Tuesday, May 13, 2014

அமிழ்து…. அமிழ்து…-க.சீ.சிவகுமார் - நகைச்சுவை சிறுகதை

தேனி தேனரசன். தேனரசன் தான் தேனியில் தான் பிக்க வேண்டுமென முன்பிவியில் முடிவு ஏதும் எடுத்திருக்கவில்லை. தமிழ்ப் பற்றாளரும் ஒரு கிராமப் பஞ்சாயத்து அலுவலக கிளார்க்கான அவரது தந்தை துரைசாமியும் தன் மகன் பின்னாளில் தேனி தேனரசன் எனப் பெரும் புகழ் அடைவான் என எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் என்னவோ, “தேனரசன்’ என் பெயர்தான் வைத்தார்.
தேனரசன் நான்காம் வகுப்பு படிக்கையில் து.தேனரசன் என்று வரலாறு நோட்டில் பெயர் எழுதிக் கொண்டு வரவும் துரைசாமி தமிழ்வழியான எல்லா ஏடுகளிலும் து.தேனரசன் என்று எழுத வேண்டுமெனவும் ஆங்கில நோட் மற்றும் புக்கில் டி.தேனரசன் என ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்றும் கட்டளையிட்டார்.
து.தேனரசனுக்கு பதினொன்றாம் வகுப்புவரை வாழ்வில் வருத்தங்கள் ஏதும் வந்து சூழவில்லை, பதினொன்றில் எஸ்.தேனசரன் வந்து சேர்ந்தான். இந்த இரு தேனரசன்களையும் இனம் பிரிக்க வகுப்பு மாணவர்கள் எஸ். தேனரசா! என அவனையும் “தூத் தேனரசா! ‘ என இவனையும் விளிக்கத் துவங்கினார்கள்.
தூத் தேனரசானாம்…. த்தூ….
சில மாலை நேரங்கள் சோர்வில் ஆழ்ந்து, “தேன்’ கடைசியில் ஒரு நாள் தன் தந்தையிடம் இந்த தலையெழுத்துப் பிரச்சினைத் தெரிவித்தான். மகனுக்காக துரைசாமி இரவு முழுவதும் தூக்கம் கெட்டார். காலைக்குள் அவரது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு முகம் அன்லர்ந்த செந்தாமரை போலத் துலங்கியது. அவருக்கே கொஞ்சம் வெட்கம் தான். கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தது போலவும் கனியிருக்கக் காய் கவர்ந்தது போலவும் துரை. தேனரசன் இருக்க து.தேனரசன் எதற்கு? துரை. தேனரசன் +2 முடித்ததும் துரைசாமியின் கட்டாயத்தின் பேரில் தமிழில் முதுகலையும் முதிர்நிலையும் அடைந்தார். பெற் வித்தையைக் கற்றுத் தரவும் விற்பன்னச் சான்றிதழ் ஒன்று பெற் பின்சற்று காலங்கழித்து ஆசிரியரும் ஆகிவிட்டார்.
நாகலாபுரம் மேல்நிலைப் பள்ளியில் அவர் தமிழாசானாய்ச் சேர்ந்த முதலாம் வருடம் தந்தை துரைசாமி தமிழ்க்கடவுள் கந்தன் திருவடி நிழலடைந்தார். அப்பாவுக்கு எழுதிய அஞ்சலி நோட்டீஸில் தான் உலகம் அறியும் வண்ணம் தேனரசனின் புலமை வெளிப்பட்டது.
நாகலாபுரம் மேல்நிலைப் பள்ளியில் “இலக்கிய மன்த் துவக்க விழாவுக்கு மதுரையிலிருந்து இராம. அய்யனார் பேச வந்தார். பள்ளிசார் கல்லூரிசார் விழாக்களில் அய்யனார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சொல்லேர் ஓட்டி வந்தார். கூட்டம் முடிந்த பிந்தைய உரையாடல் நேரத்தில் தேனரசனை இனங்கண்ட அய்யனாரே வியந்து மெச்சிவிட்டார்.
“”உங்களுக்கு உள்ள அறிவுக்கு நீங்க கூட்டம் பேசலாமே சார்!”
“”அதெல்லாம் வேணாங்க”
“”அது எப்படி. எங்க ஸ்கூல்ல இலக்கிய மன் விழாவுக்கும் கூப்பிடúன், வந்து பேசுங்க. நான் உங்க ஸ்கூல்ல பேசினேன். பதிலுக்கு நீங்க நம்ம ஸ்கூல்ல பேசுங்க. அதுதான் பண்பாடு. கைம்மாறு”
அய்யனார் அன்று லேசாய் விட்ட நீர் மெல்ல வேரோடிக் கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. தேனரசன் ஏதோ ஒரு கோயில் விழாவில், “குகனோடு ஐவரனோம்’ என் தலைப்பில் பேச, வதிலை. மதிமானார் வந்திருந்தார். தனது மூன்று மணிநேர உரையில் மக்கள் யாவரையும் சகோதரக் கடலில் சங்கமிக்க வைக்க அவர் ஆவல் கொண்டிருந்தார். அந்த க் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் மேடையேறி “”…..அவர்களே….. அவர்களே…” என வரவேற்றுத் தள்ளியதில் மதிமானின் மூன்று மணி நேரம் முக்கால் மணிநேரமாகக் குறைந்துவிட்டது. அந்த இரண்டே கால் மணிநேரம் குறைந்து போனதில் தேனி சகோதர நேயத்தை கணிசமாக இழந்து விட்டது.
வதிலை. மதிமான் பேச்சுக்கு இடையே சோடா எடுத்துக் கொண்டால் நான்கு மணி நேரமும் சோடா இல்லாவிட்டாலும் இரண்டு மணிநேரமும் பேச வல்லவர். முக்கால் மணிநேரம் பேசி முடித்தும் “அறிவின் புனித ஊற்று’ தொடர்ந்து பீறிட்டுக் கொண்டே இருந்ததால் அவருக்கு யாரிடமாவது பேசியெ தீர வேண்டும் போல உந்துதல் ஏற்பட்டது.
தனது வலிய கருத்துக்களைத் தாங்கிச் சீரணிக்க ஏதாவது முகம் தென்படுமா எனத் தேடி அலைந்ததில் தேனரசன் விவாதிக்க வாய் திறந்தார். சொக்கி விக்கிப் போனார் மதிமான். தேனரசனின் திரவியங்களுக்கு முன் தன்னை ஒரு வறியவனாக உணர்ந்தவர், “”இந்த அறிவை வைத்துக்கொண்டு நீங்கள் மேடையில் பேசாமலிருப்பது தமிழ்ச்சாதிக்கு இழைக்கி அநீதி” என்றார் கடுமையாக.
தேனரசன் இனிமேல் பேசுவதாக ஓப்புக்கொண்டபின், புநானூற்றுப் பூக்களை பாரத ராணுவத் தொப்பிகளில் சூடுவது எப்படி கற்க கசட குளை எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸøடன் இணைப்பது எப்படி என பல்வேறு டிப்ஸுகளை வழங்கினார். மதிமான் தந்த உற்சாகத்தின் படியும் ஏற்பாட்டின் படியும் வேதநாதப்பட்டியில் முதல் கூட்டம் பேச ஏற்பாடானது. தேனரசனின் பெயரை “திருக்குள் தேனரசன்’ எனப் போட்டுக் கொள்ளும்படி மதிமான் வலியுறுத்தியும் மறுத்துவிட்டார் தேனரசன்.
“”அப்படிப் பட்டம் எல்லாம் நாமாகப் போடக்கூடாது. யாராவது வழங்கினால் பேருக்கு முன்னால சேத்துக்கலாம். ஆனா தேனி. தேனரசன்னு போட்டா யாரும் எதுவும் கேட்க முடியாது” என்றார் தேனிக்கே உரிய கம்பீரத்தை விட்டுக் கொடுக்காமல். தேனி தேனரசன் முதன் முதலாய் வேதநாதப்பட்டியில் முழங்கியது பொதிகை மலைவரை எதிரொலித்தது.
திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல் வரை அவரது பதாகை பந்தது. கூட்டங்களுக்குத் தக்கபடி அவரை தேனரசன் என்றும் தேவாரம். தேனரசன் என்றும் விதவிதப் பெயர்களில் அழைத்தார்கள். தேவாரத் தேனரசன் என்பது தேனரசனுக்கே பிடித்துப் போய்விட்டது என்றாலும் முதன்முதலாய்த் தன்னைத் தேடி வருகிறவர்கள் தேனியில் பஸ் இங்காமல் இன்னும் பத்துரூபாய் செலவு செய்து தேவாரம் போய்விட்டால் அது இரு தரப்புக்கும் இழப்பில் முடியுமே என்று தேனி. தேனரசன் என்பதை தான் அனுமதித்தும் ஆமோதித்தும் போஸ்டர்கள் மூலம் வழங்கி வந்தார்.
படியத் தலைவாரிய பள்ளிக் குழந்தைகள் சினிமா தியேட்டர் போல அல்லாமல் ஆரவாரமின்றி வரிசை பாலித்து ஆட்டோ கிராஃப் வாங்கினார்கள்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்….ஏறுபோல் நட…’ என ஏராளமான வாசகங்களை மந்திரம்போல நல்கி குழந்தைகளை வாழ்த்தி வந்தார்.
திண்டுக்கல்லில் ஒரு இரவுக் கூட்டம் முடிந்து இங்குகையில் கும்பிட்டுக் கொண்டே எதிரில் வந்தான் ஒருவன். தொழுத கைக்குள்ளும் படை ஒடுங்கும் என்கி குளை அப்போது மந்து விட்டிருந்தார் தேனரசன்.
“”உங்க பேச்சை மட்டும் இப்போ கேட்கலைன்னா தற்கொலை செய்து கொண்டிருப்போன் சார்” என்றான் கண்களில் நீர் மல்க.
அவனைக் காப்பாற்றிய தற்செயல் பற்றி மிகவும் மகிழ்ந்தார் அவர். பின்பு அவரது பல கூட்டங்களில் அவன் தட்டுப்பட்டு வந்தான்.
“”உங்க பேர் என்ன தம்பி?”
“”ராஜ்குமாருங்க சார். ஆனா தேனரசதாசன்னு மாத்திக்கலாம்னு யோசிக்கிúன்”
“”சேச்சே.. என் பொருட்டு நீங்கள் தாசனாக வேண்டாம்”
“”இந்தப் பெருந்தன்மை தான் சார் உங்ககிட்ட எனக்குப் பிடிச்சது. இதைத் தானேங்க ஒரு நாள் பழகிணும் பெரியோர் கேண்மைங்காங்க”
இப்போது ராஜகுமாருக்கு தமிழிலும் தேனரசன் வீட்டு விருந்துகளிலும் பரிச்சயம் கூடியிருந்தது. தேனரசனுக்கோ அவன் ராஜ்குமார், திண்டுக்கல் காரன், தன் ரசிகன் என்பதைத் தவிர வேறெந்த சுக்கும் தெரிந்திருக்கவில்லை. தற்செயல்கள் பலவிதம்.
ஒருநாள் தேனரசனைத் தேடி அவரது முன்னாள் மாணவன் ராமகிருஷ்ணன் வந்தான். “”சார்! விஷ்ணு வீடியோ மிக்ஸிங்னு ஒரு கடை ஆரம்பிக்கப் போகிறேன். நீங்கதான் கடையைத் திறந்து வைக்கணும்” என்றான். ஐவுளி, மளிகை, பெட்டி, டீ எனப் பல கடைகளை வர்ண ரிப்பன்கள் கத்தரித்து அவரது வலதுகை பெரு, ஆட்காட்டி, பாம்பு விரல்கள் தையல்காரன் துருதுருப்புடன் இயங்கி வந்ததால் உடமையாய் ஒப்புக் கொண்டவர், விஷ்ணு வீடியோவைத் திந்து வைத்து வாழ்த்துரைத்து ரூபாய் நூறு அன்பளிப்பு கொடுத்துவிட்டு வந்தார். தேனரசனுக்கு நல்ல மனசு.
ஒரு சனிக்கிழமை மத்தியானம் தேனரசனைத் தேடி ராஜ்குமார் வந்தான் ரசிகன். பள்ளி விடுமுறையானதால் வீட்டிலிருந்தார். வரவேற்கப்பட்ட ராஜ்குமார்,
“”சார்! ஒரு உதவி” என்றான்.
“”சொல்லுங்க தம்பி”
“”என் ஃபிரெண்டு ஒருத்தனுக்கு பெரியகுளத்துல கல்யாணம். காலைல முகூர்த்தம் இன்னி ராத்திரல இருந்து வீடியோ எடுக்க ஆள் கூட்டிவாரதா ஒப்புக்கிட்டேன். உங்களுக்குத் தெரிஞ்ச யாரையாவது ஏற்பாடு பண்ணுங்க சார்”
அவ்வளவு தானா? என் தேனரசன் விஷ்ணு வீடியோ ராமகிருஷ்ணனுக்கு தொலைபேச சற்று நேரத்தில் சாதனங்களுடன் வந்து சேர்ந்தான் ராமகிருஷ்ணன். தேனரசன் வீட்டிலிருந்து ராமகிருஷ்ணனும் ராஜ்குமாரும் படியிங்கினார்கள். ராஜ்குமார் “”ஆட்டோ! கூப்பிட்டான்.
“”பஸ்டாண்டுக்கா?” என ராமகிருஷ்ணன் வினவவும், “”இல்ல. பெரிய குளத்துக்கே ஆட்டோவுல போலாம். நீங்க வேற விலை உயர்ந்த சாமானக் கைல வச்சிருக்கீங்களே”. இதைக் கேட்டதும் ராமகிருஷ்ணனுக்கு மெய்சிலர்ப்பு ஏற்பட்டது. அன்று அவன் தொடர்ந்து பல மெய்சிலர்ப்புகளை அனுபவித்தான்.
தேனியிலிருந்து பெரிய குளம் போகி வழியில் ராஜ்குமார் காட்டிய பேச்சு வடிவத்திலும் தோரணையிலும் அவன் பஸ் உயரம் வளர்ந்தவன் போலத் தோன்றினான். ஊருக்குள் நுழைந்ததும் முதலாவது பெரிய வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்துச் சொல்லி “”வாங்க சாப்பிடுவோம்” என ராமகிருஷ்ணனை அழைத்தான். காமிராவோடு அவன் இங்க ஆட்டோவுலயே வச்சிட்டு வாங்க, டிரைவர் பாத்துக்குவார் என்றான். வெறுங்கையர்களாக இருவரும் உள்நுழைந்து எதிரெதில் நாற்காலிகளில் ஒரே மேஜையில் அமர்ந்தனர். ராஜ்குமார், “”ஒரு சாப்பாடு, ஒரு காப்பி” என்றான்.
ஏறிட்டு நோக்கினான் ராமகிருஷ்ணன்.
“”நான் மதியம் சாப்பிடதே இல்லை. உங்களுக்காகத்தான்”
ராமகிருஷ்ணன் மீண்டும் சிரித்தான். அவன் உணவருந்திக் கொண்டு இருக்கும்போது காப்பியைக் குடித்து முடித்தவனாக “”டிரைவரைச் சாப்பிட வரச் சொல்றேன்” என்று வெளிவந்தான். ஆட்டோ டிரைவரிடம் நூறுரூபாயை எடுத்து நீட்டி “”சீக்கிரமா சாப்பிட்டுட்டு வாங்க ப்ஸீஸ்” ரூபாயை வாங்கிக் கொண்டு டிரைவர் உணவகத்துள் சென்றார்.
கொஞ்சங்கழித்து டிரைவரும் ராமகிருஷ்ணனும் வெளிவந்தார்கள். ராஜ்குமார்….. இல்லை, வீடியோ கேமிரா இல்லை. ஆட்டோ இருந்தது நல்லவேளை.
தமிழின் தளத்தில் நிகழ்ந்த இந்தத் துரோகம் தேனரசனை மிகவும் பாதித்துவிட்டது. தமிழுமாச்சு… பேச்சுமாச்சு என நினைத்தார். சூரியன் காய்கி சுடுபாயில் கையில்லாத ஊமையன் கண்ணால் பார்க்க உருகி வழியுமே வெண்ணெய். அது போலத் துயிரில் உருகி வழிந்தது அவர் நெஞ்சு. பேசுவதை நிறுத்திவிடலாம் என்று நினைத்தார். ஆனால் அது முடியாது. குறைந்தபட்சம் விஷ்ணுவீடியோ ராமகிருஷ்ணனின் கடன் அடைகி வரையிலாவது.
- ஜூன் 2000

நன்றி - சிறுகதைகள் .காம்

0 comments: