Friday, June 27, 2014

சைவம் - சினிமா விமர்சனம்

 
 தமிழன் கிட்டே   உள்ள பொதுவான அம்சம் என்னான்னா  தனக்கு ஏதாவது நல்லது நடந்தா உடனே அதுக்குக்காரணமா இருந்த கடவுளுக்கு நன்றி சொல்வான் . கிராமங்கள் ல நேர்ந்துக்குவாங்க . எட்டாம் கிளாஸ் ல பாஸ் ஆன 108  தேங்கா  உடைப்பேன்பான் . அந்த மாதிரி  ஒரு கிராமத்துல  ஒரு பெரிய  குடும்பம் . வருசா வருசம் ஏதாவது  விசேஷம்னா  எல்லாம்  ஒண்ணு  கூடுவாங்க . கட்சில ஏதாவது பிரச்சனைன்னா செயற்குழுவைக்கூட்டும்  திமுக மாதிரி . 


ஒரு பெரிய வாகன விபத்துல  இருந்து கடவுள்  புண்ணியத்துல தப்பிக்கறாங்க . அப்போ அந்த வீட்டில் வளர்த்த  அல்லது வளர்ந்த   சேவலை  நேர்ந்துக்கறாங்க. கருப்பனுக்கு படையல் போட்றத  வேண்டிக்கிட்ட சேவல் மேட்டரை அப்புறமா அவங்க மறந்துடறாங்க 

 அதுக்குப்பின் எதேச்சையா குடும்பத்தில்  நிகழும்  சோக சம்பவங்களுக்கெல்லாம் அந்த சேவல் பலி குடுக்காததேனு இவங்களா நினைச்சுக்கறாங்க . 

 சரி , பலி  கொடுத்துடலாம்னு நினைக்கும்போது  குடும்பத்துல  உள்ள ஒரு சின்னபொண்ணு  அந்த சேவலை ஒளிச்சு வைக்குது . தாங்களே  ஊழலைபண்ணிட்டு  ஊழலை ஒளிப்போம்னு  குரல்  கொடுத்த காங்கிரஸ் மாதிரி   தங்கள் வீட்டுக்குள்ளேயே சேவல்  இருப்பது   தெரியாம  ஊரெல்லாம்  தேடறாங்க . அந்த காமெடித்தேடல் தான்  படத்தின் கல கலப்பான   திரைக்கதை . 


 அமலபாலின் புத்தம்புது கணவர் இயக்குநர் விஜய் வாழ்கையிலேயே  முதல்  முறையாக  சொந்தக்கதையுடன்  களம் இறங்கி  இருக்கார் . வாழ்த்துகள் . 


நாசர் தான்  ஊர் பெருசு . தாத்தா  கெட்டப் . ஒப்பனை அருமை . நடிப்பு   பற்றி  சொல வேண்டுமா> இயல்பான நடிப்பு 

 மொத்தபடத்தையும்  தாங்கி  நிற்பது  மழலை சாரா . கல்க்கல் நடிப்பு . தெய்வத்திருமகள் ல் ஓவர் ஆக்டிங்க் ஆங்காங்கே . ஆனால் இதில் கச்சிதமான நடிப்பு 


நாசரின்  மகன்  பாஷா  -இதில்  அறிமுகம் . இளமை  அள்ளும்  முகம் . முதல் படம் என்ற அளவில்  ஓக்கே 

 நாயகி   துவார தேசாய். சோளக்கருது ( சோளக்கதிரின்  பிஞ்சு விதையில்  பால் ஊற்றி வேக வைத்தது  போன்ற அழகிய நிறம் . ரொம்ப  பிஞ்சு  மூஞ்சி . பார்த்துட்டே  இருக்கலாம் போன்ற அழகு . இவருக்கு  க்ளோசப் ஷாட் சரியாக  வைக்காதது  ஏனொ ? 


போலி சாமியாரக வரும்  சண்முகராஜன் , வேலைக்காரராக வருபவர் நடிப்பு  கலக்கல்  ரகம் .




 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ஓபனிங்க்  ஷாட்டில்   ஒரு மரத்தை  தோகை  விரித்து ஆடும் மயில் போலவே காட்டியது 


 2 பனை மரங்களை இவ்வளவு அழகாக  வேறு எந்த தமிழ்படங்களிலும் பார்க்கலை , கேமர  கலக்கல் 


3  காணாமப்போன சேவலைக்கண்டு  பிடிக்க  மூவர் குழு ஒவ்வொரு வீடாகபோய் என்ன சமையல். ? என விசாரிக்கும் காட்சி காமெடி கலக்கல் 


4 ஸ்கூல்  பியூன்  - 2 சம்சாரம் சண்டை  சக்களத்தி சண்டை  இரண்டும்  பிரமாதம் 


5  சரவண்ன்  - இது அபா வெச்சது . ஸ்ரவன் -இது நானா வெச்சுக்கிட்டது  என அலப்பறை பண்ணும்  பையன் நடிப்பும் அருமை 


6  பல படங்களில்  இருந்து  சுட்டிருந்தாலும்   ஜி வி  பிரகாஷ்  பிஜிஎம் அருமை . கிராமீய இசை 


7   கடைசியில்  கதைக்கான இன்ஸ்பிரேஷன்  தன்  சொந்த அம்ம வாழ்வில்  நிகழ்ந்த சம்பவம்  என டைட்டில் கார்டில் அம்மாவுக்கு மரியாதை செய்தது குட்


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 .   வீட்டின் பரணில் பல நாட்கள் சேவலை  ஒளிச்சு வைக்க  முடியுமா? அது கொக்கரக்கோ என கத்தாதா? யாருமே எபடி கவனிக்கலை ? 


2  என்னதான் கலகலப்பான  படம் என்றாலும்  படம்  முழுக்க  சேவல் தேடும் படலம் அலுக்கிறதே ? 


 3 படம்  பூரா  எல்லோரும்     தோப்புக்கரணம்  போடுவது  செயற்கை 


4   சைவம் - அசைவம்  சம்பந்தபட்ட வலுவான வசனங்கள் வைக்கும் வாய்ப்பு  இருந்தும்  அதை தவிர்த்தது  ஏனோ ? 


5   மூட நம்பிக்கை  , கிராம சகுன பழக்கம் ,. சாமி படையல்  போன்றவற்றை  நையாண்டி  செய்ததில்; ஆழம் பத்தலை . ரொம்ப லைட்டா  இருக்கு 


6  அமல பால் லை கவுரவ வேடத்தில் வர வைக்காதது ஏனொ ? அட்லீஸ்ட் மேரெஜ்  ஃபோட்டோ வாவது போட்டிருகலாம்


மனம் கவர்ந்த வசனங்கள்


1 சேவல் பேரு பாப்பாவா? புதுசா இருக்கே? அது சின்னதா இருக்கும்போது கோழியா?சேவலா?னு தெரியாம பொத்தாம்பொதுவா பாப்பா னு வெச்ட்டோம் # சைவம்



விவசாயி ன்னா எவன் மதிக்கறான்? தொழில் விவசாயம் னு சொல்லவே வெட்கப்படும் கால கட்டம் இது #,சைவம்


3 எப்போ ஊருக்கு வந்தாலும் "விசேஷம்" இருக்கா? உண்டாகிட்டியா?னு கேட்பதால் தான் ஊர் ல எந்த விசேஷத்துக்கும் வர்றதே இல்லை # சைவம்


4  ஹேய்! ஓல்டு மேன்.வாட் ஈஸ் கம்மாய் ( கண்மாய்)? 


பீச். 

ரியலி.? 


ம்.ஸ்மால் பீச் #,சைவம் 


5   படிக்கற புள்ள எங்கிருந்தாலும் படிக்கும்.அது கிராமமா இருந்தாலும் # சைவம்


6  இன்ஸ்பெக்டர் அய்யா.எங்க வீட்டு சேவலைக்காணோம். ஓ.உங்க ஊர்ல எல்லாருமே ஓடுகாலிகளா? # சைவம்


7 எங்க வீட்டு வெத்தலை ல மை போட்டுப்பாத்தா தெரியுமா?


 சாமியார் = வெத்தலை எந்த வீட்டுதுனு முக்கியம் இல்லை.மை தான் முக்கியம் # சைவம் 



a










படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


1 . ஒளிப்பதிவு வித்தகர் நீரவ் ஷாவின் மேஜிக் கேமரா வில் பாப்பா சாரா வுக்கான க்ளோஷப் ஷாட்கள் கவிதை # சைவம்



அமலா பால் ன் கணவர் இயக்குநர் விஜய் வருசம் 16 படத்தை உல்டா அடிக்கப்போறார் என அவதானிக்கிறேன்.#,சைவம்


3  சிந்து பைரவி ல வரும் இசையை அழகா சுட்டுட்டார்.ஜி வி பிரகாஷா? கொக்கா? # சைவம்





சி பி கமெண்ட் -
சைவம் - கலகலப்பான திரைக்கதை ,120 நிமிட குடும்பக்கவிதை கிராமிய மணத்துடன் - இன்னும் அழுத்தமாகசொல்லி  இருக்கலாம்


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 43


சிபி  மார்க் = 45


குமுதம் ரேட்டிங்க் = நன்று


 ரேட்டிங் =   3  /  5 


diSki அதிதி - சினிமா விமர்சனம்  -http://www.adrasaka.com/2014/06/blog-post_616.html




a












Embedded image permalink

  கரூர் எல்லோரா

1 comments:

ஆர்வா said...

எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்துச்சி செந்தில் ஜி.. உங்க விமர்சனமும் டாப்..