Thursday, July 24, 2014

METRO ( 2013 )- சினிமா விமர்சனம்

 

 ஹீரோயின் ஓப்பனிங்க் சீன்லயே கள்ளக்காதலனுடன்  பெட்ரூம்ல  ஏதோ ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணிட்டு( !!) இருக்கும் போது  புருஷன் போன் பண்றார். ஆனா பாப்பா எடுக்கலை. ஏன்னா எடுத்தா எங்கே  இருக்கே?னு கேட்பாரு , பொய் சொல்ல வேண்டி வரும் . எந்த  சூழ்நிலையிலும்  பொய் சொல்லாத பொற் தாமரையா வளரனும்னு ஆசைப்படறாரு போல . 


1ம் தெரியாத  பாப்பா வராததால  ஹீரோ  தன்  குழந்தையை ஸ்கூலில்  விட  ரயில் ல போறார். அது  மெட்ரோ  ரயில் . சுரங்கப்பாதைல  ஏதோ  தண்ணி கசியுது-னு லேபர்  சொல்லியும்  ஹையர் ஆஃபீசர் கண்டுக்கலை . மப்புல  உளர்றான் -னு அலட்சியப்படுத்திடறாங்க . பொதுவாவே ஹையர் ஆஃபீசர் , டேமேஜர்   இவங்க  எல்லாம் தனக்குக்கீழே வேலை செய்பவனை மதிக்க மாட்டாங்க ., அவங்க  சொல்றதை  கேட்டுக்க மாட்டாங்க . 


எங்கேயும்  எப்போதும்  படத்தில்  வருவது  போல்  ஒரு லவ்  ஜோடி . நம்ம  ஹீரோ , பொண்ணு , அந்த கள்ளக்காதலன்   எல்லாரும்  அந்த  மெட்ரோ ரயிலில் பயணம்  செய்யறாங்க . மாபெரும்  விபத்து  ஏற்படுது.. அந்த  குகைல மாட்டிக்கிட்டு அவங்க எல்லாம் எப்படி தப்பிக்கறாங்க என்பதே  சுவராஸ்யமான  திரைக்கதை . 


 இந்த மாதிரி  கதைகள்  எவர்  க்ரீன் ஃபார்முலா . மக்கள்  ரசிப்பாங்க 





 ஹீரவா  செர்ஜி புஸ்கி பலிஸ் நல்ல நடிப்பு . மனைவி  தனக்கு  துரோகம் பண்றா  எனும் ஆத்திரம் , கள்ளக்காதலன்  தன்னை நக்கல் அடிக்கும்போது ஆவேசம் ,  நெருக்கடியான  சூழ்நிலைகளீல் சமயோசித  நடவடிக்கை  என   நல்லா பண்ணி இருக்கார் 


ஸ்வெட்லானா கோட்சென்கோவா தான் நாயகி . கள்ளக்காதலனுடன்  கில்மா , வாக்குவாதம் ஆகிய காட்சிகளில்  தத்ரூபமாக நடித்துள்ளார் . அனுபவம் பேசுதோ என்னவோ ?

 அந்த  குழந்தை  கூட நல்லா நடிச்சிருக்கு 


வில்லனா  வரும்  கள்ளக்காதலன்     ஓக்கே  ரகம்




 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  திரைக்கதை  அமைத்த விதம் காட்சிகளை படமாக்கியது எல்லாமே  நேரில் விபத்தைப்பார்ப்பது  போலவே அருமையான படமாக்கம் 


2 மெட்ரோ   சுரங்க  ரயில்   பாதைகளில்   விபத்து நடந்தால்  ரயிலை விட்டு இறங்கி  டிராக்கில் நடக்கக்கூடாது  என்ற விழிப்புணர்வு   ஊட்டும்  விதமா நல்லா காட்சி அமைச்சிருக்கார் 


3    நாயகி  தன் கள்ளக்காதலனுடன் வாக்குவாதம்  செய்யும் காட்சி  செம 


4   காதலியி ஆஸ்துமா ட்ரபுளால் அவஸ்தைப்படும்போது  காதலன் அவள்  தவற விட்டை மருந்தை  தன்  உயிரைப்பணயம்  வைத்து  எடுத்து வரும் காட்சி



இயக்குநரிடம் சில கேள்விகள் 


குகைக்குள் புகுந்த   அவ்வளவு  தண்ணீரையும்  லிக்விட்  ஹைட்ரஜன்  மூலம் அழித்து  விடலாம் என்பதை வெறும்  வசனமா வெச்சு எஸ் ஆகாம அதை  பிரம்மாண்டமா காட்சிப்படுத்தி  இருக்கலாம்


பொதுவா  குழந்தை  முன் எந்த  அப்பாவும்  தன் பலகீன த்த    காட்டிக்க மாட்டார் ., ஆனா  ஹீரோ தன் நடவடிக்கைகளால் தவளை மாதிரி    மகளிடம் மாட்டிக்கறாரே அது எப்படி ? 


3 நாயகி  தன்  குழந்தைக்காக  துடிக்கறார் . அங்கேயும்    இங்கேயும்  ஓடறார் . எல்லாமே  கலைஞர்   ஈழத்தமிழர் நலனுக்காக மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள் மாதிரி ஏனோ தானோ நு இருக்கு. அவர்  தன்  உயிரைப்பணயம் வைத்து  குழந்தை , கணவனை காப்பாற்ற  முயல்வது போல்  ஒரு காட்சி வெச்சிருக்கலாம்


மனம் கவர்ந்த வசனங்கள்


காசு,பணம் ஒருத்தர் கிட்டே எவ்ளவ் இருந்தாலும் வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு குடுப்பினை வேண்டும்.அது எல்லார்க்கும் கிடைச்சுடறதில்லை


டூ வீலர் ல போனா ஆபத்துனு ரயில் ல வந்து இந்த விபத்தில் மாட்டிக்கிட்டேன். ஒண்ணு நடக்கனும்னு விதி இருந்தா அது நடந்தே தீரும்  



3 நம்மோட வலியை மத்தவங்க கிட்டே சொல்லலாம்.ஆனா அந்த வலியை உணர வைக்க முடியாது.நம்மால் மட்டுமே நம் வலியை உணர முடியும்



4 எல்லாரும் விபத்துல மாட்டிக்கிட்டு உயிருக்குப்போராடிட்டு இருக்கோம்.இங்க வந்தும் ஒருத்தன் திருடிட்டு இருக்கான் பாருங்க.அடேய் ! ;-)  


5 மிஸ்! 4 மாசமா விடாம உங்களை பாலோ பண்ணிட்டு இருக்கேன்.நீங்களும் என்னை நோட் பண்ணிட்டு இருக்கீங்க.என்னைப்பத்தி என்ன நினைக்றீங்?


 BJP னு 


6 ஆம்பளை எப்பவும் ஆம்பளையாவே இருக்கனும்.வீட்டு வேலை எல்லாம் செய்யக்கூடாது.செஞ்சா யாரும் மதிக்க மாட்டாங்க # நெகடிவ் ராங்க் டயலாக்  



7 கண்ட்டிநியூவா ரிங்க் விட்டுட்டே இருக்கார். இங்கிதம் தெரியாதவன்.இப்டி ஒரு புருஷனை வெச்ட்டு எப்டித்தான் காலம் தள்ளறியோ? #கள்ளக்காதல் 


8 பணம் சம்பாதிப்பது மட்டும் புருஷனோட கடமை இல்லை.மனைவியோட தேவை என்ன?னு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு அவளை சந்தோஷமாவெச்ருக்கனும









சி பி கமெண்ட் -METRO (2013) - பாதாளச்சுரங்க ரயில் விபத்து பற்றிய விறுவிறுப்பான படம்.பேமிலியுடன் பார்க்கலாம் -ரேட்டிங் = 2.75 / 5









குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் = 2.75   /  5
  
 இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் சிதம்பரம் மாரியப்பா தியேட்டர்



இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் சிதம்பரம் மாரியப்பா தியேட்டர்