Saturday, April 05, 2014

ஒரு கன்னியும் ,மூன்று களவாணிகளும் - சினிமா விமர்சனம்

தொழில் அதிபர்ங்க எல்லாம் நடிகையை கரெக்ட் பண்றது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடுச்சு. அதனால நம்ம வெட்டாஃபீஸ்  ஹீரோ ஒரு தொழில் அதிபர் பொண்ணை லவ்வறாரு. எதிர்ப்பு. சர்ச்சில் காதலிக்கு வேற ஒரு ஆள்  கூட மேரேஜ் நடக்க இருக்கு . 


நாயகனோட காதலியோட அப்பாவுக்கு தொழில் ரீதியா போட்டியா  இருக்கற ஆள் நாயகனைக்கூப்பிட்டு  நீ  உன் காதலியைக்கடத்திட்டா  உனக்கு 30 லட்சம் பணம் தர்றேன்கறான். கரும்பு தின்னக்கூலி! நயன் தாரா கூட சுத்துனா  ஜாலி.அதனால ஹீரோ தன் நண்பர்கள் 3 பேரு கூட சேர்ந்து அந்த பிராஜெக்டை பண்றார்.


இதை இப்டியே சொல்லிட்டா அது சாதாக்கதை. ஆனா இயக்கம் சிம்[புதேவன். ஹீரோ இந்த  பிராஜெக்டை காலை ல 8.59 க்கு  செய்ய ஆரம்பிச்சா  என்னாகும்?9 க்கு  செய்ய ஆரம்பிச்சா  என்னாகும்?,9.01 க்கு  செய்ய ஆரம்பிச்சா  என்னாகும்? -னு 3 வெவ்வேற கோணத்துல சொல்றாங்க. 


1998 -ல் ரிலீஸ் ஆகி சர்வ தேச அளவில் 28 விருதுகளை வாரிக்குவித்த  ரன் லோலா ரன்  எனும் ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் இது .2001 -ல்   12பி -னு ஒரு படம் இதே பாணில சிம்ரன்,ஜோதிகா,ஷாம் காம்போ வில் வந்தது 


ஹீரோவா அருள் நிதி. இவருக்கு எளிமையா  இருப்பது எப்படி?என்பது நல்லாவே வருது .அந்த ஒரே ஒரு பிளஸ் தான் . வேற நடிப்பு , பாவனை எதுவும் வர மாட்டேங்குது.நல்ல உயரமான ஆளா  இருப்பதால் ஆக்சன் காட்சிகள் , சேசிங்க் காட்சிகளீல் சமாளிக்கறார். காமெடி , காதல் காட்சிகளில் பம்மறார் . 




 ஹீரோயின் அர்ஷிதா ஷெட்டி.கெட்டியான பாலில் ( தண்ணி கலக்காத பால்) செய்யப்பட்ட பால்கோவாவில் ரசகுல்லாவின் ஜீராவை ஊற்றியது போல  இனிப்பான,மினுமினுக்கும் முகம்.ஆனா அவர் உதடு தான் ரொம்ப மெல்லிசா இருக்கு ( நாட்டுக்கு  ரொம்ப  முக்கியம் ) 


செகண்ட் ஹீரோயினா கஞ்சா கண்ணழகி , மாஞ்சா உதட்டழகி  பிந்து மாதவி. இவருக்கு ”பெருசா ” வேலை எதுவும் இல்லை . பாப் கட் ஹேர் ஸ்டைல்  ல ஹீரோ கூட ஸ்லோ மோஷன் ல ஓடுவதே அதிக வேலை . நல்லா  ஓடி இருக்கார் .


வ குவாட்டர் கட்டிங்க் ல காமெடி செஞ்சவர் இதுலயும் பட்டாசு கிளப்பும் சிச்சுவேசன் காமெடி செஞ்சிருக்கார்.குட்






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.   ஓப்பனிங்க்கில்  வரும்  டீக்கடை காமெடி கலக்கல் ரகம்.போலீசைப்பார்த்ததும் அதிர்ச்சியில்  விக்கல் எடுக்கும் காமெடியன் போலீஸ் தண்ணியைக்குடி என டம்ளரை கன் -னால் தள்ளும்போது பம்முவது பிரமாதம் 



2 ஜூலை மாத நிலவே பாடலில் கவிதை நயம் எழுத்து வடிவிலும் , ஒளிப்பதிவின் காட்சி வடிவிலும் போட்டி போட்டுக்கொண்டு மனதை வருடி வசீகரிக்கிறது 



3 ஒவ்வொரு காட்சியிலும்  மேக்சிமம் எவ்வளவு காமெடி சிச்சுவேசனைப்புகுத்த முடியுமோ அந்தளவு நகைச்சுவைத்தோரணத்தைக்கட்டி  இருப்பது 


4  மூன்று வெவ்வேறு சம்பவங்கள் , ஆனால் ஒரே சிச்சுவேஷன் .இதுக்கான திரைக்கதை அமைக்கும் பணி மிகக்கடினம், பிரமிப்பு ஏற்படுத்தும் உழைப்பு 



இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. இசை அமைப்பாளர் பப்பிலஹரியிடம் என்ன பிரச்ச்னை? ஹிப்பி லஹரி வில்லன் கேரக்டர்?


2 தன் எதிரியைப்பழி வாங்க எதிரியின் மகளைத்தானே கடத்தி ரேப் பண்ணாமல் காதலனை கடத்தி வரச்சொல்லி சேர்த்து வைப்பது என்ன மாதிரி பழி வாங்கல்? நல்லா யோசிச்சுப்பார்த்தா உதவி தான் பண்றார். 


3 ஓப்பனிங்கில் எடுத்ததுமே டாப் கீரில் கடத்தல் காட்சியை ஆரம்பிக்காமல் நாயகன் -நாயகி காதல் காட்சிகள் காட்டப்பட்டால் தான் ரசிகனுக்கு கடத்தல் காட்சியில் ஆர்வம் ஏற்படும்.


4 முதல் 2 கதைகளிலேயே  லேசாக சலிப்புத்தட்ட ஆரம்பிக்குது. 3 வது கோணத்தில் சொல்லும்போது சாதா ரசிகன்  புலம்ப ஆரம்பிச்சுடறான். படத்தை முடிங்கப்பா சீக்கிரம்-னு புலம்பல் வேற 

5 படத்துக்கு ப்ரமோ சரியாத்தர்லை. தியேட்டர்ல  கூட்டமே இல்லை. போஸ்டர் டிசைனும் சுமார் தான் ., படம் இருக்கும் குவாலிட்டியில் 25 % கூட  விளம்பரம், போஸ்டர் டிசைன் இல்லை . இது படத்துக்குப்பெரிய பின்னடைவு



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நமக்கு சொந்தமான தை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது .தூக்கிடனும் .


தண்ணிக்குள்ளே வாத்து காலால நீந்திட்டிருக்கறது வெளில இருந்து பார்த்தா தெரியாது.அது மாதிரி நம்ம பயம் முகத்துல தெரியக்கூடாது #1 F 3M


3 போலீசால ஓட முடியாது.சினிமா தவிர வேற எங்காவது போலீஸ் ரோட்ல ஓடி பார்த்திருக்கியா? # 1F3M

4 லேடி - பசங்க போன் பண்ணா உடனே போனை எடுக்கக்கூடாது.விட்டுப்பிடிக்கனும்.அப்போதான் அவனுங்க நம்ம சொல்படி ஆடுவாங்க



பொறுப்பை ஏத்துக்காம நல்லவனா இருந்தா என்ன பிரயோஜனம் ? # 1F3M

6 உயிருக்கு பயந்தவனை கடவுளாலகூட பிடிக்க முடியாது # 1+3


7 வானத்துல புல் இருந்தா மான் கூடப்பறக்கும். ம்க்கும்.full இருந்தா மனுசன் கூடப்பறப்பான் #1+3


8 லவ் பண்ற நீயெ என் கிட்டே படிப்பு ,தகுதி எல்லாம் பார்க்கறே.உன் அப்பா என்னென்ன எல்லாம் எதிர்பார்க்கறாரோ? #1+3


====

9 உங்கப்பா கல் நெஞ்சக்காரராமே? 


ஆமா.குடும்பத்தை விட சமுதாயத்துக்காக அதிகம் பாடுபட்டவர்.#1+3


10 கோபக்கார ஏழை தான் திருடன் # சிம்புதேவன் ராக்கிங்

11 ஒரு விநாடிக்கு 4 குழஃந்தைங்க பிறக்குது பாப்புலேசன்


12 விதி என்பது தீர்மானிக்கப்பட்டது எனில் எல்லா நேரத்திலும் அது ஒரே மாதிரி தானே இருக்கனும்?


13 என்னப்பா? ஒரே பைக்ல 3 பேரு?

3 பேரும் 3 பைக்ல வந்தாத்தான் ஆச்சரியப்படனும்


14 காதல் என்பது குழந்தை மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்குவது


15 சின்ன முள் எங்கே இருக்கு ?

9 ல


பெரிய முள் ?

6 ல

அப்போ டைம் 9.06 ?

நோ 9.30

அது எப்படி?


16 கொள்கைக்காக வாழ்பவன் இல்லை , கோபத்துக்காக வாழ்பவன் நான்


17 உன் ஆளைத்தூக்கிடுவியா?

ரொம்ப ஈசிங்க. 46 கிலோ தான். பல டைம் தூக்கி இருக்கேன்



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. இளைய தளபதியின் அடுத்த பட இயக்குநர் சிம்பு தேவன் ன் ஒரு கன்னியும் 3 களவாணிகளும் நம்ம அடுத்த டார்கெட் @ ஈரோடு சண்டிகா #,1F 3 M


2 பிந்து மாதவி ஸ்லோமோசன் ல ஓடி வரும்போது கேமராவை கூந்தலுக்கு க்ளோஸப் ஷாட் வைக்கறாங்க .டீசன்ட்டான போட்டோகிராபர் போல # 1F 3M


3 RUN LOLA RUN ,12B பட திரைக்கதை பாணியில் மாறுபட்ட காமெடி த்ரில்லர் மூவி #,ஒரு கன்னியும் 3 களவானிகளும்.இடைவேளை


4 இளைய தளபதி -ன் அடுத்த் பட கால்ஷீட்டை சிம்பு தேவன் க்கு தரும் முடிவை மறு பரிசீலனை செய்தால் நல்லது # ஒ க 3 க ளவானியும் ஊ ஊ


சி பி கமெண்ட் -ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் -ஒரே கதையை 3 விதமாகச்சொல்லும் காமெடி த்ரில்லர் - ஏ சென்ட்டர்ல மட்டும் ஓடும்.விகடன் =42 .ரேட்டிங் =2.75/ 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42


குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் = 2.75 / 5


ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்








டிஸ்கி 1 -மான் கராத்தே  சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/04/blog-post_4.html


டிஸ்கி - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -

0 comments: