Monday, May 13, 2013

நண்பர் பட்டாபட்டியின் மரணமும் , அவர் பற்றிய நினைவுகளும்

நெட்டுக்கு வந்த புதிதில் எனக்கு பன்னிக்குட்டி ராமசாமி மூலம் அறிமுகம் ஆனவர் தான் பட்டா பட்டி. இவரை நகைச்சுவைக்காகவும் , காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்புக்காகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனக்கு மனதில் சரி என பட்டதை எந்த ,முலாமும் இல்லாமல் அப்படியே வெளீப்படுத்துவது அவரிடம் நான் கண்டு பிரமித்த ஒன்று.

 ஏன்னா பொதுவா நாம மனசுல நினைச்சதை டக்னு வெளில சொல்லிட முடியாது . 4 பேர் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு அப்புறமாத்தான் அது பற்றி பேசுவோம். ஆனா நண்பர் பட்டாபட்டி  நேருக்கு நேர் தன் வாதங்களை , கருத்துக்களை முன் வைப்பவர் .

ட்விட்டரில் பல முறை என்னுடன் பேசி இருக்கிறார். காலையில் இருந்து மனசே சரி இல்லை ;((((((

 பிளாக் உலகில் அவரது நெருங்கிய நண்பர்கள் விளங்காதவன் , ராம்சாமி , விக்கி உலகம்  வெங்கட் , வீடு சுரேஷ் , நக்கீரன் , வால் பையன் ,  மங்குனி அமைச்சர் , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும் . 

 அவர் சிங்கப்பூரில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவலை எனக்கு சுரேஷ் தான் ஃபோன் பண்ணி இன்று காலை 10 45 க்கு சொன்னார். ஆஃபீஸ் வேலையாக வெளியில் இருந்ததால் என்னால் எதுவும் எழுத முடியவில்லை . ட்விட்டரில் மட்டும் தகவல் சொன்னேன். 




 அவரது உடல் நாளை காலை கோவை வருகிறது . அவர் பிரிவால் வாடும் நண்பர்கள் அனைவருக்கும் இரங்கல்கள் 


கோவை அவரது இல்ல முகவரி தெரிந்தவர்கள் கீழே கமெண்ட்டாகப்போடவும் 

 அவரது பிளாக் முகவரி - http://pattapatti.blogspot.in/

அவரது ட்விட்டர் முகவரி -

அவரது ஃபேஸ்புக் முகவரி -https://www.facebook.com/patta.patti?fref=ts 

 அவரது மரணத்தில் நாம் கற்க வேண்டிய பாடம் 


1.குடிப்பழக்கம் உள்ளவர்கள் அறவே அதை விட்டொழிக்கவும் . குடிப்பதைப்பற்றி பெருமையாகப்பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அது இன்னும் குடிக்க தூண்டும் 

2. குடிப்பது சிறுமை.அதை பெருமையாக யாரும் நினைக்காதீர்கள்.உங்கள் போதைக்கு உங்கள் குடும்பத்தை ஊறுகாய் ஆக்காதீர் ;-((



3. 35 வயது ஆனவர்கள் அடிக்கடி அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்து கொள்க 


4. வேலை வேலை என பிரஷருடன் வேலை செய்தல்  தவிர்க்க முயலவும் , குடும்பத்துக்காக தினமும் நேரம் ஒதுக்கவும் 


 நண்பர்களின் நினைவுகள் 


1. வீடு சுரேஷ் - நானும்...வௌங்காதவனும் காந்திபுரத்தில் உள்ள ஒரு பாரில் சரக்கடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம், பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தமக்கு நெருங்கிய நண்பர் பட்டாபட்டி என்கின்ற விசயத்தைக் சொன்னார் நான் அவரின் ஒன்றிரண்டு பதிவுகளைப் படித்திருக்கின்றேன், ஆனால் பழக்கமில்லை அவருடைய கமண்டுகள் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும், கோவை மாவட்டத்திற்கே உரித்தான எள்ளல்,நக்கல் அவரிடம் விரவிக்கிடக்கும். நக்கீரனுக்குப் போனைப்போட்டு பட்டாபட்டி பேசுவதாக மிமிக்ரி செய்தாப்டி வௌங்காதவன், நக்கீரனும் நம்பி ரொம்ப நேரம் பேசினார்....! அப்பொழுது வௌங்காதவன் என்னிடம் சொன்னார் இப்ப விளையாட்டா நக்கீரனை கலாய்ச்சோம், அடுத்த லீவில் நான் வரும் போது பட்டாவும் வருவாப்டி அன்னிக்கு நான், நீ, பட்டாபட்டி, நக்ஸ் நாலு பேரும் இதே பார்ல சரக்கடிப்போம் என்றார்.....வௌங்காதவன் வருகிறான்.....பார் இருக்கு பட்டாபட்டிதான் இல்ல......!


2. விக்கி உலகம் வெங்கட் - கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் “வாய்யா...போய்யா...மாப்ளே...மாமா”ன்னு பேசிட்டு இருந்த மனுசன் இன்னிக்கி இல்ல...ச்சே என்ன உலகம்டா இது...நல்லவிங்கள எல்லாம் இம்புட்டு சீக்கிறம் கொண்டு போயிருது...- சுயம்!  

3 comments:

Unknown said...

என்னால் ஜீரணிக்க முடியல...நேற்று வெளங்காதவன் மூலம் செய்தி கிடைத்தது...எதையும் துணிந்து சொல்லும் நண்பன்...நண்பனின் ஆத்மா இறைவனடியில் இளைப்பார எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக...எமது ஆழ்ந்த இரங்கல்கள்...

வெளங்காதவன்™ said...

:(

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த இரங்கல்கள்!