Tuesday, April 08, 2014

சில தலைவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்!- திமுக பெண் கவிஞர் சல்மா பரபரப்பு பேட்டி



இந்திரா உள்பட பெண் தலைவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்!- திமுக பெண் கவிஞர் சல்மா பரபரப்பு பேட்டி




நாட்டின் பெரிய பொறுப்புக்கு வந்த பெண் தலைவர்களெல்லாம் பெரும்பாலும் மோசமாகவே நடந்து கொண்டார்கள் என்று திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா கூறியுள்ளார்.


திமுகவில் அழகிரிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது தேர்தல் முடிவில் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


திமுக பொதுக்குழு உறுப்பினரும், திமுக எம்.பி. கனிமொழியின் தோழியுமான கவிஞர் சல்மா ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:


இந்த தேர்தலில் நீங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா?


எனது சொந்தத் தொகுதியான கரூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்குக் கேட்டுள்ளேன். எனது சொந்தப் பகுதியான வல்லநாடு, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் நான் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் நன்கு அறிமுகமானவள். எனவே எனது தொகுதியில் பிரச்சாரம் செய்வதுதான் திருப்தி அளிக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி, கோவை தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் நண்பர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய உள்ளேன். பட்டுக்கோட் டையில் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துள்ளேன்.


திமுகவில் உங்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லையென்று கூறப்படுகிறதே?


அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஊடகங்கள் எதையாவது எழுதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. வரும் 13-ம் தேதி கூட எங்கள் ஊருக்குத் தலைவர் (கருணாநிதி) வரவுள்ளார். அதற்கான முழு ஏற்பாட்டில் தீவிரமாக உள்ளோம்.


வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?


மிகவும் நன்றாக உள்ளது. ஜெயல லிதாதான் போகுமிடங்களெல்லாம் ஒரே மாதிரியாகப் பேசுகிறார். அவரது பேச்சு மக்களுக்குப் பிடிக்கவில்லை. மின்வெட்டு பெரும் பிரச்சினையாக உள்ளது. பல நேரங்களில் நாங்கள் கிராமங்களுக்குப் பிரச்சாரத்துக்குப் போகும்போது மின்சாரம் இருப்ப தில்லை. இருண்டு கிடக்கின்றன.


ஒரு பெண் பிரதமராக வந்தால் வரவேற்பீர்களா?


நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஆணா, பெண்ணா? என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகம் தெரிந்தவராக இருக்க வேண்டும். பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. இலங்கையின் சந்திரிகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் ஜெயலலிதா என அனைவருமே மோசமாக நடந்து கொண்டதுதான் வரலாறாக உள்ளது. பெண் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகக் கெட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.


அழகிரியின் நீக்கம் கட்சியைப் பாதிக்குமா?


அழகிரியை நீக்கியது கட்சியைப் பெரிதாக பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அவருக்கு மக்கள் மத்தியி லோ, தொண்டர்கள் மத்தியிலோ செல்வாக்கு இல்லை. இது தலைமை க்கும் தெரியும். அதனால்தான் தயக்கமின்றி அவரை நீக்கியுள்ளனர். அழகிரியின் செல்வாக்கு என்னவென்று இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும்.


முக்கியமான நெருக்கடி காலத்தில், கட்சியைத் தென் மாவட்டங்களில் வளர்த்தவரைப் புறக்கணிப்பது சரியா?


திமுகவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையிலும் பணியாற்றி, கட்சியை வளர்த்தவர் தளபதிதான் (ஸ்டாலின்). எனவே அவருக்குதான் செல்வாக்கு உள்ளது.


கனிமொழிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?


கனிமொழி, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். நான் அவருக்குக் கீழ் பணியாற்றும் நிலையில் உள்ள தொண்டர் என்பதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு. இதில் எந்தக் காலத்திலும் மிகுந்த நெருக்கமோ, விரிசலோ ஏற்பட்டதில்லை. இருவரும் கட்சிப் பணியாற்றும் நல்ல நண்பர்கள். இதைத் தவிர அவருக்கும், எனக்கும் சண்டையோ, விரோதமோ இல்லை. அது மீடியாக்களின் கற்பனை.


இவ்வாறு அவர் கூறினார்.


கவிஞர் சல்மாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.


நன்றி-த இந்து



  • an at Government from Salem
    ஊடகங்கள் அளபரிக்கு அளவில்லையா?சல்மா,சாபிட்டால்,பரபரப்பு?நின்றால் பரபரப்பு,பேசினால் பரபரப்பு ,துங்கினால் பரபரப்பு?அம்மா தமிழர்களுக்காக (அழகிரி,சாலின்,செல்வி,தமிழரசு.திஹார் புகழ் கனி கோவில் கோவிலாக சுற்றி ஆயுள் வரம் வேண்டி பகுத்தறிவு பிரசராம் செய்யும்,ராசாத்தி )வாழ் நாளெல்லாம் பாடுபடும் கருணாவுக்கு பல்லக்கு தூக்குவது சரிதான்.அனால் நம்மை ஏன்துக்க்க சொல்ல வேண்டும்?

    about 12 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)


    •  kandasamy  

      கடை விரித்தார். கொள்வாரில்லை.

      about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)


      •  kandasamy  

        பாவம் தமிழ் இலக்கியம்;

        about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)



        • சல்மா ஸ்டாலினை “தளபதி” என்று விளிக்கிறாரா ? கொடும சரவணன் இது. ஒரு காலத்துல கவிஞரா இருந்த சல்மா எப்படில்லாம் ஆயிட்டாரு. எல்லாம் காலத்தின் கோலமையா.

          about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)


          •  swamin  from Teluk
            if a Hindu person when and approach an area where lot of Hinds in the name of the religion, every one will say it is a communal. This lady approaching the Muslim women on the name of Religion. Then it is called secularism Why she has not approached all the woman irrespective of religion. This type of so called secularism will go when the Hindus also vote on the religious line like others

            a day ago ·   (7) ·   (4) ·  reply (1)

            sathyamoorthy  Up Voted
            haani  Down Voted

            •  கலீல்  from Kumar
              The notion that people vote on religious, caste or community lines are based on presumption. It is not based on any scientific research. A few people may vote on those lines. Everyone looks for good people who will work for the wellbeing of the people.

              about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)


            •  dharuman  from Chennai
              சல்மாவின் கருது சரியானதே.mungopi இந்திரா. மூர்க்கமான மாயாவதி,அடங்கி போகாத மம்தா, நந்தினி சத்பதி,எல்லாம் நானே எனும் ஜெயலலிதா ponror sathithathai விட சோதித்து தான் அதிகம்.இவர்களின் கர்வ போக்கு நாட்டு மக்களின் நிம்மதி இழப்பு enpathu தான் unmai.

              a day ago ·   (4) ·   (1) ·  reply (0)

              SK  Up Voted
              Raju  Down Voted

              •  Ananthavelraja  from Chennai
                உண்மை தான் சகோதிரி !

                a day ago ·   (1) ·   (0) ·  reply (0)


                •  Subramanyam  from Chennai
                  //பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.// இதை அப்படியே திருப்பி 'பெண்' ணுக்குப் பதில் 'ஆண்' என்று போட்டுப் பார்த்தால் அதுவும் சரியாகவே இருக்கும். ஏன் என்றால், கவிஞர் சல்மாவின் கூற்றில் பிழை உள்ளது. இதில் ஆண் அல்லது பெண் என்ற பேதத்தைப் பார்க்க முடியாது. மிக உயர்ந்த இடத்தைத் தொட்ட பெண்மணிகளும் உள்ளார்கள். பிரான்சின் ஜோன் ஆப் ஆர்க், இஸ்ரேல் இன் கோல்டா மிர், இங்கிலாந்தின் 'இரும்பு மனுஷி' தாட்சர், இங்கிலாந்து ராணி விக்டோரியா போன்றோர். நமது நாட்டிலும் இருந்திருக்கிறார்கள். இந்திரா காந்தி (நான் அவரது பெரும்பாலான கொள்கைகளையும், காங்கிரச்சையும் அடியோடு வெறுப்பவன்), சந்திரிகா ரணதுங்கே, ஜெயலலிதா, மம்தா போன்றவர்கள் கூட எந்நேரமும், எல்லாவற்றிலும் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கூற முடியாது. அப்படிப் பார்ப்பவர்கள் ஒன்று பாலின ரீதியில் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பவர்களாக இருக்க வேண்டும், அல்லது மத அடிப்படையில் பேசுபவர்களாக இருக்க வேண்டும்.

                  a day ago ·   (4) ·   (3) ·  reply (0)

                  SK  Down Voted

                  •  Muthusamy Krishnan at Government 

                    அம்மா சல்மா,அண்ணன் அழகிரிக்கு தேர்தல் முடிவில் ஆதரவு இருக்கிறது,அல்லால் இல்லாமல் போகுது.அதை பற்றி ஏன் அம்மா கவலை படுகிறீர்கள்.முத்துவேல் தட்சினாவை சாலினை மதிப்பார்கள அல்லது மிதிப்பார்கள?என்பது தெரியும்.ஆமாம் தி.மு.க.குல தொழிலான 'சுரட்டளை'ஆரம்பித்து விடீர்களா?இபொழுது தினம் தினம் ஜெய டிவி யில் திருவாரூர் திருட்டு குடும்பத்தின் சொத்து மதிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.திருட்டு ரயில் ஏறி வந்த குடும்பம் 'கலை வெட்டி,நாற்று நட்டு'சம்பாரித்தார்கள் போலும்?

                    a day ago ·   (2) ·   (3) ·  reply (1)


                    •  haani  from Jeddah
                      டாஸ்மாக் படுத்தும்பாடு எழுத்திலும் பிரதிபலிக்கிறது ..............வாழ்க உங்கள் தொண்டு

                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                    •  raajaa  

                      பங்களாதேஷின் ஷேக் ஹசீனா, கலிதா ஜியா, இந்தோனேசியாவின் சுகர்னோபுத்ரி, பிலிப்பைன்சின் இமெல்டா மார்கோஸ், பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோ மற்றும், நம்ம ஊர், மாயாவதி, உமா பாரதி, ஆகியோரையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

                      a day ago ·   (3) ·   (0) ·  reply (0)


                      •  சாது  from Kolkata
                        அம்மா நல்லவேளை இப்பவாவது உணர்ந்தீர்கள். இதையே ஒரு ஆண் சொல்லி இருந்தால் இந்நேரம் குய்யோ மொய்யோ என்று கத்திக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பார்கள் சில வம்படி சங்கத்தினர். உங்களை போன்று சமுதாயத்தை சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கும் பெண் தலைவர்கள் மிக மிக கொஞ்சமே. பொதுவாகவே பெண்கள் எந்த ஒரு விஷயத்தையுமே ஒரு பாதுகாப்பு உணர்வு கொண்ட மனநிலையிலேயே அணுகுவர். அது தனிப்பட்ட வாழ்க்கையில் மிக உசிதமான ஒன்று. ஆனால் அது பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சரிப்பட்டு வராது. முன்பு ஒருமுறை , கவர்னர் சென்ன ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டார் என்று ஜெயலலிதா கூறியதும் இந்த மன நிலையில்தான் . தவிர இந்த முறை மிக எளிதான ஒன்று . இதன் முலம் மக்களின் அனுதாபத்தை எளிதில் சம்பாதிக்க முடியும். ஆண்களை பொட்டில் அறைந்ததைப்போன்று வீழ்த்தி விடவும் முடியும். உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு பாலினத்தை முன்னிறுத்தி சிந்திக்காதீர்கள்.

                        a day ago ·   (8) ·   (2) ·  reply (0)

                        SK · Theekuchi · D.Thirumalai kumar  Up Voted

                        •  kalai  from Chennai
                          தன சுயநலத்திற்காக கடந்த 12 அவது லோக்சபா இந்திய ஆட்சியை கவிழ்த்து மக்களின் வரி பணம்,இந்திய பொருளாதாரம் சிதைத்த மற்றும் கூட்டணி கட்சிக்கு துரோகம் இளைத்த ஜெ.. NO TO VOTE ???????? ADiMaiK திமிரான atchiii ,100GENERATION RICH 2G LAND LORD DiMiKi FAMILY. இந்த கட்சியை தோற்க வேண்டுமானால் , இளைஞ்சர்கள் வேலை வாய்ப்பு பெற வலுவான ஆட்சி பெற பிஜேபி,
                        THANX - THER HIND
                        U

                        0 comments: