Monday, April 28, 2014

1000 படங்கள் இசை அமைத்த “ தாரை தப்பட்டை” இளையராஜா பேட்டி @ த ஹிந்து

இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர். திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர். தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. தினமும் சரியாகக் காலை ஏழு மணிக்கெல்லாம் தன் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்துவிடுகிறார். நாள் முழுதும் நடக்கும் இசைப் பணிகளுக்கிடையே யாரையும் சந்திப்பதில்லை. ‘தி ஹிந்து’ இதழுக்காக அவரைப் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்தோம். பிரகாஷ் ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிக்கு இடையில் பேசினார் இசை ஞானி. 



உங்கள் பார்வையில் ஒரு பாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள் ?


 
பாடல் பாடலாக இருக்க வேண்டும். அது உள்ளத்தையும் உயிரையும் உருக்கிக் கேட்பவர்களை மேன்மையான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி நம் முன்னோர்கள் நிறைய பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன்’, போன்ற பாடல்களை இனிமேல் யாராவது போட முடியுமா. அஜித், விஜய் இந்த மாதிரியான பாடல்களைப் பாடி நடித்தால் யாராவது பார்க்க முடியுமா. ஆனால் அப்படியான கதையைக் கொண்டு வருபவர்களுக்கு அந்த மாதிரியான பாடல்களைப் போட்டுத் தரலாம். 



கே. பாலசந்தர் ‘சிந்து பைரவி’ படத்திற்காக வந்திருந்தார். அப்போது கதையில் ஒரு சூழலைச் சொல்லி இந்த இடத்தில் சின்ன கீர்த்தனையோடு பாடல் துவங்க வேண்டும் என்றார். தெலுங்குக் கவிஞரை வைத்து எழுதிவிடலாம் என்று முடிவு செய்தோம். பிறகு நான் தற்செயலாகத் தியாகையர் கீர்த்தனை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது. நான் போட்டிருந்த டியூனுக்கும் அது துவங்கும் காலப் பிராமாணத்திற்கும் பொருத்தமாக ஒரு கீர்த்தனை இருந்தது. ‘மரி மரி நின்னே...’ என்ற கீர்த்தனைதான் அது. இப்படி நல்ல கதை அமைந்தால் நல்ல பாடலும் அமையும். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நான் போட்ட டியூனுக்கு தியாகையர் எப்பவோ கீர்த்தனையை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். 



திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடும்போதும், வாசிக்கப்படும் போதும் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?


 
ஒரு பாடலுக்கான குறிப்புகளை எழுதுவதற்கு எனக்கு அரை மணிநேரம் போதும். இரண்டு மணிநேரத்தில் அதைப் பதிவு செய்துவிடுவேன். ஒரு பாடலுக்கு ஒரு நாளோ இரண்டு நாளோ ஆகலாம். ஆனால் அதை மறுபடியும் வாசிப்பதற்குப் பத்து நாட்களுக்கும் மேலாக ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கிறது. என்னுடைய நோட்ஸை வாசித்த அதே வாத்தியக் கலைஞர்களே மறுபடியும் அதேபோல் வாசிக்கச் சிரமப்படுகிறார்கள். 



ரிகர்சலின்போது அவர்கள், “சார் போகிற போக்கில் இப்படி ஒரு மியூசிக்கை எப்படிப் போட்டுட்டு போனீங்க. இது எங்கிருந்து உங்களுக்குள் இருந்து வந்தது?” என்று கேட்கும்போது எனக்கு எந்தப் பதிலும் சொல்லத் தோன்றாது.
ஒவ்வொரு மேடைக் கச்சேரிகளிலும் ரெக்கார்டிங்கில் ஒலித்த அதே இசையைக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருப்பேன், அதில் சின்னத் தவறு வந்தாலும் அந்த இடத்திலிருந்து மறுபடியும் வாசிக்க வைப்பேன். சரியாக வரும் வரைக்கும் விட மாட்டேன். இந்த மாதிரி நேரங்களில் ரசிகர்களுக்கு ரெக்கார்டிங்கை நேரில் பார்த்த உணர்வு ஏற்படும். அது அவர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். 



பாடல் கம்போஸிங்கில் இயக்குனர்களோடு உட்காரும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?


 
நிறைய சொல்லலாம். ஒரு இயக்குனர் என் முன்னால் வந்து அமர்ந்து கதையைச் சொன்னவுடன் நான் சில டியூன்களை போடுவேன். “இந்த டியூன் வேற மாதிரி இருக்கு வேறு ஒரு டியூன் போட முடியுமா” என்று கேட்பார். அவர் திருப்திக்காக நானும் வேறு ஒரு டியூனை போட்டுத் தருவேன். அதே சமயம் அவர் வேண்டாம் என்று சொன்ன டியூனை வேறு படத்திற்குப் பயன்படுத்தி, அந்தப் பாட்டு ஹிட்டாகிவிடும். அதைக் கேட்டுவிட்டு இயக்குநர், “இந்த மாதிரியான டியூன்களை எங்களுக்குத் தந்திருக்கலாமே” என்று பரவசப்படுவார். “நீ வேண்டாம்னு சொன்ன டியூன்தான் இது” என்பேன். பாரதிராஜாதான் இப்படி நிறைய முறை கேட்டிருக்கிறார். 



இதேபோல அவதாரம் படத்திற்காக நான் போட்ட ஒரு டியூன் நாசருக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்னிடம் சொல்லத் தயக்கம். நான் அதைத் தெரிந்துகொண்டேன். “போய்ட்டு சாயங்காலம் வாங்க.” என்று அனுப்பி வைத்தேன். மாலையில் முழு ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் வாசித்துக் காட்டினேன். அழுதேவிட்டார் நாசர். 



ஆயிரம் படங்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறீர்கள் அது பற்றி?


 
இதையெல்லாம் நான் சாதனையாகவே நினைக்க வில்லை. ஏதோ வாழ்க்கையை ஒட்டி வந்திருப்பதாகவே நினைக்கிறேன். காரணம் நான் செய்கிற வேலையில் இருக்கும் தவறு எனக்குத் தெரியும். அதனால் நான் அமைதியாக இருந்துவிடுகிறேன். நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் பாடல்களில்கூட அந்தத் தவறு இருக்கிறது. இது எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். சரிகமபதநி என்கிற ஏழு ஸ்வரங்களைத்தான் நான் திரும்பத் திரும்பப் போட்டுக்கொண்டிருக்கிறேன். என்னால் புதிதாக ஒரு ஷட்ஜமத்தை உருவாக்க முடியுமா? ஏற்கனவே இருந்தவற்றிலிருந்துதான் பாடல்களை அமைக்கிறேன். இதில் என்ன சாதனை இருக்கிறது. 



இந்தக் கின்னஸ் ரெக்கார்ட், உலக ரெக்கார்ட் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இதையெல்லாம் மிஞ்சிய சாதனைகள் பதிவு செய்யப்படாமலே இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை சாதனை என்பது இசையில் நான் அதைச் செய்திருக்கிறேன் இதைச் செய்திருக்கிறேன் அவார்டு வாங்கியிருக்கிறேன் என்பதல்ல. இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆன்மிகத்தில் உட்காருவதே பெரிய சாதனையாக நினைக்கிறேன். 



சமீபத்தில் நீங்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி நடந்தது. புகைப்படம் எடுக்கும் ஆர்வம் எப்போதிருந்த வந்தது?


 
சிறு வயதில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருந்தது. படம் வரைவதில் எனக்கும் பாரதிராஜாவிற்கும் போட்டியே நடக்கும். அந்த ஆர்வம்தான் பின்னால் புகைப்படம் எடுப்பதாக மாறிப்போனது. 78-லிருந்து நான் எடுத்த புகைப்படங்களைப் புகைப்படக் கலைஞர் நண்பர் கார்த்தி பாதுகாத்து வைத்திருக்கிறார். இப்போது கண்காட்சியாக வைத்திருப்பது சிறு பகுதிதான்


.
திடீரென்று ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறீர்களே இதன் நோக்கம்..?


 
இண்டர்நெட், ஃபேஸ்புக், டுவிட்டர் கலாச்சாரம் வளர்ந்த பிறகு ரசிகர்கள் என் பெயரில் ரசிகர் மன்றங்களைத் தாங்களாகவே ஒரு பெயரில் துவங்க ஆரம்பித்துவிட்டனர். இப்படி நிறைய குழுக்கள் வந்துவிட்டன. அவர்களை எல்லாம் முறைப்படி ஒருங்கிணைக்கலாம் என்று நண்பர்கள் வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தனர். இதன் மூலம் மேலும் மன்றங்கள் வருவதைத் தடுக்க முடியும். 



ஒரு பாடல் பிடித்துப் போய் அந்த இன்ஸ்பிரேஷன்ல எதாவது பாடலை உருவாக்கி இருக்கிறீர்களா?



 
இன்ஸ்பிரேஷன் என்பது வேறு. இமிடேஷன் என்பது வேறு. உதாரணமாக எனக்குச் சின்ன வயதில் எம்.எஸ்.வி. அண்ணாவோட ‘வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே..’ என்ற பாடல் ரொம்பவும் பிடிக்கும். இந்த விஷயத்தை எம்.எஸ்.வி. அண்ணனிடம் சொன்னபோது ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் நானும் அவரும் சேர்ந்து இசையமைத்தபோது அவர், அப்படிப் போட்ட பாடல்தான் ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..’ என்ற பாடல். இது சந்தம் உட்பட எல்லாமே அந்தப் பாட்டின் மீட்டரிலே இருந்தது. அதனால் இது இமிட்டேஷன்தானே தவிர இன்ஸ்பிரேஷன் கிடையாது. ஆனால் எனக்காகக் காத்திரு படத்தில் ‘ஓ..நெஞ்சமே இது உன் ராகமே..’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள் அந்தப் பாட்டுதான் எம்.எஸ்.வி. அண்ணாவோட இன்ஸ்பிரேஸனில நான் போட்டது. 


இலக்கியவாதிகளில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் யார்?

 
ஜெயகாந்தன் அவர்களை நான் ஆதர்சமாக நினைக்கிறேன். எப்போதாவது அவரைச் சந்தித்துப் பேசுவதுண்டு. அவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணப் படம்கூட எடுத்திருக்கிறேன். இதில் எந்த வித வணிக நோக்கமும் கிடையாது. இதேபோல் நாஞ்சில் நாடன், சிற்பி பாலசுப்ரமணியம், தெ. ஞானசுந்தரம், பெரும்புலவர் நமச்சிவாயம், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரும் அவ்வப்போது என்னைச் சந்தித்து உரையாடுவது வழக்கம். இதில் நாஞ்சில் நாடனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் தம்பி சுகா இயக்கிய படித்துறை படத்தில் பாடலும் எழுத வைத்திருக்கிறேன். 

நன்றி - த இந்து 

 இசைஞானி இளையராஜா (படங்கள்: சாய் கணேஷ், பொன்ஸி)

  • இளையராஜா ஏன் முன்பு வந்த படங்களில் உள்ள இசை போல் தற்போது இசை அமைக்கும் படங்களில் தர முடியவில்லை தற்போதுஇசை அமைக்கும் படங்களில் பின்னணி இசை மட்டும் தான் எடுபடுகிறது
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Surendra Varman  from Singapore
    என் வாழ்க்கையின் மௌன இடைவெளியின் இடை இசை ராசாவின் மன மொழியாக .........
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • R.SUBRAMANI  
    இங்கே சுமார் 18 வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்கள் . இந்த கருத்துக்கள் , இசை ராஜாவின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் , அப்போதுதான் இவருடைய இசைக்காக எவ்வளவு ரசிகர்கள் எந்த மாதிரியான இசைக்காக ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் , என்பதை கொண்டு செல்லும் ஒரு இசை தூதுவனாக தி இந்து மூலம் ஒரு நல்லது நடந்தால் சரி
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Sureshbabu  from Kuwait
    எவ்வளவு பாடல்கள் ்தாலாட்டாக ்காதலாக ்வாழ்க்கையாக ்சோகமாக ்மண்ணிண் மணமாக ்சொல்வதன்றால் சொல்லி கொண்டே போகலாம்்எத்தனை ்இசைக்கோற்பு அப்பா ்இது சாதரண விசயம் அல்ல கண்டிப்பாக இது சாதனைதான் ்
    2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Arulbalan Subramani  from New York
    அவர் என்றும் ஞானி தான்...
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • ஜெயக்குமார்  
    மிக அருமையான இசைக்கலைஞன். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. நான் பிறந்த ஆண்டு அவர் முதல் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். அவரைக் கேட்டே வளர்ந்தோம், வளர்கிறோம். இன்றும் நம்மால் இவர் இசையை ரசிப்பதுபோல பிற இசையமைப்பளர்களின் இசையை ரசிக்க முடிவதில்லை என்பதே இஅவரது சாதனைகளுக்கு ஓர் சான்று.
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • R.SUBRAMANI  
    இவரது இசை மயாஜலத்தினால் கோடிக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் மயங்கி கிடக்கிறார்கள் . இந்த இசை வித்தகர் , - 1980-1990 & 1995 வரை வெளியான பாடல்கள் போன்று மென்மையான பாடல்கள் , ஒவ்வொரு பாடலுக்கும் என்ன தொடர்பும் இல்லாத மாறுபட்ட இசைகோர்வை , வாத்தியங்களின் இசை தாலாட்டி இருக்கும் . மீண்டும் பூங்காற்று திரும்புமா ? பின்குறிப்பு ;- பழைய பாடல்கள் போன்று , இப்போது பாடல்கள் போட்டால் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம் ஏன் என்றால் , pendrive , memarycard போன்ற சாதனக்களுக்கு , பாடல்களை பதிவு இறக்கம் செய்து கேட்க்கும் பாடல்களில் ராஜாவின் ராகம் 90% மேல் இருக்கிறது . சாதரணமாக பாடல்களை நம்பி இருக்கும் இசை சேனல்கள் & வானொலிகள் வளர்ச்சியில் ராஜாவின் பாடல்களுக்கு பெரும் பெறுகிறது . இதை யாரும் மறுக்க முடியாது . உதாரணம் S C V சேனல் , சண் மியூசிக் ஆக மாறியது . இன்னும் பல உள்ளது . எங்களுடைய எதிர்பார்ப்பு 1980 -1990 காலப்பகுதி வெளி வந்த மென்மையான பாடல்கள் போல . 2013 வெளியான பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமாராக இருந்தது . 30 பள்ளிபட்டி R .சுப்ரமணி
    2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • R.SUBRAMANI  
    இவரது இசை மயாஜலத்தினால் கோடிக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் மயங்கி கிடக்கிறார்கள் . இந்த இசை வித்தகர் , - 1980-1990 & 1995 வரை வெளியான பாடல்கள் போன்று மென்மையான பாடல்கள் , ஒவ்வொரு பாடலுக்கும் என்ன தொடர்பும் இல்லாத மாறுபட்ட இசைகோர்வை , வாத்தியங்களின் இசை தாலாட்டி இருக்கும் . மீண்டும் பூங்காற்று திரும்புமா ? பின்குறிப்பு ;- பழைய பாடல்கள் போன்று , இப்போது பாடல்கள் போட்டால் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம் ஏன் என்றால் , pendrive , memarycard போன்ற சாதனக்களுக்கு , பாடல்களை பதிவு இறக்கம் செய்து கேட்க்கும் பாடல்களில் ராஜாவின் ராகம் 90% மேல் இருக்கிறது . சாதரணமாக பாடல்களை நம்பி இருக்கும் இசை சேனல்கள் & வானொலிகள் வளர்ச்சியில் ராஜாவின் பாடல்களுக்கு பெரும் பெறுகிறது . இதை யாரும் மறுக்க முடியாது . உதாரணம் S C V சேனல் , சண் மியூசிக் ஆக மாறியது . இன்னும் பல உள்ளது . எங்களுடைய எதிர்பார்ப்பு 1980 -1990 காலப்பகுதி வெளி வந்த மென்மையான பாடல்கள் போல . 2013 வெளியான பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமாராக இருந்தது . 30 பள்ளிபட்டி R .சுப்ரமணி
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Vijaya Kumar at Anjalai ammal mahalingam engg. college from New Delhi
    இவரது இசையை புரிந்து கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்களே, இவரை புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.உண்மையில் இவர் 21ம் நூற்றாண்டின் பாரதியார் என்றே சொல்லலாம்.மஹா கவிஞன் போல இவர் மஹா இசை கலைஞன்.
    2 months ago ·   (6) ·   (0) ·  reply (0)
    Vijaya Kumar  Up Voted
  • manimaran  from Singapore
    ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லே
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Balaj Srinivasan  from Cypress
    சென்ற வருடம் ஒரே ஒரு முறை இவரை பிரசாத் ஸ்டுடியோவில் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு சாதித்திருக்கும் ஒரு மனிதன் இன்றும் கூட கம்போஸ் செய்வது ஒரு எளிமையான harmonium ஒன்றில்தான். நீதானே என் பொன் வசந்தம் படத்தில் வருவது போன்ற பாடல்களை எப்படித்தான் அந்த ஹார்மோனியத்தில் நினைத்துப் பார்க்கிறார்/வடிவமைக்கிறார் என்பது எனக்கு ஒரு நீங்காத ஆச்சரியம்தான்! என் குடும்பத்தினர் கொடுத்த இன்பத்தை விட ராஜாவின் இசை எனக்குக் கொடுத்த நிம்மதி பெரிது! ராஜா இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!
    2 months ago ·   (15) ·   (0) ·  reply (0)
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    இசைஞானி அவர்களே நீங்கள் படைப்பதெல்லாம் உலக சாதனையே. உங்களுக்கு அது சாதாரணமாக இருக்கலாம். அது உங்கள் பெருந்தன்மையை பரை சாட்ருகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அது உலக சாதனையே.
    2 months ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • kalyanasundaram Masilamani at Corporation Bank from Vellore
    உன்னதமான மனிதர். இசைக்காக அற்பனிதுக்கொன்டவர். . இப்படி எவ்வளவோ சொல்லலாம்.
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • SASIKUMAR SASIKUMAR  from Kumar
    Great mastero
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • AYYAPPAN.N  
    இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறார். அவை தனிப்பட்ட சமுகத்திற்கு மட்டும் சொந்தமல்ல என்பதை உலகிற்கு அவ்வப்போது எடுத்துகாட்டும் ஆத்மாக்களில் இவரும் ஒருவர்.
    2 months ago ·   (5) ·   (0) ·  reply (0)
  • Raja m  from Coimbatore
    ராகதேவனின் இசையை கேட்கும்போதெல்லாம், நான் கடவுளை உணர்கிறேன்.
    2 months ago ·   (4) ·   (2) ·  reply (0)
    Raja m  Up Voted
  • V. Murugan  from Lagos
    தூக்கம் வரவைக்கும் அற்புதமான தூக்க மாத்திரை இசைஞானி அவர்களின் இசை. காலம் முழுக்க கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிப்பு தராத சங்கீதம் ராஜாவினுடையது.
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Mannan Mannen  from Chennai
    இறை தான் இப்படி ஒரு இசை அவதாரமாக ஜனித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது ,இவரை தவற வேறு ஒருவர் இந்த இடத்தில இருந்தால் இந்த அளவு தன்னடக்கம் இருக்க வாய்ப்பில்லை
    2 months ago ·   (3) ·   (2) ·  reply (0)
  • sundar  
    பாலை வன சோலைகள் பட மேகமே மேகமே பால்நிலா தேயுதே gazal imitation விட்டுபோய் விட்டது. தமிழ் நாட்டில் பெயருக்கு முன்னால் அடைமொழி போடுவதை நிறுத்த சட்டமே கொண்டுவரலாம் போலிருக்கிறது. ஆரம்ப காலங்களில் பாட்டை அவரது மியூசிக் மிஹவும் அழுத்துகிற மாதிரி ஒரு உணர்வு எனக்கு. ராஜா திரை இசையில் ராஜாதான்.


0 comments: