Sunday, October 06, 2013

அடிக்கடி நைட் கிளப் ல என்ன வேலை? - த்ரிஷா பர பரப்பு பேட்டி @ த தமிழ் ஹிந்து

நடிகை த்ரிஷா - படம்: ஜி.வெங்கட்ராம் 

அட 'லேசா லேசா' த்ரிஷாவா இது.? இன்னும் அப்படியே ஸ்லிம் ப்யூட்டியாகவே ஜொலிக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை தனது சிரிப்பால் கிறங்கடித்தவரோடு நடந்த ஒரு ஜில்லான சந்திப்பு. 



என்ன பதில் சொன்னா எங்க பிரச்சினை வந்திருமோ என்று யோசிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவொரு கேள்விக்கும் யோசிக்காமல் வந்து விழுகின்றன வார்த்தைகள். ஜாலியாக தொடங்கிய பேட்டி கொஞ்சம் கோபமாக முடிந்தது. 


இப்போ தான் ‘லேசா லேசா’ வந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள 10 வருஷமாயிடுச்சு.. ஹீரோயினா 10 வருஷம்.. என்ன நினைக்கிறீங்க?

 
10 வருஷம்.. ம்ம்ம்ம்... என்னாலயும் தான் நம்ப முடியல. திரும்பி பாத்தா 'லேசா லேசா' படத்துல இப்பத்தான் நடிச்ச மாதிரியிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு. 10 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அவ்வளத்தையும் தாண்டி வந்திருக்கேன்.


அதுக்காக நான் எதோ சாதிச்சுட்டேன்னு நினைக்கல. இப்பவும் முதல் படம் மாதிரித்தான் படங்களை ஒத்துக்கிறேன். 



அதிமாக கமர்ஷியல் படங்களிலேயே நடிக்கிறீங்களே.. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எப்போது பார்க்கலாம்?

 
கமர்ஷியல் படங்கள்ல அதிகமாக நடிச்சேன்னு நீங்க சொல்றது உண்மைத்தான். 'அபியும் நானும்' படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தானே. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படமும் கமர்ஷியல் படம் தான். ஆனால் கதை ஜெஸ்ஸியான என்னை சுத்தியே தான் நடக்கும். 


இப்போ 10 வருஷமாயிடுச்சு இல்லயா, இனிமேல் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன். 'ரம்'னு ஒரு படம்.. படம் வெளிவந்துச்சுன்னா அதுக்கப்பறம் இந்த மாதிரி கேள்விக்கு இடமே இருக்காது நினைக்கேன். 




’த்ரிஷாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்’, ‘ த்ரிஷாவுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு’ இப்படி அப்பப்ப கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்கு.. இப்படி நியூஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கறீங்க..?


 
(சிரித்துக் கொண்டே) பார்ப்பேன்.. படிப்பேன்.. திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களா.. அப்படினு கூலாயிடுவேன். இப்பவா எழுதுறாங்க.. 10 வருஷமா எழுதிக்கிட்டே தான் இருக்காங்க. ஆனா அதுக்காக சோகமாக இருந்தா என்னோட படங்கள்ல அது தெரிய ஆரம்பிச்சுடும். அதனால ஜஸ்ட் படிச்சுட்டு போயிட்டே இருப்பேன். என்ன.. எங்கம்மா தான் ரொம்ப பயப்படுவாங்க. எனக்கு இதெல்லாம் பழகிடுச்சி. 


கல்யாணத்துக்கப்பறம் நடிக்கறது பத்தி உங்கள் எண்ணம்..?

 
இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ளயா.? கல்யாணத்துக்கப்பறம் நடிக்கிறதப் பத்தி யோசிக்கல. நல்ல ரோல் கிடைச்சா நடிக்கிற எண்ணத்துல தான் இருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இப்ப சொல்ல முடியாது இல்லயா.. பாக்கலாம். 


புதுசுபுதுசா ஹீரோயின்ஸ் நிறைய பேர் தடதடன்னு வந்துகிட்டே இருக்காங்க.. இப்போ உங்களுக்கு competition பலமா?

 
கண்டிப்பா போட்டி தான். ஆனா ஆரோக்கியமான போட்டி. நிறையப் பேர் வர்றப்போ தான் நம்ம இடத்த தக்க வைச்சுக்கணும்னு பயம் இருக்கும். அதனால புதுசா ஏதவாது முயற்சி பண்ணலாம்னு யோசிப்போம். வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும்னு தோணும். எனக்கு போட்டி எப்போதுமே பிடிக்கும். 





தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகளிலும் நடிச்சுட்டீங்க.. சினிமால உங்க பெஸ்ட் பிரெண்ட் யார்? ஏன்?


 
எனக்கு பிரெண்ட்ஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. ஒருத்தரப் பத்தி மட்டும் சொன்னா.. இன்னொருத்தர் மனசு கஷ்டப்படும். எனக்கு எல்லாருமே பெஸ்ட் பிரெண்ட்ஸ் தான். TRISHA ALWAYS LOVES HER FRIENDS. 



PETA - மீது இவ்வளவு அக்கரை.. ட்விட்டரில் கூட மிருகங்கள் நலத்துக்கு தான் முக்கியத்துவம்.. உங்கள் பிரபலத்தை நல்ல காரியத்துக்காக பயன்படுத்தறீங்க... எப்படி வந்தது இந்த எண்ணம்?


 
நான் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிக்கிறப்பவே எனக்கு நாய்க்குட்டிகள் மேல கொள்ளைப் ப்ரியம். ரோட்ல நாய் ஏதாவது அடிப்பட்டு கிடந்துச்சுன்னா உடனே தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவேன். அப்போ எங்க வீட்டுல ஒண்ணும் சொல்லல. அதனால அப்படியே பழகிடுச்சு. சர்ச் பார்க் ஸ்கூல்ல ஒரு Orphanage இருக்கும். அங்க போய் டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு பிடிக்கும். 



நம்மளால ஏதாவது நல்லது நடக்குதுன்னா அதுக்காக நம்மோட பிரபலத்தை பயன்படுத்துறது தப்பில்லயே. பிரபலமா இருக்கறது ஒரு பலம்.. அந்த பலத்தை பிரயோஜனமா பயன்படுத்தறேன். 



கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்தாச்சு.. இன்னும் தனுஷ் பாக்கி இருக்கு.. எப்போ ’தனுஷ்-த்ரிஷா’ நடிக்கும்னு போஸ்டர் பாக்கலாம்?


 
யார் சொன்னா எனக்கு தனுஷ் கூட நடிக்க வாய்ப்பு வரலனு. 'ஆடுகளம்' நான் நடிச்சிருக்க வேண்டிய படம் தான். அவங்க கால்ஷீட் கேட்டப்ப நான் 'கட்டா மிட்டா' இந்தி படத்துக்காக மொத்தமா தேதிகள் ஒதுக்கி கொடுத்ததுனால நடிக்க முடியல. என்னோட முக்கியமான நண்பர்கள் ஒருத்தர் தனுஷ். நல்ல கதை வந்தா, த்ரிஷா உடனே ரெடி. 





தமிழ் சினிமாவின் டிரெண்டை கவனிக்கறீங்களா..? காமெடிப் படங்கள் கலெக்‌ஷனை அள்ளுது.. சமீபத்தில் நீங்க ரசிச்ச படம் எது?

 
உண்மைய சொல்லவா.. எனக்கு படம் பாக்கவே டைமில்லை. கடைசியாக கமல் சார் தீவிர ரசிகைங்கறதுனால 'விஸ்வரூபம்' பாத்தேன். அதனால இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. 


இப்போ என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க? என்னென்ன படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கீங்க?


 
'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை' படங்கள் முடிச்சுட்டேன். ரெண்டுமே பிரமாதமா வந்திருக்கு. அப்புறம் தெலுங்குல எம்.எஸ்.ராஜு சார் டைரக்‌ஷன்ல 'RUM (Rambha Urvasi Menaka)' அப்படிங்கற படத்துல நடிக்கிறேன். அந்தப்படம் வந்தா த்ரிஷா ரேஞ்சே வேற. 


தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்ல சக்கை போடு போடறாங்க.. எப்போ 100 கோடி கலெக்‌ஷன் படத்துல த்ரிஷாவை பாக்கறது?

 
பாலிவுட்ல நடிக்கணும்னா மும்பைக்கு வீட்டை மாத்தணும், அங்க PRO வைச்சு வேலைகள் புதுசா தொடங்கணும். எனக்கு இப்போ இருக்கற இடமே போதுமானதா நினைக்கிறேன். அதுமட்டுமல்லாம, பிறந்து, வளர்ந்து, படிச்சு, நடிக்க ஆரம்பிச்சது எல்லாமே சென்னைல தான். நான் எப்படி மும்பைக்கு போவேன் சொல்லுங்க. யாராலயும் இந்த படம் 100 கோடி கலெக்ட் பண்ணும்னு மொதல்லயே கண்டுபிடிக்க முடியாது. நான் நடிக்கற படம் 100 கோடி கலெக்ட் பண்ணனும்னு எல்லாரையும் மாதிரி எனக்கும் ஆசை இருக்கு


.
ராணா - த்ரிஷா காதல் செய்திகள் திரும்பவும் வலம் வர ஆரம்பிச்சுடுச்சே?


 
இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி சொல்லியே போர் அடிச்சுடுச்சு போங்க. சின்ன வயசுலேந்தே நாங்க ரெண்டு பேருமே ப்ரெண்ட்ஸ். இப்பவும் ப்ரெண்ட்ஸ் தான். 



சமீபத்தில நீங்க பார்ல இருக்குற மாதிரி படங்கள் போட்டு செய்திகள் நிறைய..


 
( கேள்வியை முடிக்கும் முன்பே ) அவங்களுக்கு தினமும் ஏதாவது புதுசா புதுசா செய்தி போடணும். ரூம்ல உட்காந்து யோசிச்சு ரூமர்களை கிரியேட் பண்ணி அதை பரப்புற வேலையை பாக்காம, ஏதாவது உருப்படியா செய்ய சொல்லுங்க. நடிகர்கள், நடிகைகள் எல்லாரும் ரொம்ப பிஸியாதான் இருப்பாங்க. ஆனா சட்டப்படி கேஸ் ஃபைல் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுங்கிறதா மனசுல வச்சுக்கோங்க. இது தான் பொய்யான தகவல்களை பரப்புறவங்களுக்கு என்னோட வார்னிங் மெசேஜ். 


நன்றி - த ஹிந்து தமிழ்