்டு மாத காலம் பல்வேறு உடற்பயிற்சிகளை ஒரு நாளைக்கு 12 மணிநேரம் செ்யதுவந்தார். இவர் ஒரு கால் பந்தாட்ட வீரர். இது இவரது முதல் படம். இவரது உடற்கட்டைப் பார்த்த நண்பர்கள் இவரை பாறை என்ற பொருளில் The Rock என்று அழைப்பார்கள். குத்துச்சண்டை வீரராக இருந்து ஓய்வு பெற்றவர்.


பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்ஸன் இப்படத்தில் லூசி என்ற கதாபாத்திரத்தில் அமானுஷ்யமான சக்தி படைத்த பெண்ணாக நடித்திருக்கிறார்.


ஈரோடு  வி எஸ் பி  யில்  ரிலீஸ்

0 comments: