Saturday, September 07, 2013

1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

பொதுவா திகில் படம்னா இரத்தம்,சதை,லொட்டு,லொசுக்கு இதெல்லாம் கண்டிப்பா இருக்கும். அதுலையும் ஹாலிவுட் படம்னா கேக்கவே வேணாம். (EVIL DEAD,TEXAS TRAINSHAW MASSACRE,SAW) இன்னும் நிறைய உதாரணங்கள். அப்பிடி இல்லைனா எதாவது ஆவி வந்து பழி வாங்கற மாதிரி இருக்கும். இந்த இரண்டும் இல்லாம வித்தியாசமா 2007 ல வந்து எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்த படம் தான் இந்த 1408.

ஹீரோ ஒரு திகில் கதை எழுத்தாளர். அவர் எழுதற கதை ரொம்ப அனுபவப்பூர்வமா இருக்கும். அதாவது அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கற இடத்துக்கு போயி அங்க ஒரு இராத்திரி பூரா இருந்து... (தனியாதான்யா...)
அவர்க்கு ஏற்படுற அனுபவங்களை எழுத்தா எழுதறவர். ஒரு பெரிய தங்கும் விடுதில நடக்கற சம்பவங்களை கேள்விப்பட்டு அங்கே போய் சம்பவம் நடந்த 1408 அறைல தங்க அனுமதி கேக்கறார்.ஆனா மேனேஜர் அனுமதிக்கல. அந்த அறைல நடந்த கொலைகளைப் பத்தி விளக்கி சொல்றார்.நம்ம தலைவரு எதையுமே காதுல போட்டுக்கல. இவன் சொன்னா கேக்க மாட்டான்னு மேனேஜர் ஓக்கே சொல்றார். அங்க என்ன நடந்தது? ஹீரோ என்ன ஆனார் என்பதை வாய்ப்பு கிடைத்தால் பார்த்து தெரிந்துகொள்க.


படத்துல ஃபுல்லா ஹீரோ ராஜ்ஜியம்தான். ஆள் கலக்கிட்டார். பயந்து நடுங்குவதில் தொடங்கி பின்னர் தெனாவெட்டாக அறையை எரிக்கும் இறுதி காட்சி வரை அவரது நடிப்பு செம. ஹீரோயின் வந்த வரை ஒக்கே. அவருக்கு வயசானது அப்பட்டமா முகத்துல தெரியுது.மேனேஜர், குழந்தை,பக்கத்து அறை பெண்,ரூம் செர்வீஸ் பாய் என அனைவரும் மனதில் நிற்கிறார்கள்.திரைக்கதை படத்துக்கு பெரிய பலம்.110 நிமிடம் போர் அடிக்காம எடுத்துருக்காங்க.சபாஷ்...


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்:

1. படத்திற்கு ஏற்ற லொக்கேஷன், திரைக்கதை அமைப்பு .

2. அதிகம் செலவில்லாமல் ஒரே அறையில் படத்தை முடித்தது அதுவும் அலுப்பு வராமல்.

3. ஹீரோவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.முழுப்படத்தை அவர்தான் தாங்குகிறார்.ஒரே ரியாக்‌ஷன் காட்டாமல் காட்சிக்கு காட்சி மாறுபட்டு நடித்திருக்கிறார்.

4. எதிர்பார்ப்பை கிளப்ப சாமர்த்தியமாக ஹீரோவின் குடும்ப நிலையை இடையில் ஃப்ளாஷ்பேக்காக திணித்தது.

5. திரைக்கதையில் ஒரு சிறிய டிவிஸ்ட் வைத்தது. சொல்லிட்டா சப்புனு போய்ரும். படத்துல பேருக்கு இருக்கறது இந்த ஒரே ஒரு ட்விஸ்டுதான்.

6. திகில் காட்சிகள். சாவியை கதவு தானாக உள்ளே இழுக்கும் காட்சி தொடங்கி இறுதி வரை அனைத்தும் கச்சிதமாக அமைத்தது.

7. இசை, ஒளிப்பதிவு சரியாக அமைத்தது.


இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பேய் வருவதற்கான காரணத்தை கடைசி வரை சொல்லவே இல்லியே.

2. இந்த இடத்துல மட்டும்தான் சாகற அளவுக்கு அனுபவம் ஏற்படுதா? இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்லியா?

3. இந்த திரைக்கதைக்கு 110நிமிடம் தேவை இல்லியே. இன்னும் கொஞ்சம் சுருக்கிஇருக்கலாம்.(அடேய்.. இன்னும் சுருக்குனா அது குறும்படம்)

4. மருந்துக்கு கூட உம்மா கொடுக்கற சீன் இல்லயே. இந்த இடத்துல தான் இது ஹாலிவுட் படமானு சந்தேகம் வருது.

5. கடைசில தேவை இல்லாம எதுக்கு காருக்குள்ள.......திகில் சீன்

மொத்ததில் தரமான ஒரு திகில் படம். பெண்கள், குழந்தைகள், பாட்டிகள்,தாத்தாக்கள் என அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்.



டிஸ்கி -இந்த   சினிமாவிமர்சனத்தைஉங்களுக்கு  வழங்கியவ்ர்  என் அக்கா பையன்  கார்த்திக் , ஸ்டில்ஸ்செலக்சன் எடிட்டிங்க்  மேற்பார்வை  மட்டும்   நான்



ரேட்டிங்க்  -  3.5  /5 


4 comments:

Cinema Paiyyan said...

நேரம் கிடைத்தால் 'The Call (2௦13)' படத்த பாருங்க, அருமையான திரைக்கதை.. ரேஸி ஸ்க்ரிப்ட், பாத்துட்டு முடிஞ்சா விமர்சனம் போடுங்க.. :)))))

சேலம் தேவா said...

சினிமா விமர்சனப்பதிவு எழுதுவதற்கு முழு நேரமாகவும்,பகுதி நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படும் -ன்னு போர்டு மாட்டியாச்சா..?! அக்கா பையனையும் இழுத்து வுட்டிட்டிங்களா..?! :)

Raj said...

இந்த படத்துக்கு ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கு அது தெரியுமா உங்களுக்கு

Raj said...

இந்த படத்துக்கு ரெண்டுவிதமான கிளைமேக்ஸ் இருக்கு தெரியுமா..