Thursday, December 26, 2013

DRISHYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் -கலக்கல் க்ரைம் த்ரில்லர்)

 நாலாம் கிளாஸ் வரை மட்டும் படிச்ச , செலவு பண்ண கணக்குப் பார்க்கும் நடுத்தரவர்க்க சினிமா ரசிகன் தான் படத்தோட ஹீரோ . அவரோட சம்சாரம் பத்தாங்கிளாஸ் வரை படிச்ச அதே மிடில் கிளாஸ்.அவங்களுக்கு  2 பொண்ணுங்க.பர்ச்சேஸ்க்கு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் கூப்பிட்டாக் கூட ஹீரோ பம்முறாரு. செலவு ஆகிடுமோன்னு.

இது மோகன் லால் நடிச்ச மலையாளப்படமா? வி சேகர்  இயக்கிய வரவு எட்டணா, செலவு பத்தணா வின் உல்டா ரீ மேக்கா? என யோசிச்சுட்டு இருக்கும்போது கதை அப்டியே வழக்கு எண் 18/9 க்கு மாறுது .

ஹீரோவோட முதபொண்ணு காலேஜ் டூர் போன இடத்துல  பாத்ரூம் ல குளிக்குது . அப்போ ஒரு வீணாப்போனவன் செல் ஃபோன் ல படம் எடுத்து வெச்சு  கில்மாக்கு ஓக்கே சொல்லலைன்னா இண்ட்டர் நெட்ல அந்த  ஃபோட்டோவை அப்லோடிடுவேன் அப்டினு  மிரட்டறான் .வீட்டுக்கே நைட் வந்துடறான்.பொண்ணு அவன் மண்டைல இரும்புக்கம்பியால  ஒரே போடு ஆள் க்ளோஸ் .

அந்தப்பையன் அல்ப சொல்பமானவன் இல்லை. போலீஸ் கமிஷன்ர் பையன் . டெட்பாடியை  வீட்லயே புதைச்சுட்டு .அவன் வந்த காரை ஒரு ஓடை;ல தள்ளி விட்டு கொலையை மறைக்கறாங்க . 


போலீஸ் விசாரணை ல இருந்து தப்பிக்க  ஹீரோ போடும் அபாரமான திட்டங்களும் ., போலீசின் விசாரணை நெருக்கடிகளும் தான் பிரமாதமான மிச்ச மீதி த் திரைக்கதை  



Jeethu Joseph  தான் படத்தோட திரைக்கதை , இயக்கம் எல்லாம் . இவர்தான்  படத்துக்கு  பக்க பலம். அட்டகாசமான  திரைக்கதை .கடந்த 10 வருடங்களில் வந்த முக்கியமான க்ரைம் த்ரில்லர்களைப் பட்டியல் இட்டால் இது  முதல் இடத்தைப்பெறும் , சபாஷ் இயக்குநர் .( டைட்டிலில்  அவர் பேர்போடும்போதும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டின் போதும்  அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது) 


முந்தையபடமான   கீதாஞ்சலி(மணிச்சித்திர தாழ் -பாகம் 2 )  ஆல்ரெடி வந்த சாரு லதாவின்  உல்டா  ரீ மேக்  என்பதால் பெரியவெற்றியைப்பெறாத லாலேட்டன் எனும் மோகன் லாலுக்கு  பூஸ்ட்  கொடுக்கும் படம் . அவரது அடக்கி வாசிக்கும் இயல்பான நடிப்பு அருமை . ஓப்பனிங்க்சாங்க், பஞ்ச் டயலாக் , ஹீரோ இண்ட்ரோ பில்டப் என எதுவும்  இல்லாமல் சர்வசாதாரண மாக வந்து  பட்டையைக்கிளப்புகிறார் . மீனா விடம் காதல் காட்சிகளில் லந்து  செய்வது  , போலீஸ் ஸ்டேஷனில்   அடிவாங்குவது  என பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் 


 ஹீரோயின் மீனா.சுறா மீன்மாதிரி ஆகிட்டார் . உடம்பைக்குறைத்தால் தேவலை . இவருக்குப்பெரிதாக வாய்ப்பில்லை . இவங்களின்  2 மகள்களும்  கொடுத்த  வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்

 லேடி போலீஸ் கமிஷனராக வரும் வில்லனின் அம்மா கேரக்டரில்  நடித்திருப்பவரின்  தெனாவெட்டான நடிப்பு  கலக்கல் . விஜய சாந்தியை நினைவுபடுத்துது




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 



1 இறந்த  வில்லனின்  செல்  ஃபோன்  சிம்மை  கழட்டி   வேறு ஒரு   ஃபோனில்  வைத்து   சைலண்ட் மோடில் போட்டு   அதை  வடக்கே செல்லும்  ஒரு  வேனில் அனுப்பி  வில்லன்  வேற  ஏரியாவில் இருக்கான் என   ட்விஸ்ட்   செய்யும் ஐடியா கலக்கல் 
2 டைட்டிலில்  வரும் சப்டைட்டிலான  VISUALS  CAN BE  DECEIVING  என்பதை நியாயப்படுத்த   இயக்குநர் மேற்கொண்ட  முயற்சிகள்  குட்


3 கொலை நடந்த அன்று ஹீரோ  ஃபேமிலியோடு   டூர் போய்ட்டாங்க என   போலீசை  நம்ப வைக்க   ஹீரோ   எடுக்கும் முயற்சி , போலியான ஆதாரங்கள்  எல்லாமே  அபாரம் 


4 லேடி  போலீஸ் கமிஷனர்  வரும்  ஒவ்வொரு காட்சியும்  விசில் அடிக்க வைக்கும்  நடிப்பு .


5  எல்லாவற்றுக்கும்  சிகரம்  வெச்சது  போல்  வீட்டில் புதைத்த டெட் பாடி  எப்படிகாணாமல்   போச்சு  என்பதற்கு க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட்  அபாரம் 


திரைக்கதையில்   சில ஆலோசனைகள், சில  சுட்டிக்காட்டல்கள்



1   பொதுவா இந்த மாதிரி   மிரட்டறவங்க பொண்ணு   வீட்டுக்கு போகமாட்டாங்க. தன்னோட இடத்துக்குதான் வரச்சொல்வாங்க. அதுதான் பாதுகாப்பு. பின் எப்படி வில்லன்  பொண்ணோடவீட்டுக்கு தைரியமா  போறான்?அதுவும்  அது ஒரு  கிராமம்,மிட் நைட் டைம்



2  முதல்ல பொண்ணை  கில்மாக்கு கூப்பிடும் வில்லன் அவ  ஓக்கே   சொல்லலைன்னதும் அவங்கம்மாவை(மீனாவை )  கூப்பிடறான் . பொண்ணு   முன்னாலயே அம்மாவை   கூப்பிட்டா யாராவது சம்மதிப்பாங்களா? 


3  அந்தப்பொண்ணை  பின்னாலவெச்சுக்கிட்டு   வில்லன்  மீனா  கிட்டே   வரம்பு மீற நெருங்கும்போது    பொண்ணு பின்னால   இருந்து தாக்கும்னு  யூகிக்க முடியாதா?அவளை கட்டிப்போட்டுட்டுதானே    இவன் அட்டெம்ப்ட்   ரேப்ல இறங்கி  இருக்கனும் ? 

4  வீடியோ   எடுத்த   கில்மா  சீனை ஒரு காப்பி எடுத்து  வெச்சுக்கிட்டு தானே பொதுவா  வில்லன் க மிரட்டுவாங்க . சிஸ்டத்துல   ஸ்டோர் பண்ணாம   ஒரே ஒரு ஒரிஜினல் வெச்சுஅதையும்   அம்போன்னு  தொலைக்க  அவன் என்ன லூசா? என்  கிட்டே இன்னொருகாப்பி  இருக்கு . என்னைத்தாக்கி  இதை நீங்க  எடுத்துக்கிட்டாலும்  நான்   குறிப்பிட்ட   டைம்க்கு என்  இடத்துக்குப்போகலைன்னாலும்  அந்த  இன்னொரு காப்பியை என்நண்பன்   ரிலீஸ் பண்ணிடுவான் அப்டினு  மிரட்டி  இருக்கலாமே?


5.கற்புக்கு பங்கம் வராம  இருக்க   ஒரு பெண்  தன்னை ரேப் பண்ண வந்தவனை தாக்கலாம்னுசட்டத்துல சொல்லுது . எதிர்பாராதவிதமான  விபத்து கேட்டகிரில தான் இது வரும்.அதிகபட்சம்   2 வருசம் தான் தண்டனைகிடைக்கும் . ஏன் அவ்ளவ் ரிஸ்க் எடுக்கறாங்க ?


6   கிராமத்தில்  ஓடைக்குள்   மூழ்கிய வேனை   நீச்சலடிக்கும் இளைஞர்கள் கண்டு   பிடிக்கவாய்ப்பு இல்லை .அதுவும்   உடனே கண்டு பிடிப்பது    நம்பும்படி  இல்லை (  ஏன்னா   கிணறு என்றால்   மேலே இருந்து குதிக்கும்போது 10 அடி ஆழம் வரை செல்லும் வாய்ப்பு  உண்டு. ஓடை என்பதால்   உள் நீச்சல் அடிச்சாலும்  அதிக  பட்சம் 5 அடி வரை தான்  போவாங்க. 20 அடி ஆழம் வரை தரை  வரை  போக  தேவையே இல்லையே? 


7  எல்லா சம்பவங்களும்  26  நாட்களுக்குள் நடப்பதா  ஒரு இடத்தில்    வசனம் வருது.  கொலை நடப்பதற்கு   இரு நாள்  முன்பு   போலீஸ் ஸ்டேஷன்   இங்கே  புதுசா கட்டப்போறாங்க  என ஒருடயலாக் வருது .   26  நாட்களில்   எந்த   ஊரில்  ஒரு  போலீஸ் ஸ்டேஷன்   கட்டி  இருக்காங்க?மினிமம்  6 மாசமாகுமே? (க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்க்கு இந்த   ஸ்டேஷன்   ஒரு முக்கிய துருப்புச்சீட்டு)

police officer Aasha

நச்  வசனங்கள்


1.  என்னங்க? ஷாப்பிங்க் என்னாச்சு ?  இந்த  டைம் டிரஸ்  வாங்கித் தரலைன்னா பாருங்க , டிரஸ்   இல்லாம  எதுவும் நடக்காது 



ஏன்நடக்காது ? அதுதான் சவுகர்யமும்  கூட , ஹி ஹி 




2  அப்பா , ஒரு ஆடி கார் வாங்கனும் 


 என்ன ரேட்  இருக்கும் ?


 10 லட்சம் 


 அதை என்ன தங்கத்துலயா  செஞ்சிருக்கப்போறாங்க ?




3  ஏங்க, குழந்தைங்க   இருக்கும்போது  டபுள்  மீனிங்க் ல பேசாதீங்க


 புரியாது  விடு  அவங்க வயசுல  நான் இருந்தப்ப  எனக்கு எதுவும்  புரியலை , அவங்களுக்கு மட்டும் எப்டி புரியும் ?


 ம்க்கும், இப்போமட்டும்  உங்களுக்கு எல்லாம் புரிஞ்சுடுதா? 


4 பொண்ணுங்க   கிட்டே  உள்ள   ஒரு கெட்ட பழக்கம் எங்கே  போனாலும் விதம்விதமா பாத்திரங்கள் வாங்குவாங்க . குக்கர்லயே 2 லிட்டர் குக்கர் , 3 லிட்டர் குக்கர் , 5 லிட்டர் குக்கர் ,னு வாங்கி அடுக்கிக்குவாங்க 



5 அப்பாக்கு   நீசொன்னது   புரியல

 அம்மாக்கு?


 அப்பாக்கே புரியலை , அம்மாவுக்குமட்டும்? 




6 ஃபோட்டோவில்   இருக்கும் மஞ்சள் மாருதி வேனை நீ பாத்தியா?



 பார்த்தேன் , ஆனா அந்த வேனான்னு சொல்ல முடியாது 



7  எல்லாக்குடும்பங்களிலும்  மத்தவங்களுக்குத்தெரியாத  சில  விசயங்கள் இருந்தே  தீரும் 



8 நமக்குப்பிரியப்பட்டதெல்லாம் நமக்கு  வேணும்னு   ஆசைப்படறதுதப்பு 

 



சி பி கமெண்ட் .  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள்   அவசியம் பார்க்க வேண்டிய படம் . டோண்ட்மிஸ் இட் . லேடீசும் பார்க்கலாம் . கண்ணியமான் மேக்கிங்க். 


ரேட்டிங்க்  = 3.25  /5 


தியேட்டர்  மேட்டர் - கேரளா - திருவனந்த புரம்  ரயில்  நிலையம் எதிரேஉள்ள ஸ்ரீ  குமார் தியேட்டர்-ல்படம் பார்த்தேன் . சுமாரான தியேட்டர் .  சென்ட்டரான
இடத்தில்  ஏன் இப்டி சாதா  தியேட்டர்  இருக்கோ ? ஃபேமிலிஆடியன்ஸ்தான்   அதிகம்  . பால் கனி 83  ரூபா


2 comments:

Anonymous said...

என்னாச்சி! ரொமப நாளா கேரளாவுல இருக்கிங்க போலிருக்க. அக்கட ஷகிலா, ரேஷ்மா, தேவிகா எல்லோரும் சவுக்கியமா!

Unknown said...

Hello Sir,#i read your blog since 2012.but i didn't like the part(questions to director in Drishyam).please watch the movie once again..you will find them.please dont underestimate a very good movie

regards
thiru