Sunday, November 17, 2013

ஆப்பிள் பெண்ணே - சினிமா விமர்சனம்

ஊருக்கு புதுசா வேலைக்கு வரும் போலீஸ் ஏட்டுதான் படத்தில் மெயின் கேரக்டர் . இவர் ஒரு சைக்கோ மாதிரி .தன்னைத்திட்டினார் என்பதற்காகவே எஸ் ஐ உயிருக்கே ஆப்பு வைக்க நினைப்பவர். இவர் பண்ற வில்லத்தனங்கள் பல. அதில் ஒண்ணு தான் ஹீரோயின் ஒரு டைம் தன்னை அவமானப்படுத்திட்டார் என்பதற்காக அவர் டிரஸ் மாத்தும்போது செல்லில் ஃபோட்டோ எடுக்கும்போது மாட்டி ஊர் முன் அவமானப்பட்டு ஹீரோயினைப்பழி வாங்கத்துடிக்கறார்.


ஹீரோயினோட அம்மா ஊர்ல ஒரு மெஸ் வெச்சு நடத்திட்டு வர்றார். அப்பா இறந்து 16 வருசம் ஆச்சுன்னு சொன்னாலும் பூவும், பொட்டும் வெச்சு கிளாமரா வலம் வர்றார், கடைக்கு வரும் கஸ்டர்கள் எல்லாம் அவர் அழகை ரசிக்கத்தான் வர்றாங்க எனும் எண்ணம் ஹீரோயினுக்கு, அதனால அவருக்கும் , அம்மாவுக்கும் நடக்கும் வாக்குவாதங்களால் வீட்டை விட்டு கிளம்பிடறார். 


ஹீரோயின் இருக்கறதால கண்டிப்பா ஹீரோன்னு ஒரு ஆள் வேணும்கறதுக்காக டம்மியா ஒரு ஹீரோ , ஓ பி எஸ் மாதிரி அவர் ஹீரோயின் பின்னால சுத்துவது , கரெக்ட் பண்ண ட்ரை பண்றது இப்படி அது பாட்டுக்கு ஒரு பக்கம் ஓடுது 


இந்த 3 வேவ்வேற  டிராக்கையும் திரைக்கதைல எப்படி இணைக்கறாங்க என்பதுதான் கதை முடிச்சு . இது போக ஹீரோயின் அம்மாவுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு . மொத்தம் 4 டிராக்கில் கதை . அய்யோ அம்மா .1980 ல் ரிலீஸ் ஆகி இருந்தா 20 நாள் ஓடி இருக்கும் 


தம்பி ராமையா தான் மெயின் கேரக்டர் . வில்லன் நடிப்பு இவருக்கு நல்லாவே வருது . அங்கங்க ஓவர் ஆக்டிங்கும் பண்றார். க்ளோசப்பில் இவர் முகத்தை அடிக்கடி காட்டும்போது மீசை இடப்பக்கம் நேராகவும் , வலப்பக்கம் வளைந்தும் இருக்கு . இதைக்கூடவா சரி பார்க்க மாட்டாங்க ? ஆனா படத்தை உக்காந்து கொஞ்சமாவது பார்க்க முடிவதே இவர் கேரக்டர் தான் 

ரோஜா தான் ஹீரோயினுக்கு அம்மா கேரக்டர் .டைரக்டர் கேமரா மேன் கிட்டே கண்டிஷனா சொல்லிட்டார் போல . ரோஜா இடுப்பில தான் உன் கவனம் எல்லாம் இருக்கனும்.. அப்டினு . மெஸ் ல இட்லி சுட்டாலும் சரி , சேசிங்க் சீனிலும் சர் , சோக சீனிலும் சரி கேமரா ரோஜா இடுப்பிலேயே நிக்குது . அங்கே தான் நிக்கறான் சந்திரன் படிங்கற மாதிரி .ஆர் கே செல்வமணி சார் பாவம் 


ஹீரோயின் மலையாள வரவு . பேரு ஐஸ்வர்யா மேனன் . குடும்பப்பாங்கான முகம் .பாவனைகளை டக் டக் என மாற்றும் லாவகம் , கிளாமர் காட்சிகளில் கண்ணியம்  ( எதேச்சையாக கவர்ச்சி தெரிவது போல் நடிப்பது ) என முதல் படம் என்ற அளவில் ஓக்கே .


 இயக்குநர் கலைமணி  ஆர் கே ஆல்ரெடி எங்கள் ஆசான் , சூப்பர் குடும்பம் , தை பொறந்தாச்சு போன்ற மீடியம் பட்ஜெட் படங்களைக்கொடுத்தவர் தான்




பலே பாண்டியா


1.  ரோஜா வுக்கான ஓப்பனிங்க் சாங்கில் (பாடு பாடு மச்சா நீ பாடு  பாட்டுதான் நமக்கு சாப்பாடு ) எந்த எந்த உணவு நமக்கு என்னென்ன பலன் தரும்  என்ற இயற்கை வைத்திய பலா பலன்களை அழகாக சொல்லும் பாடல் வரிகள்  ச்பாஷ் போட வைக்குது . கிராமத்து ஆட்களுக்கு மட்டுமே  தெரிந்த து நகரத்து ஆட்களுக்கும் இனி  தெரியும் 


2   தம்பி ராமைய்யாவின் ஹையர் ஆஃபீசராக வருபவரின் யதார்த்தமான நடிப்பு 

சொதப்பிட்டியே சொப்னா


1. ஹீரோயின் கவர்மெண்ட் ஸ்கூல் ல படிக்குது . ஆனா அடிக்கடி அவர் தோழிகளுடன் சைக்கிள் ல போகும் காட்சிகளில் தோழி  சைக்கிளை நிறுத்தி “ இருடி  ரெக்கார்டு நோட் வாங்கிட்டு வர்றேன்குது “  எதுக்கு ? அதான் எல்லாம் அரசாங்கமே கொடுக்குமே? அப்டியே எக்ஸ்ட்ரா நோட் வாங்கனும்னா ஸ்கூல்லயே ஸ்டோர் ரூம் ல வாங்கினா ரேட் கமியா இருக்குமே? ஏன் வெளி ல அடிக்கடி ஏதாவது நோட் வாங்கிட்டே இருக்கு ? 


2. வில்லனான தம்பி ராமைய்யா ஹீரோயினை ரேப் பண்ண ஒரு ரவுடி கிட்டே பணம்  கொடுத்து அனுப்பறார். ஏன் இவர் அந்த வேலையை செய்ய மாட்டாரா?  கரும்பு தின்ன எதுக்கு கூலி கொடுத்து ஆள் செட் பண்ணனும் ? இத்தனைக்கும் அவர் தனியாதான் வசிக்கறார். ஹீரோயின் அவர் வீட்டில் தான் தங்கி இருக்கு . ஏன் அவர் ரேப் பண்னலை ? 


3 தன்  ஹையர் ஆஃபீசரைப்பழி வாங்க வில்லன்  தம்பி ராமைய்யா அவர் வீட்டின் வாசலில் நின்னு யோசிக்கும்போது அந்த வழியா ஒரு பாம்பு வருது . இவர் அதை கையால எடுத்து ஜன்னல் வழியா போட்டுடறார். அவர் கையால எடுக்கும்போது பாம்பு அவரைக்கொத்தலை, ஆனா ஜன்னல் வழியா போய் எஸ் ஐ ஐ மட்டும் கொத்துது , ஏன் ? 


4 பாம்பை ப்பார்த்தது, எஸ் ஐ கூட இருக்கும்  கில்மா லேடி பேயைப்பார்த்த மாதிரி ஏன் ஓடுது ?  2 பேரும் சேர்ந்து பாம்பை அடிக்க முடியாதா? 


5  ஒரு போதும் உன் பேரில் காதல் பாட்டு அழகு வரிகள் , ஆனா இசை , மெட்டு எல்லாமே பிரபு நடிச்ச படப்பாடலின் அப்பட்டமான காப்பி ( ஏய் டாக்ஸி . என் கண்மணீயே பொன்மணியே _). வசன வரிகள்  பின் பாடல் வரிகள் என்ற கதம்பம் 


6 சுரேஷ் - ரோஜா ஃபிளாஸ்பேக் காட்சிகளில் சுரெஷ் கேரக்டரில் வேறு ஒரு டீன் ஏஜ் பையனைப்போட்டிருக்கலாம் . சுரேஷ் தாத்தா மாதிரி இருக்கார் . பீர் அடிச்சதால உப்பிய கன்னம், தொப்பையோட  அவரைப்பார்க்க சகிக்கலை 

நச் டயலாக்ஸ்


1.  இந்த லெட்டரை வீட்டுக்கு கொண்டு போ; அதைப்பிரிக்காம , படிக்காம நாளைக்கு திருப்பி கொண்டு வந்தா உனக்கு என் மேல காதல் இல்லைன்னு அர்த்தம் 


2  உனக்கும் , உன் பொண்ணுக்கும் வித்தியாசமே தெரியலை . பொண்ணைப்பார்க்க வரும் மாப்ளை உன்னை கட்டிக்கப்போறார்


சி பி கமெண்ட் - இந்தப்படத்தை டி வி ல போட்டா பார்க்கலாம்


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் = 39 


குமுதம் ரேங்க் = சுமார் 


 ரேட்டிங்க் =  2.5  / 5 


புதுக்கோட்டை ஹேமா மேக்சி தியேட்டர்ல படம் பார்த்தேன் . மொத்தமே 250 சீட் தான் இருக்கும் . மேக்சிக்கே இத்தனைன்னா ஹேமா மினி ல இன்னும் கம்மியா தான் இருக்கும் . என் கூட 4 பேர்தான் ஆடியன்சே. அய்யோ பாவம் , எபப்டி கட்டுபடி ஆகுதோ ஆபரேட்டருக்கும் , ஓனருக்கும்

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆப்பிள் பெண்ணே.... பாகற்காய் ஆயிருச்சா....