Friday, January 10, 2014

வீரம் - சினிமா விமர்சனம்


ஒட்டன்சத்திரம் - இந்த ஊர் ல  ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை  தனித்தனியா லவ் பண்றாங்க .இப்டியே  அண்ணனை விட்டா  அவர்  நம்ம எல்லாரையும்  பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு  ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம்  கூட சேர்ந்து  ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள் , கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம்  ஜாலியாப்போகுது .


இவர் ஊருக்கே  எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப்.அவங்கப்பாவும்  அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ  நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு.போகும்போது  ரயில் ல  ரவுடிகள்  தாக்க வரும்;போது ஹீரோ  செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கைப்பார்த்து  ஷீலா தீட்சித் மாதிரி .இடைவெளை.


அதுக்குப்பின்  ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே  இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்டி  கரை சேர்க்கிறார்? என்பதே  மிச்ச மீதிக்கதை 


ஆரம்பம் அதிரடிப்படம்  கொடுத்து அடுத்த 70 வது நாளில்  ஒரு  வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம  கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள்  ஒரு ஹீரோ  படம்  ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க . அந்த பாணியில் இருந்து  விலகி அஜித் இதில்  விநாயகம் கேரக்டரில்  நடிச்சுப்பட்டையைக்கிளப்பி இருக்கார் . 


இவர் வசனம் பேசும் காட்சிகளில்  பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே  கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி  இருக்கார். 

என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து  3 சாப்பிட நேரும்போது  கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்& பெப்பர்  லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக  தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும் , ஒரு படம் அப்படி , அடுத்த படம் இப்படி என மாத்தனும் .


டூயட் காட்சிகளில்  நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு  ஓக்கே . 


சந்தானம்  இதிலும்  கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தபப்டத்தில் வந்தாலும்  ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர் இதில் பம்மி  இருப்பது ஏனோ? அவர் அடிக்கும்  ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில்  தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல .


 இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது, 

தமனா தான்  ஹீரோயின் . பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்ப்தால்  முடிந்த வரை  கண்ணீயமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர் ? ) 


விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே . கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் . 


இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி  சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என  தெரியாமல்  காமெடிக்காட்சிகளை வெச்சு  ஒப்பேத்தி  இருக்காங்க . 



சபாஷ் சத்யா 


1. படத்தில்  அஜித் வரும் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் வழக்கம் போல் கெத்து. மழையில்  குடையுடன்  வரும்  மாஸ்  சீன் , ரயில்  ஃபைட்டுக்கான ஓப்பனிங்க் பில்டப் , க்ளைமாக்ஸ் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அருமை 



2. ஹீரோ அண்ட்  கோ அமைதியான குடும்பம் என அறிமுகப்படுத்தி எல்லோரும் சாப்பிட உட்காரும்போது செல் ஃபோன்  ரிங்க் டோனாக “அட்ரா அட்ரா நாக்கு முக்க “ பாட்டு ஒலிப்பதும் நாசர்   திகைப்பதும்  செம காமெடி 



3. ஹீரோ , ஹீரோயின் இருவரின்  ஓப்பனிங்க் காட்சிகளில் சமாதானப்புறா பறக்க விடுவது , ஒரு காட்சியில்   நிர்மூல வானத்தின் பின்னணியில் கழுகு ஒன்று மேலே பறக்க அஜித்க்கு  கிரவுண்ட்   ஷாட் ஆங்கிளில்  பில்டப்  கொடுப்பது எல்லாம் அக்மார்க்  அஜித் ஸ்டைல் பிராண்ட்.விநாயகம்  என்ற பெயரில்  தீப ஒளிவிளக்கு வரிசை வருவது  வீரா படத்தில் மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாட்டின் ஓப்பனிங்க் லீடில்  இருந்து  உருவப்பட்டிருந்தாலும்  நேர்த்தியான காட்சி 


4.  ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இடைவேளை வரை கலகலப்பாக நகரும்  குடும்பக்கதை படத்துக்கு பெரிய பிளஸ். ஆல் செண்ட்டர் ரசிகர்களும் ரசிக்கும்படி முன் பாதி அமைஞ்சிருக்கு 


சொதப்பல் சொப்னா 


1. பெட்ரோல் பங்க்கில் மோதி கார் வெடிக்கும் காட்சி  மிக மோசமான கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ் ஒர்க் . இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம் . 


2. பின் பாதியில்  வரும் காட்சிகள்  சோர்வைத்தருது. என்ன நடக்கப்போகுது என்பதை எளிதில்  யூகிக்க முடியுது . அஜித் மாதிரி  ஒரு மாஸ்  ஹீரோவை பின் பாதியில்  ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது  இரிட்டேட்டிங்க்.


3.அஜித்க்கு பாடல் காட்சிகளில்   அணிவித்த  கூலிங்க் கிளாஸ் ஃபிரேம்  மேட்ச் ஆகலை . ரேபான் மெல்லிய ஃபிரேம் தான் செம கெத்து 


4. எஜமான் , சின்னக்கவுண்டர் படங்களில்  வில்லன்கள் ஏதாவது பெரிய சதி வேலைகள் செய்வாங்க, அதை  ஹீரோ முறியடிப்பார். இதில் அது மாதிரி  சுவராஸ்ய   முடிச்சுகள்  இல்லை 


நச் டயலாக்ஸ் 


சந்தானம்


1.  இங்கே பாருங்க வக்கீல் சார்.....

 அங்கே எல்லாம் பார்க்க  முடியாதுங்க , யூ புரொசீட்



2.  மழை வர்றதுக்கு முன்னே காய வெச்சிருக்கும் துணிகளை எடுத்துவிடுவது மாதிரி , மூஞ்சில அடிக்கும்  முன்  முன் ஜாமீன் எடுத்து வெச்சுடுவோம் 


3.  ஆடு அரிவாளை வாய்ல கவ்விட்டு வந்து  என்னை வெட்டு வெட்டுங்குது 


4.  சாரி அக்கா , என்னை மறந்துடு


 என்னது ? அக்காவா?

 பின்னே, பொண்ணுங்க மட்டும் தன்னைக்காதலிச்சப்பையனை கழட்டி விடும்போது அண்ணன், தம்பி அப்டினு சொல்ற மாதிரி பசங்க ஏன் காதலியை கழட்டி விட அக்கா, தங்கைன்னு அள்ளி  விடக்கூடாது? 



5.  நாங்க போறோம்.

 ஏன்? பம்பு செட்ல போய் இரண்டு பேரும் மீதிக்குளியலைப்போடறதுக்கா? 



6.  ரொம்ப நேரமா உன் மூஞ்சியைப்பார்த்துட்டு  இருக்க முடியலை, சீக்கிரம் சொல்லு உன் ஃபிளாஸ்பேக்கை 




7. பைலைப்போடுங்கடா கீழே 


 போலீசைப்போட வேணாமா?

 அட, கலவரத்துக்குப்பிறந்தவங்களா!


8. வாசக்கதவைச்சாத்திட்டியா?

லேடி - ம் 


கொல்லைக்கதவை?

 ம்

 ஜன்னல் கதவை?

 பீரோக்கதவைக்கூட சாத்தியாச்சு , வாங்க 


9. நான்  சொன்னபடி செய்யலை, இன்னைக்கு ராத்திரி நீ திராட்சை சாப்பிட முடியாது  ( டபுள் மீனிங்க் )



10 உன்னை அசிங்கப்படுத்தறதுல ஒரு அரசாணையே வெளியிடலாம் போல 


11 முதன் முதலா எங்கண்ண,ன் கண்ணாடியைப்பார்க்கறாரு 

 அப்போ இத்தனை நாளா செங்கல்லைப்பார்த்தா ஷேவிங்க் செஞ்சாரு ? 


12  டேய், கடைசி வரை நீங்க அண்ணி கையால சாப்பிடவே மாட்டீங்க , இந்தப்பன்னி கையால தான் சாப்பிடுவீங்க 



13  ஏண்டா, தம்பிங்க எனும் போர்வைல நீங்க எல்லாம் மாமா வேலை தானே பார்த்துட்டு இருந்திருக்கீங்க ?


14   வண்டியைத்தள்ளி ஸ்டார்ட் பண்ணத்தேவை இல்லை போல, தானா ஸ்டார்ட் ஆகிடும் போல ( டபுள் மீனிங்க் ) 


15  அதெப்பிடிடா இஞ்செக்சன் போட்டுக்கற குழந்தை மாதிரியே மூஞ்சியை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுது ? 
டேய்  பிசையறதை  நிறுத்துடா , கண்  கொண்டு பார்க்க முடியலை 


16  பீடி ஊதற வாயை வெச்சு பீ பீ ஊத வெச்சுடுவான் போல  இருக்கே?


17   ஆடத்தெரியாத  சிலுக்கு  கால்லசுளுக்குன்னாளாம்


18.  பறவை மேல இவ்ளவ் பாசத்தைக்காட்ட காரணம் ?


 டேஸ்ட் தான் 


19  ஐ  கோழி 

 பின்னே வீராட் கோலின்னா சொன்னேன்?


20   நீங்க ஒரு நல்ல குடும்பப்பொறுக்கின்னு பாப்பா சொல்லுது 


21  வீட்ல விளக்கேத்தலை ?

 லாரி டிரைவர் பின்னால போய் இருக்கார் ,வந்ததும் எல்லா விளக்கையும் ஏத்திடுவார் 


22  தமனா - விளக்கேத்த  ஹெல்ப் பண்ணுங்களேன் 


அஜித் - டியூப் லைட் போட்டுக்குங்க , நல்ல வெளிச்சம்  கிடைக்கும் 


23 , அவங்க என்ன குழம்பா ஊத்தறாங்க? போதும் போதும்னு சொல்ல? பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கடா 


24  மாலை போடச்சொல்லிக்குடுத்தாங்களே, ஜட்டி போடச்சொல்லிக்குடுத்தாங்களா?


25   எங்கண்ணன்  கெஞ்ச ஆரம்பிச்சார்னா அனக்கோண்டாவே அழும் 


26  அவரைக்குத்து மதிப்பா எடைப்போட்டுடாதீங்க . குத்து - மதிப்பா எடை போடுங்க  


27 அந்தக்காலத்துலயே எங்கப்பா தினமும் 1000பேருக்கு சோறு போட்டவரு. சந்தானம் - ஏன்? உங்கப்பா ஹோட்டல்ல சர்வரா இருந்தவரா? # ஜோக் உ ராஜாஜி @ சாவி

28 எல்லாரும் மூட்டையைக்கட்டுங்க. சந்தானம் - ஏன் ? துணி துவைக்கப்போறியா?

29 சந்தானம் - நைன்ட்டி ( கட்டிங்) அடிச்ச ஆன்ட்டியைக்கூட நம்புவாங்க.நைட்டி போட்ட உன்னை மாதிரி ஆம்பளையை நம்ப மாட்டாங்க

30 தலைகால் புரியாம ஆடிட்டேன்.இப்போ தான் தல எது ? வால் எது?னு தெரியுது # வில்லன்


அஜித் பஞ்ச்

சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும்.அவன் தான் மனுசன்

2 இது என் குடும்பம்.இவங்களை அடிக்கனும்னா என்னைத்தாண்டி தாஆஆண்டி த்தொட்றா பாக்கலாம்

3 சுடுகாட்டுக்கு எப்டிப்போகனும்னு கேட்டாங்க.நான் வழி சொன்னேன்.இந்நேரம்் போய்ச்சேர்ந்திருப்பாங்க

4 நீ கண்ணை மூடி 8 வரைக்கும் எண்ணு அதுக்குள் அங்க்கிள்் எல்லாரும் ஒளிஞ்சுக்குவாங்க

நம்ம கூட இருக்கறவங்களை நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மைப்பாத்துக்குவான் # 2014 ன் முக்கிய வசனம்

பொண்ணு னு ஒருத்தி நம்ம வாழ்க்கைல வந்துட்டா அவளுக்காக நாம் மாற வேண்டி இருக்கும்.ஏன் இந்த கஷ்டம்? நாம் நாமாவே இருப்போம்

7 நான் ம் னு சொன்னா 4 பேரும் உன்னை உழுதுடுவாங்க

8 எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

9 4 பேர் தான் இருக்கீங்க. 5 பேர் னு சொல்றே.யார் அந்த அஞ்சாவது ஆள் ? 
யாருக்கும் அஞ்சாத ஆள் !

10 நீ எந்த ஜாதின்னு நினைக்கறயோ அந்த ஜாதி. உழைக்கிற ஜாதி

11 இனி விதைச்ச விவசாயி தான் ரேட்டை நிர்ணயம் செய்வான்

12 சாப்பாடு போட்டு அதுக்கப்புறம் ஏன் வெளுத்து வாங்கறீங்க? ஏன்னா அடி வாங்க உடம்பு ல தெம்பு இருக்கனும் இல்ல




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. வீரம் ,ஜில்லா 2 ம் சரி விகிதத்தில் + - இருப்பதால் 2 ம் ஒரே ரேட்டிங்கில் .மக்கள் தீர்ப்புக்காக ஐ ஆம் வெய்ட்டிங்.என்ன நான் சொல்றது?

2 அஜித் அடிக்குரலில் வசனம் பேசும் ஸ்டைல் செந்தூரப்பூவே வில் கேப்டன் பேசுவது போல். குட்

3 ரசிகர்கள் அல்லாத பொது ஜனங்களைக்கவர்வதில் ஜில்லாவை விட வீரம் முன்னிலை # இடை வேளை வரை

4 வீரம் இடைவேளை வரை சந்தானம் காமெடி ,அஜித் ஷார்ப் டயலாக் டெலிவரி னு ஜாலியாப்போகுது.பேமிலி ஆடியன்சை அதிகம் வர வைக்கும் கதை சம்பவங்கள்+

இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ரயில் பைட்டுக்கான ஓப்பனிங் பில்டப் தீனா பட காபி ஷாப் பைட்க்கு இணையான சீன்

6 தமனாவை குட்டைப்பாவாடையில் பாடல் காட்சியில் பார்த்ததும் GOOD டைப்பாவாடை என தோணுது

7 பைக் ஓட்டும்போதும் கை தட்னாங்க.மாட்டு வண்டி ஓட்னாலும் தட்றாங்க

8 அஜித் தமனா ஜோடிப்பொருத்தம் சுமார் தான் னு சொல்றவங்க தயிர் சாதம் VS லெமன் பிக்கிள் காம்பினேசனை கிண்டல் பண்ற மாதிரி # லெமனா வந்த தமனா

9 இனி ஏறுமுகம் தான் என்பதை சிம்பாலிக்கா சொல்வது மாதிரி தமனாவுக்கு ஓப்பனிங் ஷாட் கிரேன் ஷாட்

10 இன்னொரு டெண்டர் இருக்கு டயலாக் முடிந்ததும் கொட்டும் மழையில் குடையுடன் அஜித் வரும் காட்சி மாஸ் சீன்

11 ஒட்டன் சத்திரம் வெற்றிச்சித்திரம்

12 அஜித்தின் ஓப்பனிங் சீன் எஜமான் ரஜினி மாதிரி .சமாதானப்புறாக்கள் பின்னணி ல வருதே அது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

13 விஜயா புரொடக்சன் டைட்டில் ஐடியா சூப்பர்.எம் ஜிஆர் ,ரஜினி வரிசையில் அஜித்



சி பி கமெண்ட்ஸ் 

வீரம் - பேமிலி ஆடியன்சைக்கவர்ந்திழுக்கும் முன் பாதி , யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி - 


விகடன்மார்க் =43


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


,ரேட்டிங் =3.25 / 5

ரஜினிக்கு ஒரு எஜமான்.கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர் .அஜித்துக்கு ஒரு வீரம்

திருப்பூர் டைமண்ட் தியேட்டர் . வீரம் . மதியம் 1 மணி ஷோ .திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் உடன் பார்த்தேன்


டிஸ்கி: ஜில்லா-சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2014/01/blog-post_10.html 

2 comments:

Felix said...

முரட்டுக்காளை"யும் "கிரி" யும் கலந்த கலவை போல தெரியுது...

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு விமர்சனம்.. உங்கள் பக்கமிருந்து பாஸிட்டிவ்வாய்...
வாழ்த்துக்கள் அண்ணா...