Thursday, February 20, 2014

விடுதலைக்கு தடை !!!; வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: - கோர்ட்

ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு தடை ; வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: கோர்ட்


புதுடில்லி: புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ராஜிவ் கொலையாளிகள் 7பேர்களின் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



பிரிவு 432ன் படி குற்றவாளிகள் சிறையில் இருந்த காலம் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்யலாம். என்ற சட்ட ரீதியான விஷயம் இன்று கோர்ட்டில் முக்கிய பிரச்னையாக இருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், இதனால் விடுதலைக்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 



இந்த வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரித்த வழக்கு என்பதால் மாநில அரசு மத்திய அரசுடன் கலந்து பேசித்தான் முடிவு செய்ய முடியும். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தது தவறானது என்றும் மத்திய அரசு மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் மோகன்பராசரன் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்தார். ராஜிவ் கொலையாளிகளை மாநில அரசு , மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்துள்ளது. இதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது. நீதி வழங்கும் உரிமை விஷயத்தில் தமிழக அரசு செயல்பாடு சரியல்ல. மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மதியம் விசாரித்தனர்.

ராஜிவ் கொலையாளிகள் 3 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மத்திய அரசையும் காங்கிரசையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராகவும், கடந்த 18 ம்தேதி சுப்ரீம் கோர்ட் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என தெரிகிறது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கென பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரமாக கூடியது. இது குறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாகனவதியிடம் அரசு சட்ட யோசனை கேட்டுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

ராஜிவ் கொலை வழக்கில் மரணத்தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய 3 பேர் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தூக்கை ரத்து செய்து கடந்த 18ம் தேதி தீர்ப்பளித்தது. ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஏற்று இவர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தது. மேலும் இவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு விடுதலை செய்வது குறித்து மத்திய , மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.

இதனையடுத்து தீர்ப்பு வெளி வந்த மறுநாள் ( நேற்று) தமிழக அமைச்சரவை கூட்டத்தை ஜெ., அவசரமாக கூட்டினார். இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்று, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும் 3 நாட்களுக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் ஜெ., கெடு விதித்தார்.

இந்த தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ராஜிவ்மகனான காங்., துணை தலைவர் ராகுல் கவலை தெரிவித்தார். ஒரு பிரதமரை கொன்றவர்களுக்கே இப்படி கருணை தெரிவித்து தண்டிக்காமல் விட்டு விட்டால் சாமானியமனிதனினுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை, மத்திய உள்துறை அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர்கள் ஆகியோர் டில்லியில் அவசர ஆலோசனை நடத்தி வனர். இதில் ராஜிவ் கொலையாளிகள் 3பேரை தப்பிக்க விடக்கூடாது என்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு முழு அளவில் இறங்கியுள்ளது.

1991 மே 21: ஸ்ரீபெரும்புதூரில், தாணு எனும் மனித வெடிகுண்டால், ராஜிவ் கொலை.

1998 ஜன., 28: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1999 அக்., 17: தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்த கருணை மனு, கவர்னரால் நிராகரிப்பு.

2000 ஏப்., 26: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதிக்கு கருணை மனு.

2011 ஆக., 26: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், கருணை மனுவை நிராகரித்தார்.

2011 ஆக., 30: தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி, சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம்.

2011 செப்., 9: மூவருக்கும் தூக்கு நிறைவேற்ற குறிக்கப்பட்ட தேதி. போராட்டம் மற்றும் சட்டசபை தீர்மானத்தால், தூக்கு தண்டனை நிறைவேறவில்லை.


readers views 


1. இரு பக்கமும் மாநிலம் மற்றும் மத்தியில் இந்த வழக்கு அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. இந்திய மக்கள் அனைவரும் காங்கிரஸ் அரசை வலுவாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தபின் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேறாமல் இவ்வளவு கால தாமதம் செய்ததற்கு என்ன பின்னணி....? மற்றும் பிரதமரை கொலை செய்தவர்களை சுதந்திரமாக வெளியே உலவ விடுவது தவறுதான். இது ஒரு தவறான முன் உதாரணமாகும். ஆனால் ..இதே ராகுலின் சகோதரி பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினிக்கு ஆறுதல் சொல்லி சல்லாபம் செய்தது என்ன நாடகம். இவ்வளவு ஆண்டுகள் ஏனப்பா தண்டனை நிறைவேற வில்லை. இதற்கு சட்ட ரீதியான மழுப்பல்கள் வரும். பொது மக்கள் நம்ப வேண்டாம். இது அரசியல் விளையாட்டுக்கள். இதில் கொலையாளிகளுக்கு கொண்டாட்டம். கொல்லப்பட்ட பிரதமருக்கு நீதி கிடைக்க வில்லை. மக்கள் அனைவரும் முட்டாள்கள் ஆக்கப்படுகிறார்கள். 



 2 கருத்து Swadhi முதல்வர் எடுத்த முடிவை குறைகூறுபவர்கள் , ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும்.. இந்த ஏழு பேரையும் ஏதோ நேரடியாக கொலையில் ஈடுபட்டது போல தான் சித்தரித்து வருகின்றனர்.. இவர்கள் கொலையை ஏதோ வேடிக்கை பார்த்தவர்கள் போலதான்.. கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எல்லாம் சம்பவ இடத்திலேயும், சைநைடூ குப்பிகளை விழுங்கியும், குண்டடி பட்டும் இறந்துவிட்டனர்.. நடக்கபோவது கொலை என்றே தெரியாமல் உதவியவர்கள் தான் இவர்கள்... அதற்க்கு பல ஆண்டுகள் விசராணை கைதிகளாகவே சிறைவாசம் அனுபவித்துவிட்டனர்.. விசாரணை என்கிற பேரில் பல சொல்லோனா துயரத்துக்கு ஆளாகியும்விட்டனர்.. 23 ஆண்டுகள் சிறையிலேயே களித்துவிட்டனர்.. நீதி மன்றம் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசிடம் தெளிவான பதில் இல்லை.. ஏன் பிரதிபா பாட்டில் கருணை மனுவை காலதாமதமாக பரிசிலித்தார். கோபித்து கொள்பவர்கள் மத்திய சட்ட அமைச்சகத்திடமும், உள்துறை அமைச்சகத்திடமும் , பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் மீது தான் கோபித்து கொள்ள வேண்டும்.


. அவர்கள் தான் நீதி மன்றம் கேட்ட கேள்வி கணைகளுக்கு திருப்தியான பதில் அளிக்கவில்லை.. முதல்வரை கோபித்து கொள்பவர்கள் , இந்த முடிவை ஆதரித்த கலைஞர்,வைகோ, ராமதாஸ்,திருமா போன்றோர்களையும் எதிர்த்து அறிக்கை விட வேண்டியது தானே காங்கிரஸ்... ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த நேர்மையான பல அதிகாரிகளே , ராஜீவ் கொலையில் அவிழ்க்க முடியாத பல மர்ம முடிசுகள் இருப்பதாக தெளிவாக தெரிவித்து உள்ளனர்.. இந்த ஏழு பெரும் செய்த குற்றத்திற்காக 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டனர்.. இது போதாது என்று தங்கள் ரெத்த உறவுகளை சசன்யா,வவுனியா, முல்லைத்தீவு,ஆனியறிவு,திரிகோணமலை என்று ஒன்றரை லட்சத்திற்கு மேல் இழந்துவிட்டனர்.. இன்னும் என்ன தான் வேண்டும் மத்திய அரசுக்கு.. ஒரு கொலைக்காக 23 ஆண்டுகள் மௌன அஞ்சலி செலுத்திய ஒரே இனம் நம் தமிழ் இனமாக தான் இருக்கும்.



3 ராஜீவ் மரணதிருக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சொல்லி கேட்க்கும் மத்திய அரசு இந்திரா காந்தி கொலைவழக்கில் பல குற்றவாளிகள் தப்பித்திருக்கலாம் அவற்றையும் மறு ஆய்வுக்கு நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவேண்டும் 




4  யோவ் வந்துடிங்கலழ் பெரிய சட்ட மேதை மாறி.ஏற்கனவே 20 வருஷம் ஜெயில் ல இருந்துதாங்க,அப்புறம் இவர்களுக்கு நேரடிய தொடர்பு இல்லன்னு வேற சொல்றாங்க.Atleast,இது நடந்ததுகான background தெரியாம,ஒரு தமிழன் என்ற அடிப்படை உணர்வு இல்லாம பேசாதிங்க.இலங்கை தமிழ்மக்களை,போராளிகளை india தன்னுடைய சுய லாபத்திற்காக,உருவாக்கி கொன்னுடாங்க.இப்போ சொல்லுங்க,தப்பு யார் மேல.பண்ணாத உருபுடிய,முழுமையா பன்னிர்கனும்,இப்டி பாதில உட்ட அப்டி தான் ஆகும்.எல்லாரும் சொல்ரிங்கல,அடிகடி தீவிரவாதம் இரு முனை கத்தி மாறி.இப்டி வர news ku ஏற்ற மாறி கமெண்ட் போடாம,உங்க சிறு மூளைய use பண்ணுங்க. 


thanx - dinamalar 

நாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா?- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை




ராகுல் காந்தி |
 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வேதனை தருவதாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 



எனினும், மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். 


ஜெகதீஷ்பூரில் உள்ள புராவ் கிராமத்தில் புதன்கிழமை உரையாற்றும்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது: 



மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் எனது தந்தை.அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி கேட்டு நான் வேதனைப்படுகிறேன். 



நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இது எனது இதயத்திலிருந்து ஒலிக்கும் குரல். 


பிரதமரை யாரோ ஒருவர் கொல்கிறார். அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றால் ஒரு சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும். மரண தண்டனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனது தந்தையை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. 


அதே வேளையில், இந்த விவகாரம் எனது தந்தை சம்பந்தப்பட்டது மட்டும் சார்ந்தது அல்ல. நாடு சார்ந்த விவகாரம் ஆகும் என்றார் ராகுல் காந்தி. 

ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி




ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 


இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறும்போது, "ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார். 



ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்" என்றார் சுப்பிரமணியன் சுவாமி. 


இதனிடையே, பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறும்போது, "தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வெறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்" என்றார். 



அதேவேளையில், "தமிழக அரசின் முடிவில் நான் எந்தத் தவறையும் பார்க்கவில்லை. இது கட்சியின் முடிவு அல்ல; தமிழக அரசின் முடிவு. இது அரசியலும் அல்ல. இதை அரசியல் விவகாரமாக நான் பார்க்கவில்லை. 



இது, சட்ட அமைப்பு விவகாரம். தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு விரும்பினால், அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது" என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா.

 thanx  - the tamil hindu




0 comments: