Thursday, July 24, 2014

வேலை இல்லா பட்டதாரி vs சுள்ளான்

1. ஆபீஸ் ஒர்க் அரை மணி முன்பே முடிஞ்சுதுனு 2 லேடீஸ் பிங்க்கி பிங்கி பாங்கி விளையாடிட்டிருந்தாங்க.என்னை சேத்துக்காம நோ கேம்னு சொல்லிட்டேன்


========================


2  பேங்க்கில் லோன் வாங்கும் லோகநாயகிகளே! தவணை கட்ட லேட் ஆனா பரவால்லை.அது பற்றி பேங்க் ல இருந்து போன் வந்தா அட்டென்ட் பண்ணி பதில் சொல்லுங்க



=====================



3 அலை பேசியில் அழைப்பது கடன் காரன் எனில் நெம்பரைப்பார்த்ததும் சைலன்ட் மோடில் போட்டு விட்டு அட்டென்ட் பண்ணாமல் தவிர்ப்பான் தமிழன்



======================



4 நீண்ட கூந்தலுடன் ஜொலித்த பெண்கள் பாய் கட்டிங்க் ல.பசங்க லாங்க் ஹேர்.கேட்டா நாகரீகமாம்.அதுல தீயை வெச்சுக்கொளுத்த


======================


5 FB ,ட்விட்டர் ல இத்தனை கூட்டம் அள்ளுதே.ஏதாவது செகன்ட் ஷோ சினிமா ஓடுதா?


==========



6 தான் செய்த தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அதை திருத்திக்க எந்த முயற்சியும் செய்யாமல் தமிழனை தரம் தாழ்த்தாதே என குதிப்பான் தமிழன்



=========================


7  நடு ரோட்டை கிராஸ் பண்றப்ப ஒரு சேட்டு பிகர் பர்ஸ் ல இருந்து 18 ஒரு ரூபா காயின் கொட்டிடுச்சு.சொன்னேன்.நடு ரோட்ல எடுக்க சங்கோஜமா இருக்காம்.


==================


8 நல்லவேளை.நான் கீழே விழுந்த காசை பொறுக்குனதை யாரும் பார்க்கலை.பார்த்திருந்தா பொறுக்கி னு சொல்லி இருப்பாங்க


===============


9 ஸ்டாப்பில் பஸ் க்காகக்காத்திருக்கும் பிகர்களே! நானும் பஸ்க்கு த்தான் காத்திருக்கேன்.வாங்க கடலை போடுவோம்.ஆச்சி மசாலா வழங்கும் நீயா? நானா?


=================

10 நீ சிரித்தால் பேரழகு என்றேன்.அப்போ சிரிக்காதப்ப என் பேரு அழகில்லையா? குழப்பாதே! என்று என்னையே குழப்பி விட்டாள்!


================


11 வீட்டில் சுடப்படும் ஆனியன் தோசையில் தான் எண்ணெயில் வதக்கிய வெங்காயம்.ஹோட்டல் தோசையில் பச்சை வெங்காயத்தைத்தான் போடறாங்க


==================


12 மீனராசி அன்பர்களே! வலது கால் பாதத்தில் அடிபடும் .எதிலாவது இடித்துக்கொள்வீர்கள்.எனவே வலது காலை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு செல்லவும்


==================

13 பாரம்பர்யம் மிக்க பத்திரிக்கைகளான ஆனந்த விகடன் ,குமுதம் 16 வருடங்களாக சன்மானத்தொகையை ஏற்றாமல்.விகடன் 1 ஜோக் =100ரூ.குமுதம் =50 ரூ


==================

14  பத்திரிக்கை உலகில் படைப்பாளிகளை மதிப்பதில் நெ 1 தினமலர் தான்.ஒரு ஜோக்.= 750 ரூ .3 பக்க சிறுகதை = 1500 ரூ.ஒரு பக்க கவிதை = 1250 ரூபா


==============


15  கால் மேல் கால் போட்டு அமர்ந்த எந்த அம்மாவையும் நாம் பார்த்ததே இல்லை.ஆனால் இந்தக்காலப்பெண்கள்தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகக்கருதுகிறார்கள்


===================


16  அன்புள்ள வருண பகவானுக்கு.வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் லீவில் துணி துவைச்சுக்காயப்போட்டிருக்கேன்.எனவே பெய்யும் மழையே!இன்று போய் நாளை வா


=======================


17 நான் பார்த்த அகலமான தூண்கள் கொண்ட ,சுற்றிப்பார்க்க அதிக நேரமாகும் தலங்கள் 1 திருமலை நாயக்கர் மஹால் 2 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 3 நமீதா


=====================


18 வே இ ப படத்தில் தனுஷ் பேசும் பஞ்ச் டயலாக்ஸ் எல்லாம் பார்க்கும்போது சுள்ளான் பாகம் 2 மாதிரியே இருக்கு.மெகா ஹிட் ஆகிடும் போல


======================


19 எல்லோரும் பார்க்க வேண்டிய படமான ராமானுஜன் தியேட்டர் ல காத்து வாங்குது.பார்க்கக்கூடாத படமான பூக்கடை சரோஜா வுக்கு செம கூட்டம்.இதுதான் உலகம்


==========================


20 திருவிழாக்காலத்துல சாமி மலை ஏறும் தேர்தல் திருவிழா முடிஞ்சிட்டா பெட்ரோல் ,டீசல் விலை ஏறும்


============================

0 comments: