Friday, September 20, 2013

6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்

ஐ டி ல ஒர்க் பண்ற  ஹீரோ  தன்  மனைவி , மகனோட  பீச்சுக்குப்போறாரு. அன்னைக்குத்தான் பையனோட 6 வது பர்த்டே .( டைட்டில் க்கு காரணம் ) அந்த  கூட்டத்துல  பையன் எப்படியோ மிஸ் ஆகிடறான். அம்மா , அப்பா 2 பேரும் பதறி பீச் பூரா தேடறாங்க , பையன்  கிடைக்கலை . போலீஸ் ஸ்டேஷன் போய் புகார்  தர்றாங்க


 குழந்தைகளைக்கடத்தறதையே  தொழிலா வெச்சிருக்கும் கும்பல் நெட் ஒர்க் பற்றி தெரிஞ்சு தேடுதல் வேட்டை நடக்குது . ஹீரோ  எப்படியோ  பையனைக்கடத்தின  ஆளைக்கண்டு பிடிச்சடறார். ஆனா அவன் ஒரு கோடி பணம் கேட்கறான். பேரம் பேசி  50 லட்சம்  ரூபாவுக்கு ஓக்கே சொல்ல வைக்கறார்.


ஆனா பணம்  கொடுத்த பின்னும் தகராறு  நடந்ததுல  அந்த  குரூப் எஸ் ஆகிடுது. எப்படி  ஹீரோ பையனைக்கண்டு பிடிக்கறாரு என்பதுதான்   ஆக்‌ஷன் பரபர காட்சிகள் கொண்ட திரைக்கதை .


 இயக்குநர் சாதாரண ஆள்  இல்லை . அஜித் -ன் வித்தியாசமான படமான  முகவரி , பரத் -ன் ஆக்‌ஷன் த்ரில்லர் நேபாளி ஆகிய படங்களின் இயக்குநர் . பாடல்களும் எழுதி  இருக்கார் . அவர்  தான் படத்தின்  முதல் ஹீரோ . எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகாம  எந்த விதமான கமர்ஷியல் காம்ப்ரமைஸ்ம் பண்ணிக்காம   அழுத்தமான  திரைக்கதை  கொடுத்திருக்கார். மேக்கிங்க் ஸ்டைலும்  ஓக்கே


ஷாம்  தான்  ஹீரோ . இவருக்கு இது சொந்தப்படம் . தூங்காம  பல நாட்கள் விழிச்சிருக்காரு என்பதைக்காட்ட   கண்-ண்ணுக்கு கீழே  கட்டி வந்த  கெட்டப் , ஆள் இளைக்கும்  காட்சி  விக்ரம் மாதிரி சிரத்தையா பண்ணி  இருக்கார் . வெல்டன் ஷாம் .


பூனம்  கவுர் தான்  நாயகி . இவருக்கு  பெரிதாக வேலை இல்லை என்றாலும்  வந்த வரை நல்ல நடிப்பு . உனக்கு எத்தனை குழந்தை வேணும் ? நான் பெத்து தர்றேன் , நம்ம பையன்  கிடைக்காட்டி பரவால்லை , நீயாவது  திரும்பி வா என கதறும் டெலிபோன் காட்சியில் அவர் நடிப்பு  அருமை .

படத்துக்கு வசனம்  ஜெய மோகன் . குறிப்பிட்டு சொல்லும்படி 6 இடங்களில் தான் வசனம் பிரமாதம் .பட டைட்டிலை நினைவுல வெச்சுக்கிட்டார் போல . ஆனால்  தேவை இல்லாமல் வழ வழா கொழா கொழா வசனம் ஏதும் இல்லை , எல்லாம் நறுக்குத்தெறித்தாற் போல  . குட் ஒர்க்


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. எதிர் பாராத நேரத்தில்  ஒரு பிச்சைக்காரன் காலில் விழுந்து  ஹீரோயின்  கதறும் காட்சி பகீர் . குழந்தையைப்பறி கொடுக்கும் பெற்றோர் மனம் எப்படி பரிதவிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் 


2. குழந்தையைத்தேடி ரோட்டில் இரவில்  ஓடும்  ஹீரோ  தனியாக நிற்கும் ஒரு குழந்தையை  அதன்  குடிசை வீட்டில் ஒப்படைக்க  முயல  அங்கே  தொழில் நடத்தும் கில்மா லேடி “ எல்லாம் என் குழந்தை தான் , தெரியும் , நாங்க பார்த்துக்குவொம் “ என அசால்ட்டாக சொல்லும் காட்சி சமூக அவலத்தை சொல்லும்  சுருக் காட்சி 


3.  அரிசி வியாபாரி  தன் பேரன் மேல்  பொய் சத்தியம் செய்வதும்  , அதை  ஷாம் கண்டு பிடிப்பதும்  நல்ல சஸ்பென்ஸ் காட்சி 


4. அரவாணி  போல் வந்து எடுபுடி மாதிரி நடப்பவர் தான்  உண்மையில்  அந்த கூட்டத்துக்கே  பாஸ் என்பதும்  சரியான   திருப்பு முனைக்காட்சி . அவரின் வில்லத்தன நடிப்பு தமிழுக்கு  புதுசு 


5. ஹீரோயின்   கோதுமை அல்வா மாதிரி  இருந்தாலும் , அவர் தாராள ம்னம் கொண்டவர் என்ற பிளஸ் பாயிண்ட்  இருந்தும்  ஒரு டூயட் கூட வைக்காமல் திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக நகர்த்திய  இயக்குநரின் சாமார்த்தியம் 


6.  தன் மகன் ஆபத்தில் இருக்கான் என்ற உணர்வு இருந்தும்   இன்னொரு  பொண்ணைக்காப்பாற்ற   ஹீரோ  துடிப்பது சபாஷ்  இயக்கம் 



7. பாதிக்கப்பட்ட  ஒவ்வொரு அப்பாவும்  இந்த மாதிரி  கும்பல் ல 4 பேரையாவது வெட்டிப்பொட்டாதான் இவனுங்களுக்கு எல்லாம் பயம் வரும் என  ஹீரோ பேசும் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது . பிரமாதமான  ல் காட்சி 


8. படத்தில்  வரும் அனைத்து  வில்லன்கள் நடிப்பும்  அருமை , நல்ல தேர்வு , எல்லாரும் பொறுக்கிப்பசங்க போல 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 




1. போலீஸ் ஸ்டேஷனில்  புகார் கொடுக்க ஹீரோ எண்ட்டர் ஆகும்போது  வலது கையில் வாட்ச் கட்டி இருப்பவர் அடுத்த  ஷாட்டில்  ஏட்டய்யா முன் நிற்கும்போது  இடது கையில் வாட்ச் கட்டி இருப்பது ( கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் ) 


2.  சம்பவம் நடந்த  36 மணி நேரத்தில்  அதாவது ஒன்றரை நாளில்  ஹீரோவுக்கு மழு மழு கன்னம்  டூ 20 நாட்கள்  தாடி வந்து விடுவது , 


3. குழந்தையைப்பறி  கொடுத்த பதட்டத்தில்  இருக்கும்  ஹீரோ , பின் யாரோ   ஒரு வழித்துணை என காரில்  நெடும் பயணம்  மேற்கொள்வது  ஏன் ?  வசதி ஆனவர்கள் தானே , டாக்சி வைத்திருக்கலாமே? அவங்க  2 பேருமே  1000 கிமீ மாறி மாறி ட்ரைவிங்க் செய்வது  ரிஸ்க் ஆச்சே? 


4. கடத்திய கும்பல் தலைவன்  பையனை காட்ட மாட்டேன் , பணத்தை என் அக்கவுண்ட் ல போடு , காட்டறேன்  , முதல்லியே காட்டுனா நீ தகறாரு செஞ்சு பையனை கூட்டிட்டுப்போயிடுவே என்கிறார் , ஓக்கே நேரில் காட்ட வேண்டாம் , செல் ஃபோன் வீடியோவிலோ, ஃபோட்டோவிலோ பையனை காட்டு , அப்போ தான் பையன் உன் கிட்டே இருக்கானா? என்பதை உறுதி செய்ய முடியும்னு ஹீரோ ஏன் வாதாடலை ? 




5. ஹீரோ வுக்கும்  , கடத்தல் கும்பல் தலைவனுக்கு,ம் தகறாரு , டக்னு  ஹீரோ மனைவிக்கு   ஃபோன் பண்ணி பேசுனப்டி அந்த அக்கவுண்ட் ல பணம் போட வேண்டாம் அப்டினு ஏன் சொல்லலை?   அதே  போல்  மனைவி பணம் ரெடி பண்ணியதும்,   ஏங்க  பணம்  ரெடி  போட்டுடலாமா? என ஏன் கணவனிடம் கேட்கலை ?   பொதுவா  பொண்டாட்டிங்களூக்கு புருஷன் பேச்சை கேட்க்கும் பழக்கம் இல்லை என்றாலும்  பணம் விஷயம் , தொகை அதிகம் என்பதால் கண்டிப்பா கேட்பாங்களே ? 


6.  எல்லாம்  முடிஞ்சு   மீண்டும் தேடுதல் பயணத்தில்   இருக்கும்  ஹீரோ ஏன் மனைவிக்கு  தொடர்ந்து  கால் பண்ணவே இல்லை ?   ஹீரோயின்   ஃபோன் பண்ணி  ஏன் ஃபொன் பண்ணலை? என கேட்கும்போது கூட எந்த  ரீசனும் சொல்லலையே ஏன் ? 


7 . வீட்டை வித்து  இருவர்  வேலை செய்யும் ஆஃபீசில்  லோன் வாங்கி  50 லட்சம்  ரூபா  புரட்டிய  பின்  அதுவும் பறி போன பின்   ஹீரோ வுக்கு  மீண்டும் செலவுக்கு ஏது அத்தனை பணம் ?


8. குழந்தையை பறி கொடுத்த  ஹீரோ   பிச்சைக்காரன்  போல்  மேக்கப்பில்  இருக்க  ஹீரோயின் 13  ரீலிலும் முதல் இரவுக்குப்போகும்   முயல் குட்டி மாதிரி செம மேக்கப்பில்  இருப்பது எப்படி ? 


9 க்ளைமாக்சில்  பையன்  திரும்ப சந்திக்கும் காட்சியில் பின்னணி  இசை பிரமாதப்படுத்தி  இருக்க வேணாமா?  காதலுக்கு மரியாதை படத்தில்  இளைய ராஜா ஒரு பி ஜி எம் போட்டிருப்பாரே க்ளைமாக்சில் எல்லாரும் அந்த காதலுக்கு  சரி சொல்லும்போது அது போல் ஜீவனுடன் இருக்க வேண்டாமா  பின்னணி இசை ? 

10  வில்லனிடம்  மரண பயமே  இல்லையே , சாகும் நேரத்தில்  சிரிச்சு  ஹீரோ  கிட்டே பஞ்ச் பேசிட்டு  இருக்காரு . அவருக்கு மன்சுல இளைய தளபதி விஜய்னு நினைப்பா?  டக்னு எந்திரிச்சு  ஓடாம ... வெள்ளாட்டு புத்தி



மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிச்சைக்காரனுக்கு பிச்சை கிடைக்கும் நாள் எல்லாம் விசேஷ நாள் தான்


2. எனக்கு காசு ஏதும் வேண்டாம் , மேலே இருக்கறவன் கீழே இருப்பவனுக்கு ஒரு ரூபாயை சுண்டி பிச்சையா போடுவீங்களே அந்த மாதிரி கீழே இருப்பவன் மேலே இருப்பவனுக்கு பிச்சை போட்டதா இந்த உதவியை நினைச்சுக்கறேன்


3. இங்கே கிருஷ்ணராவ் இருக்காரா?

ஆந்திராவில் பாதிப்பேரு கிருஷ்ணராவ் தான் , உனக்கு எந்த கிருஷ்ணராவ் வேணும் ?


4. கடப்பாரை எடுத்து என்னை ஏத்தி இருந்தாக்கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன் , ஆனா கடப்பாரைலயே என்னை இறக்கிட்டயே


5. என்னைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது ?

நீ மாமாப்பையன் தானே? ( தியேட்டரில் அப்ளாஸ் )


6. நீ என்ன சொன்னாலும் நான் கேட்க்றேன்


நான் சொல்றதைக்கேட்க சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யும் 1000 பேர் எனக்கு இருக்காங்க




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   3  / 5 


சி பி கமெண்ட் - 6 மெழுகுவர்த்திகள் - குழந்தைக்கடத்தல் பற்றிய அழுத்தமான பதிவு , ஷாம்க்கு பிரேக் கொடுக்கும் படம் , ஆனால் கமர்ஷியலாய் பெரிய அளவில் ஹிட் ஆவது டவுட் . போட்ட முதலிட்டை எடுத்து விடும் , ஏ சென்ட்டரில் மட்டும் நல்லா ஓடும்
படம்  பெண்களும் பார்க்கலாம்


டிஸ்கி - சி பி யிடம் சில கேள்விகள் அப்டிங்கற பேர்ல யாரும் - இந்த ஸ்டில்ஸ் எல்லாம் படத்துல எங்கே எப்போ வருது?ன்னு கேட்கக்கூடாது , அது  ஏ டி எம் கேல சேரும்  மாற்றுக்கட்சி ஆட்களுக்கு அம்மா தரும் இன்னொவா கார் பரிசு மாதிரி . எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் , ஹி ஹி
a


டிஸ்கி 2  -

யா யா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_2147.html

1 comments:

கோவை நேரம் said...

படம் பார்த்தேன்...போர்.
தியேட்டரும் காலியாகத்தான் இருந்துச்சு ப்ரூக்பீல்ட்ஸ்ல்...
மத்தபடி உங்க விமர்சனம் அருமை...