Monday, May 19, 2014

மோடியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் இருந்த டாப் 10 நபர்கள்

காங்கிரசை வீழ்த்தி, தனிப்பெரும்பான்மையோடு மாபெரும் வெற்றியை வசமாக்கியிருக்கிறார் மோடி.தேசத்தின் எதிர்காலத்தை நரேந்திர மோடியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் மக்கள். மோடியின் மாபெரும் வெற்றிக்கு பின், பக்கபலமாக, நம்பிக்கைக்கு உரியவர்கள், நலன்விரும்பிகள் பலர் உள்ளனர். அவர்களில் முதல் பத்து நபர்கள் பற்றிய சிறுகுறிப்பு...

'மாயாஜால' வித்தகர்கள் கிரண்ஜோஷி

மோடியின் 'ஹ டெக்' பிரசாரத்தின் 'ஹைலைட்' டான, 3டி பிரசாரத்தின் பின்புலத்தில், தேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இயங்கியது. கிரண்ஜோஷி தலைமையில் ராஜேஸ்ஜெயின், மகேஷ் ஆகியோரின் கைங்கரியம் இருந்தது. ஜோஷி குழுவினர், டில்லியில் தங்கியிருந்து, மோடியின் புதிய திட்டங்களுக்கு உதவுவார்கள் என்று தெரிகிறது.

உற்ற ஆலோசகர் சதாய்வாலே
குஜராத் நிறுவனம் ஒன்றில் துணைத்தலைவராக பணியாற்றும் சதாய்வாலே, ஆர்.எஸ்.எஸ்., குடும்பத்திலிருந்து வந்தவர். பல்வேறு பிரச்னைகளில் மோடிக்கு தக்க ஆலோசனை சொல்லும் உற்ற நண்பர். டில்லியிலில் தங்கியிருந்து, உற்ற ஆலோசகராக தொடர வேண்டும் என்பது மோடியின் விருப்பமாம்.

மோடியின் கண்கள் பரத்லால்
மோடியின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுபவர் என அறியப்படும் பரத்லால், நான்கு ஆண்டுகளாக டில்லியில் தங்கியிருந்து மோடிக்கு டில்லி அரசியல் தொடர்புகளை பலப்படுத்தியவர். பிரதமர் அலுவலக செயல்பாடுகளில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.

கைலாசநாதன் தெற்கில் உறுதுணை
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கைலாசநாதன், குஜராத் அரசின் முதன்மை செயலாளர். மோடியின் பிரசார திட்டங்களை வகுப்பதிலும், பா.ஜ., கூட்டணி அமைய தென்மாநிலங்களில் பல்வேறு கட்சிகளின் இணைப்பு பாலமாக இருந்தவர். தொடர்ந்து, குஜராத்திலேயே தங்கியிருந்து புதிய அரசுக்கு வழிகாட்டுவார் என தெரிகிறது.

வலதுகரம் அமித் ஷா
மோடியின் வலதுகரமாக வர்ணிக்கப்படும் இவர், பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியிலும் பக்கபலமாக இருந்துள்ளார். உ.பி., மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அமித் ஷா. கிராமம் கிராமமாக சுற்றிச்சுழன்ற அவர், பா.ஜ., அலை அங்கு உருவாக காரணமாக இருந்தார். மோடியை வாரணாசி தொகுதியில் நிற்க வைத்து, அபார வெற்றிக்கும் உறுணையாக இருந்துள்ளார். அமித்ஷா வின் உழைப்பால், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி உ.பி., யில் அமோக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ., மோடி அரசில் நேரடியாக களம் இறங்காமல், வழக்கம்போல, பின்புலமாக இருந்து செயலாற்றவே அமித் ஷா விரும்புவதாக தெரிகிறது. கங்கை நதி தூய்மை படுத்தும் திட்டம், உள்ளிட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றி, மோடியின் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார் என்றே கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

சட்ட ஆலோசகர் கிரிஸ் முர்மு
குஜராத் அரசின் முதன்மை செயலாளர் கிரிஸ் முர்மு; 1985 ல் ஐ.ஏ.எஸ்., தேறியவர்; தேர்ந்த சட்டநிபுணர். குஜராத் கலவரம், லோக் ஆயுக்தா என முக்கிய பிரச்னைகளில், மோடிக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பங்காற்றுவார் என தெரிகிறது.

பிரசாந்த் கிஷோர் பிராண்ட் பில்டர்
மோடியின் பிரசார வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றிய 30 வயது இளைஞர் பிரசாந்த் கிஷோர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர், மோடியின் தேர்தல் வியூகம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார சாயலில் அமையவும், எங்கு நோக்கிலும் 'மோடி பிராண்ட்' அமைய காரணமாக இருந்தவர். பிரதமர் அலுவலக செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் சர்மா திட்ட ஆலோசகர்
குஜராத் மாநிலத்தின் அதிவேக வளர்ச்சிக்கு காரணமான, மோடியின் புதுமையான திட்டங்களுக்கு அடித்தளம் இட்டவர் என கூறப்படும் அரவிந்த் சர்மா. 1988 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து குஜராத் மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர வழிகாட்டியவர். பிரதமர் அலுவல செயல்பாடுகளில் இவரும் இணையக்கூடும்.

பண பலம் சுரேந்திர படேல்
பா.ஜ., குஜராத் மாநில பொருளாளர் சுரேந்திர படேல். தொழிலதிபரான இவர் மோடியின் நிதி தேவைகளுக்கு முழு ஆதாரம். தொடர்ந்து குஜராத்திலேயே தங்கியிருந்து, கட்சியின் தேசிய அளவிலான கணக்கு வழக்குகளை கவனிப்பார் என்கிறார்கள்.

பக்க பலம் விஜய் நெஹ்ரா
குஜராத் முதல்வர் அலுவலக துணை செயலரான விஜய் நெஹ்ரா மோடி டீமில் இளையவர்; 2001 ல் ஐ.ஏ.எஸ்., தேரியவர். மோடி வெற்றிகரமான முதல்வராக திகழ உறுதுணையாக இருக்கும் இவர், குஜராத்தில் தங்கியிருந்து, மோடிக்கு தொடர்ந்து உதவுவார் என தெரிகிறது.


நன்றி -தினமலர் 



1. ஒரு மாநிலத்தில் நல்ல நிர்வாகத்தை கொடுக்கவேண்டும் என்றால் முதலில் அரசு இயந்திரம் பழுதடையாமல் சுறுசுறுப்ப்பாக இயங்க வேண்டும். அது குஜராத்தை பொருத்தமட்டில் மிக நன்றாகவே இயங்குகிறது. அவ்வாறு இயங்கும் பொழுது மோடி நல்ல பல நேர்மையான மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார். சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். உண்மையான தகவல்களை காங்கிரசின் போலி பிரசாரத்தால் மறைக்க முடியவில்லை. கேஜ்ரிவால் போன்றவர்களின் கேள்விகளுக்கு மோடி மிக நேர்த்தியான பதில்களை கொடுத்ததன் பின்னர் கேள்விகள் வரவில்லை. வெற்றியின் பின்னால் (1) நேர்மை (2) உண்மை (3) சமூக வலைத்தளங்கள் (4) குஜராத் கண்ட முன்னேற்றத்தை மொத்த இந்திய நாட்டுக்கும் கொண்டுசெல்லவேண்டும் என்ற நல்லெண்ணம் மற்றும் (5) மோடி என்ற மாமனிதனின் இடைவிடாத உழைப்பு....இன்று விடியலை நோக்கி இந்தியா. இந்தியா முன்னேற வேண்டும் என்று இரவு பகல் பாராது உழைத்த மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள் 



2 Nagarajan S மோடியின் வெற்றிக்கு பின்னால் மேற்சொன்ன பத்துபேரை தவிர, கைலாஷ் நாதன் என்ற தமிழன் தான் மோடிக்கு சீப் செகரட்ரி ஆக இருந்து அவரை வழிநடத்தினார். மேலும் அமித் ஷா என்ற மோடியின் தீவிர பக்தனால் தான் உத்தரபிரதேசம் 71 தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெற்றது. 



3 எப்படியோ இந்தி்யா ஒரு வல்லரசாக மாறவேண்டும் மக்கள் அனைவரும் அனைத்து அடிப்படை வசதி்களையும் பெற்று சுபிட்சமாக வாழவேண்டும் அதற்கு சுயநலமற்ற ஊழலற்ற நல்லாட்சி நல்ல நிர்வாக தி்றமையுடன் நடைபெற்றாகவேண்டும் ஃ இதை மோடியின் ஆட்சி தருமா 



4 மோடியின் எண்ணம் தூய்மையானதாக இருக்கலாம்தான்..ஆனால் அவரை சுற்றியுள்ள கூட்டம் சாதாரணமானதல்ல. உதாரனத்திகு எடியூரப்பா போன்றோரை அமைச்சராக சேர்த்தால்..அப்போதே தெரிந்துவிடுமே பா ஜ க அரசு எப்படி இருக்கும் என்பதை. இன்னமும் குஜராத்தின் வளர்ச்சியை பரபரப்பாக சொல்வது என்பது ஹை டெக் பிரச்சாரத்தின் ஓர் அங்கம்தான். அம்மா அவர்கள் சொன்னதுபோன்று குஜராத் பல துறைகளில் தமிழகத்தை விட அதலபாதாளத்தில்தானே உள்ளது. என்னமோ குஜராத்தில் பாலும் தேனுமாய் இருப்பதாகவே இன்னமும் மக்களை நம்ப வைக்கும் முயற்சியே ஏமாற்று வேலை என்பேன். கல்வியில் குஜராத்தின் வளர்ச்சி 12வது இடம்தானே? யாரேனும் மறுக்க இயலுமா? தனி நபர் வருமானத்தில் கூட குஜராத் பிற மாநிலங்களை விட மோசமாகத்தானே உள்ளது. பார்க்கத்தானே போகின்றோம்..எந்தெந்த மாநிலங்களில் எப்படிப்பட்ட வளர்ச்சிக்கு இவர்கள் தடைபோடப்போகின்றார்கள்..அரசியல் பளிவாங்கப்போகின்றார்கள் என்பதெல்லாம் தெரியத்தான் போகிறது. தனி நபர் துதிப்பாடு என்பது அதீதமான ஒன்றுதான்..அதிலும் மோடி மீதான எதிர்பார்ப்பை அதிக அளவிலே பிரச்சாரம் செய்து..நாளை ஒவ்வோர் செயல்களும் படுமோசமான விமர்சனத்தை மோடி மீது தாக்க ஆரம்பித்துவிடும். ஊழலற்ற அமைச்சர்கள் இருந்தாலே போதும் மோடிக்கு பாதி வெற்றிதான்..ஆனால் காய்ந்த மாடுகளாக அல்லவா கட்சியினர் காத்துகொண்டு கியூவில் நிற்கின்றார்கள். காங்கிரசாரை மிஞ்சிவிடப்போகின்றார்கள் பாருங்கள். அந்த நிகழ்வுகளை எல்லாம் இந்த பதினோர் பேர் கொண்ட குழு கவனித்துகொள்ளுமோ (மோடியோடு சேர்த்து பதினொருபேர்) வெற்றிக்கு பின்னால் பத்துபேர் என்றால்..தோல்விக்கு பின்னால் ஒரே ஓர் அமைச்சர் போதுமே..மோடியின் நலனில் அக்கறை என்கிற அளவிலிருந்து கருத்து கூறியுள்ளேன்..எவ்வளவு காலத்திற்கு இந்த பிரச்சாரமோ? பலூனில் ஓவராக காற்று கூட்டிக்கொண்டு போகாதீர்கள் என்பதே இதன் கருப்பொருள்


5 TIRUVANNAMALAI kulasekaran ஆசுதி்ரேலியாவில் மின்சாரம் குடிநீர் எரிவாயு ஆகியவை எல்லா வீட்டிற்கும் குழாய் மூலம் தடையின்றி கிடைக்கின்றது ஃஅரசு நிர்வாகம் சரியாய் இருந்தால் மக்களும் சரியாக இருப்பர் ஃ சீட்பெல்ட் போடாமலும் ஆரன் அடித்துக்கொண்டும் கார் ஓட்டி பழகிப்போன இந்தி்யர்கள் ஆசுதி்ரேலியா வந்தவுடன் காரில் சீட்பெல்ட் போட மறப்பதி்ல்லை ஆரனே அடிப்பதி்ல்லை ஃ கண்ட இடங்களில் குப்பையை போட்டும் எச்சில் துப்பியும் பழக்கப்பட்ட அதே இந்தி்யர் இங்குவந்து அதுபோல் நடப்பதி்ல்லை குப்பைகளை அதற்குரிய இடத்தி்ல் கொண்டு §போய்போடும் வழக்கம் வந்துவிடுகிறது ஃ எனவே மக்களை நல்வழிப்படுத்தும் முறையை அரசுதான் செய்யவேண்டும் ஃ இந்தி்யாவில் இதற்கு மோடி முயற்சிக்க வேண்டும்

0 comments: