Monday, January 13, 2014

கோல்டன் குளோப் விருதுகள் -11 ஹாலிவுட் திரைப்படங்கள் (லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் )

  • சிறந்த நடிகர் விருது பெற்ற லியார்னடோ டிகாப்ரியோ
    சிறந்த நடிகர் விருது பெற்ற லியார்னடோ டிகாப்ரியோ
ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை படைப்புகளுக்காக வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்து முடிந்தது. லியார்னடோ டிகாப்ரியோ சிறந்த நடிகராகவும், அமெரிக்கன் ஹஸல் சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


கோல்டன் குளோபில் விருது பெற்றவர்களுக்கு ஆஸ்கரில் விருது பெறவும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து நிலவுவதால், ஆஸ்கரைப் போலவே, ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருதுகளும் சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கும். இந்த வருடத்திற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடந்தது. 

  • சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதுடன் ஜெனிஃபர் லாரன்ஸ்
    சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதுடன் ஜெனிஃபர் லாரன்ஸ்

இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ, இரண்டாவது முறையாக, வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார். 


காமெடி மியூசிக்கல் வகையில் சிறந்த திரைப்படமாக அமெரிக்கன் ஹஸல் திரைப்படமும், டிராமா வகையில் சிறந்த படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதை, உலகம் முழுவது வெற்றிகரமாக ஓடி, விமர்சகர்கள் பாராட்டையும் பெற்ற கிராவிட்டி படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ காரன் பெற்றர். சென்ற வருடம் கோல்டன் குளோபில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸ், இந்த முறை சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.


  • சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஃபோன்ஸோ காரன்
    சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஃபோன்ஸோ காரன்

முழு விருது விவரங்கள் பின்வருமாறு:

 
# சிறந்த திரைப்படம் (டிராமா) - 12 இயர்ஸ் எ ஸ்லேவ் 


# சிறந்த திரைப்படம் (காமெடி/மியூசிக்கல்) - அமெரிக்கன் ஹஸல் 


# சிறந்த நடிகர் (டிராமா) - மேத்யூ மெக்கானஹே (டாலஸ் பையர்ஸ் க்ளப்) 


# சிறந்த நடிகர் (காமெடி/மியூசிக்கல்) - லியார்னடோ டிகாப்ரியோ (வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்) 


# சிறந்த நடிகை (டிராமா) - கேட் ப்ளான்செட் (ப்ளூ ஜாஸ்மின்) 


# சிறந்த நடிகை (காமெடி/மியூசிக்கல்) - ஏமி ஆடம்ஸ் (அமெரிக்கன் ஹஸல்) 


# சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன் 


# சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் - தி கிரேட் பியூட்டி (இத்தாலி) 


# சிறந்த உறுதுணை நடிகர் - ஜாரெட் லிடோ (டாலஸ் பையர்ஸ் க்ளப்) 


# சிறந்த உறுதுணை நடிகை - ஜெனிஃபர் லாரன்ஸ் (அமெரிக்கன் ஹஸல்) 


# சிறந்த இயக்குநர் - அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி) 


thanx -  the tamil hindu

  • சிறந்த நடிகையாகத் தேர்வான ஏமி ஆடம்ஸ்
    சிறந்த நடிகையாகத் தேர்வான ஏமி ஆடம்ஸ்

0 comments: