Saturday, May 24, 2014

x men days of future past -சினிமா விமர்சனம்

உலகப்புகழ் பெற்ற  கிறிஸ்டோபர் நோலன் -ன் ஸ்டைலில் இந்தப்படத்துக்கு  திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் எல்லாருக்கும்  புரியற மாதிரி படத்தோட  கதையை சொல்ல  முயற்சி பண்றேன்

பல வருடங்களுக்கு  முன் ராஜீவ் காந்தியின்  கொலை நடந்தது எல்லாருக்கும் நினைவு இருக்கும் . அந்த ஒரே ஒரு கொலையால எத்தனை பாதிப்புகள் , எத்தனை மனித  உயிர்கள் அழிவு , ஒரு இனமே தத்தளிக்க பெரிய போரே நடந்தது . உலக அளவில் அது  பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு.

டைம்  மிஷின் ல பின்னால போய் அந்த கொலையே நடக்காம தடுத்துட்டா எப்படி  இருக்கும் ? ஈழத்தமிழர்கள் உயிர் இழக்க மாட்டார்கள்   . அதை
  வெச்சு  இங்கே  இருக்கும் திராவிடக்கட்சிகள் அரசியல் பண்ண முடியாது . அதே போல் தான் இந்தப்படத்திலும் நடக்குது . 

1973 க்கு  (அந்த கால கட்டத்துக்குப்போய்) அங்கே நடக்க இருக்கும் ( ஆல்ரெடி நடந்த) ஒரு  கொலையை தடுக்கப்போறார்  ஹீரோ. அதுல அவர் ஜெயிச்சாரா? இல்லையா? என்பது தான் கதை 




வித்தியாசமான சக்திகள் கொண்டவர்கள் தான் ம்யூட்டன்ஸ்.அவங்களை அழிக்க மனிதர்கள்  ரோபோட்களை(  ஹை  டெக் வெப்பன்கள் ) உருவாக்கறாங்க. ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தா அது கூடாரத்தையே ஆக்ரமிப்பது  போல்  அந்த  ஹை டெக் வெப்பன்கள்  ம்யூட்டன்ஸ் , மனிதர்கள் இரு தரப்பையும் அழிக்குது. இந்த ஹை டெக் வெப்பன்சை கண்டு பிடிச்ச , அல்லது  உருவாக்குன விஞ்ஞானியை கொண்ட்டுட்டா பிராப்ளம் சால்வ் ஆகிடும்னு  ஒரு லேடி கொலை செஞ்சுடுது. 

அதனால எதிர் காலத்தில் நடக்கும் கலவரங்களை  தடுக்க  அந்த கொலையே நடக்காம தடுக்கனும்னு பிளான்


வால்வரீன் புகழ்  ஹக் ஹாக் மன் கைல மாடர்ன் லேடீஸ் போல நீளமான நகமும் , திருப்பதி நாவிதரிடன்ம் அரை குறையா ஷேவிங்க் பண்ணின மாதிரி ஒரு தாடி ஸ்டைலிலும் , அந்தக்கால ஹேர் ஸ்டைலிலும் வர்றார் .


அவருக்கும் கை தட்டல் அள்ளுது . 

யாரோட  உருவமாவும் மாறும் தன்மையுடய கலர் ஃபுல் கலக்கலாக  ஜெனிஃபர் லாரன்ஸ் நீல வண்ண தேவதையா வர்றார். உடலை ஒட்டிய ஓவியமா>? அல்லது மேக வண்ண ஆடை அணிந்த  காவியமா? எனும் சந்தேகத்தைக்கிளப்பும்  ஒப்பனையில் பின்னுகிறார் 

ஹீரோ பேசும் அசால்ட்டான வசனங்கள்  தியேட்டரில் கை தட்ட்லை அள்ளுது .கிராஃபிக்ஸ் காட்சிகள் கலக்குது


 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  லிஃப்ட்டில்   வரும்  ஹீரோ அங்கே  இருக்கும் ஆளை கம் டேப் போட்டு சுவரோடு ஒட்டி  தப்பிக்கும் காட்சியில் கிராஃபிக்ஸ் சீன் 


2 விஸ்வரூபம் படத்தில்  வரும்   யார் என்று தெரிகிறதா ? பாடலில் ஸ்லோமோஷனில் காட்டும்  ஃபைட்  போல 5 மடங்கு தரத்தில் அமைக்கப்பட்ட அந்த ஸ்லோமோஷன் காமெடி ஃபைட் காட்சி அந்தப்பைய காட்டும் சாக்சம் . மின்னல் வேகத்தில் அவன் செய்யும் அதிரடிகள் 


3   கண்ணாடிகள்  நொறுங்கி சின்னச்சின்ன துகள்களாக  3 டி எஃபக்டில் நம் மீது வந்து  விழுவது 


4  ரயில்  தண்டவாளத்தைத்தாண்டும்போது அந்த தண்டவாளத்தை அப்படியே  பெயர்த்து  எடுப்பது  , அதை ரயிலுக்கு    முன்பே அனுப்புவது


5   க்ளைமாக்சில்   கொலை யை தடுக்க    ஒரு பில்டிங்கையே பெயர்த்து எடுத்து அரணாக  அமைப்பது கலக்கல்  கிராஃபிக்ஸ்  ஒர்க்


 




மனம் கவர்ந்த வசனங்கள்


1. யுத்தத்தில் இழப்பு என்பது எப்போதும்  இரு தரப்புக்கும் தான்


2 கண்ணா! நீ என்ன பண்றேன்னா இறந்த காலத்துல போய் என்னை சந்திக்கறே, என் கிட்டே பொறுமையா நடந்துக்கறே!

ஹீரோ - கிழிஞ்சுது கிருஷ்ணகிரி


3 இறந்த காலத்துல மூளையின் நினைவலைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான் அனுப்ப முடியும் . 10 நாள் அதிக பட்சம் 30 நாள் . நீங்க சொல்ற மாதிரி 50 வருசம் எல்லாம் அனுப்ப முடியாது , மீறி அப்படி அனுப்பினா மூளை வெடிச்சிடும்

 என் மூளை வெடிச்சாலும் தானா வந்து ஒட்டிக்கும், சோ ஐ ஆம் ஃபிட் ஃபார் திஸ் ஜாப்


4 கடந்த காலத்தில் நிகழ்ந்த சரித்திரத்தவறுகளை நாம போய் சரி  செஞ்சுட்டா அது வலராற்றில் இடம் பிடிக்கும் சாதனை ஆகிடும் #


5 பாஸோட பொண்ணுக்கு பாதுகாப்பு குடுன்னு உன்னை அனுப்ச்சா அவ கூட பெட் ரூம் ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கியா ராஸ்கல் #



6 இந்த மேட்டரை நான் யார் கிட்டேயும் சொல்லையே, உனக்கெப்டி தெரிஞ்சுது?

இனிமே சொல்வே.நான் எதிர் காலத்தில் இருந்து வரேன் 

7   பொழுது போக்குக்காக  திருடும்  நீ பெண்ட்டகன் போய்ட்டு வர்றதே லாபம் தானே ? 


8  உன்  முகத்தை விட உன் வித்தை கேவலமா  இருக்கு 


9  உங்களுக்கு கராத்தே  தெரியுமா?

 நோ, ஆனா  ஒரு  கிறுக்கனைத்தெரியும், அதான்  நீ 


10  நான்  நிம்மதியாத்தூங்கனும்ங்கறதுக்காக என் சக்தியை தியாகம் செய்யறேன்

11 ஏம்மா  மின்னல்! அழகான பொண்ணுக்கு அரசியல்  எதுக்கு ?

உருவத்தைப்பார்த்து எதையும் எடை போடாதே !


12 நம்ம கை மேலோங்கி இருக்கும்போதே தாக்குனாத்தான்  நமக்கு வெற்றி நம் வசம் ஆகும்


13 மியூட்டன்சை மனிதர்களோட  விடிவு காலமாப்பார்க்கறேன்


14  நமக்குக்கிடைச்ச சக்தி  ஒரு வரம், அதுதான் நம்ம நம்பிக்கை 


15  குவாண்ட்டம்  பிசிக்ஸ் ல ஒரு விதி  இருக்கு -எதையும் மாத்த  முடியாது . ஆத்துல  ஓடும் தண்ணில  கூழாங்கல்லைப்போட்டாலும் அது தண்ணியை  கொஞ்சம் சிதற அடிக்குமே தவிர ஆற்றின் திசையை (போக்கை)மாற்றி விடாது 


16  நாளை நமதே என்று உறுதி எடுப்போம், அதை இன்னைல இருந்தே தொடங்குவோம்


17  வித்தியாசமான எதைப்பார்த்தாலும்  மனிதன் அதைப்பார்த்து  பயந்து தான் இருக்கான்


18  நாம் எடுக்கும்  ஒரு சின்ன  முடிவு தான் நம்ம எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும்















சி பி கமெண்ட் -X MAN 6 = நோலன் ன் திரைக்கதை உத்தி ,பேக் டூ த பியூச்சர் கதை சாயல் ,கலக்கலான சிஜி ஒர்க் - ரேட்டிங் = 3 / 5 .ஒர்த் டூ வாட்ச் இன் 3டி








குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =
3 / 5


0 comments: