Wednesday, May 07, 2014

காமரசவல்லி

டைட்டிலைப்பார்த்ததும் இது  ஏதோ கில்மாப்பட விமர்சனம் போல என எண்ணி இருந்தால் சாரி.இது ஒரு பயணக்கட்டுரை.ஆஃபீஸ் வேலையாக  தமிழகம் முழுக்க சுற்றும் வாய்ப்புக்கிடைத்ததும் அந்தந்த  ஊரில்  தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கட்டிடங்கள் , கோயில்கள் பற்றி விபரங்கள் சேகரிக்கத் துவங்கினேன்.மங்களகரமாக இந்த  ஊர் புராணத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.இது   என்  முதல் பயணக்கட்டுரை.


இது ஒரு ஊர்ப்பெயர்.அரியலூர் மாவட்டத்தில்  இருக்கு.ரூட் மேப் .அரியலூரில் இருந்து  திருமானூர் 22 கிமீ போனா அங்கே இருந்து  20  கிமீ ,டவுன் பஸ் நெம்பர் 80.ஏலாக்குறிச்சி எனும் கிராமத்தில் இருந்து 6 கிமீ  தொலைவில் இருக்கு


1152   ஆண்டுகளுக்கு முன்பு  சோழர் காலத்தில்   உருவாக்கப்பட்ட 4 வேதங்களை கற்ற  பிராமணர்கள் வாழ்ந்த ஊர் இது.சதுர்வேதி மங்கலம் ,திருநல்லூர்  என்ப்துதான் இந்த  ஊரின் உண்மையான பெயர்.பராந்தகச்சோழன் காலத்தில்   கட்டப்பட்ட பாலாம்பிகா சமேத சவுந்தரேஸ்வரர்  கோயில்  எனும் சிவன்  கோயில்  இங்கே இருக்கு .


பாண்டவ வம்சத்தில்  வந்த  பரிசத்து மகாராஜா  சாபத்தினால் பாம்பு கடித்து   இறக்க அவர் மகன்  ஜனமேஜயன்   கால சர்ப்ப யாகம் செஞ்சு   பூலோகத்தில்  உள்ள  பாம்புகள் அனைத்தையும் அங்கே  பொசுங்குமாறு செய்தார்.அப்போது நாகங்களூக்கு  எல்லாம் அரசனாகிய கார்கோடன்  மஹா விஷ்ணுவிடம்  முறையிட  இத்தலத்தில் உள்ள  சிவனை வணங்கப்பணித்தார்.சிவன் இந்த ஊரில் உள்ளவர்களையோ, இந்த  ஊருக்கு வந்து சென்றவர்களையோ , கோயிலில் சாமி கும்பிட்டுச்செல்பவர்களையோ தீண்டக்கூடாது என உறுதிமொழி வாங்கிக்கொண்டாராம்.அன்று முதல் கார்கோடேஸ்வரர் என அந்த சிவன் அழைக்கப்ட்டார்.


 இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியலை.ஆனா இந்த ஊரில் பாம்பு கடித்து இறந்தவர்கள்  1000 ஆண்டுகளாக இல்லையாம் . ஊர்ப்பெருசுகள் அதை உறுதிப்படுத்தினார்கள் . நாக தோஷம் உள்ளவர்கள்  இங்கே வந்து வழிபட்டுச்செல்கிறார்கள் 


கார்கோடன்  சிவனை வணங்குவது போலவும் , சிவன் அவனுக்கு அருளுவது  போலவும்  சிற்பங்கள்  இருக்கு . 


 அடுத்து மெயின் மேட்டருக்கு வருவோம் . காமரசவல்லி .இந்த  கிளுகிளுப்பான  பேரு எப்படி  இந்த  ஊருக்கு வந்துச்சு? 


சிவபெருமான் தியானத்தில்  இருந்த போது மக்கள் இனப்பெருக்கம் தடைப்பட்டது .இதனால் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மதன் சிவனின் தியானத்தை தடுக்க முயற்சி செய்தார்.  இதனால் செம கடுப்பான ஈசன் மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தார். 


உடனே மன்மதன் சம்சாரம் ரதி  மகாவிஷ்ணுவிடம் முறையிட இந்த  ஊர்   கங்கையில்  நீராடி பி சிவனை வழிபடு என்றாராம்.அதே போல் ரதி செய்தபின்  மன்மதன்  உயிர்ப்பிக்கப்பட்டு  இனி உன் கண்ணுக்கு மட்டும் மன்ம்தன் தெரிவார் என அருளீனார்.


காமன் , ரதி  இருவரையும்   ஒன்று சேர்த்த தால் இத்தலம்  காமரதிவல்லி , காமரவல்லி என அழைக்கப்பட்டு பின் காலப்போக்கில் காமரசவல்லி ஆனது 

ரதியின் கண்ணுக்கு மட்டும் காட்சி அளித்த மன்மதன் அழகிய மணவாளன் ஆனார் .அந்த இடம் அழகிய மணவாளம் எனும் ஊர் ஆனது . இது 4 கிமீ  தள்ளி  இருக்கு 

உலகிலேயே  ரதிக்கு ஐம்பொன் சிலை இந்த  ஊரில் தான்  இருக்கு .


இந்தக்கோயிலில்  சுந்தரச்சோழன், உத்தமசோழன், முதலாம்  ராஜராஜன் ,முதலாம் ராஜேந்திரன் ,முதலாம்  குலோத்துங்கன் ,மூன்றாம் குலோத்துங்கன் ,மூன்றாம் ராஜேந்திரன் , ஆகியோரின் கல்வெட்டுக்கள்  உள்ளன்


இங்கே  சுக்கிரன் ஏரி இருக்கு. சிவனின் தலையில்  உள்ள பிறையை இது குறிக்குதாம் 


இக்கோயிலை வழி படுவதால்   திருமணத்தடை , குழந்தைப்பேறு இன்மை , குடும்பத்தில்  அகால மரணம் , உத்தியோகத்தடை ஆகியவை விலகும் என ஐதீகம்


ஒவ்வொரு ஆண்டும்  மாசி மாதம்  பவுர்ணமி தினத்தில்  காமன் பண்டிகை நடத்தப்படும் அதில்  இரண்டாக வெட்டிய ஆமணக்கு  செடியை  நட்டு வைப்பார்கள்  அது எட்டு நாளுக்குள் உயிர்ப்பித்து   மீண்டும்  தழைத்து வருவது இன்றளவும் நடைபெற்று வருது. மன்மதன்  உயிர்ப்பித்து வந்ததை மெய்ப்பிக்கும்  குறியீடு இது 


வரகு அரிசி  வேவதற்குள்  வள்ளலார் கோவில் கட்டியது , சொத்தைக்கத்திரிக்காய் வேவதற்குள் சுக்கிரன் ஏரி  வெட்டப்பட்டது  என  கிராமமக்களால் பேசப்படுகிறது

 பாரி வள்ளலின் வழித்தோன்றல்கள் இந்த  ஊர் மக்கள் எனச்சொல்லப்படுது


சரி , ஸ்தல புராணம்  முடிஞ்சுது. இந்த  ஊர் இப்போ எப்படி இருக்கு?

 கோயில் பராமரிப்பில்லை . ரொம்ப  ட்ரை ஆன ஊர் . இங்கே ஒரே ஒரு ஹோட்டல்  தான்  இருக்கு . ரொம்ப எளிமையான  ஹோட்டல் .  இட்லி  2 ரூபா , ரோஸ்ட் 15 ரூபா 


 ஐம்பொன் சிலையை  ஃபோட்டோ எடுக்க அனுமதி  இல்லை




ஸ்தல புராணம் சொன்ன மளிகைக்கடைக்காரர் பன்னீர் ,கோயில் பூசாரிமுருகேசன்
Embedded image permalink
 ஸ்தல புராணம் சொன்ன மளிகைக்கடைக்காரர் பன்னீர் ,கோயில் பூசாரிமுருகேசன் அ






க்ளிக் @ கீழக்கொளத்தூர்




க்ளிக் @ கீழக்கொளத்தூர்

க்ளிக் @ கீழக்கொளத்தூர்
Embedded image permalink

 க்ளிக் @ கீழக்கொளத்தூர்









Embedded image permalink

ரதி மன்மதன் க்கு ஐம்பொன் சிலை இருக்கும் ஒரே ஊர் காமரசவல்லி ,அரியலூர் மாவட்டம் .கார்கோடேஸ்வரர் கோயில்





 



லிங்கா



  அ




Embedded image permalink


லிங்கம்



மன்மதன் -ரதி க்கு தமிழ் நாட்டிலேயே ஒரே இடத்தில் தான் தனிக்கோயில் இருக்கு .ஊர் பேரு காமரசவல்லி

 
Embedded image permalink

அரியலூர் ல இருந்து 11 ரூபா டிக்கெட் எடுத்து திருமானூர் போனா அங்கே இருந்து 86 ம் எண் பஸ்சில் 10 ரூபா டிக்கெட் .காமரசவல்லி ஊர் ரூட்



 
Embedded image permalink
மன்மதனை சிவன் எரித்த இடம்  





Embedded image permalink
சரஸ்வதி  





Embedded image permalink
 கடந்த 1000 ஆண்டுகளில் பாம்பு கடித்து யாரும் இறக்காத ஊர் காமரசவல்லி ,அரியலூர்.நாக தோஷம் உள்ளவர்கள் வழிபட்டுச்செல்லும் திருத்தலம்



பூசாரி = ஐம்பொன் சிலையை பாருங்க.ஆனா போட்டோ எடுக்கக்கூடாது



.மீ = போட்டோ எடுக்கறேன்.நீங்க அதைப்பார்க்கக்கூடாது
காமரசவல்லி ஊரில் மன்மதனை சிவன் எரித்த போது சூப்பர்வைசரா இருந்த காளி அம்மன்  



2 comments:

விஸ்வநாத் said...

அருமை. தொடரவும்;

Unknown said...

நான் உங்களை தொடர்பு கொண்டு பேச விரும்புகிறேன். எனது பெயர் ரிஷிதரன் எனது தொலைபேசி எண்7373440655