Friday, August 23, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 23 8 2013 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

 
1. தேசிங்குராஜா - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் படம் தேசிங்குராஜா. இதில் நாயகனாக விமல், நாயகியாக பிந்து மாதவி நடிக்கின்றனர். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன் வி.ஞானவேல், வடிவுக்கரசி, அப்பத்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.எழில் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராகிறது என்றார் அவர்.

இந்த படத்துக்காக சமீபத்தில் அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா என்ற பாடல் காட்சி பதினைந்து லட்சம் ரூபாய் செலவில் பழகுடோன் அரங்கு அமைத்து படமாக்கப்பட்டது. இதில் விமல், பிந்து மாதவி பங்கேற்று நடனம் ஆடினார்கள். பத்து நாட்கள் இக்காட்சி படமாக்கப்பட்டது.

வசனம்: ராஜசேகர், ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி, இசை: இமான், பாடல் : யுகபாரதி, எடிட்டிங்: கோபி கிருஷ்ணா, நடனம்: தினேஷ், தினகா, பிருந்தா, ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை: சங்கரதாஸ், தயாரிப்பு நிர்வாகம்: ராஜா. 


வெற்றி இயக்குனர் எழில் புதிதாக இயக்கும் படத்திற்கு தேசிங்குராஜா என்று பெயர் சூட்டியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் டைரக்டர் எழில். இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்திப் பறவை என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில், இயக்குனர் எழில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அப்படத்திற்கு தேசிங்கு ராஜா என பெயரிட்டிருக்கின்றனர். விமல், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மனம் கொத்திப் பறவை படத்திற்கு இசையமைத்த டி.இமான் இப்படத்திற்கு இசை


ஏறக்குறைய ஒரே நேரத்தில் அறிமுகமானவர்கள் விமலும், விதார்த்தும். களவாணி, வாகை சூட வா என்று விமலின் பயணம் உயரே போன போது விதார்த்தின் கேரியர் குளறுபடிகள் நிறைந்ததாக இருந்தது. தனி ஹீரோவாக இன்னமும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார் விதார்த்.

சிவ கார்த்திகேயன் வந்த பிறகு விமலின் நிலைமை விதார்த்தை போல மோசமானது. கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இரண்டு பேரும்தான் நடித்தார்கள். விமல் அப்படியே இருக்க, சிவ கார்த்திகேயன் மேலும் மேலும் உயர்ந்து இரண்டு கோடி சம்பளத்தை எட்டியிருக்கிறார்.

விமல் தனது கேரியர் லிஃப்டுக்கு நம்பியிருப்பது எழிலின் தேசிங்குராஜா படத்தைதான். பிந்து மாதவிக்கும் இந்தப் படம்தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.

காமெடியை மையமாக வைத்துதான் தேசிங்குராஜாவை எழில் இயக்கியிருக்கிறார். விமல் இதில் எம்‌ஜிஆர் ரசிகராக வருகிறார். அவருடன் பிந்து மாதவியும் தன் பங்குக்கு காமெடி செய்திருக்கிறார். உடன், சூ‌ரி. தேசிங்குராஜாவின் பாடல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.


IN ERODE - AANOOR,VSP , ROYAL,SEENIVAASAA 


2. மெட்ராஸ் கபே --படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
மெட்ராஸ் கபே படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க, மதுரை ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது.


ஐகோர்ட் வழக்கறிஞர் ஸ்டாலின், தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  ‘’மெட்ராஸ் கபே' படம், ஆக., 23ல் வெளியாகிறது. இதில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை சம்பவம், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் நடவடிக்கை மற்றும் அவர்களை தமிழர்கள் அவமதித்ததாகவும், தமிழர்களை பயங்கரவாதிகள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 


காமன்வெல்த் மாநாடு துவங்குவதற்கு முன், இலங்கை அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தவும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபடவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியானால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும். இப்படத்திற்கு மத்திய, மாநில திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த சான்றை ரத்து செய்யவும், திரையிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


நீதிபதிகள், எஸ்.ராஜேஸ்வரன், டி.மதிவாணன் கொண்ட, "பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது.

  தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், இந்தியில் தயாரித்த, மெட்ராஸ் கபே' படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றளித்துள்ளது.
தமிழில் தயாரித்துள்ள படத்திற்கு தணிக்கைச்சான்று வழங்கவில்லை. மனுதாரர் அச்சப்படும், ஆட்சேபி க்கும் அளவிற்கு காட்சிகள் இல்லை. ஒரு குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சம்பவத் திற்கும், படத்திற்கும் சம்பந்தமில்லை' என்றார்.


கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல' என்றார்.

தற்போதைய சூழ்நிலையில், படத்திற்கு எவ்வித இடைக்காலத் தடையும் விதிக்கத் தேவையில்லை. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், டி.ஜி.பி., பதில் மனு செய்ய வேண்டும். விசாரணை செப்., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நோ ரிலீஸ் இன்  தமிழ் நாடு 

 
3. களிமண்ணு -(மலையாளம் )  -நித்யாமேனன்  -ன் பிரசவக்காட்சி படமாக்கப்பட்டு சர்ச்சையைக்கிளப்பியப்டம் , பாசிட்டிவ் ரிசல்ட்ஸ் வந்திருக்கு. அவார்டு கன்ஃபர்மாம்



களிமண்ணு

வெளியாவதற்கு முன்பே, பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய படம் இது. ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை படமாக்கி, இதில் சேர்த்துள்ளதால், கேரளாவில், இந்த படத்தை வெளியிடுவதற்கு, பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், தணிக்கை வாரியம், இந்த படத்துக்கு அனுமதி அளித்து விட்டதால், இன்னும் சில நாட்களில், இந்த படம் வெளியாகவுள்ளது. பிரசவத்துக்கு முன்னும், பிரசவத்துக்கு பின்னும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான், இந்த படம். மகாபாரத கதையை மையமாக வைத்தும், இந்த படத்தின் முக்கியமான காட்சிகள், சில படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்வேதா மேனன் ஜோடியாக, பிஜு மேனன் நடித்துள்ளார். பிலெஸ்ஸி என்ற இயக்குனர், இந்த படத்தை இயக்கியுள்ளார்

0 comments: