Friday, October 25, 2013

முத்து நகரம் - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர் . அவருக்கு 4 நண்பர்கள். அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்  இன்ஸ்பெக்டர்  ஹீரோவோட நண்பர் ஒருவரை தவறுதலா  ஒரு கேஸ் மேல சந்தேகப்பட்டு லாக்கப் ல லைட்டா  2 தட்டு தட்டிடறாரு  , அப்பவே  உண்மையான  திருடன் கிடைச்சுட்டதால நண்பரை  ரிலீஸ் பண்ணிடறாரு , ஆனா நண்பர்கள்க்கு செம கடுப்பு , எப்படியாவது இந்த இன்ஸ்பெக்டரை பழி வாங்கனும்னு ஐடியா பண்றாங்க .


ஒரு நாள் நைட் டைம்ல  இன்ஸ்பெக்டர் வீட்டுல கன்னம் வெச்சு அவர் ரிவால்வரை திருடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல புதைச்சு வெச்சுடறாங்க .ரிவால்வர் களவு போனதால இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் பண்ணிடறாங்க . அவரு திருடனை கண்டு பிடிக்க அலையோ அலைனு அலையறாரு .

 இப்போ ஒரு ட்விஸ்ட் . இன்ஸ்பெக்டரோட ரிவாலவ்ரால ஊர்ல 3 கொலை நடக்குது , சுட்டது  யார்னு  தெரியல .நண்பர்களுக்குள்ளேயே சந்தேகம் .

 யார் அந்தக்கொலைகளை  செஞ்சது ?  ஏன் ? எதுக்கு ? எப்படி? என்று விளக்குவதே மிச்ச மீதிக்கதை  .


இப்போ நான்  சொன்ன கதையை இபடியே  நேரடியா சொல்லி இருந்தா படம் ஹிட் ஆகி இருக்கும் , நம்மாளுப்ங்க  யாரு ? இந்தக்கதையை தேவையே இல்லாம  குழப்பி 3 டிராக் ல கதை சொல்றாங்க . 

 ஹீரோ  ஒரு பொண்ணை லவ்வறாரு ,  அவரோட அப்பா  ஹீரோவைக்கொல்ல  தாதா உதவியை நாடறாரு .அந்த  தாதாவோட ஆள் தான்  ஊர் இன்ஸ்பெக்டர் . கதைக்கு சம்பந்தமே  இல்லாம அந்த தாதா பண்ற  கொலைகள் , ரவுடித்தனம்னு ஒரு டிராக்ல ஒண்ணுமே புரியாம கதை நகருது . 

 இன்னொரு டிராக்ல ஹீரோவோட நண்பரோட  அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம ஆபரேஷன் பண்றாங்க , அதுக்கு பணம் வேணும் 


இந்த  3 தனித்தனிக்கதையை  இணைக்க படாத பாடு பட்டிருக்காங்க ,

 அய்யா , இயக்குநர்களே, ஒண்ணே ஒண்ணு சொல்றேன் . ஒரு நாட்டுக்கு ஒரு பி  எம் போதும் ,  ஒரு மாநிலத்துக்கு ஒரு சி எம் போதும் ,  ஒரு நயன் தாராவுக்கு  ஒரு ஜோடி போதும் . ஒரு சினிமாவுக்கு ஒரு கதை போதும் . சும்மா  மூணு , நாலு கதையை எடுத்து நீங்களும் , குழம்பி ஆடியன்சையும் ஏன் குழப்பனும் ? 


நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு - நடிச்சிருக்காங்க . எல்லார் நடிப்பும் சராசரிக்கும்  கீழே . எல்லாரும் அதாவது 5 பேரும் ஒரு சீன்ல கூட தலைக்கு எண்ணெய் வெச்சு சீவி நான் பார்க்கலை , எதுக்கு பரட்டைத்தலை , தாடி யோட அலையறாங்கனு தெரியலை , பாதி நேரம் டாஸ்மாக்கே கதின்னு கிடக்காங்க . முடியல 

நாயகியாக அஸ்ரிக். படத்துலயே ஒரே ஒரு ஆறுதல் நாயகிதான் . லட்சணமான முக அமைப்பு . மிக அழகாக வந்து போகிறார் .நல்ல வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள் 


கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி அப்டினு ஏகப்பட்ட கூட்டம் படத்துல 


 கஞ்சாகருப்பு -முத்துக்காளை கூட சேர்ந்து  காமெடி டிராக் அப்டிங்கற பேர்ல என்னென்னெமோ பண்றார். லோ கிளாஸ் சி செண்ட்டர் ஆடியன்ஸ் கூட சிரிக்கலை. செம கடுப்பு .  


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


படத்தோட  போஸ்டர் டிசைன் ல  ரியலி எ க்ரைம் ஸ்டோரி அப்டினு கேப்ஷன் போட்டு ஏமாத்துனது 


2  தீபாவளிக்கு 6 நாள் முன்னால ரிலீஸ் பண்ணினா  வேற வழி இல்லாம , வேற படம் இல்லாம எப்படியும் ஆடியன்ஸ் வந்துடுவாங்கனு நம்பி அனிரூத் கேப்ல படத்தை விட்டது 


3  ஓபனிங்க் சாங்க் , ஒரு கர காட்ட குத்தாட்டப்பாட்டு நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்டோட படமாக்கிய்து 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. சீறும் புயல் வாராண்டா அப்டினு வரும் க்ளைமாக்ஸ் பாட்டு அப்படியே சிங்கம் ஒன்று புறப்பட்டதே மெட்டு , நாடோடிகள்  ஜகஜம் ஜகஜம் ல இருந்தும் சுட்டிருக்கீங்க 



2. காமெடி டிராக் தான் என்றாலும் ஒரு பெரிய லாஜிக் பிழை - கஞ்சா கறுப்பு  காரைக்குடி பட்டு அப்டினு பொண்ணு கிட்டே ஒரு புட்வை காட்டுறார் , அது அருப்புக்கோட்டை காட்டன் சேலை . ஆரணி , காஞ்சிபுரம் பட்டுப்புடவை தான் இருக்கு, காரைக்குடி ல் ஏது பட்டுப்புடவை ? மற்ற ஊர் புடவை தான் அங்கே  இருக்கும் ,. விட்டா மணப்பாறை முறுக்கை  மன்னார்குடி ல்  வெச்சு   மலேஸ்வரம் ஜிலேபின்னு வித்துடுவாரு போல 


3  இன்ஸ்பெக்டர் ரிவாலவ்ர் காணாமப்போச்சுன்னா சட்டப்படி 4 நாள் சஸ்பென்சன் பண்ணலாம்  , துறை  ரீதியா நடவடிக்கை எடுக்கலாம்  ,  துப்பாக்கி  கிடைக்கும் வரை சஸ்பெண்ட் என  எந்த ஊர் சட்டம் சொல்லுது ?



4  காணாமப்போன இன்ஸ்பெக்டரோட துப்பாக்கி மேட்டர் யாருக்கும் தெரியாது , கொலை நடந்ததும் எப்படி பேப்பர் ல இன்ஸ்பெக்டர் துப்பாக்கி மூலம் நடந்ததுன்னு சேதி வருது ? 



5 காலேஜ் ல ஹீரோயின்   இருக்காங்க , லெக்சரர் பாடம் நடத்தறார் , அது  டென் த் கிளாஸ் ல நடத்தும் அல்ஜீப்ரா  கணக்கு . பி காம் க்கு அந்த சிலபஸ் இல்லையே? 


6  போலீஸ்    ஹீரோ தலைல சுட்டு கொன்னுடுது . அதை ஆக்சிடெண்ட்னு காட்ட  அந்த துப்பாக்கிக்குண்டை உடம்புல இருந்து  ரிமூவ் பண்ண  ஏது டைம் ? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல அது தெரிஞ்சுடாதா? அதுக்கு டெட் பாடியை கண்காணாத இடத்துல டிஸ்போஸ் பண்ணி  இருக்கலாமே? போலிஸ்க்குத்தெரியாத   இடமா? இப்படியா போலீஸ் மாட்டிக்கும் ? 


7 கதைல 5 கொலை நடக்குது . ஒவ்வொரு கொலையும்  எதிராளியின் நெஞ்சில் நேருக்கு நேர் ரிவால்வரால் சுடப்பட்டு இறக்க்றாங்க  , ஒரு கொலையில்  கூட மார்பில்  இருந்து ரத்தமே வர்லை , அவ்ளவ்  லோ ப்ட்ஜெட் படமா? 


 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. சரக்குக்கு எப்போ எல்லாம் தட்டுப்பாடு வருதோ அப்பவெல்லாம் வேலைக்குப்போவான் 


2  உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம் மாப்ளை 

 உனக்கு வேற வேலையே இல்லையா? 

 என் வேலையே அதானே? 


3 காதலுக்காக தாஜ்மகால் கட்டுன ஷாஜகான் இப்போ உயிரோட இருந்தா  இவன் பண்ற காதலைப்பார்த்து  இவனை  உயிரோட சமாதி கட்டிட்டுத்தான் மத்த வேலை பார்ப்பார் 
 
 
4  உன்னைச்சுத்தி ஒளி வட்டம் தெரியுது 
 
 வெய்யில் ஜாஸ்தியா  இருக்கில்ல? 
 
 
5 நெம்பர் 2 பிஸ்னெசை செஞ்சா  நீ நெம்பர் 1-னா வரலாம் 
 
 
 
6  த்ரிஷா புடவை , நமீதா புடவை என்ன வித்தியாசம் ? 
 
 நமீதா புடவை  பெருசை சிறுசா காட்டும் , த்ரிஷா புடவை சின்னதை பெருசா காட்டும் 
 
 
7 போட்டி போட்டுட்டு தொழில் பண்ணலாம் , ஆனா போட்டுக்குடுத்து  தொழில் பண்ணக்கூடாது 
 
 
 
8 நான்  இந்த சேர் ல உக்காரலாமா? 
 
 
 
 அந்த சேர் கிட்டேயே கெளு 
 
 
9 போலீஸ்காரன் வீடா  இருந்தாலும்  பூட்டித்தான் வைக்கனும் 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  36


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் = 2  / 5



சி பி கமெண்ட்  -   டி வி ல போட்டாக்கூட பார்க்க முடியாத, தியேட்டருக்குப்போனா செத்தாண்டா சேகரு 
 
 நெய்வேலி டவுன்ஷிப் ல ஸ்ரீ ரங்கா தியேட்டர் ல படம் பார்த்தேன். 50 ரூபா  தான் டிக்கெட் . சுமாரா இருந்துது தியேட்டர் 

0 comments: