Friday, August 09, 2013

தலைவா - சினிமா விமர்சனம் ( ஒரு பாசிட்டிவ் , ஒரு நெகடிவ் விமர்சனம் )

 
தலைவா திரைப்படத்திற்கு Brit Tamil ஆசிரியர் குழுவின் புள்ளிகள் - 65/100

விஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'.அரசியல் கதைகளம் கொண்ட படம்,படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன அதனால் தான் ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குடைச்சல்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன.தமிழகத்தில் இப்படி என்றால்,இலங்கையில் விஜய்,கமல்,ரஜனி படங்களை திரையிடவிடமாட்டோம் என்று கொழும்பில் சிங்கள அமைப்பொன்றின் எச்சரிக்கையால் வி.ஐ.பி ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன.
இறுதி தருணம் வரையில் படம் வெளியாகுமா என்கின்ற டென்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் பரவிப்போயிருந்தது.2.8மில்லியன் ஹிட்ஸ் அடித்திருந்த தலைவா ட்ரெய்லர்லேயே படம் எப்படிப்பட்டது என்பது ஓரளவுக்கு புரிந்திருந்தது.சரி இயக்குனர் விஜய் புதிதாக ஏதாவது செய்திருப்பார் என்கின்ற நம்பிக்கை ஒருபக்கம் இருந்தது.

ஆரம்பமே சரபரன்னு பாம்பாயில் 1988இல் கலவரம் ஒன்னு காட்டுறாங்க.ஏற்கனவே இருந்த டான் மாதிரியான தலைவர் ஒருவரை போட்டுத்தள்ளிவிட்டார்கள் என்று கதை ஆரம்பித்து மீண்டும் பாம்பாயில் வந்து முடிகிறது கதை.சத்யராஜ் மகனாக வரும் விஜய்யை சிறுவயது முதலே தன்னை விட்டு தள்ளி தூரத்தில் வளர்த்துவருகிறார் 'அண்ணா'என்றழைக்கப்படும் சத்தியராஜ்.
காரணம் தன்னுடைய பிரச்சனைக்குள் மனைவியை இழந்தது போல மகனையும் இழக்கக்கூடாது என்பதனால் தான் பிசினெஸ் செய்கிறேன் என்று கூறி வளர்த்துவருகிறார்.அப்படியாக அவுஸ்திரேலியாவில் டான்சராக இருந்துகொண்டு வாட்டர் சப்ளை பிசினெஸும் பார்த்து வரும் விஜய் பாம்பாய் வந்து சத்தியராஜின் இடத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை.அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த கதை தான்.ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் இயக்குனர் விஜய் தனித்து தெரிகிறார்.

பம்பாய் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு 'பாட்ஷா'வும் நாயகனும் கட்டாயம் ஞாபகம் வந்து தொலைக்கும்.ஆனால் துணிந்து அந்த கதைக்களத்தை தெரிவுசெய்து தன்னால் சுவாரசியமாக படத்தை கொடுக்க முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்.

முதல் பாதி தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் வேறுபடுத்தி கொடுப்பது மிக கடினம் தான்.முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.மிக மிக அழகான காட்சிகள்.ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் அவுஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார்.சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!நிச்சயமாக விஜய்யினதும் அமலாபாலினதும் வேறுபட்ட நடிப்பை தலைவாவில் காணக்கூடியதாக இருக்கும்.  

அங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன.திரைக்கதையை நம்பி இயக்குனர் விஜய் களமிறங்கியிருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் வரும் சத்தியராஜ் செம அழகாக தெரிகிறார்.கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளின் சத்தியராஜை காணமுடிந்தது.கருந்தாடி வைத்து கருப்பு தலைமுடியுடன் சண்டையிடுவார் பாருங்கள் அப்படி அபாரமாக இருக்கும்!

இது நம்ம அமலாபாலா என்று கேட்கின்ற மாதிரி அழகை மெருகேற்றி வந்திருக்கிறார்.இன்னொரு சுற்று ஆடுவதற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.சந்தானம் விஜய்யை இமிட்டேட் செய்து கலாய்ப்பதையே தொழிலாக செய்திருக்கிறார் படத்தில்.பெரிய ஹீரோக்கள் காமெடியங்களால் கலாய்க்கப்படுவதை விரும்புவதில்லை.ஆனால் விஜய் இடம்கொடுத்திருக்கிறார் என்று சந்தானம் ஒருபேட்டியில் கூறியிருந்தார்.அது படத்தில் உண்மை என்று தெரிகிறது.அந்தளவு ஓட்டியிருக்கிறார்.சாம் அண்டர்சன் கூட இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.  

பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க'பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன.தமிழ் ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய்.முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்!ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.

படத்தின் குறைகள் என்றால்,படத்தின் நீளம்.மூன்று மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் ஏதாவது சில சந்தர்ப்பங்களில் நீளத்தை உணரவைத்துவிடும்.கதையை விளக்குவதில் மெதுவான காட்சிகள் சற்றே போர்.

இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ். இரண்டாம் பாதியை ஹரியிடம் கொடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

இடைவேளை வரை எந்த ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம்.இடைவேளைக்கு பின்பதாக விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் ஏ.எல்.விஜய் தன்னால் முடிந்ததை இரண்டாம்பாதியில் செய்திருக்கிறார்.தமிழக அரசுக்கு இந்த படத்தால் என்ன பிரச்சனை என்று இன்னமும் தான் புரியவில்லை.விஜய் ரசிகர்களுக்கு படம் விருந்து..!

மொத்தத்தில்,பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது.விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.அது எத்தகைய வெற்றி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதற்கு முதல் படமான துப்பாக்கி ப்ளக்பஸ்டர் ஹிட் என்பதால் அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
இவரது ட்வீட்ஸ்
1.  12h
'தலைவா'.அரசியல் படத்தில் விஜய் CMஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன



2. தலைவா: முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.



3. தலைவா: சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!



4. பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க'பாடல்களும் நன்று



5. நடனத்தில் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்


6. தலைவா: ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.



7. தலைவா: குறைகள் என்றால், படத்தின் நீளம் 3மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் சில சந்தர்ப்பங்களில் உணரமுடிகிறது



8. தலைவா: இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ்



9. தலைவா: முதல் பாதி ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம் பின் பாதி விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன



10. தலைவா: மொத்தத்தில், பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது. விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.


நன்றி - பிரிட் தமிழ் ,http://brit-tamil.co.uk/news.php?id=2059,


டிஸ்கி - ஈரோடு , திருப்பூர் , கோவை உட்பட கொங்கு மண்டலம் முழுக்க தலைவா படம்  ரிலீஸ் இன்னைக்கு இல்லை  



ஒரு நெகடிவ் விமர்சனம் 


தலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)


சிங்கையின் மிகப்பெரிய திரையரங்கம். 1500 பேருக்கு மேல் கொள்ளளவு கொண்டது. நான்கு நாட்களுக்கு ஹவுஸ் புல். நிறைய எதிர்பார்ப்புகளுடன் அரங்கமே நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்கு ஒரே விசில்,ஆர்பாட்டம்,சப்தம் என வசனங்களே காதில் விழாத அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம். பதினைந்தாவது நிமிடத்தில் வருகிறார் இளைய தளபதி விஜய். அடுத்த ஐந்து நிமிடங்களில் அரங்கத்தில் 'பின்ட்ராப்' சைலண்ட். பிறகு மெல்ல மெல்ல சப்தங்கள் கூடி ஒரு கட்டத்தில் 'டேய் படத்தை போடுங்கடா' என்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் பொறுமையை மொத்தமாக சோதித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்திற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல்,திரையிட மாட்டோம் என வாண்டேடாக வண்டியில் ஏறும்போதே தெரியும். படம் மொக்கை என்று..ஆனால் இப்படி ஒரு மரண மொக்கையை எதிர்பார்க்கவில்லை.இன்னும் ஒரு வார காலத்திற்கு இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கவிடப் போகும் தலைவா-விற்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு சீன்..பாட்சாவில ஒரு சீன்...என அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். சரி எல்லோரும் கதையையும் காட்சியையும் தான் காப்பி அடிப்பாங்க.இந்த ஆளு லொகேசனையும் காப்பி அடிச்சிருக்கான்யா.. நாயகனில் வரும் அதே தாராவி, அதே ஆலமரம் ,மேடை என எல்லாம் அப்படியே....

வேலுநாயக்கர் கேரக்டர்தான் விஜயின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு. பெயர் மட்டும் மாறியிருக்கிறது 'அண்ணா' என்று.

மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் கட்டம் கட்டப்பட்டு சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார்( சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்ட்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு வேலுநாயக்க....ச்சே.. 'அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவில் விஜய் தண்ணி பிசினெஸ்(குடிக்கிற தண்ணிதான்) செய்கிறார். 'தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர முடியவில்லை...ஆனால் நீ ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி கொண்டு வந்துட்டியே' என்கிற பன்ச் டயலாக் வேற இருக்கிறது. அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.  

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே...முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா...அவரோட மகன்தான்.அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த அற்புத பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

அம்புட்டுதேன் கதை. ரஜினியை பாட்சா பாய்..பாட்சா பாய் என்று அழைத்தது போல இதில் விஜயை விஸ்வா பாய் என்கிறார்கள். எங்கிருந்து பாய் வந்தது என்பதுதான் தெரியவில்லை.தலைவா என்று டைட்டில் இருப்பதால் ஏதோ விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இந்தப்படம் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏன்னா இதில் தமிழ்நாட்டை துளி அளவு கூட காண்பிக்கவில்லை.முற்பகுதி ஆஸ்ட்ரேலியா ..பிற்பகுதி முழுவதும் மும்பை.

முதல் பாதி செம ஜவ்வு... சந்தானம் காமெடியும் செம போர். இப்படியே போனால் விவேக் மாதிரி ஓரங்கட்டப் படுவார். இண்டர்வலுக்கு முன்பு படம் லேசாக சூடுபிடித்தது போல் இருந்தாலும் பிறகு தலை குப்புற படுத்து விடுகிறது. அது என்னப்பா சீரியசான காட்சிகளில் எல்லாம் எல்லோரும் முகத்தைப் பார்த்து பேசாமல் மோட்டு வளையை பாத்து பேசுறாங்க.. ஒருவேளை ஓலகத்தரத்தில் முயற்சி பண்ணி இருக்காங்களோ..

விஜயின் அட்டர்பிளாப் படங்களில் கூட அவரின் அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். படத்தின் முதல் சொதப்பலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அறிமுகப் பாடலும் வெறுப்பேற்றுகிறது.துப்பாக்கி என்கிற முழு நீள ஆக்சன் படத்திற்கு அடுத்தாக வரும் இதில் இடைவேளை வரை ஒரு பைட் சீன் கூட இல்லை. ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய சில்லரைப் பசங்களை வைத்துக்கொண்டு 'தமிழ் பசங்க' என்கிற டான்ஸ் குருப்பை நடத்துகிறார் விஜய். அடடே.. அப்போ டான்ஸில் பின்னி எடுத்திருப்பார் என கேக்க தோணுமே... அந்தக் கொடுமையை தியேட்டரில் பாருங்க..சுறா தோத்துடும். அதிலும் புன்னகை மன்னன் கமல் ரேவதி மாதிரி விஜய் அமலாபால் ஒரு BGM க்கு ஆடுவாங்க பாருங்க... கண்கொள்ளா காட்சி.

அமலாபாலிடம் முகத்தைத் தவிர காட்டுவதற்கு வேறொன்றும் இல்லையென நினைத்திருப்பார் போல இயக்குனர். நல்லவேளை இருக்கிற வெறுப்பில் அப்படி எந்த விபரீத முயற்சியும் இயக்குனர் எடுக்காதது பாராட்டுக்குரியது.

 

படத்தில் மற்றொரு மைனஸ் இசை.ஒரு பாட்டு கூட ரசிக்கும்படி இல்லை.மும்பையில் நடக்கும் கலவரத்தின் போது இந்தியன் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்கிறது.இதில் விஜய் பாடும் ஒரு பாடலில் G.V.பிரகாஷ் அவருடன் ஒரு சீன் ஆடுகிறார்(இது வேறயா..)

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக எதுவும் கிடையாது.ஏன்னா லாஜிக்கே இல்லாத படத்தில் எங்கே போயி லாஜிக் மிஸ்டேக்கை தேடுறது. படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது.அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது எட்டாவது அதிசயம்.அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன் ஏத்துராங்கலாமாம்.. டேய் பக்கிகளா அவன்கிட்ட,இந்த போனை கட் பண்ண உடனையே ஒருத்தன் போன் பண்ணுவான் அத எடுக்காதனு சொல்லிட்டா பிரச்சனை முடிந்தது.காதுல பூ வைக்கிறதுக்கு பதிலா புய்ப்பமே வைப்பீங்க போல..

படத்தில் ஒரே ஆறுதல் 'ரைசிங் ஸ்டார்' சாம் ஆண்டர்சன். மனுஷன் ஒரு நிமிஷம் வந்தாலும் தியேட்டரை அதிரவைக்கிறார். அதிலும் ராசாத்தி பாடலுக்கு ஷோல்டரை குலுக்கி ஒரு மூவ்மென்ட் போடுவார் பாருங்க... சோர்ந்து உட்காந்தவங்க எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வச்சிட்டாரய்யா..

இந்தப்படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏதாவது போட்டி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணுகிறபோது அவர் ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் மெகா கோட்டை விட்டிருருக்கிறார் இயக்குனர். 

கண்டிப்பாக இந்தப்படத்தை ஒரு தடவையாவது பாருங்கள். இவ்வளவு நாள் கழுவி ஊத்திய ஆதி, சுறா, வில்லு வேட்டைக்காரன் எல்லாம் காவியமாக தெரியும்..

தலைவா... மூணு மணிநேரம் கதறக் கதற.....முடியில.

நன்றி - http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/blog-post_9.html 




diski -

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/chennai-express.html 


ஐந்து ஐந்து ஐந்து - 555 -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/555.html 

 

4 comments:

Actor Crazygopal said...

@cutepushpa எபக்டு உங்களையும் பாதிச்சிருக்கு... "காதுல புய்ப்பமே """ ஹா ஹா ஹா // ரெண்டு விதமா விமர்சனம் குடுத்து எஸ்ாகிட்டீங்க. ஜூப்பரு.

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு... நல்லாயில்லை....

எஸ்கேப்பாயிட்டீங்க...

Anonymous said...

இந்தக் கதையைப் பார்த்தால் தெலுங்கில் வெளிவந்த லீடர் படத்தின் கதையின் ஜாடை தெளிவாகவே தெரிகிறதே. ஒரே வித்தியாசம் அதில் நாயகன் முதலமைச்சர் ஆக முயற்சிப்பார். மொத்தத்தில் பாட்சா, நாயகன், லீடர் ஆகிய படங்களின் கலப்படம் இந்த தலைவா போல் தெரிகிறதே.

Unknown said...

marana mokka better avoid this movie . worst ovie of 2013. singam 2 is the biggest blockbuste of 2013