Friday, April 26, 2013

ஐஸ்வர்யா வை சுருக்கமா , செல்லமா கூப்பிடக்கூடாதா? ஏன்?

1. பாண்டிச்சேரி ரத்னா தியேட்டர்ல எமரால்டு பாரஸ்ட் .2 தெய்வீகக்கள்ளக்காதலர்கள் க்யூ ல.படத்துல பிட் ஓட்றாங்ளோ இல்லையோ பொழுது போகிடும்



--------------------------


2. தேவயானி (தன் ) நெஞ்சைப்பிடித்துக்கொண்டே படிக்கவும்.பாண்டிச்சேரி ரத்னா தியேட்டரில் 7 ஷோ தான் ஓடுச்சாம்.எடுத்துட்டாங்க.திரு திரு தமிழ்


------------------------------


3. ராகு காலம் ரைட் ல வந்தா நாம லெப்ட் ல கட் பண்ணி ஓடிடனும்



------------------------


4. பள்ளித்தோழியை வழியில் சந்தித்தேன்.முகவரி கொடுத்து பேமிலியோட வா என்றாள்.தனியா வராதேன்னு அர்த்தம் போல


------------------------

5. கை ஆளத்தெரியாமல் தடுமாறினால் இந்தியா.கையாளத் தெரியாமல் தடுமாறினாள் சந்தியா


------------------------



கவிதைகள் அனைத்தும் இடம்பெயர்ந்துவிட்டது
காரணங்கள் எல்லாம் காணாமலே போய்விட்டன
நேரங்கள் எல்லாமே ‘ஏகபோகமாய்’ மிச்சமிருந்தன..
பர்ஸ் தனது எடைக்குறைப்பை நிறுத்திக்கொண்டது
‘டெம்பிள் ரன்’ ஆடியது போக, பேட்டரி லைஃப் மீதமிருந்தது..
மேனேஜர் கோவப்படுவதற்கான அவசியமே அற்றிருந்தது..

அம்மாவை கோயிலுக்கு அழைத்துபோவது..
அப்பாவுக்கு போஸ்ட் ஆஃபீஸ் வரை போவது..
தங்கையை கல்லூரியில் கொண்டுவிடுவது..
தம்பியுடன் கிரிக்கெட்..
நண்பர்களுடன் கேரம்...

என.....

எல்லாவற்றையும் திருப்பிக்கொடுத்துவிட்டது காதல்.


6. சமஸ்கிருத வார்த்தையோ ,வடமொழிச்சொல்லோ தமிழனைப்பொருத்த வரை பிரம்மாண்டம் = நமீதா .பிரமிப்பு = ஆண்ட்ரியா



------------------------


7. நெடுந்தொலைவு பஸ் ,ரயில் பயணங்களில் அறிமுகமற்ற பிகரிடம் பழக எளிய வழி.வாட்டர்கேன் தண்ணீர் கேட்பதே


----------------------



8. அத்தான்.தேவயானி கிட்டே அவர் புருசன் எப்டி எல்லாம் அன்பு காட்டறார் பாருங்க.



 எனக்கும் காட்ட ஆசைதான்.அதுக்கு ராஜகுமாரன் ஒத்துக்கனுமே? 



-------------------------------


9. தமிழ்நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கறதும் ,அழகான மச்சினியுடன் சம்சாரம் கிடைப்பதும் அபூர்வம்



------------------------


10. உன் கண்ணுக்கு வாரம் ஒரு முறை ஞாயிறு தெரிந்தால் நீ விடுமுறை விரும்பி.தினம் தினம் தெரிந்தால் இயற்கை விரும்பி


-------------------------



Creativity!
Creativity!

11. டாக்டர்.பஸ் ட்ராவல் எனக்கு ஒத்துக்கறது இல்லை.வாமிட் வந்துடுது.என்ன பண்ண ?


- ரயில்ல போங்க. 


அப்போ பஸ்ஸை யார் ஓட்டுவாங்க? 


---------------------------


12. உப்புசமா இருக்குன்னு சொல்லியே இன்னும் 2 மாசம் பொண்டாட்டிங்க எஸ் ஆகிடுவாங்க.ஏதாவது ஐடியா பண்ணனும்


-------------------


13. எல்லாவற்றையும் நானே ''தின்னுடுவேன்'' என்கிறாய்,ஆஹா .கொஞ்சமாவது மீதி வைக்கக்கூடாதா எனக்கு? சமச்சது நானு.


-------------------------


14. ஐஸ்வர்யா வை சுருக்கமா செல்லமா கூப்பிடறேன் பேர்வழினு யாரும் வர்யானு கூப்பிட்றாதீங்க.வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வந்துடுவாங்க


----------------------


15. கைல வெறும் 50 ரூபாயை வெச்சுக்கிட்டு இந்த் பொண்டாட்டிங்க எல்லாம் உழவர் சந்தையை ஒரு அலாசு அலாசுவாங்க பாருங்க உஷ் அப்பா முடியல


------------------------


மீண்டும் மீண்டும் அவன்!!!
===================

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம்.

“பளார்” பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில் கை வைத்த படி நின்றிருந்தான். அறைந்தது அவளாகத்தான் இருக்கவேண்டும்.

நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான். அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான். இதுவரை அவன் ஒரு நாள் கூட டிக்கெட் எடுத்ததில்லை.

அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கிய சட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும் ஒரு பிக்பாக்கெட்டை நினைவுபடுத்தியது. முகத்தில் வயது கோளாறை பிரதிபலிக்கும் பருக்கள்.

அவளுக்கு நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். சுமாரான அழகு. அவளிடமிருந்து அடி வாங்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். அதற்குள் இன்னொரு புண்ணியவதி எழுந்து..."என்ன பாத்துட்டு இருக்கீங்க.... புடிச்சு வெளிய தள்ளுங்க...பொம்புளைங்கள உரசரதுக்குன்னே வர்றானுங்க....” என்றபடி அவனை நோக்கி பாய்ந்தாள்.

அவன் தலை குனிந்துகொண்டான். அவன் முகத்தில் அவமானம். இந்த காரியத்தை செய்தது அவனல்ல. அவனுடைய வயது. இந்த வயதின் பலவீனத்தை என்னை போல் ஒரு சைக்காலிஜிஸ்ட் தான் தெரிந்து வைத்திருக்க முடியும். எனக்கு அவன் தோள் மேல்
கை போட்டு அவனுடன் அன்பாக ஆதரவாக பேசவேண்டும் போல் இருந்தது.

தாய்ப்பால் குடிக்கிற போது தோன்றாத காமம் கன்ட்ராவி எல்லாம் இந்த இரண்டாங்கெட்டான் வயதில் தான் தோன்றுகிறது. சரியான புத்தி மதியும் குடும்ப சூழலும் இல்லாமல் மனதின் இழு சக்திக்கு பலி ஆகும் வாலிபர்கள் எத்தனை பேர். எனக்கு தெரியும். அந்த பெண்ணின் கோபத்துக்கு ஒரு நியாயம் இருப்பது போல் இவனுடைய தாபத்துக்கும் ஒரு நியாயம் இருக்கும்.

"என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க. காது மேல ரெண்டு போட்டு அடிச்சு வெளிய தள்ளுங்க" என்று அந்த அதிவீர பெண்மணி தொடர்ந்து ஆண்களை உசுப்பி விட்டபடியே இருந்தாள். நல்ல வேளையாக, பத்து பேர் சேர்ந்து கும்பலாக ஒருவனை அடிக்கிறபோது அதில் பதினொன்றாக தன்னையும் சேர்த்துக்கொண்டு தங்கள் வீரத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் கோழை ஆண்கள் யாரும் அந்த பேருந்தில் இல்லை.

யாரும் அவனை அடிக்க தயாராய் இல்லை. நடத்துனர் விசில் ஊதினார். பேருந்து நடுவழியில் நின்றது. அவன் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை. தலை குனிந்தபடி கன்னத்தை தடவிக்கொண்டே நடக்க மட்டுமே வரம் பெற்ற ஒரு சவம் போல் அந்த பேருந்தை விட்டு கீழே இறங்கினான். அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அது அவன் மேல் கொண்ட மரியாதையினாலோ பயத்தினாலோ அல்ல சாக்கடை தண்ணீர் நம் மேல் தெறித்துவிடாமல் ஒதுங்கிக்கொள்கிற எச்சரிக்கை.

நான் அவனையே இரக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த துள்ளல் அதிவீர பெண்மணி ஜன்னல் வழியாக கை வீசி ஏதோ ஆவேசமாக அவனை திட்டிக்கொண்டிருந்தாள். துப்பவும் செய்தாள்.

அறை கொடுத்தவள் மௌனமாக நின்றிருந்தாள். அவள் தான் செய்த காரியத்துக்காய் வருத்தப்பட்டிருக்கலாம்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது. இப்போது ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போது. பாப்கார்ன் வாங்கி ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிந்துகொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் அறையிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள் காளரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஐந்தாறு பேர் பின்
தொடர்ந்து வந்தார்கள்.

போலீஸ்காரர் "ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளைன்ட் கொடுங்க" என்றார். மேனேஜர் அரை அடிக்கு குனிந்து போலீஸ்காரரிடம்...

"சார் கம்பிளைன்ட் வேண்டாம் சார். தியேட்டர் பேரு கெட்டுடும். சும்மா விசாரிச்சு மிரட்டி அனுப்பிடுங்க " என்றார். போலீஸ்காரர்கள் எப்படி விசாரிப்பார்கள் எப்படி மிரட்டுவார்கள் என்று எனக்கு தெரியும்.

ஒரு பலி ஆட்டை போல் அவன் நின்று கொண்டிருந்தான். எல்லோர் பார்வையும் அவன் மேல் படிந்திருந்தது. என் அருகில் இரண்டு சிறுமிகள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மற்றவளை பார்த்து "திருடன்...திருடன்...எப்படி இருக்கான் பாரேன். பாக்கவே பயமா இல்ல....அதான் போலீஸ் புடிச்சிட்டு போகுது" என்றாள்.

எனக்கு இப்போதும் அவன் மேல் பரிதாபம் இருந்தது. என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அல்ல. நோயாளி. அவன் தண்டிக்கப்படவேண்டியவன் அல்ல. குணப்படுத்தப்பட வேண்டியவன். அவனுக்கு தேவை போலீஸ்காரர்களின் லட்டி அடியும் பூட்ஸ் மிதியும் அல்ல. அன்பான அரவணைப்பான வைத்தியம்.

கூட்டத்தில் இன்னொருவர் "என் ஒயிப் வந்து கம்பிளைன்ட் கொடுக்க முடியாது சார். ஷீ இஸ் எ சென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயி. டீசன்ட் பேமிலி சார். நீங்க இவன இப்படியே விட்டுட்டா கூட கவலை இல்ல. ஆனா கம்பிளைன்ட் வேண்டாம் சார்." என்று மன்றாடினார்.

“சரி விடுங்க. கம்பிளைன்ட் எல்லாம் வேண்டாம். இந்த பொறுக்கிய நாங்க பாத்துக்கறோம்” என்று போலீஸ்காரர் எல்லார் முன்னிலையிலும் அவன் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார். அந்த பளாரின் அதிர்ச்சியில் அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கு கைகள் உதறுவதை கவனித்தேன். உதறலில் பாப்கானில் இரண்டும் சில துளி கொக்ககோலாவும் தரையில் சிந்தியது. அந்த பெண்கள் அதற்கு மேல் காத்திராமல் தியேட்டருக்குள் ஓடினார்கள்.

இப்போது போலீஸ் அவனை இழுத்துக்கொண்டு கீழே போனது. கூட்டம் கலைய தொடங்கியது. சிலர் மட்டும் என்ன நடந்தது என மேனேஜரிடம் விசாரித்தார்கள். அவர் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.

அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். இப்போது தான் அந்த பெண்மணியை கவனித்தேன். அவள் தான். பேருந்தில் அந்த பையனை கன்னத்தில் அறைந்தவள். மீண்டும் அவளையே தொடர்ந்து வந்து தொந்தரவு செய்திருக்கிறான். தியேட்டர்
இருட்டில். அவள் மெல்ல நடந்து வந்து கணவன் அருகில் நின்று கொண்டாள்.

எல்லோர் பார்வையும் அவள் மேல் நிலைபெற்றிருந்தது.....

"படம் வேண்டாங்க....வீட்டுக்கு போலாம்.... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க...." என்றாள். அவர்கள் இருவரும் கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டரின் கேட்டை தாண்டி போகும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் இரண்டு வாரம் கழித்து அவனை சந்தித்தேன். இப்போது அதே பேருந்தில். அந்த பெண்மணியின் அருகில் தான் அவன் நின்றிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. திடீரென பேருந்தில் செக்கிங் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக டிக்கெட்டை எடுத்து காட்டிக்கொண்டிருந்தோம். பரிசோதகர் அவனிடம் வந்தார்.

“டிக்கெட் எடு.”

அவன் மௌனமாய் இருந்தான்.

“டிக்கெட் எடுக்கலையா....எங்கேயிருந்ததுவற கீழே இறங்கு....”

அவன் முதுகை பிடித்து பரிசோதகர் தள்ளினார்.

எல்லோரும் அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தோம்.

அப்போது அந்த பெண்மணி பேசினாள்.

“சார்...அவன் ஊம சார்.....அவனுக்கும் சேத்து நானே டிக்கெட் எடுத்துட்டேன். இதா சார்.” என்று ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் நீட்டினாள். அவர் டிக்கெட்டின் மேல் ஒரு டிக் அடித்து அவனுடைய கையில் திணித்தார். அவன் கவனமில்லாமல் அதை வாங்கி தன் சட்டை பையில் போட்டுக்கொண்டான்.

பேருந்து புறப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவனை சந்தித்தேன் மெரினா பீச்சில். கடலுக்கு மிக அருகில் கடலை பார்த்தபடி நின்றிருந்தான். நான் அவனிடமிருந்து இருபதடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவன் கையிலிருந்து ஏதோ ஒன்று தவறியது. காற்றில் அது பறக்கத்தொடங்கியது.

அவன் அதை பின் தொடர்ந்து வந்தான். ஒரு இடத்தில் கீழே விழுந்தது. குனிந்து எடுப்பதற்குள் அது மீண்டும் பறந்தது. காற்றில் பறக்கும் அந்த காகிதத்தை, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அந்த காகிதம் என் அருகில் என் காலடியில் விழுந்தது. அதை நான் எடுத்தேன்.

அவன் என்னை நோக்கி இப்போது ஓடி வந்துகொண்டிருந்தான். அந்த காகிதத்தை பார்த்தேன். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு. அதன் பின்புறத்தில் குட்டி எழுத்துக்களால் இவ்வளவும் எழுதியிருந்தது.

“உன்னை குப்பை தொட்டியில் எறிந்த நான் பாவி. 
என் சுயநலத்துக்காக உன்னை அனாதை ஆக்கிவிட்டேன். 
என்னை மன்னித்துவிடு.
தயவு செய்து என்னை பின் தொடராதே. 
என் கணவருக்கு நீ வந்த பாவ வாசல் தெரியாது. 
என்றும் உன் நினைவோடு உன் அம்மா.”

அவன் அந்த காகிதத்தை என் கையிலிருந்து கவனமாக வாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் அந்த பேருந்தில் வருவதில்லை.

இப்பதிவு "அடுத்தவன் போட்ட Status திருட்டுத்தனமாக திருடி போடும் சங்கம்" என்ற பக்கத்திலிருந்து எடுத்தது......



16. திருமதி தமிழ் இயக்கம் வேற ஆளா இருந்தா வில்லங்கம்.பொண்டாட்டியை எப்டி கட்டிப்பிடிக்கனும்னு புருஷனுக்கே டியூஷன் எடுத்த மாதிரி ஆகிடும்



-----------------------



17. DR. பொதுப் படையா எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அடிப் படையா ஒரே பிரச்சனை தான். 



,படை ,சொறி ன்னா ஸ்கின் DRஐப்பார் 



-----------------------------


18. திருமதி தமிழ் - இடைவேளை வரை பயங்கரமா இருக்காம்.அதுக்குப்பின் பயமா இருக்காம் # ராஜகுமாரன் ராக்ஸ் ( க்ளோஸப் ஷாட்ஸ்) ்




------------------------


19. கடலை ரசிக்காத மீனும்் இல்லை. கடலையை ருசிக்காத பிகரும் இல்லை


-----------------


20. எந்த ஊரில் நாம் இருந்தாலும் பசி எடுக்கும்போது சொந்த ஊர்நினைவு் வந்துிடுது.பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே ஆகச்சிறந்த கொடுப்பினை


----------------------------



டி வி டுடே

2 comments:

MGS said...

point no.12. உங்கள் அறையில் AC மாட்டிருங்க

Unknown said...

எண் 8. ரொம்ப ஆசைதான் போங்க