Tuesday, August 06, 2013

அஜித்-ஆரம்பம் -விஷ்ணுவர்தன் பேட்டி (NAKKEERAN)

 


அஜித் கதாபாத்திரம் புத்தனோ காந்தியோ கிடையாது” - விஷ்ணுவர்தன் பேட்டி!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ஒரு வழியாக டைட்டில் வெச்சாச்சு. ’ஆரம்பம்’ என கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஒரு அற்புத கனெக்‌ஷன் பற்றி கடைசியாக பார்ப்போம்.


இப்போது சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விஷ்ணுவர்தன் பேசியதை கவனிப்போம். பேட்டியில் பேசியபோது விஷ்ணுவர்தன் “ ஹீரோ நல்லவனாக மட்டுமே இருக்கண்டும். அவன் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். சினிமா மூலம் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதே தவறு. எல்லா இடத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். 

எல்லோரையும் சுற்றி தினம் தினம் ஆயிரம் குற்றம் நடக்கின்றன. ஆனால் மக்கள் அதை கவனிப்பது இல்லை. ஆனால் ஹீரோ மட்டும் அநியாயத்தை பார்த்தால் பொங்கி எழ வேண்டும் என நினைக்கிறார்கள்.

எல்லோருக்குமே ஒரு கருப்பு பக்கம் உண்டு. யாருமே புத்தரோ காந்தியோ கிடையாது.அதனால் தான் என் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் கெட்டவர்களுக்கு கெட்ட முடிவு வருவது போல் அமைத்திருப்பேன். அஜித்தின் கதாபாத்திரமும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 


அஜித்தால் என்ன செய்ய முடியுமோ அதை படமாக்கி இருக்கிறோம். அவருக்காக எந்த பில்டப்பும் கொடுக்கவில்லை. தனது இமேஜை பற்றி அஜித் கவலைபட்டதே கிடையாது” என்று கூறியுள்ளார். இப்ப ரசிகர்களின் கனெக்‌ஷன் மேட்டருக்கு வருவோம். 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் முந்தைய கதையாக வெளிவந்த பில்லா 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அஜித் ”இது வெறும் ’ஆரம்பம்’ தான்” என சொல்வார்.

எனவே விட்டுப்போன பில்லா திரைப்படத்தின்(பில்லா 2-வுக்காக விஷ்ணுவர்தனும் ஒரு கதை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது) தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.
thanx - nakkeeran
'ஆரம்பம்' என்று தலைப்பு வெளியிட்டதில் இருந்து அஜித் - விஷ்ணுவர்தன் படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்த நாள் அன்று நடைபெற உள்ளது.

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் 'ஆரம்பம்'. விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

'ஆரம்பம்' படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், பேட்டி கூட அளிக்காமல் இருந்த படக்குழு, தற்போது படத்தினைப் பற்றிய தகவல்களை வெளியிட ஆரம்பித்து இருக்கிறது.

இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன், " 'பில்லா' படத்திற்குப் பிறகு நானும் அஜித்துடன் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்து இருக்கிறது. கண்டிப்பாக அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும்.


'ஆரம்பம்' ஒரு கேங்ஸ்டர் படம் அல்ல. நிறைய திருப்புமுனைகள் நிறைந்த ஆக்ஷன் கதையாகும். நிறைய இடங்களுக்கு கதை பயணிக்கும். அதனை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறோம்.

இவ்வளவு நடிகர்கள் நடிக்கும் படத்தினை 120 நாட்களில் முடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆரம்பம்' படத்தினைப் பற்றி என்ன கூறினாலும், அது அஜித் படம் என்ற பெயரை மட்டுமே கொடுக்கும். அவருடைய நடிப்பும், வசீகரமும் படம் முழுவதும் நிறைந்து இருக்கும்.

இப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறேன். அதுமட்டுமன்றி, தேசிய விருது வென்ற லால்குடி இளையராஜாவின் செட் வடிவமைப்பும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தன.

எனது திரையுலக வாழ்க்கையில், ஆரம்பத்தில் இருந்தே யுவனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் எந்த மாதிரி இசையை எதிர்பார்ப்பேன் என்பது யுவனுக்குத் தெரியும்.

படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, கதைக்குப் பொருத்தமான தலைப்பை பரிசீலித்து வந்தோம். நிறைய தலைப்புகள் யோசித்தோம். இறுதியாக 'ஆரம்பம்' என்ற தலைப்பே கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது" என்று தெரிவித்து இருக்கிறார்.
a

0 comments: