Friday, February 28, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (28 2 .2014 ) 13 படங்கள் முன்னோட்ட பார்வை

இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாக வருகிற 28ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீசாகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. டப்பிங் படங்கள் இந்த வரைமுறைக்குள் வராது.


கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சுமார் 200 படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீசாகவில்லை. இந்த புதிய கட்டுப்பாட்டால் அந்த படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. அறிவிப்பு வெளியான முதல் வெள்ளிக்கிழமையே 13 படங்கள் ரிலீசாவது திரையுலகிற்கு சின்ன அதிர்ச்சிதான். இந்த படங்களில் வல்லினம்,  மட்டுமே மீடியம் பட்ஜெட் படம். அதைத்தவிர பனிவிழும் மலர்வனம், அமரா, தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை, வங்கங்கரை ஆகியவை சிறு பட்ஜெட் படம். வெற்றி மாறன் (மலையாளம்), நான் ஸ்டாப், பறக்கும் கல்லரை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் (ஆங்கிலம்) கரன்சி ராஜா (தெலுங்கு) ஆகிய படங்களும் ரிலீசாகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

 
1.  வல்லினம் -ஈரம் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கியிருக்கும் படம் வல்லினம். எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் மெகா படத்தயாரிப்புக்கு இடையில் சிக்கி கடையினமாக வெளிவருகிறது. நகுல் ஹீரோ.




விளையாட்டை மையப்படுத்தி சினிமா எடுப்பது தமிழில் அரிது. அதிலும் பாஸ்கட் பால் போன்ற ஒரு விளையாட்டு? அரிதிலும் அரிது. அந்த ரிஸ்க்கை துணிந்து இதில் எடுத்துள்ளார் அறிவழகன். நகுல் இதில் பாஸ்கெட் பால் ப்ளேயராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் சவால், ஹீரோவைப் பார்த்தால் தோற்றத்திலேயே அவரின் விளையட்டு வீரர் லுக் தெரிய வேண்டும். இரண்டாவது ஓரளவுக்காவது பாஸ்கட் பால் ஆட தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டுக்காகவும் நகுலை ட்ரில் வாங்கியது படயூனிட். அவரும் முழுமையாக ஒத்துழைத்து, தமிழ்நாடு டீமில் இடம்பிடிக்கிற அளவுக்கு தோற்றத்தையும் திறமையையும் மெருகேற்றியுள்ளார்.
 
ஈரோடு அபிராமி யில்  ரிலீஸ்  
 
 
 
2.தெகிடி - என்றால் தாயம் போன்ற சூதாட்ட விளையாட்டுகளை குறிக்கும் சொல். ஏமாற்றுவதையும் தெகிடி என்ற பெயரில் குறிப்பிடலாம். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு ஆப்டான பெயர்.



ஜனனி அய்யர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். பெங்களூருவிலிருந்து சென்னை வரும் அவருடன் அசோக் செல்வனுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த புதிய உறவு என்னென்ன தொந்தரவுகளை சிக்கல்களை அளிக்கிறது, அதனை அவர் எப்படி அவிழ்க்கிறார் என்பதை சொல்லும் படம் (என்று எளிமையாக சொல்லலாம்). அசோக் செல்வன் கிரிமினாலஜி படிப்பை முடித்த பட்டதாரி என்பது படத்தின் கூடுதல் சுவாரஸியம்.

ஒரு கொலையின் பின்னணியில் நடக்கும் க்ரைம் ட்ராமா இந்தப் படம். நாளைய இயக்குனர் செஷன் டூ வில் முதல் பரிசு வென்ற பி.ரமேஷின் முதல் படம். அபினேஷ் இளங்கோவன், சி.செந்தில்குமார் தயாரித்திருக்கும் படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் வெளியிடுகிறார்.

நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் நாளை நம்மை த்ரில்லடைய வைக்க வருகிறது தெகிடி. படத்தின் சிறப்பு அம்சம் இதன் நீளம். இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய படம் இது.
 
ஈரொடு சண்டிகாவில்  ரிலிஸ்  
 
 
 
3. பனிவிழும்மலர்வனம் -பனி விழும் மலர்வனம்'. என்ற படத்தலைப்புக்கு பொருத்தமாக,கவித்துமான இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் படத்தை உருவாக்கியுள்ளார்கள் . மனதுக்கும் உடலுக்கும் இதமான, புத்துணர்வு தரும் தேக்கடி, குமுளி ஆகிய மலை வாசஸ்தலங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக்குழு. பனி விழும் மலர் வனம் படத்தை சிடிஎன் ப்ரொடக்சன்ஸ் படக்கம்பெனி தயாரிக்கிறது.

இயற்கையின் ஆற்றல் எங்கும் பரவியிருக்கிறது' என்ற புதுமையான கருவை அடிப்படையாகக் கொண்டு 'பனி விழும் மலர்வனம்' படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்கள். இயற்கை அழகை ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்க, திரை படைப்பை பதிவு செய்ய மலைகளின் காடு, மேடு பள்ளங்களில் அட்டைகளும் மற்ற இயற்கை உயிரினங்களும் தந்த வலியைப் பொருட்படுத்தாமல், கடினமாக உழைத்ததை கூறியிருக்கிறார்கள்.

கோலிவுட்டில் ஜீவா நடித்த 'ராமேஸ்வரம்', ஜித்தன் ரமேஷ நடித்த 'நீ வேணுண்டா செல்லம்' ஆகிய படங்களில் பணியாற்றிய ஜேம்ஸ் டேவிட் இப்படத்தை இயக்கியுள்ளார்.

'சுள்ளான்', 'மனதோடு மழைக்காலம்', 'ஜனனம்' ஆகிய படங்களின் கேமராமேன் ராகன் ஒளிப்பதிவில் , இயக்குநர் ஷங்கருடன் 'நண்பன்' படத்தில் பணியாற்றிய, தமிழ் சினிமாவின் விருது பட கலை இயக்குனர் டி.முத்துராஜ் கலை இயக்கத்தில், ராஜின் இசையமைப்பில், ரவிஷங்கர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

'நீதானே என் பொன் வசந்தத்தில்' நாயகனாக நடிப்பதாக இருந்த அபிலாஷ் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' என்ற படத்தில் நடித்த சாய்னாதான் நாயகி. பேராண்மையில் ஐந்து பெண்களில் ஒருவராக அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான 'நீர்ப்பறவையில்' போலீஸ் ரோலில் கவனிக்க வைத்த வர்ஷா மற்றுமொரு கதை நாயகி.  அமைதிப்படை 2 படத்திலும் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பை நகைச்சுவை நடிகர் பாப லக்ஷ்மண் ஏற்றிருக்கிறார். இயக்குநர் ஜெகனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கண்கவரும் இடங்களில், தேர்ந்த நடிகர்கள் மற்றும் திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களைக் கொண்டு தயாராகிவரும் 'பனிவிழும் மலர்வனம்' ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு 'Incredible India' வின் ஆச்சரியங்களைப் பறைசாற்றக்கூடிய படமாக இருக்கும் என்கிறது 'பனி விழும் மலர் வனம்' படக்குழு.  
 
ஈரோடு அண்ணா வில்  ரிலீஸ்  
 
 
 
4 அமரா-ஞாபகங்கள்’ படத்தையடுத்து ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் படம் ‘அமரா’. இதில் புதுமுகம் அமரன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ‘களவாணி’ ஓவியா ஒப்பந்தமாகியிருந்தார். திடீரென்று அவரை நீக்கிவிட்டு ‘காதலர் குடியிருப்பு’ ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளனர். இதுபற்றி ஜீவனிடம் கேட்டபோது, “ஹீரோயினாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரது கால்ஷீட் பெறுவதில் பிரச்னை வந்தது. கதைப்படி ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. எப்போதும் தளத்தில் இருக்க வேண்டி இருக்கும். ஆனால், அவரால் அப்படி வர முடியாது என்றார். இதனால் அவருக்கு பதில் ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளோம்” என்றார். 
 
 
ஈரோடு கிருஷ்ணா வில்  ரிலீஸ் 
 
 
வெற்றிமாறன் IPS’’ (karmayotha-malayalam)- வி.எஸ். நாராயணன் வழங்க ஸ்ரீபாரதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.என்.பாரதி தயாரிக்கும் படம் “வெற்றிமாறன் IPS’’ 

மலையாளத்தில் “கர்மயோதா” என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே “வெற்றிமாறன் IPS’’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.


‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லால் கதாநாயகனாக அதிரடி போலீஸ் அதிகாரி வெற்றிமாறனாக நடித்திருக்கிறார். மற்றும் சோனா, சாய்குமார், ரியாஸ்கான், சுகுமாரி, முகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு பிரதீப் நாயகர் ஒளிப்பதிவு செய்ய எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைக்கிறார்.


படம் பற்றி இயக்குனர் மேஜர் ரவி கூறியதாவது,


”இது நான் இயக்கியுள்ள ஏழாவது படம். ‘அரண்’ படத்தை மோகன்லால், ஜீவா நடிக்க உருவாக்கினேன். நல்ல பெயர் கிடைத்தது.


பெற்றோர் தங்களின் பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்கிறோம். அவர்கள் எது கேட்டாலும் வாங்கித் தந்து விடுகிறோம். செல்போன் மற்றும் லேப் டாப் உட்பட வாங்கிய அவர்கள் எந்த மாதிரியான விஷயத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. தவறான பாதையில் அவர்கள் போவதற்கும் காரணமாகிவிடுகிறது.


பத்து வயது பெண்கள் கூட பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தும் கொடுமையையும் இதில் தோலுரித்து காட்டுகிறேன்.


நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் மோகன்லால் “வெற்றிமாறன் IPS” படத்தில் நடித்திருப்பது எனக்குப் பெருமையே, ”என்றார் மேஜர் ரவி.

ஈரோடு சீனிவாசா வில்  ரிலீஸ் 

வல்லினம் (அபிராமி),தெகிடி(சன்டிகா ),பனிவிழும்மலர்வனம்(அண்ணா)அமரா(கிருஷ்ணா)வெற்றிமாறன்(சீனிவாசா).LERANKENSTEIN (VSP)#28 2 14 @ஈரோடு
 

0 comments: