Friday, October 25, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 25 10 2013 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.சுட்ட கதை'  - லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் 'சுட்ட கதை'. இதில் நாயகர்களாக பாலாஜி, வெங்கி அறிமுகமாகின்றனர். லஷ்மிபிரியா நாயகியாக நடிக்கிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுபு இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். 1985-ல் இருந்து 95-ம் வருடம் வரை காமிக் நாவல்கள் பிரபலம். அந்த நாவல்களில் இடம் பெற்ற சம்பங்கள்தான் இப்படத்தின் கதை.

இது சுடாமல் சுட்ட கதை. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழையாக இருக்கும். புது மாதிரியான பாணிக்கு காமெடியை கொண்டு சொல்லும் கொடைக்கானலில் நடப்பது போன்று திகில் காமெடி படமாக தயாராகிறது.

இசை: மேட்லிபுளூஸ், ஒளிப்பதிவு: நிஷார், நடனம்: சதீஷ், எடிட்டிங்: சூர்யா, ஸ்டண்ட்: டி.ரமேஷ், பாடல்: மதன் கார்க்கி, சிபு, நிர்வாக தயாரிப்பு : பவித்ராகுமார்.

புதுமுக இயக்குனர் சுபு இயக்கும் படம் சுட்டகதை. பலாஜி, வெங்கி லட்சுமிப்ரியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி என்ற காமெடி டீமும் நடிக்கிறது.



 "1980களில் காமிக்ஸ் கதைகளுக்கு பெரிய மவுசு உண்டு. இரும்புக் கை மாயாவி, மிஸ்டர்.ராய், டாக்டர்.டோனி என ஏகப்பட்ட கதைகள் மக்களால் விரும்பி படம் பார்த்து படிக்கப்பட்டன. அந்த கதைகளின் பாதிப்பில்தான் இந்தப் படம் உருவாகிறது. 



இந்திய சட்ட திட்டங்கள் இல்லாத ஒரு கற்பனை ஊரில் இந்தக் கதை நடக்கிறது. அந்த ஊரில் அடிக்கடி கொலை நடக்கும், அந்த கொலைகள் ரத்தம் சிந்த பயங்கரமாக இருக்காது. கொலையே காமெடியாகத்தான் இருக்கும். இந்த காமெடி கொலையை இரண்டு டம்மி பீஸ் கான்ஸ்ட்பிள்கள் கண்டுபிடிப்பதுதான் கதை. 100 சதவிகிதம் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுத்து படத்தை எடுக்குறோம். இந்த லாஜிக் லாஜிக்குன்னு ஒண்ணு சொல்வாங்களே அது இந்தப் படத்துல சுத்தமா கிடையாது. உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி அவ்ளோதான் என்கிறார் இயக்குனர் சுபு.

2 நான்காம் தமிழன்  - இந்தப்பட்ம் ஏதோ டப்பாப்படம் போல , கூகுளில் விபரங்கள் தேடினால் கிடைக்கலை 



3.
 
3 இங்கு காதல் கற்றுத்தரப்படும்-  ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் சார்பில் சாந்தி ஸ்ரீதர் தயாரிக்கும் படத்துக்கு ‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்ரீநாத் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக தருஷனா நடிக்கிறார். லிவிங்ஸ்டன், ஆர்த்தி, பாண்டு, இமான் அண்ணாச்சி, ஷியாம்சுந்தர, மீனாகுமாரி, பேபி ஸ்நேகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஸ்ரீதரன் இயக்குகிறார். காதலிக்கிறவர்கள் தங்கள் காதலை எவ்வாறு கையாளவேண்டும். காதலிக்க போகிறவர்கள் எவ்வாறு அதனை எதிர்கொள்ள வேண்டும். காதலில் தோற்றவர்கள் அந்த சூழலை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காதலர்களுக்கு கருத்து சொல்லும் படமாக தயாராகிறது என்றார் இயக்குனர்.

சென்னை, ஊட்டி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: கோபி சபாபதி, இசை: காகித்யா, எடிட்டிங்: கண்ணதாசன், இணை தயாரிப்பு: வி.மணிவண்ணன், தயாரிப்பு மேற்பார்வை: செங்குன்றம் இ.கணேசன்.



முத்து நகரம்'.- எல்.ஏ.சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் `முத்து நகரம்'. இதில் நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு நடிக்கின்றனர். நாயகியாக அஸ்ரிக் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கே.திருப்பதி இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிறக்கும் போது யாரும் குற்றவாளி இல்லை. வளர்ந்த பிறகும் குற்றவாளிகளாக விரும்புவது இல்லை. சூழ்நிலைகளே குற்றவாளியாக்கிறது.

இந்த கருத்தை படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், குலசேகரப் பட்டிணம், கயத்தாறு போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இசை: ஜெய்பிரகாஷ், ஒளிப்பதிவு: சூர்யா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, ஸ்டண்ட்: பயர்கார்த்திக், பாடல்: ஜெயமுரசு, கவின்பா, நடனம்: பால குமார் ரேவதி, தயாரிப்பு மேற்பார்வை: ஜெ.வின்னி.

முத்து நகரம் - சினிமா விமர்சனம்


 http://www.adrasaka.com/2013/10/blog-post_2952.html

.
 
5 .ரவுடி கோட்டை -  ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் அதாவது 2010ம் ஆண்டு நிதினுடன் நடித்த தெலுங்குப் படம் "சீதாராமுல கல்யாணம் லங்கோலோ". வெல்பர் கிரியேஷன் சார்பில் மல்லையா விஜய பிரசாத் என்பவர் தயாரித்திருந்தார். இதன் தமிழ் டப்பிங் உரிமையை பெண் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி என்பவர் வாங்கியிருந்தார். படத்தை தமிழில் டப் செய்து ரவுடி கோட்டை என்ற பெயரில் ரிலீஸ் பண்ணவும் தயாராக இருந்தார்.

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:  "தெலுங்கில் சீதாராமுல கல்யாணம் லங்கோலோ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது இது தெலுங்கில் மட்டுமே வெளியிடப்படும் தமிழ் டப்பிங் வெளிவராது என்று சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி தமிழ் டப்பிங் உரிமையை விற்றுள்ளனர். இதற்கு என்னிடம் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுந்தரலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கு தயாரிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் தமிழில் டப் செய்திருக்கிறேன். ஹன்சிகாவின் புகார் குறித்து தெலுங்கு தயாரிப்பாளரிடம் கேட்டபோது மற்ற மொழிகளில் டப் செய்ய மாட்டோம் என்று ஹன்சிகாவுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. வாய்மொழியாகவும் அவர் கேட்கவில்லை. நாங்களும் சொல்லவில்லை. என்று கூறிவிட்டார் எனவே ஹன்சிகா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மீதுதான் எடுக்க வேண்டுமே தவிர எங்கள் மீதல்ல. அதையும் மீறி அவர் எங்களுக்கு இடையூறு செய்தால் அவரை சட்டப்படி சந்திப்போம் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் அவரே ஈடுகட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹன்சிகா எதிர்ப்பது ஏன்...?

படத்தின் டப்பிங் பொறுப்பேற்றிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது "ரவுடிக்கோட்டை படத்தில் ஹன்சிகா படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் நாட்டில் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயந்து படத்தை தடை செய்ய முயற்சிக்கிறார்" என்றார்.


6 என்னாச்சு  - இந்தப்படம் ஒரு திகில் படம் போல , இது பற்றிய விபரங்களும் கூகுள் இல் கிடைக்கலை 


பணமுதலை - ஏதோ க்ரொக்கடைல்  ஹாலிவுட் படம் , தமிழ் ல டப் ஆகி வருது  போல 

8. THE DIRTY RELATION  - இது ஒரு அப்பட்டமான கில்மாப்படம் . வ்ழக்கம் போல  ஒரு தம்பதி , மனஸ்தாபம் , மனைவிக்கு ஒரு இல்லீகல் காண்டாக்ட் , புருஷனுக்கு தெரிஞ்சிடுது . கள்ளக்காதலனைக்கொலை பண்ண பிளானிங்க் . அந்த உத்தம பத்தினி புருஷனையே போட்டுத்தள்ள பிளானிங்க். யார் ஜெயிக்கறாங்க ? என்பதை வெண் திரையில் காண்க  . ஹிந்திப்படம்



9 BOY ( TELUGU) - இந்தப்படத்தைப்பற்றியும் விபரங்கள் கிடைக்கலை , தேடுனா  2010 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான பாய் , 2003 ல் வந்த ஷங்கரின் பாய்ஸ் தான் கிடைக்குது

10  வசந்தசேனை -  இது ஒரு கில்மாப்படம் . கடலூர் நகரின் பாரம்பரியம் மிக்க தியேட்டரான கமலம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுது . நாடு விளங்கிடும்