Friday, January 03, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (3.1.2014 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை

1.அகடம் -லாஸ்ட் பெஞ்ச்  பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் அகடம் இதில் புது முகங்கள் ஸ்ரீநிஅய்யர், பாஸ்கர், தமிழ், கலை சேகரன், எஸ்.சரவணன் பாலாஜி, ஸ்ரீபிரியங்கா, அனிஷா  ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசட். முஹம்மத் இசாக்  இயக்குகிறார்.



சில வருடங்களுக்கு முன் தமிழகத்தையே உலுக்கி எடுத்த   ஒரு உண்மை   சம்பவத்தை மையமாக வைத்து  இப்படம் தயாராகிறது என்று அவர் சொன்னார். திடுக்கிடும் திருப்பங்கள், சஸ்பென்ஸ் மர்மங்கள்  நிறைந்த  திரில்லர் படமாக உருவாகிறது. கின்னஸ் சாதனைக்காக ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுக்கின்றனர். மொத்த படப்பிடிப்பும் இரண்டு  மணி நேரங்களே  நடக்கிறது. இரவு நேரத்திலேயே  படப்பிடிப்பை நடத்துகின்றனர். 

ஒளிப்பதிவு: நௌஷாம், இசை: ஷ்யாம் பெஞ்சமின். 
சிங்கிள் ஷாட்டில்  எடுக்கப்பட்ட படம்
.ஈரோட்டில்ரிலீஸ்  இல்லை.  
 
2.  என் காதல் புதிது - கல்லூரி காதலையும், அந்த காதலர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கருவாக வைத்து உருவாகி வரும் புதிய படம் என் காதல் புதிது. இந்த படத்தில் ராம்சத்யா கதாநாயகனாகவும், உமாஸ்ரீ, நமீதா பிரமோத் ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்க, ஜி.எம்.குமார், பாண்டியராஜன், லொள்ளு சபா ஜீவா, அல்வா வாசு, பாய்ஸ் ராஜன், பாலாஜி, ஸ்ரீலதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.
புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சத்யதேவ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை மாரீஷ்குமார் கவனிக்கிறார். வீரா மூவீஸ் சார்பில் டி.விஜயகுமார், எஸ்.சரவணன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி, கோத்தகிரி, கோவளம் மற்றும் கேரளாவில் இந்த படம் வளர்ந்து இருக்கிறது.

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை

 

3. நம்ம கிராமம்-நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான்  ‘நம்ம கிராமம்’படம்
 இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு– சொல்லாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக சொல்லப்பட்டு இருக்கும் படம் ‘நம்ம கிராமம்.’ இப்படத்தில் நடித்த நடிகைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் அம்மா நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.



அப்படிப்பட்ட ‘நம்ம கிராமம்’ படத்தை இயக்கியிருப்பவர் மோகன் சர்மா. இவர் புனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.இவருக்குப் பல பெருமைகள் உண்டு. தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 170 படங்களில் நடித்தவர்; 17 படங்களைத் தயாரித்தவர்;கதை, திரைக்கதையாசிரியர்.தமிழில் ‘தூண்டில்மீன்’ ‘நாடகமேஉலகம்’ ‘ஜெனரல் சக்கரவர்த்தி’, ‘ஏணிப்படிகள்’, ‘சலங்கைஒலி’போன்ற படங்களிலும் மலையாளத்தில் ‘சட்டக்காரி’, ‘நெல்லு’, ‘சலனம்’, ‘பிரயாணம்’,'ஜீவிக்கான் மறந்து போய ஸ்திரி’ ‘தீக்கனல்’ ‘கயலும் கயிறும்’ போன்ற  படங்களிலும் இவர் குறிப்பிடத்தக்க வேடத்தில் தோன்றி நடித்தவர்.


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக 2002–ல் பொறுப்பு வகித்தவர். தேசிய விருது தேர்வுக் குழுவிலும் சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்தியன் பனோரமா படங்கள் தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றவர். தாதா சாஹேப் பால்கே சாதனை விருதுக்கு தென்னிந்திய பிரதிநிதித்துவ உரிமையைப் போராடி பெற்றவர். அதன் பிறகுதான் தென்னிந்தியர்கள் விருது பெற ஆரம்பித்தனர்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தயாரிப்பிலும் நடிப்பிலும் தொடர்ச்சியாக இயங்கி வந்த இவருக்கு தான் படம் இயக்கினால் வழக்கமல்லாதபடியும் சமூகச் சிந்தனையுடனும்தான் இயக்கவேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அதன்படியே தன் மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த உண்மைச் சம்பவத்தை எழுதி இயக்கியுள்ளார்.


இப்படத்துக்கு 2012-ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக சுகுமாரிக்கும் சிறந்த உடைகள் அமைப்புக்காக இந்திரன் ஜெயனுக்கும் என இரண்டு தேசியவிருதுகள் கிடைத்தது படத்தின் பெருமைகளில் ஒன்று.


தேசியவிருது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள தமிழக முதல்வரைச் சந்தித்த சுகுமாரியிடம் வாழ்த்து கூறிய முதல்வர், படம் பற்றி விசாரித்துள்ளார். சுகுமாரி படம் பற்றிக் கூறியதும் ஆர்வமாய் பார்க்க விரும்பி பார்த்ததுடன் நெகிழ்ந்து பாராட்டியும் இருக்கிறார். இது இன்னொரு பெருமை.


படம் பற்றி மோகன் சர்மா கூறுகையில் “இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவம். இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. நம் நாட்டில் ஜாதிக் கொடுமை எந்த அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது என்பதற்கும் சமுதாயத்தில் பாதியளவு உள்ள பெண்களுக்கு எவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உண்டு. என்னைப் பாதித்த ஒரு கிராமம் பற்றியதுதான் இப்படம். ஒரு அக்கிரகாரத்தில் நடப்பவைதான் இந்தக் கதை. “என்கிறார்.


புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தீவிர யதார்த்த சினிமா தாக்கம் கொண்டவர்கள். மோகன் சர்மா எப்படி?
 

“நான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தபின் நண்பர்கள் ஏன்  இந்த வேண்டாத வேலை என்று.கேட்டனர். இந்தக் கதையைத்தான் எடுப்பது என்று நான் பிடிவாதமாக இருந்தேன்.  17 படங்களைத் தயாரித்திருக்கிறேன். இயக்கினால் இதைத்தான் இயக்குவது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தப்படம் எடுத்ததில் எனக்கு ஒரு லட்சியம்– நோக்கம் இருந்தது. எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்துள்ளது. இது விறுவிறுப்பாகவும் யதார்த்த தன்மையுடனும் இருக்கும். ஆவணத்தைப் போல அவ்வளவு உண்மைத் தன்மையுடனும் இருக்கும். இது யதார்த்த சினிமாவுக்கான இலக்கணம் சிறிதும் மாறுபடாமல் இருக்கும்.” என்கிறார் நம்பிக்கையுடன்.

படத்தின் நாயகன் நிஷாந்த் நாயகி சம்ருதா இருவரும் புதுமுகங்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பாத்திமாபாபு, நளினி ஆகியோருடன் மோகன் சர்மாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


ஆவணங்களின்படி இது 100 ஆண்டுக்கு முன் நடந்த கதை என்றாலும் இப்படத்தின் கதை 1935 ல் தொடங்கி 1947 ல் முடியும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அக்காலச் சூழல்படி கதை, நிகழ்விடம், காட்சிகள் அமைக்க மிகவும் சிரமப்பட்டு ஆய்வு செய்து விவரம் சேகரித்துள்ளனர். இடம், மனிதர்கள், உடைகள், சாதனங்கள் பற்றி தீவிர கவனம் செலுத்தி எடுத்துள்ளனர். கோவை அருகில் தத்தமங்கலம் என்கிற ஊரில்தான் படத்தின் பெரும்பகுதி  எடுக்கப்பட்டுள்ளது.காட்சிப் பின்புலத்தை உருவாக்க கலை இயக்குநர் பாவாவும் ஏற்ற ஒளியமைப்பு செய்ய ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டும் நிறையவே உழைத்துள்ளனர்.இசை- பி.என். சுந்தரம். படத்தொகுப்பு- பி.லெனின். இயக்கம்- மோகன் சர்மா.தயாரிப்பு-குணசித்ரா மூவீஸ்.


ஜனவரி 3-ல் ஒவ்வொரு ஊரிலும் பேசப்பட வருகிறது ‘நம்ம கிராமம்’.

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 
 
4 கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு-அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் புத்தம் புதிய திரைப்படம் ஒன்று தற்போது தயாராகி வருகிறது. ‘கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தினை டி.எஸ்.கே. புரடெக்சன் கோவிலம்பாக்கம் டி.சிங்காரம் தயாரிக்க ஸ்ரீ கிருஷ்ணா இயக்குகிறார். ஒற்றை வரியில் படத்திற்கு பெயர் வைப்பது போய் இப்போது நீளமாக பெயர்வைக்க ஆரம்பித்துவிட்டனர். முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் சிங்காரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
DSK புரொடக்‌ஷன் சார்பில் கோவிலம்பாக்கம் D.சிங்காரம் தயாரிப்பில் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கும் படம் கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு.


இத்திரைப்படத்தில் புதுமுக நாயகன் ஆதவராம், கதாநாயகிகளாக பிரியா, மஞ்சு ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் D.சிங்காரம் முக்கியமான கதாபாத்திரத்தில் நமது பாரம்பரியக் தற்காப்புக் கலையான சிலம்பாட்டக் கலை வீரராக நடித்திருக்கிறார். கலைஞர் டிவி பொதுமேளாளர் பிளாரென்ஸ் பெரைரா காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.


சகோதரிக்கு இழக்கப்பட்ட அநீதிக்காக ஒரு சகோதரன் போராடும் கதைக்களமே “கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு” படம்.


இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஓசூர், பொன்னெரி, கோவிலம்பாக்கம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணா. முரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். திவ்யகவி, எஸ்.கே.விஜயன் மற்றும் சுபாஷ் எழுதும் பாடல்களுக்கு இசையமைக்கிறார் எஸ்.பிரேம். நடனத்தை ராக் ஷங்கர் கையாள, திகில் சேகர் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.


விறுவிறுப்பாகவும் ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்டுகளும் நிறைந்ததாம் இத்திரைப்படம்

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 

5அத்திமலை முத்துப்பாண்டி-.மலையூர் மம்பட்டியான், வாட்டாக்குடி இரணியன், கும்பக்கரை தங்கையா போன்று கிராமத்து தாதா கம் ஹீரோவாக இருந்தர் அத்திமலை முத்துப்பாண்டி, திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்தவராம். இப்போது இவரது வாழ்க்கையை சினிமாவாக தயாரித்து வருகிறார்கள். படத்தின் பெயரும் அத்திமலை முத்துப்பாண்டிதான். சாரதி ஆறுமுகம் என்பவர் அத்திமலை முத்துப்பாண்டியாக நடிக்கிறார். சொப்னா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடி. தஞ்சை ரகுபதி என்பவர் இயக்குகிறார்.

அவர் கூறியதாவது: 1980களில் வாழ்ந்தவர் முத்துப்பாண்டி. அத்திமலை காட்டுக்கே ராஜா மாதிரி அவர். இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களிடம் கொடுத்தவர். வீரத்தால் வளர்ந்தவர். துரோகத்தால் வீழ்ந்தவர். அவரது வாழ்க்கையே அவர் காலத்தில் இருந்த சினிமா ஸ்டைலிலேயே படமாக எடுக்குகிறோம். அவர் வாழ்ந்த பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். என்றார்.


ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 
6 முன் அந்தி சாரல்-இது  ஏதோ கில்மாப்படம் போல .கூகுள்கூகு:ள்பண்ணிப்பார்த்தேன்,கிடைக்கவில்லை

ஃபோகஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேவேந்திரன் இயக்கத்தில் யூதா ஷாலோம் இசையமைத்துள்ள படம். அன்சார், ஆனந்த், முரளி, நட்சத்திரா, சங்கவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


7செல்லாயி குமரேசன்-இது  ஏதோ  லோ  பட்ஜெட் படம் போல.

ஈரோடு  சங்கீதாவில் ரிலீஸ்


8.விக்ரம் தாதா-நந்தினி வழங்கும் ஸ்ரீ லக்ஷ்மிஜோதி கிரியேசன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே தமிழில் பிசினஸ்‌மேன், டைகர் விஷ்வா போன்ற படங்களையும், மலையாளத்தில் அதூர்ஷ், நாயக் போன்ற படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் சார்பாக ‌ஏ.என்.பாலாஜி, கோவிந்தராஜ் இருவரும் இணைந்து, தெலுங்கில் ‘‘பெஜவாடு’’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘‘விக்ரம் தாதா’’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

இதில் நாகசைதன்யா கதாநாயகனாகவும் அமலாபால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், அஜெய், அபிமன்யூசிங், முகுல்தேவ், சுபலேகா சுதாகர், அகுதிபிரசாத், சத்யபிரகாஷ், பிரமானந்தம், அஞ்சனா சகானி, எம்.எஸ்.நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர்.


ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய புள்ளியின் வலதுகரமாக திகழும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்படுகிறான். அவனை மீட்டெடுக்கும் தம்பியின் ஆக்ஷன் படம்தான் ‘‘விக்ரம் தாதா’’. நாகசைதன்யா மிகப்பெரிய ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. இப்படத்தில் அமலாபால் கிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.


இப்படத்திற்கு கார்கோ, ஜெயமுரசு, சுதந்திரதாஸ், உவரி க.சுகுமாரன் பாடல்கள் எழுத, அல்மொகிலே, பிரதீப் கொனேரு, பிரேம் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். ஏ.ஆர்.கே.ராஜராஜ் வசனம் எழுதி தமிழாக்கம் பொறுப்பேற்றிருக்கிறார். விவேக் கிருஷ்ணா இயக்கத்தில் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார்.
ஈரோடு,ஸ்டார், ரிலீஸ்

9.கும்கி வீரன்-புரூஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லீ வரிசையில் இப்போது சைனீஸ் படங்களின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார் டோனிஜா. இவர் நடித்த ஓங் பேக் படத்தில் யானைப் பாகனாக நடித்திருந்தார். யானை கூட்டங்களின் மேலே பறந்து பறந்து சண்டை போடுவார். அதனால் இப்போது வெளிவரவிருக்கும் அவரது டோம் யுங் கோன்ங் 2 படத்திற்கு கும்கி வீரன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஓங் பேக் டைரக்டர் பிரச்சாய் பிங்கே, ஸ்டண்ட் டைரக்டர் கிட்டிகேரி டோனிஜா ஆகிய மூவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படத்தில் 20 நிமிடங்கள் இடம்பெறும் பைக் சேசிங் படு திரில்லாக இருக்குமாம். ஹாலிவுட் படங்களை தரவரிசைப்படுத்தும் ஐஎம்டிபி அமைப்பு இந்தப் படத்துக்கு 7.3 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. இதன் தமிழ் பதிப்பு வசனத்தை ராஜா எழுதுகிறார். இண்டோ ஓவர்சீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டூடியோ ரிலீஸ் செய்கிறது.
 ஈரோட்டில் ஆனூர்,விஎஸ்பி 2 தியேட்டர்களில் ரிலீஸ்

 
10.அம்மா அம்மம்மா-ஆ. சந்திர சேகர் திரைக்களம் தயாரிப்பில் பாலு மணிவண்ணன் இயக்கத்தில் எம்.வி. ரகு இசையமைத்துள்ள படம். சம்பத், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


 ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை



11.



11.ஜெ.சி.டேனியல்- மலையாளத்தில் ரிலீசான படம், ‘செல்லுலாயிட்’. தமிழகத்தில் பிறந்து, முதல் மலையாளப் படத்தை இயக்கி, மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் ஜெ.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இப்படத்தில், டேனியல் கேரக்டரில் பிருத்விராஜ் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த படமாகவும், பிருத்விராஜ் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டு, கேரள மாநில அரசின் விருதைப் பெற்ற இப்படம், தமிழில் ‘ஜெ.சி.டேனியல்’ என்ற பெயரில் ‘டப்’ ஆகிறது.ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை


டிஸ்கி-டைட்டில் ல  9,உள்ளடக்கத்தில்11,ஏன்?கணக்குத்தெரியாதா?என்பவர்க்கு
நெம்பர் 2,11ஆகிய2ம்போனவாரமே  ரிலீஸ்,ஆனாலும்,பலதியேட்டகளில்,இன்றுரீரிலீஸ்#நாங்க
ரொம்பஸ்ட்ரிக்ட்டுங்க்ணா
நன்றி=தினமலர்,தினமணி,மாலைமலர்,அனைத்துசினிமாஇணையதளங்கள்

1 comments:

Story Teller said...

as i mentioned earlier, your blog posts are not getting updated on RSS/Atom fields. I am using feedly to read your blog posts. please check.