Saturday, November 16, 2013

RAMLEELA -சினிமா விமர்சனம் 32 +++

வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ ஜூலியட்  கதை ல ஆங்காங்கே ராமாயண சம்பவங்களை மிக்ஸ் செஞ்சா  ஈசியா ராம் லீலா கதை ரெடி . 

குஜராத் ல ஏதோ ஒரு கிராமத்துல கதை நடக்குது . அங்கே 500 வருசமா விரோதம் உள்ள 2 தாதா க்ரூப்.அங்கே அடிக்கடி துப்பாக்கிச்சண்டை நடக்கும். தூள் சொர்ணாக்கா மாதிரி , அப்பு பிரகாஷ்ராஜ் மாதிரி கேரக்டர் உள்ள லேடி தாதா வோட பொண்ணு தான் ஹீரோயின் . அவருக்கு லண்டன் மாப்ளை .நிச்சயம் பண்ண மேரேஜ்க்கு முன்னமே வீட்டோட மாப்ளையா ஒரு அப்பாவி ஆள் வர்றாரு . 

 ஆனா பொண்ணுங்க எப்பவும் நல்லவனை , அப்பாவியை காதலிக்க மாட்டாங்க எனும் ஆகமத ( சினிமா) விதியின் படி ஹீரோயினுக்கு அவரைப்பிடிக்கலை .ஒரு ஹோலிப்பண்டிகை நாள் ல  ஹீரோவை ஹீரோ மீட் பண்றாரு . கண்டதும் காதல் .

சந்திச்ச முத டைமே ஹீரோயின் ஹீரோவுக்கு பச்சக்னு லிப் கிஸ் அடிக்கறார். பெண்களுக்கும் சம உரிமை வேணும் இல்லையா? அதனால . ஹீரோயின் வீட்டுக்கே ஹீரோ போறார் . மெயின் மேட்டரைத்தவிர மத்ததெல்லாம் நடக்குது 2 வது சந்திப்பிலேயே .


 இவங்க காதல் என்னாச்சு ? சேர்ந்தாங்களா? ஒண்ணா சேர்ந்தாங்களா? என்பதே க்ளைமாக்ஸ் 




 சும்மா சொல்லக்கூடாது . ஒளிப்பதிவு தான் படத்தின் முதல் ஹீரோ . சும்மா பிரிச்சு மேஞ்சிட்டார் . ஒவ்வொரு சீனும் கலர் ஃபுல் கலக்கல் தான் . 


ஆடை அலங்கார நிபுணர்க்கு அவார்ட் நிச்சயம் . பின்னே ஹீரோயினுக்கு எப்படி ஜாக்கெட் தைக்கனும்கறதுல பி ஹெச் டி பண்ணின மாதிரி லோ கட் ஜாக்கெட்ட்டா படம் பூரா போட்டு விட்டிருக்காரே? 


ஹீரோ ரன்வீர் ஓப்பனிங்க் சீன்ல இருந்தே தன்னோட இன்னிங்க்ஸை ஆரம்பிச்சுடறார். டான்ஸ் காட்சிகளில் விஜய் , ரஜினி என கலந்து கட்டி கலக்கறார். சிக்ஸ் பேக் உடம்பு இருக்கு பாரு பாருன்னு கமல் ஹாசன் கணக்கா  அடிக்கடி சட்டையைக்கழட்டிடறாரு . பொண்ணுங்க எல்லாம் விசில் அடிக்குது . கலிகாலம்டா சாமி 


ஹீரோயின் தீபிகா படு கோனே. படம் பார்ப்பவர்களை ஒரு சீன் கூட தூங்க விடாமல் , இமை கொட்டாமல் எழுச்சியோடு படம் பார்க்க வைக்கும் சாமார்த்தியம் , வசீகரம், அழகு , திறமை எல்லாம் இருக்கு. தன் முக்கால் வாசித்திறமையை இந்த ஒரே படத்துல காட்டிட்டார். முழுத்திறமையையும் காட்டி இருப்பார் , அவர் எல்லாத்துக்கும் ரெடி தான் ஆனா இந்த வீணாப்போன சென்சார் ஆபீசர் இருப்பதால் அடக்கி வாசிச்சிருப்பார் போல . அழகைக்காண கண் கோடி வேணும் . நஸ்ரியா , லட்சுமிமேனன்கள் எல்லாம் இவர் கிட்டே 2 ஜென்மம் ட்யூசன் படிச்சாலும் ஜஸ்ட் பாஸ் மார்க் கூட வாங்க மாட்டாங்க 


ஹீரோயின் அம்மா ரோல் வில்லி ரோல் மாதிரி , மும்பைக்கு வேணா புதுசா இருக்கலாம், ஆனா நமக்கு பழசு தான் . இதை விடப்பெரிய வில்லிகளை எல்லாம் பார்த்தாச்சு . இருந்தாலும் அவர் நடிப்பு அதகளம் . 

ப்ரியங்கா சோ ப்ரா வின் குத்தாட்டம் ஒரு ஆட்டுக்கு எக்ஸ்ட்ரா போனஸ் 




பலே பாண்டியா


1. வர மிளகாய் காயப்போடும் காட்சியை டாப் ஆங்கிளில் காட்டும் ஓப்பனிங்க் சீன் அசத்தல் . ஷங்கர் படத்தின் பிரம்மாண்டம் 


2. ஹீரோ - ஹீரோயின் எக்மிஸ்ட்ரி , பிசிக்ஸ் , பயாலஜி எல்லாம் செம . 2 பேரும் நிஜமாவே லவ்வர்ஸாம் . சம்பளமும் வாங்கிக்கிட்டு கில்மாவும் பண்ணிக்கிட்டு . ஆஹா இதல்லவோ வாழ்க்கை


3 ஹீரோ ஹீரோயின் 2 பேரும் அறிமுகக்காதலில்  ஏய்! என ஒருவரை ஒருவர் மிரட்டுவதும் பின் 10 வினாடியில் ஏய் எனக்கொஞ்சிக்கொள்வதும் ரொமான்ஸ் ரொமான்ஸ் . அடடா.. மழைக்காலத்தில் ரோட்டோரக்கதையில் மிள்காய் பஜ்ஜி சாப்பிட்ட மாதிரி என்ன ஒரு இதம் ? ( படம் பார்க்கற நமக்கே இத்தனை இதம்னா ஷூட்டிங்க் பார்த்தவங்க கதி ? ) 


4 நிச்சயதார்த்த மோதிரம் அணியச்சொல்லும்போது  ஆல்ரெடி என் ஆள் போட்ட மோதிரம் டைட்டா இருக்கு , முடிஞ்சா அதைக்கழட்டு என தெனாவெட்டாக ஹீரோயின் சொன்னதும், கொஞ்சம் கூட யோசிக்காமல் , கழட்ட முயற்சியே செய்யாமல் பாக்கு வெட்டியால் மோதிர விரலையே கட் செய்த கொடூரம் . அதிர்ச்சியான காட்சி . 


5 ஒரு காட்சியில் வில்லன்கள் துரத்தும்போது  சில்வர் அண்டாவை ஒரு லேடி கீழே போட்டுடுது . தண்ணீர் தெறிக்க  அது உருண்டோடும் அழகை கேமரா படம் பிடித்த விதம் அட்டகாசம் . படம்  முழுக்க இதே போல் கேமரா ஒர்க் அருமை 


6 எதிர்பாராத க்ளைமாக்ஸ் திருப்பம் பெரிய பிளஸ் . 


7 பாடல்கள் எல்லாம் செம ஹிட் . அதை படமாக்கிய விதத்தில் மணிரத்னத்தின் கவிதை லயம் , ஷங்கரின் பிரம்மாண்டம் அசத்தல் 




சொதப்பிட்டியே சொப்னா


1. மூணு நாளா எதும் சாப்பிடலை என்று ஹீரோயின் சொல்லும் காட்சியில் ஓரளவாவது வாடிப்போய் இருக்க வேண்டாமா?  ஊட்டி கொடை ஆரஞ்சுபழத்தை ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுத்த மாதிரி செம ஃபிரெஷ்ஷா இருப்பது எபப்டி ? 


2  வில்லன் க்ரூப் , ஹீரோவின் நண்பன் க்ரூம் இரு குழுவும் துப்பாக்கி சண்டையில் மோதுவது ஓக்கே . ஆனா அபாயகரமா யாராவது தன் நெஞ்சுக்கு முன்னே  பீர் பாட்டிலை வைத்து குறி தவறாமல் சூடு பார்ப்போம் என சவால் விட்டு விளையாடுவாங்களா? அதுவும் 4 டைம் , குறி தவறுனா உயிர் காலி .இந்த சீன் அந்தக்காலத்தில் வந்த புராணக்கதையில் வரும் ஆப்பிள் @ ஆள் தலை - குறி பார்த்து அம்பு எய்தல் -ன் தழுவல் என்றாலும் காட்சியில் நம்பகத்தன்மை கொஞ்சமும் இல்லை 


3  ஹீரோயின்  விரல் வெட்டப்பட்ட பின்  கேமரா மேன் அவர் கையை காட்டாமல் கோணங்களை வெச்சிருக்கனும். க்ளோசப் காட்சிகளீல் மட்டும் கட்டு போட்ட மாதிரி காட்டிடு லாங்க் ஷாட்ல அசால்ட்டா உட்டுட்டாங்க 


4 அனுமார் இலங்கையில் இருந்து ராமரைப்பார்க்க வந்ததும் கண்டேன் சீதையை என்கிறார். செய்தியின் வேகம் கருதி . அதே போல் ஒரு காட்சியில் சாத்திய ரூமில் தம்பதி தற்கொலைக்கு முயற்சிக்கறாங்க ( பரஸ்பர கொலை ) .அப்போ வில்லி மனம் மாறிட்டாங்க என்பதை டக்னு சொல்லாம யாராவது “ கதவைத்திறங்க  என்று பொத்தாம்பொதுவாக சொல்லி இழுப்பாங்களா? 


5 ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் முதல் இரவு கொண்டாடும்போது நண்பர் க்ரூப் வருது . ஹீரோ ஹீரோயினை அம்போன்னு விட்டுட்டு சரக்கு அடிக்க நண்பர்கள் கூடப்போயிடறாரு . எத்தனை நேரம் ஆகப்போகுது . மேட்டரை முடிச்சுட்டு ப்போவாங்களா? இப்படிப்பொறுப்பில்லாம யாராவது ஃபர்ஸ்ட் நைட் ல சரக்கு அடிக்கப்போவாங்களா? ( சீன் போச்சே என்ற ஆதங்கத்தில் இதை சொல்லலை ) 



நச்


1. நாங்க எப்பவும் எதிரியுடன் கை கோர்ப்போம் 

2 உங்க ஃபேமிலி பிஸ்னெஸ் என்ன? 

ஷூட்டிங்க் , ஸ்மக்ளிங்க் , ஆளை வெட்டறது 

3  தப்பான காரியம் செஞ்சா என்ன பின் விளைவு ஏற்படும்னு தெரியாதா? 

தெரியாது , அதைத்தெரிஞ்சுக்கத்தான் தப்பு பண்ண ட்ரை பண்றேன் 


4 ஹீரோயின் - அட!! உன் செஸ்ட் எக்சசைஸ் செஞ்சு செஞ்சு குழி விழுந்திருக்கே? 

 ஹீரோ - இதென்ன பிரமாதம் ? உன் செஸ்ட் லயும் தான் குழி இருக்கு 


ஹீரோயின் - ச்சீய் 


5  என்னை மீறி எனக்கு இவன் கூட மேரேஜ் பண்ணி வெச்சாலும் முத ராத்திரி என் காதலன் கூடத்தான் , அடுத்த ராத்திரி தான் இவன் கூட ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல )





 ஆன் த ஸ்பாட் அலப்பறைஸ்

1. தியேட்டர் பூரா பேமிலி ஆடியன்ஸ்.ரொமான்ஸ் ,கிளாமர் ஓவர்.8 லிப் கிஸ் சீன்


===================


2 ஹீரோயின் தீபிகா படுகோனே ரொம்ப ஏழை போல.40 செமீ அளவு ல் தான் ஜாக்கெட்டே போடுது # 80 செமீ நார்மல்


==================

3 ஆகா.ஓப்பனிங் சீன்லயே ஒரு டாப்லெஸ் சீன்.சோகம் என்னான்னா ஹீரோவுக்கு # ராம் லீலா


====================


4 ரவிவர்மனின் ஒவ்வொரு ஷாட்டிலும் வெளிச்ச வானவில்.பி சி ஸ்ரீராம்க்கு எதிர்ப்பதம் # அள்ளுது


======================

5 ஹீரோ பாட்டுக்கு சிவனேன்னுதான்யா இருக்காரு.ஹீரோயின் தான் தேடித்தேடி ஓடி ஓடி ப்பச்சக் பச்சக்னு லிப் கிஸ் குடுத்துட்டே இருக்கு # ராம் லீலா


====================


6 ஆடியன்ஸ் எல்லாம் நெக்குருகிப்போய்ட்டாங்க # யு நெக் ஜாக்கெட் .தீபிகா படு கோனே


======================


7 ஊர் ல இருக்கும் கள்ளக்காதல் ஜோடி எல்லாம் இங்கே தான் யா டேரா போட்டிருக்காங்க # திருச்சி விஜய் சினிமாஸ் மல்ட்டிபிளக்ஸ் 43 ஜோடி


=====================

8  ஒளிப்பதிவு கலக்கல்.நம்மூர்க்காரர்.கேமராவை தீபிகா முதுகுல ஸ்டேன்ட் போட்டு நிறுத்திட்டார் # ராம் லீலா


=====================

9 இனியா கூடவா போக முடியும் ? தனியா தான் :-((( RT : நீங்க தனியாவா போனிங்க cp sir...:)"



====================

10 தீபிகா படுகோனேவோட எதிர்காலப்புருசன் ராம் லீலா படம் பார்த்தா மனசுக்குள்ள என்ன நினைப்பார்? இனிமே நாம செய்ய என்ன இருக்கு?


====================

11  ராம் லீலா வைத்தமிழ் ல ரீ மேக்கினா கமலை விட்ப்பொருத்தமானவர் யாரும் இல்லை # 18 லிப் கிஸ் சீன்


=================== 



சி பி கமெண்ட் - தில்வாலே தில் ஹனியா லே ஜாயேங்கே , ஹம் ஆப் கே  ஹேங்க் கோன் அளவுக்கு எல்லாம் இல்லைன்னாலும் படம் போர் அடிக்காம கலர்ஃபுல்லா போகுது . டைம் பாஸ் ஆகும்  லவ்வர்ஸ் பார்க்கலாம் . ஃபேமிலியோட பார்க்க முடியாது . காட்சி ரிகிதியாவும் , வசனத்திலும் பல இடங்களில் அக்மார்க் ஏ . இதுக்கு எப்படி சென்சார் ல ஏ தர்லை?னு தெரியலை


ராம் லீலா - ரோமியோ ஜூலியட் உல்டா லவ் ஸ்டோரி - கலர்புல் மேக்கிங்,பாடல்கள் ,ஒளிப்பதிவு ,,தீபிகா +++ 


ரேட்டிங் = 3.5 / 5 

கமர்ஷியல் ஹிட் பிலிம்


டிஸ்கி - திருச்சி விஜய் சினிமாஸ் மல்ட்டி காம்ப்ளெக்ஸ் ல படம் பார்த்தேன் . 150 ரூபா . ஒர்த் தான் . படமும் கிளாம்ர் . ஆடியன்ஸ்  எல்லாம் கிளாமரோ கிளாம்ர் ..


Goliyon Ki Rasleela Ram-Leela'
Cast: Ranveer Singh, Deepika Padukone, Richa Chadda, Supriya Pathak, Gulshan Deviah
Director: Sanjay Leela Bhansali

3 comments:

Unknown said...

திருச்சிக்கே இப்படின்னா பெங்களூரெல்லாம் போய் பாருங்க

குரங்குபெடல் said...

intresting review

Unknown said...

ராம லீலை அல்ல காமலலீலைன்னு சொல்லுங்க